தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Thursday 19 November 2015

இரு துருவங்கள்


1972 அக்டோபர் மாதம் , எம்.ஜி.ஆர்., தி.மு.க.விலிருந்து பிரிந்து தனிக் கட்சி தொடங்கினார். அதற்கு முன்னால் , தந்தை பெரியாரைச் சந்தித்தார். "வேண்டாம், நீங்கள் தி.மு.க. வை விட்டுப் பிரிந்து செல்ல வேண்டாம். தொடர்ந்து கட்சியிலேயே பணியாற்றுங்கள்" என்று அவரைப் பெரியார் கேட்டுக்கொண்டார்.  அந்த நேரத்தில், எம்.ஜி.ஆரின் முடிவுக்கு ஆதரவாக, வலிமையாக ஒரு குரல் கேட்டது. அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் ராஜாஜி. "எம்.ஜி.ஆர் தனியாகப் போராடுகிறார். அவரைக் கைவிட்டு விடாதீர்கள். அர்ஜூணனைப் போல் வெற்றி வீரர் ஆக்குங்கள்" என்றார் ராஜாஜி.

தி.மு.க.வும், எம்.ஜி.ஆரும் பிரிந்துவிடக் கூடாது என்று கருதினார் பெரியார். எம்.ஜி.ஆர் பிரிந்து போகட்டும் என்று கருதினார் ராஜாஜி. இரண்டும் வெறுமனே இரண்டு கருத்துகள் மட்டுமில்லை. அவற்றுக்குள், தமிழ்நாட்டின் எதிர்கால அரசியல் அடங்கியிருந்தது.


9 comments:

  1. சித்தாந்தமும் வேதாந்தமும்

    ReplyDelete
  2. பெரியாரின் தீட்சணியமான அறிவை யாரும் ஏமாற்றி விட முடியாது , ராஜாஜியின் பீஷ்ம பிதாமகர் வேஷமும் அதற்குள் ஒளிந்து கொண்டிருந்த Doubting Thomas ஐயும் சரியாக கண்டு பிடித்தவர் பெரியார், பெரியாரின் அறிவு ராஜாஜியை மிகவும் ஈர்த்தது என்பது வரலாற்றின் பல சம்பவங்களால் அறிய முடிகிறது.மூதறிஞர் ராஜாஜி வாழ்க்கையை உண்மையில் பரிசோதனை செய்து பார்த்தவர், பார்ப்பனியத்தை அதன் கோட்பாடுகளை பூரணமாக நம்பியவர். ஜாதி குலம் போன்ற ஏற்றதாழ்வுகள் மனிதர்களின் ஷேமத்திற்காகவும் லோக ஷேமத்திற்காகவும் முன்னோர்களால் உருவாக்கப்பட்டதாகவும் நம்பியவர், ஹிட்லர் கூட ஓரளவு தன்னை சேர்ந்தவர்கள் தூய்மையான உயர்ந்த வெள்ளை ஆரிய இனத்தவர் என்றும் நம்பியவர், அது மட்டும் அல்ல உலகம் தங்கள் ஆரிய இனத்தின் தலைமையில் தான் சேமமாக இருக்க முடியும் என்றும் நம்பியவர், ராஜாஜியின் பிற்காலத்தில் அவருக்கு அதில் சந்தேகம் வந்திருக்க வேண்டும் என்று கருதுகிறேன்.
    ராஜாஜியிடம் இருந்த மேன்மையான பண்பு என்னவென்றால் தனது நம்பிக்கையில் கோட்பாடுகளில் எங்கோ தவறு இருக்கிறது என்று சந்தேக கண்கொண்டு பார்த்ததுதான், அதனால்தான் அவர் பெரியாரோடு சமரசம் செய்யவேண்டும் என்று விரும்பினார், திராவிட முன்னேற்ற கழக ஆட்சி உருவாக வேண்டும் என்றும் உழைத்தவர், அகில பாரதத்திலும் ஏறக்குறைய ஒற்றை ஆட்சி மாதிரி காங்கிரஸ் ஆட்சி நிலவிய காலத்தில் தென்கோடியில் தமிழகத்தில் அதை உடைதேறியவேண்டும் அதுவும் திமுகவை ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்று அவர் எடுத்த தீர்மானம் அவருக்கு என்றும் பெருமை சேர்க்கும்,
    இன்றும் கூட சோ குருமூர்த்தி வகையறாக்களின் விமர்சன வளையத்துக்குள் ராஜாஜி இருக்கிறார் என்பது அவரின் வரலாற்றுக்கு பெருமை சேர்க்கும். பார்பனர்கள் இன்றும்கூட எல்லாம் ராஜாஜி செய்த அநியாயம் என்று அவரை திட்டுவது நான் கேட்டிருக்கிறேன்,

    ReplyDelete
  3. அன்று காமராஜர் பெருந்தலைவராக உருவானதை பொறுக்க முடியாமல்தான் ராஜாஜி திமுகவை வளர்க்க முற்பட்டு இருக்க வேண்டும். இதுதான் பிராமணர் தெலுங்கு கூட்டணி என்பது ..

    ReplyDelete
  4. அன்று காமராஜர் அல்ல பக்தவத்சலம்தான் முதல்வராக இருந்தார்.மேலும் காமராஜரை ஒதுக்கி தூக்கி எறிந்தது இந்திரா காந்தி தலைமையில் உருவான காங்கிரஸ்தான். மேலும் துரதிஷ்ட வசமாக காமராஜர் தலைமையில் உருவன ஸ்தாபன காங்கிரசில் பெரும்பாலும் மேட்டுக்குடி ஆதிக்கம் தான் இருந்தது, அந்த பிரபுக்கள் கூட்டணியின் பாரத்தை காமராஜர் சுமக்க வேண்டி வந்தமை வேதனை, அதை தமிழ்நாட்டில் விற்பது சுலபமான காரியம் அல்ல. அந்த தியாகத்தை காமராஜர் செய்தார். அதனால்தானோ என்னவோ பின்பு அதே காமராஜரின் காங்கிரசோடு ராஜாஜியின் சுதந்திரா கட்சி கூட்டு சேர்ந்தது,
    போலி தமிழ் தேசிய வாதிகள் எல்லாம் மிகவும் கஷ்டப்பட்டு தெலுங்கு பிராமண கூட்டணி என்பதாக ஒன்றை உருவகப்படுத்த முயற்சிக்கிறார்கள். ஜாதி அபிமானிகளும் புரோக்கர்களும் பெரியாரை எதிர்ப்பது, பெரியார் இவர்களுக்கு எவ்வளவு பலமான அடியை கொடுத்து இருக்கிரார் என்பதை உணர்த்துகிறது,

    ReplyDelete
    Replies
    1. பிராமணர் பிராமணர் எ ன்று ஏன் கூவ வேண்டும். பிராமணர்கள் யாரை தேடி போகிறார்களோ அவர்களே அவர்களுக்கு உதவுவர்களும் ஆவார்கள். எப்போதுமே பிராமணர் சூத்திரர் கூட்டணி இயல்பாக அமைந்து விடுகிறது. இவரால் அவருக்கும் அவரால் இவருக்கும் உதவிகள் கிடைப்பது இயல்பாகிறது.

      Delete
  5. க.விஸ்வநாதன்23 November 2015 at 01:00

    திமுகவும்(கருணாநிதியும் உள்ளடக்கம்),அண்ணாவும் ஜெயித்துவிடக் கூடாது என்று கருதினார்&அயராது பாடுபட்டார் பெரியார். தி.மு.க.வும்,அண்ணாவும் ஜெயித்துவிட வேண்டும் என்று கருதினார்,பாடுபட்டார் ராஜாஜி. இரண்டும் வெறுமனே இரண்டு கருத்துகள்/செயல்கள் மட்டுமில்லை.அவற்றுக்குள், தமிழ்நாட்டின் அக்கால,எதிர்கால அரசியல் அடங்கியிருந்தது.அந்த உண்மையை சுபவீ சொல்ல மறந்தது/மறைத்ததேனோ?

    ReplyDelete
    Replies
    1. தன்னுடைய அமைப்பிலிருந்து பிரிந்து அதை பலவீனப்படுத்தி துரோகம் இழைத்தவர்களை பெரியார் நம்பவில்லை.பெரியார் அல்ல யாராக இருந்தாலும் நம்பிக்கைவைக்க மாட்டார்கள் எனவே யார் வரக்கூடாது என்ற பட்டியலில் திமுகவை கருதினார் அதற்காக உழைத்தார் பெரியார். ஆனால் அதே நேரத்தில் தி.மு.க.வும்,அண்ணாவும் ஜெயித்துவிட வேண்டும் என்று கருதினார்,பாடுபட்டார் ராஜாஜி என்று சொல்ல முடியாது அவருடைய உள்ளெண்ணம் அதுவாக இல்லை அதாவது திமுக தனியாக தன்னுடைய சுதந்திரா கட்சி ஆதாரவு இல்லாமல் ஆட்சி அமைக்காமல் அந்த கட்சியை அதன் தலைவர் அண்ணாவை தன்னுடைய பிடிக்குள் வைத்துக்கொண்டு ஆட்டிப்படைக்கலாம் என்று நினைத்தார் ஆனால் தேர்தல் முடிவு வேறுவிதமாக முடிந்தது.அப்படி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் முடிவால் அண்ணாவும் ராஜாஜியினுடைய உதவி தேவைப்படாததால் அத்தோடு அவருடைய உறவை முடித்துக்கொள்ளவிரும்பினார் அதன்படி செயல் பட்டார் ஆனாலும் பெரியாரை பகைத்துக்கொண்டு அரசியல் செய்யமுடியாது என்பதாலும் ராஜாஜியுடனான தேனிலவு முடிந்த பிறகு ஏற்படும் மூதறிஞர் என சொல்லப்படும் பார்ப்பனியத்தை மூளையாக கொண்டுள்ள ராஜாஜியின் எதிர்ப்பை சமாளிக்க உடனே பெரியாருடன் கைகுலுக்க முடிவெடுத்தார் அண்ணா

      Delete
  6. ஷநவாஸ்24 November 2015 at 16:06

    நயவஞ்சகமும்,நம்பிக்கைத் துரோகமும் அண்ணாவோடு உடன்பிறந்தது என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லையே!.ராஜாஜியுடன் தேர்தல் உறவு வைத்த போது அவர் ஒரு பார்ப்பனியத்தை மூளையாக கொண்டுள்ளவர் என்று தெரியாதா என்ன அண்ணாவிற்கு?.தேர்தலில் ஜெயித்த பிறகு சுயநலம் அண்ணாவை ஆட்டிப்படைத்தது அதனால்தான் (ராஜாஜியை விடுங்கள்)அவரை நம்பிய,வெற்றிக்கு பாடுபட்ட மூஸ்லீம் லீக்,கம்யூனிஸ்டுகளுக்கு மந்திரிசபையில் இடம் தராமல் ஏமாற்றினார் அண்ணா(ஆனால்1989ல் திமுக 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் தோற்றது ஆனால் மந்திரிசபையில் திமுக ஒரு காபினெட் மந்திரி பதவி வாங்கிக் கொண்டதை நினைவில் கொள்ளவும்).

    ReplyDelete
  7. இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
    ராஜாஜி திராவிட இயக்கங்கள் சிதறி போவதை தான் விரும்புவார்

    ReplyDelete