தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Thursday, 31 December 2015

வரவும் செலவும்


2015ஆம் ஆண்டின் இறுதி நாள் இன்று! இந்த ஆண்டின் வரவு, செலவு என்ன என்று நாம் ஒவ்வொருவரும் எண்ணிப் பார்க்கலாம்.

வரவு என்பது, பிறரிடமிருந்து நாம் பெற்ற உண்மையான பாராட்டுகளும், உண்மையான வாழ்த்துகளும். சென்ற ஆண்டை விட இந்த  ஆண்டில் நாம் பெற்ற கூடுதல் அறிவு. நமக்குக் கிடைத்த  புதிய நண்பர்களும், புதிய உறவுகளும். நெஞ்சில் அமைதி நிறைந்திருந்த நேரங்கள்!


செலவு என்பதோ, சினம், அச்சம், பகை உணர்வு ஆகியனவற்றால் நாம் இழந்த பொழுதுகள். சில பக்கங்களைக் கூடப் படிக்காமலும், வேறு வேலைகளில் ஈடுபடாமலும் வீணாய்க் கழித்த நாள்கள். இயந்திரமயமான உலகில் நாம் மறந்துபோன உறவுகள், நண்பர்கள்.

இவற்றைத் தாண்டி, பொருளாதார வரவு செலவுகளையும் நாம் கணக்கிட்டுக் கொள்ளலாம்.


வாருங்கள் நண்பர்களே.....கணக்குப் பார்க்கும் நேரம் இது! 

4 comments:

 1. பலவற்றையும் தாண்டி,பொருளாதார வரவு செலவுகளையும் நாம் கணக்கிட்டுக் கொள்ளலாம் என்பது உங்களைப் போல உழைக்காமல்,வசதியாக (நேர்மையாகவோ,நேர்மையற்றோ சம்பாதித்தது& வந்தது)வாழ்ந்து கொண்டு,வாய்வீச்சு செய்து வாழ்பவர்களுக்கு வேண்டுமென்றால் சரியானதாக இருக்கலாம்,ஆனால் பெரும்பாலோனோருக்கு, சாமானியருக்கு,கும்பி எரிய்பவர்கள்,குடல் கருகுபவர்களுக்கு ஏற்ற கருத்தல்ல!.அதோடு ஊழல்வாதிகளின் ஊதுகோலாக இருப்பதும், வெறுப்புப் பேச்சுகள்,இனவெறிப் பேச்சுகள் பேசுவதும் இந்த ஆண்டோடு(2015) ஒழிய வேண்டும்&செலவுக் கணக்கில் சேர்க்கவேண்டும்!!.

  ReplyDelete
  Replies
  1. சுபவீ அய்யாவின் உழைப்பை தாங்கள் ஏளனம் செய்வதன் காரணம் புரியாமலில்லை, அவர் எங்களுக்கெல்லாம் சுயமரியாதையைச் சிந்தனையை ஊட்டும் வாழும் பெரியார்.

   நாங்கள் பெரியாரைக் கண்டதில்லை! அந்தப் பெரியாரை சுபவீ அய்யா வழியாகவே காண்கிறோம்.

   Delete
  2. அய்யா ஒரு பேராசிரியர் உழைத்தார் இப்போது அந்த பணத்திலும், அவர் பெற்ற அறிவிலும் வாழ்கிறார்...

   Delete
 2. அய்யா சீதாராமன் அவர்களே தங்கள் subavee அவர்களை பற்றி கூறிய தகாத வார்த்தைகள் நாணயம் அற்ற விமர்சனம் அல்லவா? ஏனிந்த துவேஷம்? அடியேனின் சிற்றறிவுக்கு எட்டியமட்டில் subavee அவர்கள் தமிழ்நாட்டுக்கு கிடைந்த மிகப்பெரும் பொக்கிஷம் என்றுதான் கருதுகிறேன், ஏனெனில் அவர் கூறும் கருத்துக்கள் சமுகத்தில் நலிவடைந்தவர்களுக்காக மிகவும் உறுதியாக ஒலித்துகொண்டுதான் இருக்கிறது. அதுதான் தாங்கள் கூறும் வாய் வீச்சு குற்றச்சாட்டு என்றெண்ணுகிறேன், தற்போது பலரும் புத்தகங்கள் வாசிப்பது குறைவு. எனிவே நல்ல கருத்துக்களை வளமான சொல்லில் விளக்கி கூறவும் உரத்து உரிமைக்கு குரல் கொடுக்கவும் subavee அவர்களை விட்டால் வேறு எத்தனை பேர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள் என்று பட்டியல் இடமுடியுமா? அது ஒன்றும் அப்படி பெரிய பட்டியல் அல்ல .
  subavee அவர்கள் சீமான் வைகோ போன்று இதயதெய்வம் அம்மா அவர்களின் ஊதுகுழல் ஆக இல்லாமல் இருகிறாரே என்ற தங்கள் கவலை புரிகிறது. அது ஒரு போதும் நடக்காது. உங்கள் ஆசை நிறைவேறாது.

  ReplyDelete