தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Sunday 4 October 2015

சமூக நீதிக்குச் சவக்குழி!


கர்நாடகாவில், இந்தியத் தொல்லியல் ஆய்வுக் கழகத்தில் பணியாற்றும் ஒரு நண்பர், சான்றுகளோடு ஒரு செய்தியை அனுப்பியுள்ளார். மைசூருவில், சதஹள்ளிக்கு அருகில், மகாதேவபுரம் சாலையில், குடியிருப்புகள் கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அரசு ஒப்புதலோடு உருவாகிக் கொண்டிருக்கும் அந்தப் பகுதிக்கு, Exclusively Brahmin Residential Layout என்றே அவர்கள் வெளிப்படையாக விளம்பரம் செய்துள்ளனர். இந்தக் குடியிருப்புப் பகுதியில் வீடு வாங்குவதற்குப் பிராமணர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்று அந்த விளம்பரம் கூறுகிறது.அதற்கு அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. இது மதச் சார்பின்மைக்கும், சமத்துவத்திற்கும் முற்றிலும் எதிரானதாக இருக்கிறது. தமிழ்நாட்டில், தலைவர் கலைஞர் தலைமையிலான அரசு, பெரியார் சமத்துவபுரங்களை உருவாக்கியது.இன்று தமிழ்நாட்டில் அந்த சமத்துவபுரங்களும் நின்று போய்விட்டன.கர்நாடக அரசோ, ஒரு ஜாதியினருக்கு மட்டும் கட்டப்படும் வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கிறது. நாமும், நாடும் எங்கே போய்க் கொண்ட்டிருக்கிறோம் என்ற வினா நம்முன் எழுகிறது. 

8 comments:

  1. சமத்துவபுரம் அமைத்து அதில் மக்களை குடி ஏற்றி அவர்களுக்குள் சமமான ஐக்கியம் உருவாக தீட்டப்பட்ட திட்டத்தில் ஆரியர்களுக்கும் பங்கு தேவைதானா? என்பதை திராவிடர்கள் உணர்ந்து இருத்தல் நலம். யாருக்குள் இப்போது ஐக்கியம் தேவை? திராவிடர்களுக்கு மத்தியில்தான். திராவிடர்களுக்கும் ஆரியர்களுக்கும் மத்தியில் இல்லை என்று எண்ணிடல் நலம். இந்த மேற்கண்ட "Exclusively Brahmin Residential Layout " எனும் செய்தியிலிருந்து அதுதான் தெரிகிறது. பிராமணர்கள் எப்போதும் மேலாண்மை நிலையில்தான் இருக்க எண்ணுவார்கள் என்பதற்கு அது ஒரு சிறிய உதாரணம் அவ்வளவுதான். அவர்கள் அவ்வாறு எண்ணுவதற்கும் அதற்கு அவர்களுக்கு அங்கிகாரம் கிடைப்பதற்கும் காரணம் இந்த நாட்டின் அரசியல் அமைப்பு அவர்களுக்கு பணிவிடை செய்யத்தானே எழுதப்பட்டு உள்ளது. மனு தர்ம அரசியல் அமைப்பு அது அல்லாமல் வேறு என்ன? இந்த நாடு பல்வேறு இன மக்களின் அவர்களின் நாடுகளின் கூட்டு முயற்சி அதுதான் உண்மை. ஆனால் அந்த உண்மையை மறைத்து இந்த நாடு ஒரே ஒற்றை நாடு என்பது போல எண்ணங்களை சுதந்திர போராட்டத்தை காரணம் காட்டி மக்களிடம் ஏற்படுத்தி அதிலிருந்து அவாள்கள் பலன் அனுபவிக்கிறார்கள். இது 1947 முதல் அவாள்களின் நாடு. மேற்கண்ட செய்தியில் ஏகபோக பலன் அனுபவிக்க விரும்புகிறார்களே அவர்கள் அசாதாரண பிராமணர்களா? இதற்கு பதில் வேண்டும். எங்கே எஸ். சேஷாத்ரி? அதாங்கோ "பகிர்வு 14" இல் விமர்சன கருத்து சொல்லிபோனாரே அவாளை செத்த கூப்பிடுங்கோ.

    ReplyDelete
  2. ஸ்ரீநிவாசன்5 October 2015 at 01:29

    அய்யா நாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த,வட்டிக்கு கடன் வாங்கிய பணத்தில் எங்கு வீடு வாங்கவேண்டும், யாருடன் வாழவேண்டும் என்ற உரிமை கூட இந்த சுதந்திர நாட்டில் எங்களுக்கு இல்லையா?.புலால் சமைத்து உண்ணுமிடத்தில் வாழ எங்களுக்கு ஒத்துவராது.அதற்காக அவ்வாறு புலால் சமைத்து உண்பவர்களை இங்கு அவ்வாறு செய்யாதே என்று பிறரைக் கூறவும் சுதந்திர நாட்டில் எங்களுக்கு உரிமையில்லை,கூறினாலும் அவர்கள் கேட்கப் போவதில்லை.அதனால்தான் எங்களுக்கு உகந்த இடத்தில் வாழ விரும்புகிறோம்.இஸ்லாமியர்கள் அவர்களின் உட்பிரிவுகளோடு தனியாக வசிப்பது உங்கள் கண்களுக்குத் தெரியாதா?.அங்கு ஒரே ஒரு ஹிந்து வாழமுடியாது(நான் அதைத் தவறு என்று கூறவில்லை).தமிழ் பேசும் இஸ்லாமியர் உருது பேசும் இஸ்லாமியரை விட இழிவானவர் என்பது உங்களுக்குத் தெரியாதா?.தமிழ்நாட்டில் முதலியார் தெரு,யாதர் தெரு,செட்டியார் தெரு அதற்கும் மேல் செட்டிநாடு போன்றவை இருப்பது உங்களுக்குத் தெரியாதா?. அதைப்பற்றியெல்லாம் உங்களிடமிருந்து எந்த சத்தத்தையும் காணோமே!.தமிழ்நாட்டில் நடக்காத வேறு மாநிலத்தில் நடந்ததை,அரசாங்கத்தின் பங்கில்லாமல் அவர்களோடைய சொந்த பணத்தில் நடக்கும் விஷயங்களை பெரிதுபடுத்தும் நீங்கள் இங்கு தமிழ்நாட்டில் பல்லாயிரம் கோடிகள் பெறுமானமுள்ள பொது சொத்துக்களான மணல் கொள்ளை,கிரானைட் கொள்ளை,பொது சொத்துக்கள் கொள்ளை etc.,போன்ற சமுதாய அநியாயங்களைப்,சமூகநிதி கொள்ளை போவதை பற்றிப் பேசமால் மௌனமாக இருங்கள்,வாழ்க உங்கள் சமூகநீதி!.அகவே சவக்குழிக்குப் போக வேண்டியது உங்களின் சுய,அரசியல் ஆதாயத்திற்காக கூறப்படும் உங்களின் கருத்துதான்.அதனால்தான் தமிழ்நாட்டில் உங்களுக்கெல்லாம் எந்த செல்வாக்கும் கிடையாது.

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீ நிவாசன் மிகவும் தவித்து போயிருக்கிறார்போலும். கொடுமை கொடுமை என்று கோயிலுக்கு போனால் அங்கு ஒரு கொடுமை டிங்கு டிங்கு என்று ஆடுச்சாம். அதைப்போல, அட இந்த ராமசாமி கொடும தாளாம தமிழ்நாட்ட விட்டு வேறு எங்காவது கண்காணாத எடத்துக்கு போய் குரூபா இருக்கலாமுனு பார்த்தாக்கா இந்த பாவி திராவிடன் அதுலேயும் கண் வைக்கிறானே. இதுங்களுக்கெல்லாம் பகவான் நல்லா கொடுப்பான் என்று ஸ்ரீ நிவாசன் புலம்புகிறார்போலும்.

      நமது திராவிடனை பார்த்து ஸ்ரீ நிவாசன் சொல்கிறார், "அதனால்தான் தமிழ்நாட்டில் உங்களுக்கெல்லாம் எந்த செல்வாக்கும் கிடையாது." என்று. ஸ்ரீ நிவாசன் அய்யரே எங்களுக்கு செல்வாக்கு எப்படி இருக்கும்? இந்த நாட்டின் அரசியல் அமைப்பே உங்கள் சொல்வாக்கால் செல்வாக்கு பெற்று இருக்கும்போது எங்களுக்கு எப்படி செல்வாக்கு இருக்கும?ஆம் உண்மைதான் எங்களுக்கு செல்வாக்கு இல்லைதான். செல்வாக்கு மட்டும் இருந்திருந்தால் எங்கள் ஈழம் எப்போதோ மலர்ந்து இந்நேரம் இஸ்ரோவை மிஞ்சும் ராக்கெட்டு விட்டு இருப்போமே. அது நடக்காமல் போனது உங்கள் செல்வாக்கால்தானே. ஸ்ரீ நிவாசன் புலம்புவது வேடிக்கையாக உள்ளது. அவருடைய புலம்பல் எப்படி இருக்கிறது என்றால், இங்குள்ள பட்டதாரி ஒருவன் தனக்கு ஆங்கிலம் சரியாக பேசவராததை இப்படி புலம்பினானாம் அதாவது ஐயோ ! அமெரிக்காவிலே ரோட்டுல பிச்சை எடுக்கும் பிச்சை காரன்கூட ஆங்கிலத்தில் சரளமாக பேசுகிறானே தனக்கு மட்டும் அவ்வாறு பேச முடியவில்லையே என்று புலம்பினானாம். அதைப்போல ஸ்ரீ நிவாசனின் புலம்பல் உள்ளது.

      ஸ்ரீ நிவாசன் இஸ்லாமியரை பற்றி பேசுகிறார். தன்னுடை கருத்துக்கு அவர்களின் வாழ்க்கை வாழும் பாங்கை எடுத்து காட்டுகிறார். அவர்களுக்கு உள்ள உரிமைப்போல தங்களுக்கும் உரிமை உள்ளது என்று கருத்துரைக்கிறார். அவ்வாறு கருத்துரைக்க அவர் காட்டும் உதாரணம் சரியான உதாரணம் இல்லை. அவர்களுக்கும் ஸ்ரீ நிவாசன் சமுதாயத்துக்கும் எண்ணில்லடங்கா வேறுபாடுகள் உள்ளது. அவர்கள் மற்றவர்களை ஏளனமாக ஒதுக்கி கீழ் ஜாதிகளாக முத்திரை குத்தி தனக்கென்று தனி ஒரு வசிப்பிடம் ஏற்படுத்திக்கொள்ளவில்லை. அவர்களுக்குள் வேறுபாடுகள் இருக்கிறது என்று ஸ்ரீ நிவாசன் வாதாடுவார் என்றாலும் அந்த வேற்றுமை காணும் போக்கை இஸ்லாம் அங்கிகரிக்க வில்லை. ஆனால் ஸ்ரீ நிவாசன் தமது சமுதாயத்துக்கு ஒரு நீதி மற்றவர்களுக்கு ஒரு நீதி என்று பிரம்மனே அவ்வாறுதான் படைப்பிலேயே படைத்துவைத்துள்ளான் என்று கருத்தின் வழியில் அவர்களின் தனி வசிப்பிடத்துக்கு வக்காலத்து வாங்குகிறாரே அதைத்தான் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. இஸ்லாமியர்கள் வசிக்கும் தெருவுக்குள் ஸ்ரீ நிவாசன் வரக்கூடாது என்று இஸ்லாமியர்கள் தடுத்தால் அப்போதுதான் அவர்களின் தனி வசிப்பிட உரிமை கேள்விக்கு உள்ளாகும். அதைப்போன்ற தடையை அவர்கள் ஏற்படுத்தி வைத்தால் அப்போது அதை உதாரணமாக எடுக்கலாம். அது அப்படி இருக்க, இப்போதே அவர்களை உதாரணமாக ஸ்ரீ நிவாசன் எடுத்து பேசுவது அவர்களின் வெந்துள்ள புண்ணில் வேல் கொண்டு குத்துவது போலாகும். நாங்கள் இஸ்லாமியர்கள் இல்லை ஆயினும் சமத்துவ சமுதாயம் மலர யார் முன்வந்தாலும் அவர்களை மனம் மகிழ்ந்து வரவேற்போம். அதைப்போல ஸ்ரீ நிவாசன் வரவேற்க தயாரா? இல்லாமியர்கள் கதை ஒருபக்கம் இருக்கட்டும். ஸ்ரீ நிவாசன் அவர்களே நீங்கள்தான் ஹிந்துக்கள் அல்லவா உங்கள் ஹிந்து சமுதாயத்தில் வீர சைவம் பேசும் வேறு ஜாதி மக்களை அந்த உங்களுடைய தனி பிரதேசத்தில் இடம் தருவீர்களா? அப்போது தெரியும் உங்கள் கணக்கு என்னவென்று. இப்படி விளம்பரம் கொடுங்கள் பார்க்கலாம், "இந்த வசிப்பிடத்தில் அனைத்து சைவ ஹிந்துக்களுக்கும் இடம் உண்டு" என்று ஓர் அறிவிப்பு விளம்பரம் கொடுங்கள். உங்களுக்கு செல்வாக்கு இல்லையோ?

      Delete
    2. ஆதவன் தீட்சண்யா5 October 2015 at 16:31

      //புலால் சமைத்து உண்ணுமிடத்தில் வாழ எங்களுக்கு ஒத்துவராது// -உங்களுக்கு தேவையான அரிசி பருப்பு புளி மிளகாய் பஞ்சக்கச்சம் மடிசார் சட்டி பானை லொட்டு லொசுக்கு இத்யாதிகள் புலால் உண்பவர்களின் உழைப்பாலானவை தானே...அதிலெல்லாம் ஆச்சாரம் தீட்டாவதில்லையா?

      Delete
    3. என்றுமே யாருடைய உழைப்பின் பயனால் வந்தவை,விளைந்தவை தீட்டாகாது. புராணங்கள்,சாஸ்திரங்களின் நுணுக்கங்கள் தெரிந்தால் தான் அதை புரிந்து கொள்ள முடியும்.ஆதவன் அவர்களுக்கு புரியும்படி உதாரணம் சொல்ல வேண்டுமென்றால் மின்சாரம் தீட்டு,தீண்டினால் சங்குதான். ஆனால் அந்த மின்சாரத்தின் பயனால் வந்த பல்புகள்,வானொலி,டிவி,கம்ப்யூட்டர்,தண்ணீ்ர் மோட்டார் முதல் உயிர் காக்கும் சுவாசக்கருவி என்று பல பொருட்களை நீங்கள் தீண்டமாட்டிர்களா?.இவ்வளவு மதிப்பும்,மரியாதையுமுடைய ஆனால் தீண்ட முடியாத மின்சாரம் இல்லாமல் இன்று நம் வாழ்க்கையில் ஒரு அணுவும் அசையாது!, ஆனால் அது இருக்க வேண்டிய தீண்ட முடியாத இடத்தில் கனமான insulation செய்யப்பட்ட இடத்தில் இருக்கும் வரைதான் என்ற அறிவியல் உண்மையை உணர்ந்தால் இதைப் போன்ற சந்தேகங்கள் வர வாய்ப்பேயில்லை!.

      Delete
    4. சத்யநாராயணன்5 October 2015 at 22:12

      திரு ஸ்ரீனிவாசன் அவர்கள் சொல்வது முழுபூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல உள்ளது. வெறும் புலால் உண்ணும் காரணத்திற்காக மட்டும்தான் பிராமணர் அல்லாதவர்களிடமிருந்து விலகி வாழ்கிறார்கள பிராமணர்கள்? பல ஆயிரம் புலால் உண்ணும் வேற்று மத வெள்ளைக்கார மருமகள்களையும் மருமகன்களையும் தங்கள் குடும்பங்களில் சேர்த்துக்கொண்டு பெருமை கொண்டாடும் படித்த மேல்தட்டு பிராமணர்களை இவர்கள் என்ன தங்கள் சாதியை விட்டு நீக்கி விட்டார்களா? நம் அனைவருக்குமே தெரிந்த ஒரு உண்மை, இன்றைய காலகட்டத்தில் நம் ஊரிலேயே பத்தில் மூன்று அல்லது நான்கு பிராமணர்கள் தெரிந்தே புலால் உண்பவர்கள். தெரியாமல்....? வங்கம் காஷ்மீரை சேர்ந்த அணைத்து பிராமணர்களும் காலம் காலமாக புலால் உண்ணும் வழக்கம் கொண்டவர்கள். கர்நாடகத்தில் உள்ள அய்யங்கார் பேக்கரிகளில் முட்டையை உபயோகிக்காமல் கேக் செய்வதில்லை. முட்டை பப்ஸ் செய்து விற்கிறார்கள், சாப்பிடுகிறார்கள். அதே அய்யங்கார் குடும்பத்தினர்தான் பெருமாள் கோயில்களில் பாசுரம் பாடி பூசையும் செய்கிறார்கள். மறுக்க முடியுமா? தங்கள் பிள்ளைகளுக்கு புலால் உண்ணாதே என சொல்ல முடியுமா? நல்லது கெட்டதுக்கெல்லாம் சைவ உணவை சரவண பவனில் இருந்து ஆர்டர் செய்து சாப்பிடும் பிராமணர்களில் எத்தனை பேருக்கு தெரியும் அதை நடத்துவது யார் என்று? உதகையில் நல்ல சைவ உணவை சாப்பிட வேண்டுமென்றால் "ஊட்டி காபி அவுசு" க்குதான் போய் சாப்பிட வேண்டும். நடத்துவது முஸ்லிம்கள்! ஆக, சிறிதும் குற்ற உணர்வின்றி, வெட்கமின்றி, சாதி பெருமையை சாதீய மனப்பான்மையை மீண்டும் நிலை நிறுத்த செய்யப்படும் ஒரு செயல்தான் இது போன்ற பிராமணர்களுக்கான பிரத்யேக வாழ்விடங்கள். இதை விளம்பர படுத்தி செய்வது என்பது ஒரு விதமான அராஜகம் தான். வேறு என்ன?

      Delete
  3. வேதகாலத்தில் புலால் உணவு சாப்பிட்டவர்கள் இன்று திராவிடத்தை அடக்க அதை எதிர்க்கிறார்கள்..மக்களை பிளவு படுத்தி ஆதிக்க ஜாதி வெறியை தூண்டி விட்டு வேடிக்கை பார்ப்பது

    ஆரியனின் சூழ்ச்சி!!!!

    ReplyDelete