தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Friday, 23 October 2015

யார் தமிழர்


தமிழ் மக்கள் பல காலங்களாக கேரளம், கர்னாடகம், ஆந்திரா மற்றும் மகாராட்டிர உள்ளிட்ட மாநிலங்களில் வசித்து வருகிறார்கள். அந்தந்த மாநில மொழிகளை நன்கு பேசுகிறார்கள் ஆனாலும் அங்கு யாரும் அவர்கள்ளை மலையாளிகளாகவோ, கன்னடர்களாகவோ  பார்க்கவில்லையே? நாம் மட்டும் ஏன் தமிழ்நாட்டில் வாழும் பிற மொழி பேசும் மக்களை தமிழர்களாக ஏற்றுக்கொள்ள வேண்டும்? அவர்களை சகோதர இனத்தவராகவே கருதி நேசிப்பதில் என்ன தவறு என்று புதிய தலைமுறை நேர்காணலில் சீமான் கேட்கிறார்..இது பற்றி உங்கள் கருத்து என்ன?
-செந்தமிழ் அருவி 

விடை:  இங்கும் நாம் மலையாளிகளை, மலையாளிகளாகத்தான் பார்க்கிறோம். அவர்கள் மொழிச் சிறுபான்மையினர் என்றுதான்  நோக்கப்படுகின்றனர்.  தமிழர்களாக அவர்களே அவர்களை அறிவித்துக் கொள்வதில்லை. சிக்கல் எங்கே வருகிறது என்றால், 400, 500 ஆண்டுகளுக்கு முன் இங்கு வந்து குடியேறி, தலைமுறை தலைமுறையாக இங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களை நாம் எப்படிப் பார்ப்பது என்பதுதான். இவர்களுக்குத் தங்கள் மாநிலங்களில் எந்தத் தொடர்பும் இல்லை, நிலமும் இல்லை என்றால் அவர்கள் யார்? அவர்களின் மண உறவுகள், சொத்து எல்லாம் இங்குதான் இருக்கிறது எனில், அவர்களைத் தமிழர்களாகப் பார்ப்பதுதானே சரி. நண்பர்கள் சீமான், மணியரசன் போன்றோர் பார்ப்பனர் குறித்து இந்த ஐயத்தை எழுப்புவதில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. 


10 comments:

 1. கலைஞர் என்ன செய்தாலும் ஏன் இவர்கள் எதிர்கிறார்கள்.இந்த சினிமா பிரச்சனைகளை விடுங்கள். ஒரு அலுவலகத்தில் பிராமணருக்கும் தெலுங்கருக்கும் உள்ள ஒற்றுமையை உங்கள் சாதி அல்லது தெலுங்கர் அல்லாத (பிள்ளையும் அல்ல) ஒரு தமிழ் சாதி மனிதரிடம் கேட்டு தெரியுங்கள் . இந்த விசயத்தை நீங்கள் சரியாக கவனிக்கிறீர்களா என எனக்கு தெரிய வில்லை . நான் என்ன சொல்கிறேன் என்றால் அரசியலில் பிராமணருக்கும் தெலுங்கருக்கும் இடையில் இடையில் தமிழக மக்கள் மாட்டிகொண்டு விட்டார்கள் என்று கருதுகிறேன். இன்று சினிமாக்களில் தெலுங்கர்கள் மற்ற தமிழ் சாதியினரை மட்டமாக காட்டுகின்றனர். உதாரணமும் என்னால் சொல்ல முடியும். நாடார் - தனி ஒருவன், இந்தியா பாகிஸ்தான் , அங்காடி தெரு, செட்டியார் - ராஜதந்திரம், முதலியார் - யாகவரயினும் நாகாக்க , தேவர் - ஆயிரத்தில் ஒருவன், வன்னியர் -இதற்குதனே ஆசைபட்டை பாலகுமாரா உதாரணங்கள் நிறைய உள்ளன. இந்த படங்கள் எல்லாம் தெளுங்கர்களால் எடுக்கப்பட்டு அதற்கு ஆளும் இரண்டு கட்சிகளும் போட்டி போட்டு வாங்கி அதனை தங்கள் தொலைகாட்சிகளில் போடுகின்றன. பிராமணருக்கும் தெலுங்கருக்கும் இடையில் ஒரு வித்தியாசமும் இல்லை. இருவருமே இந்த தமிழ் சாதியின் அழிவிற்காக காத்து நிற்பவர்கள். சாதிகள் ஒழிய பாடுபடும் பெரியார் சாதியினர் அதாவது நாயுடு மற்றும் ரெட்டி இவர்கள் ஏன் தமிழ் சாதிகளில் பணம் யாரிடம் இருக்கிரதோ அவர்களை குறி வைத்து தாக்க வேண்டும் . ஏன் என்றால் பணம் அற்றவனை வெல்வது சுலபம் என்பதால் அல்லவா. நீங்கள் மீடிங்கில் பேசுவதோடு அரசியல் பணி முடிந்து அல்லாமல் பிரைவேட் கம்பனிகளில் என்ன நடக்கிறது என்று விசாரியுங்கள். அங்கு யார் யாரோடு சேர்ந்து கொள்கிறார்கள் என்று தெரிந்தாலே போதும். நாயுடு வோடு இந்த பக்கம் பிராமணர் மற்றும் அந்த பக்கம் பிள்ளை நின்று கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கி பேசுவார்கள். மற்ற சாதிகளை கண்டு கொள்ளவே மாட்டார்கள். இருவருக்கும் நடுவில் நாயுடு நிற்கிறார் என்றால் அவர்கள் மூன்று பெரும் என்றாவது ஒரு நாள் சேருவார்கள் என்றுதானே அர்த்தம். சரத்குமார் திமுக மற்றும் அதிமுக இரண்டு கட்சிகளாலும் சேர்ந்து தொர்கடிகபடுகிறார். இது இப்போது உலா வரும் செய்தி. நான் மேலே கூறியதும் அதுவே. கலைஞரை பொறுத்துவரை திராவிடன் என்றால் ரெட்டி நாயுடு பிள்ளை. ஏன் என்றால் இவர்கள்தான் இப்போது முன்னேறுகிறார்கள் அல்லது முன்னேறும் மற்ற தமிழ் சமூகத்தை தடுக்கிறார்கள். நீங்கள் எனக்கு பதில் தர முயன்றால் நன்கு ஆராய்ந்த பிறகு தாருங்கள். நன்றி

  ReplyDelete
 2. ஆமாம் , இவர்கள் மன்னராட்சி காலம் முதல் நம்முடன் இருந்து நம் பழக்க வழக்கங்களை ஏற்றுக் கொண்டு உள்ளவர்களை தான் குறை கூறுகிறார்கள்
  இங்குள்ள சிறு வியாபாரிகள் முதல் பெரிய வியாபாரிகள் வரை எல்லாரையும் நசுக்கும் ராஜஸ்தான் சேட்டுகளை பற்றியோ குஜராத் மார்வாடிகள் பற்றியோ வாய் திறப்பதும் இல்லை அவர்கள் நம் பழக்கவழக்கங்களை பின்பற்றுவதும் இல்லை வேலைக்கு தமிழனை அமர்த்துவதுமில்லை
  இவர்களுடைய நோக்கம் நேரடி பெரியார் எதிர்ப்பு மறைமுக பார்ப்பன ஆதரவு

  ReplyDelete
 3. உங்கள் விடை எப்பொழுதும் போல் தெளிவாக இருந்தது.. நன்றி ஐயா

  ReplyDelete
 4. இரத்தினவேல்23 October 2015 at 12:27

  மொழிவழி மாநிலங்கள் பிரிப்பதற்கு முன்னால், தமிழ்நாட்டில் காலம் காலமாக வசித்து வருபவர்களை நாம் தமிழர்களாக ஏற்றுக் கொள்ளலாம்.

  ReplyDelete
 5. கணேஷ்வேல்23 October 2015 at 13:36

  அருமையான விளக்கம், நன்றி அய்யா!!!

  ReplyDelete
 6. This comment has been removed by the author.

  ReplyDelete
 7. M.சுரேஷ்24 October 2015 at 00:10

  அவர்கள் சுபவீ போல இனத்துவேஷம்,ஜாதித்துவேஷம் பிடித்த அருவருப்பான பிறவிகளில்லையோ என்னமோ அதனால் தான் அந்த ஐயத்தை எழுப்பவில்லை போலும்...

  ReplyDelete
 8. யார் தமிழன்?
  –––––––––––
  வைரஊசி பதில்:
  யார் தமிழன்? என்ற கேள்வியை இப்போது ஏன் திடீரென்று கேட்டிருக்கிறீர்கள் என்று புரிந்து கொள்ள முடிகிறது. காரணம், இப்போது புதிதாய் புறப்பட்டுள்ள யார் யாரோ, 100 ஆண்டுக்கு முன்னர் பிறந்தவர்களுக்கும், 200 ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்தவர்களுக்கும் கூட, பிரசவம் பார்த்து, இது ஆண் பிள்ளை, இது பெண் பிள்ளை என்று சொல்வது போல, இவர் தமிழர், இவர் தமிழரல்லாதவர், இவர் தெலுங்கர், இவர், மலையாளி, இவர் இன்னவர் என்று, அவர்களுக்கான மொழி உரிமை, நாட்டு உரிமையை முடிவு செய்து அறிவிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு உள்ளதால், இந்த கேள்வியை எழுப்பி இருக்கறீர்கள்
  யார் தமிழர்... இதனை இப்படியாக வரையறுக்கலாம்...
  1)தமிழராக பிறந்தவர் ( பெற்றோர் தமிழராக இருப்பது மட்டும்)
  2) தான் தமிழன் என்பதை எண்ணி பெருமைப்பட்டு, தமிழ், தமிழர், தமிழ்நாடு ஆகியவற்றுக்காக உழைப்பவர், மேம்பாட்டுக்காக பாடுபடுபவர்.
  3) வேறு மொழியினராக இருந்தாலும், தமிழின் மேம்பாடு, தமிழரின் முன்னேற்ற வாழ்வு, தமிழகத்தின் வளம், நலம் காப்பவராக இருந்து, தன்னை தமிழன் என்று பெருமையோடு அறிவித்துக்கொள்பவர்கள்.
  4) தமிழ் செம்மொழியானதை எண்ணி பெருமைப்படுபவர்கள், இந்திய ஆட்சிமொழியாகவும் வேண்டும் என்று விரும்புவதுடன், அதற்காக செயலாற்றுவவர்கள்.
  5) சாதி மத வழக்கம் அற்ற திராவிட இனத்தைச் சேர்ந்ததமிழர்களை பிரித்து இன்றும் முட்டி மோதிக்கொண்டு சாகவிட்டு, ஓணாய்களாய் அதன் பலன் எனும் இரத்தத்தை குடிக்கும் பார்ப்பனர்களை புறந்தள்ளும் பண்பாடு கொண்டவர்கள்.
  இந்த 5 அளவுகோள்களை வைத்துக்கொண்டு, யார் தமிழர் என்று வரையறுத்தால், சரியாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.
  ஆம், தமிழர்களான பெற்றோர்களுக்கு பிறந்தவர், தமிழர்தான் என்பதில் ஐயமில்லை. அவர், அதனை உயர்வாகவோ, தாழ்வாகவோ கருதாமல், தன் பணி என்று இருப்பவர்கள். இவர்களால் தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ்நாட்டுக்கும் வளர்ச்சியோ, தாழ்ச்சியோ இல்லை என்பதால், இத்தகையவர்களை (அவர்கள் சொல்லிக்கொள்ள விரும்பவில்லை எனினும்) தமிழர் என்று கூறுவதில் தவறில்லை.
  அடுது்து, தமிழன் என்பதில் பெருமைப்பட்டு, தன்னை உருவாக்கிய தனது மொழிக்காகவும், தன் இனத்திற்காகவும், தமிழ் மண்ணுக்காகவும் பாடுபடுபவர்களை தமிழன் என்று அழைக்காமல் வேறு என்ன சொல்லில் அழைக்க முடியும்.
  வேற்று மொழியில் பிறந்தாலும், தமிழின் மேம்பாடு, தமிழரின் முன்னேற்ற வாழ்வு, தமிழகத்தின் நலன், வளம் காப்பவர்களாக இருப்பவரை, இருந்தவர்களை தமிழர்கள் என்று தானே பெருமைப்பட முடியும். ஏனெனில், உரிமை உள்ளவனே உழைக்காதிருக்கும் போது, எங்கிருந்து வந்திருந்தாலும், தமிழ், தமிழர், தமிழ்நாட்டின் பெருமைகளை போற்றி பாதுகாப்பவரை, தன்னை தமிழர்கள் என்று பெருமையோடு சொல்லிக்கொள்பவர்களை தமிழன் என்று அழைக்கவில்லை என்றால், வேறு யாரை அப்படி அழைப்பது.
  கிருத்துவ மதத்தை பரப்ப வந்த, ஜி.யூ. போப், தமிழின் பெருமையை உணர்ந்து, தமிழுக்காகவே காலமெல்லாம் பாடுபட்டதுடன், தனது கல்லறையில், இங்கு ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான் என்று எழுதப்பட வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக எண்ணினாரே.. அவரை தமிழர் என்று சொல்லாமல் வேறு யாரைச் சொல்ல முடியும்.
  தந்தை பெரியார், தமிழை தாய்மொழியாக கொண்ட பெற்றோருக்குபிறக்கவில்லை எனினும், தன் வாழ்நாளெல்லாம் தமிழரின் மேம்பாட்டுக்கும், தமிழ்நாட்டின் மேம்பாட்டுக்கும் பாடுபட்டதுடன், இந்தி மொழி திணிப்பால், தமிழுக்கு ஆபத்து வந்துவிடும் என்று, அதனை எதிர்த்துத் போராடி சிறை சென்று, விரட்டி அடித்தார். தமிழ் அறிவியல் கண்டுபிடிப்புகளில் இன்று கோலோச்சுவதற்கு தமிழில் எழுத்து சீர்த்திருத்தத்தை அறிமுகப்படுத்தினாரே அதுதானே காரணம்.. எந்த தமிழறிஞரும் செய்யாத, செய்ய முன்வராத இந்த செயலை தொடக்கப் பள்ளியை கூட முடிக்காத தந்தை பெரியார் செய்து முடித்தாரே... அவரை தமிழர் என்று சொல்லாமல் வேறு யாரை சொல்ல முடியும்.அடுத்ததாக, தமிழர் அல்லாத ஆரிய இனத்தவர் தன்னைதமிழர்கள் என்று கூறி ஆதாயம் தேடிக்கொள்ள பார்க்கும் நிலை. தமிழகத்தில் பிறந்ததாலேயே இதனை சொல்லிக்கொண்டு தமிழர்களை ஏய்த்து பிழைப்பவர்கள். அல்லது அவர்களுக்கு துணைபோவோர்களை எப்படி தமிழர்களாக ஏற்க முடியும்... அப்படியானால், தமிழகத்தில் பிறந்ததால் தமிழராக முடியாதாஎன்றால், நிச்சயம் அவர்களை தமிழர்களாக ஏற்க முடியாது...இதுபோன்றவர்களை தமிழர்கள் என்று கூற ஒரே வரையறைதான் உள்ளது. அவர்கள் சமற்கிருதத்தை விட தமிழ் சிறந்தது என்ற உண்மையை கூறுவதுடன், அதன் உயர்வுக்காக பாடுபடுபவர்களாக இருக்க வேண்டும்... அப்படி எந்த பார்ப்பனர் இங்கு இருக்கிறார் என்று எண்ணிப்பாருங்கள்... தமிழ் பாதிக்கப்பட்டால் துடிக்காதவன் எப்படி தமிழனாக இருப்பான்.
  இந்த அளவு கோள்களை கொண்டு இனி யார் தமிழர்கள் என்று நீங்களே வரையறுத்துக் கொள்ளுங்கள்.

  ReplyDelete
 9. கேரளா நாயர் ஜாதி வரலாறு ஒவ்வொரு தமிழன் மட்டுமல்ல ஒவ்வொரு இந்தியனும் அறிய வேண்டிய வேணடிய வரலாறு ஆகும் .இதனை அம்பேட்கர் அன்றே சொன்னார் .சூத்திரா என்பதுதான் சத்திரியர்களின் வாழ்கை முறை என்று. அதாவது பிராமணர்களின் பெண்களை ஆரிய வழி வந்த அரசர்கள் பிள்ளைகள் தர பிராமணர்களின் மூலமாக இந்திய முழுமைக்கும் ஆண்டு வந்த அரசர்களின் பிள்ளைகள் பிறந்தன. இவ்வாறாக இந்திய முழுமைக்கும் எண்ணிகையில் குறைவாக இருந்த வடஇந்திய ஆரிய அரசர்கள் தங்கள் ஆளுமையை செலுத்தினர்.அவர்களின் போர்த்திறனும் மிக வலுவாக இருந்தது ஒரு முக்கிய கரணம் இது அவர்களின் வழியாக இருந்தது. இதனை நியாப்படுத்த இந்து மதம் தோன்றியது. எல்லா கடவுளும் பிராமண திராவிட வழி வந்தவர்கலவே படைகப்படனர். இன்று பிராமன ஆதரவ்வளர்கள் இவ்வழி வந்தவர்கள் என்று உணர முடிகிறது ..

  ReplyDelete
 10. எல்லாரும் அப்படி இருக்க வாய்ப்பு இல்லை. சோழ அரச ஜாதிகள் என்று சொல்லி கொள்ளும் தேவர் மற்றும் உடையார் ஜாதிகள் இடையே நிறைய வேறுபாடு உள்ளது. உடையார் திராவிடராக தெரிகிறார். திராவிட அரசர்கள் விரட்டப்பட்டும் இருக்கலாம்..

  ReplyDelete