தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Saturday 14 November 2015

பாண்டேவுக்கு என்ன கேள்வி ?

13-11-2015 அன்று தந்தி தொலைக்காட்சியில் "பாண்டேவுக்கு என்ன கேள்வி? "  என்ற நிகழ்ச்சியில் சுபவீ


23 comments:

  1. இராமச்சந்திரன்14 November 2015 at 13:29

    பாண்டேயின் கேள்விகளுக்கு,எண்ணங்களுக்கு சந்தேகங்கள் எழுப்பும்,உள்நோக்கங்கள் கற்பிக்க விழையும் சுபவீ அவர்கள்,முக்கியமாக கலைஞர் டிவி&சன்டிவியின் நெறியாளர்களின் ஒருதலைப்பட்சமான கேள்விகள்,அவர்களுக்கு எதிரான(உண்மையான)பதில் வரும் கேள்விகளைத் தவிர்த்தல்,அப்படியே வந்தாலும் அதை இடைமறித்து திசை திருப்புதல் போன்ற கேவலமான வழிமுறைகளைக் கையாளும் நெறியாளர்களின் ஊடக அறத்தை கேள்வியெழுப்பி சந்தேகப்படாதது ஏன்?.எனவே சுபவீ அவர்களின் அத்தகைய நேர்மையற்ற,அறமற்ற தன்மையை யாராவது கேள்வியெழுப்ப வேண்டும்!.

    ReplyDelete
    Replies
    1. kalaingar tholaikaatchiyum, sun tholaikaatchiyum thangalai nadunilaiyaalarhal sollikolvadhu illai irundhaalum avarhal seidhugalil pilai irundhaal dhaaralamga sollungal thavarillai. rangaraja pandey thannai oru nadunilaiyaalar endru solli kondu thavaru seiyum podhu dhaan pratchanai

      Delete
    2. கலைஞர் டிவியும், சன் டிவியும் தங்களை நடுநிலையாளர் என்று கூறிக்கொள்ளவில்லை. அந்த இரண்டு டிவிகளும் யாரை சார்ந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், தந்தி டிவியும், ரங்கராஜ் பாண்டேவும் நடுநிலையாளர்கள் போல் காண்பித்துக்கொண்டு ஆர்.எஸ்.எஸ். சார்புடையவராக நடந்து கொள்வதால் பேராசிரியர் சுப.வீ. அவர்கள் கேட்டதிலே தவறு ஏதுமில்லை..

      Delete
  2. அருமையான நிகழ்ச்சி, உங்களது நேரான பல கேள்விகளுக்கு மழுப்பலான பதில் தான் தந்தார் பாண்டே உதாரணமாக திரு ராமகோபாலன் பற்றிய கேள்விகள்
    இருந்தாலும் ஒரு சந்தேகம் தன் மீதான இந்துத்துவா இமேஜை துடைக்க தங்களை பயன்படுத்தி கொண்டாரோ பாண்டே? என்று தோன்றியது.

    ReplyDelete
  3. Well Done SubaVee !

    ReplyDelete
  4. பாண்டேக்கு இது சொத்துக் குவிப்பு வழக்கு என்று தெளிவாக தெரியும். அவர் வேண்டும் என்றே சொத்து வழக்கு என்று சொல்லுகிறார். அதற்கு சப்பைக்கட்டுக்காக எல்லோர் வழக்கிலும் அப்படியே கூறுகிறோம் என்கிறார். ஆங்கில நாளிதழ்களை தனக்கு துணையாக அழைப்பதும் சரியல்ல. அவர்கள் ஏன் Assets case என்று போடுகிறார்கள் என்றால் இடம் கருதியே. தலைப்பில் அப்படிப் போட்டாலும் உள்ளே செய்தியில் Disproportionate Assets Case என்றே போடுவார்கள். அப்படியே ஆங்கில நாளிதழ்களில் போட்டிருந்தாலும் அது தவறு என்று பாண்டேக்கு நல்லாவே தெரியும். அந்தத் தவறை தானும் தொடர்வது தவறு என்று தெரிந்தே செய்து வருகிறார். எல்லாத் தொலைக்காட்சிகளிலும் சொத்துக் குவிப்பு வழக்கு தான். பாண்டேக்கு மட்டுமே சொத்து வழக்கு. சொத்து வழக்கு சொ.கு. வழக்கு இதில் ஒன்று தான் சரி. இரண்டுமே சரி என்று எவருமே சொல்ல மாட்டார்கள். ஆனாலும் பாண்டேக்கு சொ.கு. வழக்கு என்று் சொல்ல மனம் வருவதில்லை.

    ReplyDelete
  5. I Believe Pandey was upright honest and so as SubaVee. The question is not about what is right but what ideology they have chosen what level of respect they owe towards it. Hats off to both !

    ReplyDelete
  6. வருமானத்துக்கு அதிகமான சொத்துக் குவிப்பு வழக்கில், சொத்துக் குவிப்பு என்று தண்டனை வழங்கப்பட்ட பின்னரும், தமிழக செய்தி ஊடகத்தில், தந்தி டி.வி. மட்டுமே "சொத்து வழக்கு" என்று கூறி வந்ததை மிக அழகாக வினா மூலம் பாண்டேவிடம் எழுப்பிய பாங்கு அருமை.. இதே வினாவை நண்பர் பாண்டேவிடம் நானும் ஏற்கனவே கேட்டேன்..

    ReplyDelete
  7. சில கேள்விகளுக்கு பாண்டேயின் பதில்கள் மழுப்பல்கள்தான்

    ReplyDelete
  8. after seeing the interview this is what i posted in rangaraja pandey's facebook page >>
    Watched ur programme "pandeyvukku enna kelvi". i strongly appreciate ur attempt though I found some answers to be pathetic. one answer was regarding jaya case where u said that (correct me if am wrong) u use the word 'asset case' (soththu in tamil instead of soththu kovippu) just because 'national' English media does the same, well it’s like saying if all the 'national' English media gets poisoned themselves?, u will also just do it blindly without any logical thinking. now even if I suppose agree with you, what I found regarding same issue is, many english news reports uses the word 'DISPROPOTIONATE ASSEST CASE' not just 'asset case' that translates into Tamil as 'varumaanathukku adhigamaga (or varumaanthukkul adangadha) soththu seartha valakku'. As subavee pointed out that asset case is something that will likely to happen between two brothers or partners, will you accept and give apology for reporting a dipropotionate assest case as just asset case? Or will u apologies for using the word 'asset' case even though 'national' media uses the word DISPROPOTIONATE ASSET

    ReplyDelete
  9. தந்தி டி.வியா ? புதிய தலைமுறையா?

    ReplyDelete
    Replies
    1. திருத்தம் செய்யப்பட்டுள்ளது. பிழையை சுட்டிக்காட்டியதற்கு நன்றி

      Delete
  10. Good programme,, with some personal......,
    Again and again regarding ki.veeramani dr programme was enlightened... As well rajagopalan iyya.. That could have been avoided. But overall good.

    ReplyDelete
  11. I appreciate both subavee and pande.... Without any hesitation both participation was really good. That point all of us should 👏 👏 👏 👏 👏 vazhthukkal.

    ReplyDelete
  12. வணக்கம் அய்யா! நிகழ்ச்சியை நெறிப்படுத்தி கொண்டு சென்ற விதம் மிகவும் அருமை

    ReplyDelete
  13. The following is the comments by Kavin in Face book..

    தந்தி தொலைக்காட்சியின் ‘பாண்டேவுக்கு சில கேள்விகள்’ நிகழ்ச்சியை சுபவீயின் வலைப்பூவில் பார்த்தேன். இந்நிகழ்ச்சி சரியான நிகழ்ச்சிதானா? இது ஊடக அறத்தில் வருமா என்று சில கேள்விகள் எழுகின்றன. மக்கள் மத்தியில் வேலை செய்பவர்களை நேர்காணல் செய்வதற்கென்றேதான் நிகழ்ச்சிகள். ஆனால் ரங்கராஜ் பாண்டேவை சுபவீ நேர்காணல் செய்வது என்பது எங்கோ இடிக்கிறது. கேள்விகளால் பாண்டேவுக்கு சுபவீ கிடுக்கிப்பிடி போட்டாலும் மொத்தமாக அந்நிகழ்ச்சியே சரிதானா என்கிற கேள்வி எழுகிறது. விகடனிலேயே விகடன் ஆசிரியரின் பேட்டி வெளியாவது போல, குமுதத்திலேயே குமுதம் ஆசிரியரின் பேட்டி வெளியாவதுபோல இது ஏதோ விநோதமாக இருக்கிறது. இது வேறெந்த ஊடகத்திலும் சாத்தியமா என தெரியவில்லை. சுபவீ, திருமாவளவன், ராம கோபாலன், சுப்பிரமணியசாமி, கருணாநிதி, ஜெயலலிதா, ராமதாஸ், வைகோ, நல்லகண்ணு, விஜய்காந்த், கி.வீரமணி, சீமான், கொளத்தூர் மணி, என்று எந்தத் தலைவரை எடுத்துக்கொண்டாலும் அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேட்க அவர்களை பிடித்த பிடிக்காத மக்கள் தயாராக இருக்கிறார்கள். ஆகவேதான் அவர்களை அழைத்து ஊடகங்கள் நேர்காணல் செய்கின்றன. ஆனால் ரங்கராஜ பாண்டேவின் நேர்காணலைப் பார்க்க மக்களுக்கு என்ன் ஆவல் இருக்க முடியும்? அவர் ஏதோ தலைவர் போல பாவித்து அவரது நேர்காணல் அவர் வேலை பார்க்கும் சேனலிலேயே வெளியாவது ஏதோ நமக்கு நாமே திட்டம் போலல்லவா இருக்கிறது? மிகச் சுருக்கமாகச் சொன்னால் நியூஸ் வேல்யூ இல்லாத் ஒரு செய்தியை ஊடகம் கண்டுகொள்ளாது. ஒளிபரப்பாது. பாண்டேவின் நேர்காணலுக்கான நியூஸ் வேல்யூ என்ன? அது சுபவீ எடுத்த நேர்காணல் என்பது தவிர? இது என்ன வகையான ஊடக அறம்?

    ReplyDelete
    Replies
    1. A.கிருஷ்ணமூர்த்தி19 November 2015 at 00:11

      திரு.வீரமணி என்றுமே ஊழல் அரசியல்வாதிகளின் ஊதுகோளாக இருந்திருப்பதே அவருடைய வரலாறு கூறும் உண்மையாகும்.நேர்காணல் செய்பவர்களெல்லாம் அவரை மையப்படுத்தி,அவர் புகழ்பாடி,அவர் விரும்பும் கேள்வியை கேட்கும் வகையிலேயே வடிவமைக்கப்படும்.ஆனால் திரு பாண்டே நீங்கள்/அவர் விரும்பும் அந்த வகையில் அந்த நேர்காணலை எடுத்துச் செல்லவில்லை(அவர் சமிபகாலத்தில் பெரும்பாலும் அனைவரிடமும் அந்த முறையைதான் கையாண்டுள்ளார்).அதை சகிக்க முடியாதவர்களின் புலம்பல் தான் இந்த கருத்து மற்றும் திரு.சுபவீயின் நேர்காணல். நேர்காணல் செயய வந்த செய்தியாளர் பாண்டேவை எதிர்கொள்ள முடியாத திரு.வீரமணி அவரை எதிர்க் கேள்வி கேட்டு திசை திருப்பியது தான் வெட்கக்கேடானது!. அவரின் வெறுப்பு,கோபத்திற்கு பிறகுதான் பாண்டேவின் கேள்விகளின் வீரியம் குறைந்துபோனது!.இந்த நேர்காணலே திரு.சுபவீயின் விருப்பமாக இருந்திருக்குமே ஒழிய பாண்டேவின் விருப்பமாக நிச்சயமாக இருந்திருக்காது!.

      Delete
  14. திரு பாண்டே அவர்கள் திரு. வீரமணி அய்யாவை பேட்டி கண்ட நிகழ்ச்சியை நானும் பார்த்திருந்தேன், அவர் ஏதோ ஒரு நீதிபதி போலவும் வீரமணி அய்யாவை ஒரு குற்றவாளி போலவும் விட்டேனா பார் என்ற தோரணையில் .. ஏராளாமான ஹோம் வோர்கேல்லாம் செய்து கொண்டு அடிக்கடி பின் திரையில் வரலாற்று சான்றுகள் என கூறிகொள்ளும் வாசகங்களை ஒளிபரப்பு செய்து கொண்டே எந்தவித ஊடக தர்மமும் இன்றி அந்த நிகழ்ச்சியை அரங்கேற்றி இருந்தார்.
    வீரமணி அய்யாவுக்கு பல இடங்களில் இவர் பேசுவதற்கு வாய்ப்பே தரவில்லை, திரு பாண்டே வயதில் இளமையாக விடலையாக இருப்பதால் சத்தம் போட்டு வேகம்வேகமாக பேச முடிந்தது, டிஆர்பி விடயம் போலும்? பாண்டே மிகவும் அநாகரிகமாக நடந்து கொண்டார்.
    ஆசிரியர் வீரமணி அய்யாவின் கருத்துக்களோடு உடன்படாவிடினும் திரு பாண்டே அவர்கள் நிச்சயம் வீரமணி அயாவுடனான நேர்காணலில் அவரிடம் இருந்து பல நல்ல விடயங்களை கற்று கொண்டிருக்க கூடிய வாய்ப்பை பெற்றிருக்கலாம் .எம்போன்ற பார்வை யாளர்களுக்கும் அந்த வாய்ப்பை வழங்கி இருக்கலாம் . ஆனால் திரு பாண்டேயோ எப்படியாவது திரு வீரமணி அய்யாவையும் அவரது திராவிடர் கழக வரலாற்றையும் கேவலப்படுத்து விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தார்.
    நாம் தமிழர் இயக்க(அசல்) தலைவர் சி.பா.ஆதித்தனாரால் உருவாக்கப்பட்ட ஸ்தாபனத்தில் எப்படி இந்துத்வா நுழைந்தது என்பதுதான் எனக்கு புரியவில்லை. இனியாவது அவர்கள் தாங்கள் வந்த பாதையை கொஞ்சம் திரும்பி பார்க்கவேண்டும்.
    கிடைத்த வாய்ப்பை மிக கவனமாக பயன் படுத்தி இருட்டிலே ஒளிந்து கொண்டிருந்த பாண்டேயின் ராமகோபாலன் பாசத்தை வெளிச்சம் போட்டு காடியதற்கு நன்றி.

    ReplyDelete
  15. புதிய தலைமுறையை பார்க்கும்போது இவரது தலைமையில் குறை இருப்பது தெரிகிறது. தந்தி நிர்வாகம் இந்த அளவுக்கு இவரை நம்புவது ஏன். .பான்டே ஒரு அதிமுக விசுவாசி. அதனை நியாயப்படுத்த கதைகள் விடுகிறார்..எந்த ஒரு ஜாதியாக இருந்தாலும் விலை போகும் மனிதர்கள் இருப்பார்கள். அப்படி ஒருவர்தான் மாப்பா பாண்டியராஜன். இவர் மூலமாக அதிமுக நாடார் ஒட்டுகளை பெற நினைக்கிறது . இவர் மட்டும் அடிக்கடி விவாத நிகழ்சிகளில் அதிமுக சார்பாக அழைக்கப்படுவது ஏன். அந்த ஹரிஹரன் குழந்தை முகத்தை வைத்துகொண்டு விவாத நிகழ்ச்சி நடத்துவது ஏன். அவரை இந்த அளவுக்கு வளர்ப்பது ஏன். நிறைய நல்ல தொகுப்பாளர்கள் திடீர் என விலகுவது ஏன்..தந்தி நிர்வாகம் மறு ஆய்வு செய்ய வேண்டும்.

    ReplyDelete
  16. ஐயா வணக்கம் ,
    வரலாற்றில் ஆதிக்க ,மத ,சாதி வெறி கொலைகள் நடந்துகொண்டு தானிருக்கிறது ,மறுப்புகளும் தொடர்ந்துகொண்டு தானிருக்கிறது.
    ஆனால் பாண்டே சொல்வதுபோல் இல்லை
    இப்போது அரசே மூர்க்கமாக மத வெறி கொண்டு நடக்கிறது ,
    அதனால் தான் மறுப்புகளும் அதிகமாக வருகிறது (குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் ஊதாரியாக இருந்தால் குடும்ப தலைவர் முயன்று குடும்பத்தை கரையெற்றலாம் ,குடும்ப தலைவனே ஊதாரியாக இருந்தால் ,அதனால் தான் பி ஜே பி யை பகுத்தறிவாளர்கள் ,ஊடகவியாளர்கள் , அறிவியல் அறிந்ஞர்கள் ,நடுநிலையாளர்கள் என எல்லோரும் எதிர்கிறார்கள் )
    ஆனால் பாண்டே இதை தெரிந்தும் தெரியாததுபோல் பேசுகிறார் அதை மீண்டும் மீண்டும் மக்களுக்கு அம்பலபடுத்துங்கள் ஐயா

    ReplyDelete
  17. Great SubaVee sir for asking DIRECT questions to Mr. Pande !!!

    ReplyDelete
  18. U r right person for that interview

    ReplyDelete
  19. வீரமணி பேட்டியை பாண்டே நடத்திய விதம் ஊடக அறம்தானா என்ற கேள்வி சரிதான் ஆனால் பான்டே காட்டிய ஆதாரங்கள் தவறாக இருந்தால் தங்கள் விடுதலை மற்றும் உண்மை பத்திரிகையில் விளக்கம் தந்திருக்கலாமே அதை விட்டு பார்ப்பான் பரப்பான் என ஊளை இடுவது ஏன்

    ReplyDelete