தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Thursday, 31 December 2015

நூல்கள் வெளியீட்டு விழா


03-01-2016 அன்று திருப்பூரில் நடைபெறவிருக்கும்
சுப.வீரபாண்டியனின்
நூல்கள் வெளியீட்டு விழாவிற்கு
திராவிட இயக்கத் தமிழர் பேரவை
உங்கள் அனைவரையும்
அன்புடன் அழைக்கிறது
9 comments:

 1. விழா சிறக்கட்டும் ஐயா
  நூல்களைப் வாங்கிட ஆவலுடன் காத்திருக்கிறேன் ஐயா

  ReplyDelete
 2. அண்ணன் சுபவீ அவர்கள் நூல்கள் வெளியீட்டு விழா சிறக்க நெஞ்சார்ந்த வாழ்த்துகள்

  ReplyDelete
 3. Kindle version கிடைக்கச் செய்தால் நன்றாக இருக்கும்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 4. ஐயா
  சென்னையில் வெளியீட்டு விழா எப்போழுது

  ReplyDelete
 5. "தீட்டும் புனிதமும்" அனைவரும் படிக்க வேண்டிய நூல்.

  இந்திய வரலாற்றை இந்தத் தீட்டும் புனிதமுமே இது வரையிலும் கட்டுப்படுத்தி வந்துள்ளது என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வாய்ப்பேற்படுத்திக் கொடுத்த சுபவீ அய்யாவுக்கு நன்றிகள் !!!

  ReplyDelete
 6. வ.பாலு8 January 2016 at 18:16

  சாதிஎன்னும் மாடு
  ஆதிக்கத் திமிரையெல்லாம்
  திமில் போலத்திரட்டித்தான் மிரட்டுது

  தனிக்குவளை
  தனியாத்தான் சுடுகாடு
  தலித் மக்களை விரட்டுது
  முட்டுது ....

  அடக்கத்தான் வேணுமிந்த
  அரசாங்கம்
  ஆனாலும் பாருங்க
  கொம்பு தனைச் சீவுது
  குத்தவிட்டு ரசிக்குது
  இதுக்கெல்லாம் திறக்காத
  வாய்கள்

  ஜல்லிக்கட்டு வேணுமின்னு
  ஜல்லி அடிக்குது
  தமிழர் பண்பாடு வீரமின்னு
  பஜனை பாடுது

  எஜமான எச்சங்கள் எல்லாம்
  தமிழர் பண்பாட்டுப் போர்வைக்குள்ள
  பக்குவமா பதுங்கிக் கிடக்குது
  எச்சங்கள் மட்டும் தான்
  கலாச்சாரமுன்னா
  சாதிக்கட்டோ சல்லிக்கட்டோ...
  சங்கடம் ஒண்ணுமில்ல
  காறித்தான் துப்புவோம்
  துப்பியது போதாது
  தூக்கியும் எறிஞ்சுடுவோம்

  உழைக்கின்ற மக்கள் தன்
  உன்னதப் பண்பாட்டை
  உயர்த்தித் தான் பிடிப்போம்........

  ReplyDelete
 7. வாடிவாசலுக்காக
  வாய்கிழியக் குரல் கொடுக்கிறான் தமிழன்.
  திருநாள்கொண்டசேரித் தெருவில்
  சாதி ஆதிக்க மாடுகள்
  முட்டித் தள்ளுகின்றன
  பிணமான பின்னும்.

  ஜல்லிக்கட்டை நடத்துவோம்.
  திருநாள்கொண்டசேரிகளில்
  திரியும் சாதி ஆதிக்க மாடுகளை
  திமில் பிடித்து அடக்கி,
  அடித்து நொறுக்கி....

  ReplyDelete
 8. ஜல்லிக்கட்டை வைத்து ஜெயாவும்,கலைஞரும்,ஸ்டாலினும்,வைகோவும்,ராமதாசும்,இளங்கோவனும்,ராதாகிருஷ்ணனும்... என்ன பாரம்பரியத்தை மீட்டுக் கொண்டு வரப் போகிறீர்கள் ??
  ஆதிக்க சாதி வெறியையா ??
  அருந்திதயரும்,பறையரும்,சக்கிளியரும் ஜல்லிக்கட்டு விளையாட அனுமதி உண்டா ??
  பாரம்பரியம் பாரம்பரியம் என இந்த சாதி வெறியை தான் மீட்டு கொண்டு வர போகிறீர்களா ??
  பெண்களுக்கு ஜல்லிக்கட்டு விளையாட அனுமதியுண்டா உங்கள் பாரம்பரியத்தில் ??
  பாரம்பரியம் பாரம்பரியம் என ஆணாதிக்கத்தைத்தான் மீட்டு கொண்டு வர போகிறீர்களா ??
  அன்று காளைகள் ஏறுழுதன. . .அதை விவசாயிகள் அடக்கி விளையாடினர் . .
  இன்று இவர்கள் ட்ராக்டர்களையல்லவா அடக்க வேண்டும் !!!
  பாரம்பரிய ஜல்லிக்கட்டு . . .சுற்றி சுற்றி தேவர்,மறவர்,கோனார்{±வன்னியர்&கவுண்டர்}போன்ற ஆதிக்க சாதி வெறியர்கள் விளையாடும் விளையாட்டு தானே அது??
  இதுவரை எந்த தாழ்ந்த வகுப்பை சேர்ந்தவரை இதை விளையாட அனுமதித்துள்ளனர் ??
  பாரம்பரியம்,பண்பாடு என கோமனம் கட்டும் காலத்திற்கே செல்வதா அறிவு ??
  பிற்போக்கு தனத்திலிருந்து முற்போக்கு பாதையில் பயனிக்கும் எவராளும் . . .இந்த முட்டாள் தனமான விளையாட்டை ஆதரிக்க முடியாது !!!
  ஜல்லிக்கட்டு நடத்த மல்லுக்கட்டு நடத்தும் இவர்களில் எவராவது ஒடுக்கப்பட்ட பிரிவை சேர்ந்தவர் இருப்பாரா ??
  சாதியத்தையும்,ஆணாதிக்கத்தையும்,மூடத்தனத்தையும் தூக்கி நிறுத்தும் இந்த விளையாட்டு . . . தடை செய்யப்பட வேண்டியதே !!!

  ReplyDelete
 9. ஏறு தழுவுதல் மட்டும்தான் பாரம்பரியமாக வந்ததா? சாதிதீண்டாமை,வலங்கை இடங்கை வெறியாட்டங்கள் கூடப் பாரம்பரியமாக வந்தவைதான்.அதற்காக அவற்றையெல்லாம் ஆதரிக்க முடியுமா?.பாரம்பரியமாக நீடித்துவந்த பொட்டுக் கட்டுதலைச் சட்டம் போட்டுத் தடுக்க முற்பட்டபோது,முன்பு பார்ப்பன சாதியினர் பதறியதைப் போலத்தான் இருக்கிறது 'ஜல்லிக்கட்டுத்தடையை'எதிர்த்து சாதிவெறியை மறைத்துக் கொண்டு‘தமிழன் வீரம்’,‘பாரம்பரியம்’ என இன்று ஆதிக்க சாதியினர் பூசி மெழுகிடும், பதறிடும் வாதங்கலெல்லாம்!

  ReplyDelete