தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Friday, 22 January 2016

செம்மொழியான தமிழ் கடந்த 16ஆம் தேதி, லண்டனில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்டு,'திருக்குறளும் அறிவியலும்' என்னும் பொருளில்  உரையாற்றிடும் வாய்ப்பைப் பெற்றேன். லண்டன் தமிழர் முன்னேற்றக் கழகத்தினரால் நடத்தப்பட்டு வரும் திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளியின் 40ஆவது ஆண்டுவிழா நிகழ்ச்சி அது!


1975 ஆம் ஆண்டு, மறைந்த வீர ரத்னம்மற்றும்  இன்றும் நம்மோடு லண்டனிலும், தமிழ்நாட்டிலும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற  கந்தசாமி, வீரசிங்கம் உள்ளிட்ட  பெரியவர்களால் அப்பள்ளி தொடங்கப்பட்டுள்ளது. அயல் மண்ணில் பிறந்து வாழும் நம் தமிழ்க் குழந்தைகள் தங்களின் வேரை மறந்துவிடக் கூடாது, தமிழ் அறியாத தமிழர்களாய் வளர்ந்துவிடக் கூடாது என்னும் உயர்ந்த நோக்கில் பள்ளியைத் தொடங்கியுள்ளனர்.

ஒரு சிறிய வீட்டில் 40 ஆண்டுகளுக்கு முன்  5 பிள்ளைகளோடு தொடங்கப் பெற்ற அப்பள்ளி இன்று 250 மாணவர்களோடும், பெற்றோர்களின் ஆதரவோடும் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கழகத்தின் இன்றையப் பொறுப்பாளர்களான நாகதேவன், அன்பழகன்,அன்பரசு ஆகியோர் அதனைக் கண்ணும் கருத்துமாக நடத்தி வருகின்றனர். அல்லி  குமார், கோவிந்தராசு, ஹரிஷ் (இப்போது திராவிடச் செல்வன்), விண்ணரசு, அரசு போன்ற நண்பர்கள் பலர் அவர்களுக்குத் துணையாக நின்று பணியாற்றுகின்றனர். அப்பள்ளியின் தலைமை ஆசிரியரும், மற்ற ஆசிரியர்களும் தங்கள் பணியை ஒரு வேலையாகக் கருதாமல், தொண்டாகக் கருதிச்   செயல்பட்டு வருகின்றனர்.

அப்பள்ளியின் பெரிய சிறப்பு  என்னவென்றால், லண்டனுக்கு அருகில் உள்ள, உலகப் புகழ் பெற்ற கேம்ப்ரிட்ஜ் பலகலைக்கழகம், ஏற்பிசைவு (அங்கீகாரம்) வழங்கி, ஆண்டுதோறும்அப்பள்ளியின்  தேர்வுகளை நடத்தி, உரிய சான்றிதழ்களை வழங்கி வருகிறது. 

கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் எப்படித் தமிழை ஏற்கிறது? வேறொன்றுமில்லை, தமிழ் செம்மொழி என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், அதனை ஏற்று, ஒரு தனித்துறையும் அங்கு ஏற்படுத்தப் பட்டுள்ளது. அப்பல்கலைக்கழகம் சான்றிதழ் வழங்குவதால், இங்கிலாந்து முழுவதும் அதற்கு மதிப்புள்ளது. வேறு துறைகளில் படிக்கச் செல்லும் மாணவர்களுக்கும் கூட அச்சான்றிதழ் உதவுகின்றது.

செம்மொழி ஆனதால் என்ன பயன் என்று சிலர் கேட்கின்றனர். செம்மொழி அறிவிப்பு வெளிவரக் காரணமாக இருந்த  தலைவர் கலைஞரைத் தமிழ்த் தேசியவாதிகள்(?) நாளும் தூற்றுகின்றனர்.

தமிழைச் செம்மொழி என்று அறிவிக்கக் கோரி ஒரு நூற்றாண்டாகப்  போராடிய தமிழ் உணர்வாளர்கள் அனைவருக்கும், அக்கோரிக்கையை நிறைவேற்றித் தந்த மன்மோகன் தலைமையிலான அன்றைய மத்திய அரசுக்கும்,அதற்கு மிகப் பெரிய  தூண்டுகோலாக இருந்த கலைஞருக்கும் தமிழினம் நன்றி  உடையதாக இருக்கட்டும்! 40 ஆண்டுகளாகத் தமிழ்ப் பள்ளியை நடத்தி வரும்லண்டன் தமிழர் முன்னேற்றக் கழகத்திற்குத் தமிழினம் தன் பாராட்டுதல்களைக் குவிக்கட்டும்!!  , 

12 comments:

 1. ம.கணேஷ்வேல்22 January 2016 at 14:20

  மிகவும் மகிழ்ச்சி அய்யா !!!

  'திருக்குறளும் அறிவியலும்' உரையைக் கேட்க மிகவும் ஆவலாக உள்ளோம். நன்றி அய்யா !!!

  ReplyDelete
 2. பகிர்வுக்கு நன்றி...

  ReplyDelete
 3. எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான் வேறாகும் மாந்தர் பலர். எவ்வளவுதான் வழிமுறைகளை ஆராய்ந்து தெளிந்து தேர்ந்தெடுத்தாலும் செயல்படும் பொழுது வேறுபடுகிறவர்கள் பலர் இருப்பர்.

  . சிறப்பைப் பாராட்டும் மணநிலைக்குறைவு. என்ன நற்செயல் நடந்ததுள்ளது என்று பாராமல் வேண்டியவரா ? வேண்டாதவரா ? என்று பாரர்க்கும் மணநலையில் உள்ளவர்கள்.

  ReplyDelete
 4. கலைஞரும் திமுகவும் ஓயாது போராடியதால்தான் தமிழ் செம்மொழி அந்தஸ்த்தை பெற்றது.அதற்கு உறுதுணையாக இருந்த மன்மோகன்சிங்,சோனியா காந்திக்கும் நாம் நன்றி சொல்ல கடமைப்பட்டவர்கள். சமசீர் கல்வி, பிச்சைக்காரர் மறுவாழ்வு, ஊரெல்லாம் பாலங்கள்,சாதிக்கொரு ஊர் என்று இருப்பதை மாற்றி சமத்துவபுரம், உழவர்சந்தை, குடிசைகள் தோறும் தொலைகாட்சி மூலம் உலகத்தை பார்க்கும் வாய்ப்பு என்று அடுக்கடுக்காக தமிழகத்துக்கு நன்மை செய்வது என்னவோ திமுகதான். ஆனால் காய்த்த மரம்தான் கல்லடி படும் என்பது போல தமிழ்தேசியம் பேசும் சிலர் கலைஞர் மீதும் திமுக மீது வீசும் சேறு இருக்கிறதே சொல்லி மாளாது.இவர்கள் வெறும் திருந்தாத உருவங்கள்...

  ReplyDelete
  Replies
  1. ம.தமிழ்ச்செல்வன்25 January 2016 at 14:39

   திருக்குறளை வாழ்வியலாக செயல்படுத்துவர்கள்தான் இன்றைய தேவை அதற்கு பொருள் கூறுபவர்களோ,விதம்விதமாக உரை எழுதுபவர்களோஅல்ல!.திருவள்ளுவரை, திருக்குறளை மேடைப் பேச்சுக்காக உயர்த்திப் பேசிவிட்டு தமிழகத்தில் அனைத்து தலைவர்களும் நிஜ வாழ்க்கையில் சாணக்கியனாக,அர்த்தசாஸ்த்திரத்தைக் கடைபிடிப்பவர்களாகவே இருக்கிறார்கள்!(சிறந்த ஒரு உதாரணம் மதுவிலக்கு சட்டத்தையே பயன்படுத்தி மதுவியாபாரம் செய்யும் சாணக்கிய தந்திரம் Height of Hypocrasy).2350 ஆண்டுகளுக்கு முன் சாணக்கியன் செய்ததை இன்று தமிழகத் தலைவர் செய்கின்றார்கள் என்பதே திருவள்ளுவருக்கும்,திருக்குறளுக்கும் ஏற்ப்பட்ட தோல்விதான்.

   Delete
  2. Thirukural is un implementable in real life,at best for preacing not for practice!.Even there is no proof that Tiruvalluvar followed his own Kural or form a cult.Power and Realism for many millennium till now is different from moral preaching or ethics.So in real term it looks elegant but in practice it is empty... Read
   http://nationalinterest.org/feature/chanakya-indias-truly-radical-machiavelli-12146

   Delete
  3. தங்களின் உரையைக் கேட்க ஆவலாய் உள்ளது.பகிர முடியுமா?

   Delete
 5. ஒரு காலத்தில், உலகத்தையே தன் வசம் வைத்திருந்த நாட்டில், நம் தாய் மொழி தமிழுக்கு உரிய அங்கீகாரம், எல்லோராலும் பாரட்டப்படுகின்ற கேம் ப்ரிட்ஜ் பல்கலைகழகத்தில் கிடைக்கப்பெற்றுள்ளது, உள்ளபடியே நம் அனைவருக்கும் பெருமிதம் தரும் செய்தியாகும்.

  தமிழை என்றென்றும் போற்றி, தொண்டாற்றி வரும் கலைஞர் அவர்கள், தமிழை செம்மொழியாக மாற்றி போட்ட விதை, இளம் செடியிலேயே மகசூல் தர ஆரம்பித்துள்ளது என்பதற்கு கேம் ப்ரிட்ஜ் பல்கலைகழகமே சாட்சி.

  இது போல், மேலும் பல சிறப்பு விருதுகள், பல்வேறு நாடுகளில், தமிழ் பெற வேண்டும் என விழையும்,

  க.சீனிவாசன்.

  ReplyDelete
 6. திருக்குறளும் அறிவியலும்' உரையைக் கேட்க மிகவும் ஆவலாக உள்ளோம், தயவு செய்து பகிரவும்.

  ReplyDelete
 7. திருக்குறளும் அறிவியலும்' உரையைக் கேட்க மிகவும் ஆவலாக உள்ளோம்

  ReplyDelete
  Replies
  1. பேராசிரியர் சுபவீ அவர்கள்
   இலண்டன் தமிழர் முன்னேற்றக் கழகத்தின் நாற்பதாம் ஆண்டு விழா மற்றும் தமிழர் திருநாள் பொங்கல் விழாவில்
   "திருக்குறளும் அறிவியலும்" எனும் தலைப்பில் ஆற்றிய சொற்பொழிவு !

   https://www.youtube.com/watch?v=tIwdPm1Ir_g

   Delete