தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Saturday 28 November 2015

கடவுளும் விதியும்

பெரிய விபத்துகள் நடைபெறும்போது அதில் பலர் இறந்து விடுவதையும், அதிலிருந்தும் சிலர் தப்பிப் பிழைத்து விடுவதையும் பார்க்கிறோம். பிழைத்துக் கொள்கிறவர்கள், எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், உடனடியாகச் சொல்வது, "கடவுள் கருணையால் நாங்கள் பிழைத்துக் கொண்டோம்" என்பதுதான். உங்களை எல்லாம் கடவுள்தான் காப்பாற்றினார் என்றால், விபத்தில் இறந்து போனார்களே அவர்களை எல்லாம் யார் கொன்றார்கள் என்ற கேள்விக்கும், சற்றும் தயங்காமல், "இல்லையில்லை, அவர்களின் விதி முடிந்து பொய் விட்டது, அதனால் இறந்து போய்  விட்டார்கள்"  என்று விடை சொல்வார்கள்.


பிழைத்துக் கொண்டால் அது கடவுளின் கருணை, இறந்து போய் விட்டால் அது விதியின் விளையாட்டு. கடவுள் இவர்களைக் காப்பாற்றுகிறாரோ இல்லையோ, கடவுளை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்று மக்கள் துடியாய்த் துடிக்கிறார்கள்!

5 comments:

  1. உண்மைதான் ஐயா
    மக்கள்தான் இன்றளவும் கடவுளைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள்

    ReplyDelete
  2. அவர்களையும் அறியாமல் இவர்கள் கடவுளை விட விதியை பெரிதாக்கி விவிடுகிறார்கள்

    ReplyDelete
  3. எதையும் புதிதாக அறிவதிலும் பார்க்க ஏற்கனவே நாம் அறிந்தவற்றை மறப்பது அவ்வளவு எளிதல்ல .
    ஒரு குழந்தையின் விளையாட்டு பொருளை பறித்தால்அதற்கு கோபம் வருவது இயல்புதான் .
    நீங்கள் சந்தோஷமாக கொண்டாடும் கோட்பாடுகள் நம்பிக்கைகளை எல்லாம் விட்டு சற்று மாற்றி யோசிப்பது அவ்வளவு எளிதல்ல ,
    ஏற்கனவே நாம் அறிந்த ஒன்று தற்போது தவறு என்று நமக்கு தெரிய வருவதற்கு மிகுந்த நுட்பமான அறிவு வேண்டும் ,
    அதை விட தைரியம் வேண்டும்,
    நாம் சரி என்று பரிபூர்ணமாக பல யுகங்களாக நம்பிய சமாசாரங்களை திடீரென்று அவை எல்லாம் சுத்த ஹம்பக் என்று ஏற்று கொள்ள எல்லை இல்லாத துணிவு வேண்டும்,
    முதலில் பயம் எங்கள் கண்களை திறக்க எம்மை அனுமதிக்காது ,
    அப்படி விழிப்புணர்வு பெற்றாலும் அனுபவித்த இருட்டு சுகம் ஒரு போதையாக எம்மை தலை தூக்க விடாது,
    இனிமேல் தூங்கவே முடியாது தொந்தரவு தாங்கவே முடியாது என்ற நிலை வருபோது சிலவேளை நாம் எமது தூக்கத்தை விட்டு துயிலேழுவோம் . இங்கே நான் தூக்கம் என்று குறிப்பிடுவது சிந்தனை தூக்கத்தைத்தான் , ஆழமாக பதிக்கப்பட்ட நம்பிக்கைகள் எமது ஆதார மெத்தைகளாக சொகுசான நித்திரையை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தந்து விட்டிருக்கிறது,
    அந்த மெத்தையின் சுகத்தை நாம் அவ்வளவு இலகுவில் தியாகம் செய்துவிட முடியாது, பழக்க தோஷம் தலை தூக்க விடாது,
    கண் முன்னாள் தெரியும் உலகத்தை விட கண்ணுக்கு தெரியாத விண்ணுலகம் சொர்க்க லோகம் ஆத்மா அநுபூதி என்பதாக பலவிதமான கோட்பாடுகள் பலவற்றையும் நம்புகிறோம் ,
    இவை எல்லாம் உண்மையில் இருப்பதாகவே வைத்துகொள்வோம் ,
    இவை எல்லாவற்றையும் விட இந்த மனித வாழ்வு அற்புதமானது,
    கண்முன்னே பரந்து விரிந்து சதா ஜீவனுடன் காட்சி தரும் இந்த அற்புத வாழ்வை விட இந்த அற்புத உலகத்தை விட வேறு ஒன்றும் தற்போது தேவை இல்லை ,

    ஏராளமான சமயம் சார்ந்த கனவுலோகம் அல்லது உறுதிமொழிகள் எல்லாம் உண்மையில் எதுவித பிரயோசனமும் இல்லாதவை , இதை உங்களால் ஏற்றுகொள்ளவே முடியாது,
    அவ்வளவு தூரம் அவற்றை எல்லாம் நம்பி விட்டிருக்கிறீர்கள் .
    அவை எல்லாம் உண்மையாகவே இருந்தால் உங்களை நிச்சயம் ஒரு நாள் வந்து அடையத்தான் போகிறது,
    ஆனால் அது இன்றைய சமாசாரம் அல்ல..
    இன்றைய உலகமும் இன்றைய வாழ்வும் மட்டுமே இன்றைய நாடகம் ,
    இந்த நாடகத்தில் உனது வேஷம் அல்லது உனது பாத்திரம் எவ்வளவு முக்கியமானது என்பதில் மட்டுமே உனது வெற்றி அல்லது பிறவி பயன் அடங்கி உள்ளது,
    அது வரும்போது அது வரட்டும்,
    இப்போ இது இருக்கிறது ,இதை கவனி, மீதி எல்லாம் அந்த அந்த நேரத்தில் பார்த்து கொள்ளலாம் .
    நீ சிருஷ்டி கர்த்தா என்பதை ஒப்புகொள்ளாத கோட்பாடுகள் அல்லது சமய நம்பிக்கைகள் எல்லாம் உன்னை வெறும் டம்மி பீசாக மாற்றி விட்டிருக்கிறது,
    நீ டம்மி பீசே அல்ல ,
    உன்னை சுற்றி உள்ள உலகத்தை நீதான் கவனிக்க வேண்டும்,
    ஏனெனில் நீதான் உனக்கு இன்றைய கடவுள்.
    இது உனக்கு தெரியவில்லை ,
    இதுதான் உனது பிரச்சனை ,சமயங்களும் சரி ஆத்மீக கோட்பாடுகளும் சரி பெரும்பாலும் உன்னை ஒரு டம்மி பீசாகவே மாற்றிவிட்டிருக்கிறது,
    இந்த கருத்து உன்னை நிச்சயம் தொந்தரவு செய்யும் ஒரு கருத்தாகவே இருக்கும் ,
    தூக்கத்தில் இருக்கும் உன்னை தட்டி எழுப்புபவரை உனக்கு பிடிக்காதுதான்,
    மனித குல வரலாற்றில் மனிதர்களை தூங்க செய்த பெரியவர்கள் தான் அதிகம் தோன்றி இருக்கிறார்கள்.
    மிகவும் அருமையாக தான் தொந்தரவு செய்பவர்கள் தோன்றி இருக்கிறார்கள்.
    ஒரு சோக்கிரட்டீஸ் ஒரு டார்வின் ஒரு ஐசக் நியுட்டன் இரு கிருஷ்ணமூர்த்தி ஒரு ஓஷோ இப்படி விரல் விட்டு எண்ணி விடலாம் ,
    மேலும் பலரை இந்த லிஸ்டில் சேர்க்கலாம் என்றால் அவர்களின் போதனைகளை எல்லாம் தப்பு தப்பாக மாற்றி மாற்றி எழுதி வைத்துள்ளார்கள் .அவை எவை என்று விலாவாரியாக எழுத எனக்கு விருப்பம் இல்லை,
    ஆத்மீக தேடல் என்ற புரியாத பாடத்தில் தேடி தேடி வாழ்க்கை முழுதும் படித்து முடிந்த பின் பார்த்தால் ஒன்றுமே இல்லை .
    ஓடி தேடி கடைசியில் பார்த்தால் தேடுவதற்கு ஒன்றுமே இல்லை ,
    இல்லாத ஒன்றுதான் ஆனால் ஒரு பொல்லாப்பும் இல்லை ,
    நிச்சயமாக நீ சாமி கும்பிட்டாலும் கும்பிடாவிட்டாலும் அடையப்போகும் இடம் ஒன்றுதான் ,
    அது உனது நாய்க்குட்டியும் பூனை குட்டியும் நீயும் நானும் கடவுளாக அல்லது இந்த பிரபஞ்சமாக இருப்பதாக அறியும் இடம்தான்,
    அது வருபோது பார்த்து கொள்ளலாம் ,
    இப்போ இந்த உலகத்தை பார் ,
    இது தான் இன்றைய கடவுள்

    ReplyDelete
  4. Anbulla Iyya,

    Kadavul illai ariviyalinpadi,

    Palaya nalla palamoligalai nammbugiren, oruvar meendum meendum thavaru seiumpoluthu avarai thandikkum urimai illai, anal nyayam endru ondru irukiirathu, athu nichayam paadam pugatum, endru ninaithu manathai aruthalpaduthi kollavendiullathu . yetho ondru thevaipadugirathu thuvandu pogamaliruka.

    Thuvandupogamal iruka palarum, kadavul endra pidiyinai nandraga pithukolgirargal, kadavul illai endru arinthal, veru veru thavarana valiyinai ninaikamal iruka avar nallathaiye, nallavanai irundal seri avar kondirukkum kadavul nambikai angu matum paravaillai endru thondrugirathu.

    Palanerangalil veru oru mathathinarin naatill vallumpoluthu, naam kadavul illai endra nambikai udayavaranal, nammai parpavargal elam, ne en mathathirku marividu, apoludu sorgam nichayam, illai endral unaku naragamthan, iendru arivuruthalinpothu, avarai samalipathu migavum thuyaramaga irukirathu, anda orupechuvarthayai thavirpatharkagave, aamm lnan en kadavulai matume nambugiren, endru soli pilaikavendi irukirathu. Ayyavaipol nammaku nimidathil sindithu pesa migavum kadinamtham.

    Nandri
    Ayyavin sindanaigal palarayum nalvalipaduthum, nichayamaga sindikavaikkum.

    ReplyDelete
  5. உயிர் பிழைப்பதும் உயிர் இழப்பதும் கடவுள் விதித்த விதியின் படியே.

    ReplyDelete