தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Saturday 16 January 2016

ஆஷ்டுக்குஷ்டி


ஒரு ரூபாய்க்கு 100 காசுகள் என்கிறோம். 50 ஆண்டுகளுக்கு முன்னால், ரூபாய், அணா என்று கணக்கு இருந்தது. ஒரு ரூபாய்க்கு 16 அணாக்கள். பிறகு ஒரு அணா, அரையணா, காலணா என்று வரும். அணாவிற்கும் குறைந்தது சல்லி எனப்படும். இரண்டு சல்லிக் காசுகள் சேர்ந்தால் காலனாவிற்குச் சமம். அதனால்தான், 'சல்லிக் காசுக்கும் பயனில்லாதவன்' என்னும் சொலவடை இன்றும் உள்ளது. அந்தச் சல்லிக் காசுகளை எல்லாம் ஒரு கட்டாகக் கட்டிக் காளைகளின் கொம்புகளில் கோத்து விடுவார்கள். காளையை அடக்குபவர்கள் அந்தச்  சல்லிக்கட்டை எடுத்துக் கொள்ளலாம். அதனையொட்டியே அந்த விளையாட்டிற்குச் சல்லிக் கட்டு என்று பெயர் வந்தது. ஆனால் இன்று அதனை நாம் 'ஜல்லிக்கட்டு' என்று தவறாக அழைக்கின்றோம். 



வெட்டி எடுக்கப்படுவதால் உடுத்தும் ஆடைக்கு வேட்டி என்று பெயர் வந்தது. அதனை நாம் வேஷ்டி ஆக்கிவிட்டோம். "போகிற போக்கைப் பார்த்தால், தமிழன் ஆட்டுக்குட்டியைக் கூட, ஆஷ்டுக்குஷ்டி என்று அழைப்பான் போலிருக்கிறது" என்பார் பாரதிதாசன்..

14 comments:

  1. பல காலமாய் பார்ப்பனியத்திற்கு அடிமைப் பட்ட தமிழ் இனம் நல்ல தமிழில் பேசுவதையே நாகரிக குறைவாக நினைக்கிறது அதனுடைய வெளிப்பாடு தான் தற்போது பிறக்கும் குழந்தைகளுக்கு சூட்டும் பெயர்களும் உள்ளது
    " ஜ,ஸ,ஷ" போன்ற ஒலி உடைய பெயர்களையே புதிய சொற்களாக நினைத்து தமிழ் பண்பாட்டின் வேரை அறுக்கிறான் பார்ப்பனியத்திற்கு அடிமைப் பட்டததின் காரணமாய் ஏற்பட்ட தாழ்வு மனப்பான்மையின் விளைவாக
    இந்த தாழ்வு மனப்பான்மை போக திராவிட இயக்கங்களின் பணி தீவிர படுத்தப் பட வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. தமிழ் தமிழ் என்று சொல்லி தமிழர்களின் உணர்ச்சிகளைத் தூண்டி ஆட்சியைப் பிடித்த திராவிடக்கட்சிகள் ஆட்சிக்கு வந்தபிறகு தமிழை வளப்படுத்தியதைவிட தங்களை,தங்கள் குடும்பங்களை பல மடங்குகள் வளப்படுத்திக் கொண்டார்கள்.விளைவு தமிழக மக்கள் திராவிடக்கட்சிகளின் தலைவர்கள் ஆதாயச்சூதாடிகள் என்பதை நன்கு புரிந்து கொண்டார்கள்!.அதன் விளைவாக தமிழ் இனம் அந்த அழுக்கு ஜாடிகளின் வெற்றுப் பேச்சுகளை புறந்தள்ளி அவர்கள் பேசும் அந்த நல்ல தமிழில் பேசுவதையே நாகரிக குறைவாக நினைக்கத் தொடங்கி விட்டது.பிறக்கும் குழந்தைகளுக்கு சூட்டும் பெயர்களும் அவர்கள் சூட்டுவது போல நல்ல தமிழ் பெயர்களல்லாமல் ஜ,ஸ,ஷ போன்ற ஒலி உடைய வடமொழி பெயர்களாக ஆக்கிவிட்டார்கள்.அந்த அழுக்கு ஜாடிகளுக்கு நன்றாக பொறுந்தும் மூடிகளாக சுபவீ,வீரமணி போன்றவர்கள் மாறிவிட்டதால் இவைகளைப் பற்றிய அவர்களின் பேச்சுக்கும் எந்த மரியாதையும் இல்லாமல் போயிவிட்டது!.ஆகவே மொழி,இனம் மற்றும் ஜாதி உணர்ச்சிகளைத் தூண்டி பிழைப்பவர்களால் அவர்களை நம்பிய சாமனியர்களுக்கு பெருந்தோல்விதான் என்பது நிதர்சனம்.

      Delete
  2. 'சல்லிக்கட்டு''ஜல்லிக்கட்டு','வேட்டி''வேஷ்டி', 'ஆட்டுக்குட்டி''ஆஷ்டுக்குஷ்டி'என்று வார்த்தையில், சொல்லில்,எழுத்தில் உள்ள குறைக்காக இவ்வளவு ஆதங்கப்படும் நீங்கள்,அதே சல்லிக்கட்டில் ஆதிதிராவிடரை அனுமதிக்காத ஆதிக்க சாதியின் ஒடுக்குமுறை குறைகளை,சல்லிக்கட்டிலுள்ள சாதிக்கட்டுக் குறைகளைக் கண்டு ஆதங்கப்பட்டு குறை சொல்லாமல் மாலைக்கண் பார்வையோடு ஒதுங்கியிருப்பதேனோ?.letter'ஜ'வை'ச'வாக மாற்ற அவர்களுக்கு ஒரு நொடி போதும் ஆனால் அதிலுள்ள substanceயை[=தீண்டாமையை]அவர்கள் எப்போதும் மாற்றமாட்டார்கள்,நீங்களும் பேச,எழுத மாட்டீர்கள்!.இதுதான் இங்குளள'ATTACKING THE SOFT TARGETS FOR SURVIVAL'அரசியல்!.உங்கள் மனத்திற்கு தெரியும் நீங்கள் இந்தப் பிரச்சனையில் உள்ள குறையை சுருக்கி திசை திருப்புவது என்பது'is only for the letter and NOT FOR SPIRIT of the sport or removing caste inequality in the sport which has MUCH MORE SUBSTANCE to speak about'.

    ReplyDelete
  3. அருமை.வட எழுத்துக்கள் மட்டும் அல்ல வட சொற்களே தமிழகத்தில் நேரடி புழக்கத்திற்கு வந்துவிட்டன.பருப்பு என்றால் “டால்”. கடலை என்றால் “சன்னா”.கீரை என்றால் “பாலக்”.உளுந்த வடை என்றால் “மெது வடா” என்றுதான் உணவகங்களில் MENU வில் இடம்பெற்றிருக்கும்.SUPERMARKET ல் இந்த பெயர்களில்தான் அச்சிட்டு விற்பனை செய்கிறார்கள் தமிழகத்தில்.

    ReplyDelete
    Replies
    1. நான் ஒருமுறை பார்த்தது. சென்னையில் ஒரு கடையில் கடைக்காரர் "... பருப்பு இருக்கிறது" என்றார். அதற்கு பொருள் வாங்க வந்தவர் "பருப்பு வேண்டாம், தால் இருந்தா கொடுங்க" என்று கேட்டார். இப்படி நாம் ஆனதற்கு என்ன காரணம்?

      நல்ல தமிழ்ச் சொற்களை நாமே ஒதுக்கியதால் தானே.

      Delete
  4. இரா.உமா17 January 2016 at 22:52

    திரு இளையபெருமாள், ஒருவரை விமர்சிப்பதற்கு முன், அவரைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொண்டு விமர்சிக்க வேண்டும், சல்லிக்கட்டில் தாழ்த்தப்பட்டவர்கள் அனுமதிக்கப்படாததைக் கண்டித்து கடந்தாண்டே தோழர் சுபவீ பேசியிருக்கிறார்...எழுதியிருக்கிறார்...தமிழர்களில் ஒரு பகுதியினரைச் சாதியின் பெயரால் அனுமதிக்காத ஒரு விளையாட்டை எப்படித் தமிழர்களின் விளையாட்டு என்று சொல்ல முடியும் என்று கேட்டார் தோழர் சுபவீ...திரு இளையபெருமாள்,,,எனக்கு ஒரு செய்தியை நீங்கள் சொல்லுங்கள்....இந்தக் கேள்வியை, ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர்கள் என்று சொல்லிக்கொள்கிறவர்கள் யாராவது இதுவரைக் கேட்டுள்ளார்களா? உண்மையில் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் கேட்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. சரியான விளக்கம்
      சாதியத்திற்கு எதிராக செயல்படும் அய்யா சுப வீ. மீது எப்படியோ சாதியத்திற்கு ஆதாரவானவராக சித்தரிக்க பார்ப்பனியம் முயல்ககிறது அதனுடைய வெளிப்பாடு தான் திரு இளைய பெருமாளின் கருத்தும்

      Delete
    2. பல புத்தகங்கள் வெளியிடும் சுபவீ அவர்கள் 'ஆதிதிராவிடனும் சாதிதிராவிடனும்'என்ற பெயரில் தற்போதைய தமிழக அவலங்களை விளக்கி புத்தகம் வெளியிட்டிருந்தால் உண்மையாக,முழுமையாக சாதியத்திற்கு எதிராக செயல்படுகிறார் என்று பாராட்டலாம், ஆனால் அவரும் கலைஞர் எப்படி முசபர்பூர், ஹைத்ராபாத் போன்ற எங்கேயோ நடந்தவைகளுக்கு கண்டனம் தெரிவிப்பதும், உள்ளூர் நிகழ்வுகளான சேஷசமுத்திரம் சம்பவம்,கோகுல்ராஜ் கொலை,அவர் கட்சி வெற்றிக்கு பாடுபட்ட திருமாவின் கொலைமுயற்சி,நாகை மாவட்டம் திருநாள்கொண்டச்சேரி/வழுவூர் சுடுகாட்டுப் பாதை சம்பவம் போன்ற சமூகநீதி விரோத சம்பவங்களுக்காக போராட வேண்டாம் குறைந்தபட்சம் கண்டனமோ,எதிர்ப்போ தெரிவிக்காத அவர் செயல்களை என்ன என்று சொல்வது?.சுபவீயும் கலைஞரை போல'ATTACKING THE SOFT TARGETS WHICH HAPPENS ELSE WHERE OR ARCHAIC AND ESCAPING FROM HARD-CORE PROBLEMS OF UNTOUCHABLES'என்ற பாணியைக் கடைபிடிக்கிறார்!

      Delete
  5. ஒருவேளை 'ஜாதி'யும்'சாதி'யிலிருந்துதான் வந்திருக்குமோ?.'சாதி''ஜாதி'ஆகிவிட்டதே!.அதை ஏன் குறிப்பிடாமல் விட்டுவிட்டிர்கள்?.

    ReplyDelete
  6. வேண்டுதல் வேண்டாமை இலானடிசேர்ந்தார்கு யாண்டும் இடும்பை இல என்ற ஐயன் திருவள்ளுவரின் குரளுக்கு பொருத்தமானவர் தந்தை பெரியார் அவர்கள் அந்த வரிசையில் நிகழ்கால தலைவர்களில் சாதி எதிர்ப்பில்சமரசமில்லாத அறிவுபூர்வமான நேர்மையானவர்களில் தோழர் சுபவீ அவர்களே நிகரானவர் என்று கருதுகிறேன்.

    ReplyDelete
  7. து.இளஞ்சேரலாதன்18 January 2016 at 20:50

    தமிழக அரசியலில்,சமூகத்தில் அரையணா,காலணாவுக்கு பொறுமானம் இல்லாததுக எல்லாம் ஜல்லிக்கட்டைப் பற்றி விமர்சனம் பண்ணுதுக.தமிழகத்தின் வீரமிக்க ஆண்ட பரம்பரைகளோட வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு,வீர வழிபாடான தீமிதி போன்றவற்றைப் பற்றி எல்லாம் என்னென்வோ விமர்சனங்களை வளைதளங்களில் போடுதுக.நீயெல்லாம் மாடு பிடிக்கத் துடிக்காதே அதுக்கு ஆண்ட பரம்பரைகள் இருக்கு ஆனால் மாடு போடற சாணியை நீயெல்லாம் ஒழுங்கா பிடிக்க கத்துக்கோ.அதற்கு மேலயும் வீரத்தை நிருபிக்க ஆசையினா வேணும்னா கழுதைய அடக்கு.

    ReplyDelete
    Replies
    1. இளஞ்சேரலாதன் என்னும் பெயரில் ஒரு கடிதம் இங்கு வெளியிடப்பட்டுள்ளது. வீரம், பண்பாடு என்ற பெயர்களில் சாதித் திமிர் தலை விரித்து ஆடுவதை அம்மடல் எடுத்துக் காட்டுகிறது. அந்த நண்பர் தன் பெயரை மாற்றிக் கொள்வது நல்லது.இல்லையேல் அது தமிழுக்கே அவமானம்

      Delete
    2. கழுதைக்கெதற்கு கடிவாளம்;
      விளக்கமாத்துக்கெதற்கு பட்டுக் குஞ்சலம்;
      கோழைக்கெதற்கு வீரவாள் அடிமைக்கெதற்கு வெண்கொற்றக்குடை

      Delete
  8. இரா.உமா19 January 2016 at 08:16

    சொந்தப் பேத்தியைக் கழுத்தை அறுக்கச் சொல்லும் சாதித்திமிரை எதிர்ப்பதும்...அழிக்கப் போராடுவதும்தான் உண்மையான வீரம்... போராடுபவர்கள்தான் உண்மையான வீரர்கள்...இளஞ்சேரலாதன்களுக்கு ஐந்தறிவு மிருகங்களை முரட்டுத்தனம் காட்டி அடக்குவதுதான் வீரம் என்பதாகப் பட்டால்...அடக்கிவிட்டுப் போகட்டும்...சாதியும், மதமும் நமக்கு நிறைய வேலைகளை உருவாக்கி வைத்திருக்கின்றன தோழர்களே...! மனிதர்களாக நாம் செய்ய வேண்டிய வேலைகள் ஏராளம் இருக்கின்றன...மாடு பிடிப்பதை..சேரலாதன்கள் பார்த்துக்கொள்ளட்டும்...

    ReplyDelete