தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Thursday, 14 January 2016

சுயமரியாதை


1956 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ஆம் நாள், நாக்பூரில், இலட்சக்கணக்கான மக்களுடன், அண்ணல் அம்பேத்கர் பௌத்த மதத்தைத் தழுவினார். அப்போது அவர் ஆற்றிய உரையில் குறிப்பிடத்தக்க பல செய்திகள் உள்ளன. ஓரிடத்தில், சமூக விடுதலை குறித்தும், பொருளாதார விடுதலை குறித்தும் அவர் பேசுகின்றார். இரண்டில் எது முதன்மையான தேவை என்று சிலர் கேட்கின்றனர். இப்படியெல்லாம் வரிசைப்படுத்த வேண்டியதில்லை. மானுட சமூகத்திற்கு எல்லா விடுதலைகளும் தேவையானவைதாம். எனினும், இவை இரண்டையும் வரிசைப்படுத்த வேண்டிய தேவை எழுமானால், அப்போது என் கருத்து தெளிவானது. சுயமரியாதைக்குப் பின்பே பொருளாதார முன்னேற்றம் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன் என்றார் அவர். அண்ணல் அம்பேத்கரும், தந்தை பெரியாரும் சந்திக்கின்ற புள்ளி இது!

5 comments:

 1. தமிழர் திருநாள் வாழ்த்துக்களை
  மகிழ்வோடு நவில்கின்றேன்
  கனிவோடு ஏற்றருள்வீர்

  ReplyDelete
 2. சமத்துவம் எனில்
  அம்பேத்கர் பெரியாரை
  பிரித்து பார்ப்பதும்
  ஒரு வித பார்ப்பன சதி,
  தமிழ்ச்சமூகம் தற்போது அதனை சந்திக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. வல்லபன்16 January 2016 at 01:31

   இருவரையும் சேர்த்து பார்ப்பதுதான் திராவிட சதியாகும்.சுபவீ பாணியில் சொல்ல வேண்டுமானால் இது சமமில்லதாவர்களை சமமாகப் பார்ப்பது என்பதாகும்,ஒருதவறான கண்ணோட்டமாகும். அம்பேத்கார் ஒடுக்கப்பட்டவர்களின்[தலித்] அரசியல், கல்வி,வேலைவாய்ப்பிற்காக உழைத்தார்.பெரியார் தலித்திற்காக அரசியல்,கல்வி,வேலைவாய்ப்பிற்காக செய்தது ஒன்றும் கிடையாது அவை அனைத்தையும் தலித்திற்காக 100%செய்தவர் அம்பேத்கார் மட்டுமே!.பெரியார் இடைநிலை[ஆதிக்க]சாதிகளின் மேம்பாட்டிற்காக உழைத்தவர்.அதற்கு ஒடுக்கப்பட்டவர்களை[தலித்] கேடயமாக பயன்படுத்திக் கொண்டார்.ஒடுக்கப்பட்டவர்களையும், அவர்களை அன்றும் இன்றும் ஒடுக்குபவர்களையும் {+அவர்களின் தலைவர்களையும்}சமதளத்தில் வைத்து பார்ப்பது என்பது ஒருவிதமான திராவிட{ஆதாய அரசியல்}சூழ்ச்சிதான்{இடைநிலை [ஆதிக்க]சாதிகள் மனிதக்கழிவுகளை தலித்கள் போல சுமந்தது கிடையாது!.பிறர் சவங்களை எரித்ததோ, புதைத்ததோ கிடையாது.தலித்கள் போல பண்ணையடிமைகளாக இருந்தது கிடையாது}.இன்றும் அம்பேத்கார் சிலைகள் இரும்புக்குண்டிற்குள் சிறை வைக்கப்பட்டிருப்பதற்கு யார் காரணம்?.திராவிட அரசியல் கட்சிகள் அவர்களை சமதளத்திற்கு கொண்டுவருபது{சாதி ஒழிப்பு}என்பதை மறந்து பல காலங்களாகிவிட்டது!.உடனே மறுப்பதற்காக திராவிட அரசியல்வாதிகளைப் போல சுயமரியாதை திருமணங்களைக் உதாரணம் காட்டி வாய்ப்பந்தல் போடாதீர்கள்,அவை புரோகிதர் இல்லாமல் நடப்பதேயன்றி >90%சாதிமறுப்பிற்காக{குறிப்பாக தலித்களோடு}நடப்பதன்று!.

   Delete
 3. ம.கணேஷ்வேல்15 January 2016 at 20:35

  "சுயமரியாதைக்குப் பின்பே பொருளாதார முன்னேற்றம்" என்பது அண்ணல் அம்பேத்கரும், தந்தை பெரியாரும் சந்திக்கும் புள்ளி என்பது மிகவும் பொருத்தம்.

  பொதுவுடமைத் கட்சிகள் இந்த இரு பெரும் தலைவர்களிடம் இருந்து வேறுபடுகிற இடமும் இதுதான் என்பது என் பார்வை. அதனால்தான் 1 - 2 சதவீத வாக்குவீதத்தை (தமிழகத்தில்) அவர்களால் தாண்ட முடியவில்லை என நினைக்கிறேன்.

  நன்றி அய்யா!!!

  ReplyDelete
 4. மிகவும் உண்மையான கருத்துக்கள்

  ReplyDelete