தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Thursday 24 March 2016

அரசியல் மேடை - 17

விட்டது தொல்லை 
வெற்றியே நாளை!
                      
                       

ஒருவழியாக விஜயகாந்த் முடிவெடுத்து விட்டார். அவர் ஆசைப்படி, 'கிங்' பதவி  வந்ததோ இல்லையோ, 'கிங் வேட்பாளர்' பதவி வந்துவிட்டது.  தா.மா.கா போன்ற கட்சிகளும்  இன்னும் ஓரிரு நாள்களில்  இறுதி முடிவெடுக்க வேண்டிய கட்டம்.   தமிழ்நாட்டின் தேர்தல் களக் கூட்டணிகள் பற்றி இனிமேல் பேசிக் கொண்டிருக்க வேண்டியதில்லை.


ஆனால் ஊடகங்கள் சில  தி.மு.க.வுக்குப் பின்னடைவு என்று ஒரு செய்தியைப் பரப்பத் தொடங்கியுள்ளன. நாம் எதிரியின் வலிமையைக் குறைத்து மதிப்பிடவோ, நம் இழப்பை மறைக்க முயற்சிக்கவோ வேண்டியதில்லை. அதே போல, எதிரியைக் கூடுதலாக மதிப்பிட்டு அஞ்ச வேண்டியதுமில்லை. 

தி.மு.க.வின் வாக்கு சதவீதம் என்று ஊடகங்கள் சொல்வதெல்லாம், குறைவான தொகுதிகளில் போட்டியிட்டு நாம் பெற்ற வாக்குகளை அடிப்படையாகக் கொண்டுதான். சென்ற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. போட்டியிட்டதே 119 தொகுதிகளில் மட்டும்தான். அ.தி.மு.க. 150 இடங்களில் போட்டியிட்டது. அதனால் அக்கட்சி பெற்ற வாக்குகள் கூடுதல் சதவீதம் கொண்டதாகத்தான் இருக்கும்.  எனவே சதவீதக் கணக்கில் நாம் மயங்கி விடக் கூடாது. இரண்டு கட்சிகளும் ஏறத்தாழ சம வலிமை  உடையனவே. தளபதியின் பயணமும், தலைநகரின் வெள்ளமும் இன்று அ.தி.மு.க. வாக்குகளை உறுதியாகக் குறைத்துள்ளன.

இப்போது தே.மு.தி.க. நம்முடன் இணையாததால், மிகுதியான இடங்களில் நாம் போட்டியிட வாய்ப்புள்ளது. கோவில்பட்டி போன்ற சில தொகுதிகளில் தி.மு.க போட்டியிட்டே ஆண்டுகள் பலவாகிவிட்டன. அவை போன்ற தொகுதிகளில் மீண்டும் தி.மு.க. இம்முறை போட்டியிடும் வேளையில் கட்சித் தொண்டர்களுக்குப்  
புதிய ஊக்கம் கிடைக்கும். 

தே.மு.தி.க. நம்முடன் வந்திருந்தால் சிறிய அளவில் வாக்குகள் நமக்குக் கூடுதலாகக் கிடைத்திருக்கும் என்பது உண்மையே. ஆனால், விஜயகாந்துடனும், அவரது மனைவியுடனும் தேர்தல் வரையில் சேர்ந்து பயணம் செய்வது என்பதே மிக மிகக் கடினமானது. அதிலும் திரு பிரேமலதா இரண்டு ஜெயலலிதா போலப் பேசுகின்றார். அந்தக் குழுவிடம் போய்ச் சிக்கி கொண்டு, நாளை நாம் பெறக்கூடிய அனைத்து  வெற்றிக்கும் அவர்கள் சொந்தம் கொண்டாடுவதை நாம் வேடிக்கை பார்க்க வேண்டியிருக்கும். எனவே நமக்கு நட்டம் ஒன்றுமில்லை.நல்லதுதான் நடந்துள்ளது.

அப்படியானால் யாருக்கு நட்டம்? மக்கள் நலக் கூட்டணிக்குத்தான். அதிலும் குறிப்பாகத் திரு வைகோவிற்குத்தான். இனி அந்தக் கட்சி ஆட்சிக்கு வரும் என்னும் தொலை தூரக் கனவு கூட அக்கட்சி தொண்டனுக்கு இருக்க முடியாது. கலைஞரை, ஜெயலலிதாவைப் 'போற்றி, போற்றி' பாடிய வாயால், இனி விஜயகாந்த் போற்றி பாடுவது மட்டுமே அவருடைய் வேலையாக இருக்கும். அதனை இன்றே அவர் தொடங்கி விட்டார். 

ஆனாலும் ஒரு செய்திக்காக அவரை நாம் பாராட்டியே தீர வேண்டும். இத்தனை பெரிய பள்ளத்தில் சரிந்து கொண்டிருப்பதை உணராமல், இவ்வளவு சந்தோஷப் படும் மனிதரை இனிமேல்தான் உலகம் பார்க்க வேண்டும். தருமரை  (விஜயகாந்த்) இனிமேல் யாரும் நெருங்க முடியாதாம்.  எல்லாக் கேள்விகளுக்கும் அர்ஜுனனும், பீமனும் (வைகோ, திருமாவளவன்)தான் விடை சொல்வார்களாம். (ஏனென்றால் தருமர் உளறி விடுவார்).

தனிப்பட்ட முறையில், என்னைப் பொறுத்தளவு, விட்டது தொல்லை, வெற்றியே நாளை என்ற எண்ணமே மேலோங்கியுள்ளது. விஜயகாந்தை விடத் தி.மு.க.  தொண்டனின் வியர்வையிலும், விடா முயற்சியிலும் எனக்கு  மிகப் பெரும் நம்பிக்கை உள்ளது. அவர்களின்  வியர்வையில் விளையும் நம் வெற்றி! 


20 comments:

  1. உங்கள் பதிவு தி மு க வினருக்கு உற்சாகம் தருவதாய் இருக்கும். உங்கள் மன நிலையில்தான் பெரும்பாலான தி மு க தொண்டர்களும் உள்ளனர். ஆனால் தலைவர் கலைஞர் தான் தே மு தி க வை மிகவும் எதிர்பார்க்க வைத்துவிட்டார். ஊடங்களில் அவர் எதிர்பார்ப்பை வெளிப்படுத்தாமல் இருந்திருக்கலாம்.

    ReplyDelete
  2. சில பேர் நடுநிலயளர்களாக காட்டி கொள்பவர்கள் என்னிடம் கேட்கிறார்கள் . இரண்டு கட்சிகளையுமே பிடிக்காதவர்கள் யாருக்கு போடுவார்கள் என்று . விஜயகாந்த் வந்தால் நான் மக்கள் நலகூடனிக்கு ஒட்டு போடுவேன் என்று. இன்று வந்து விட்டார் அதனால் நான் மக்கள் நலகூடனிக்கு ஒட்டு போடுவேன் என்கிறார்கள்.

    அவர்கள் திமுக கட்சி தனக்கு பிடிக்கும் என்றும் சொல்கிறார்கள். திமுக தான் அனைத்து மக்கள் நல பணிகளையும் செய்ததது என்று சொல்லி விட்டு பிறகு ஏதேதோ உப்பு சப்பு இல்லாத காரணங்களை சொல்லி இவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்றும் சொல்கிறார்கள், இரண்டு கட்சிகள்தான் ஏற்கெனவே ஆண்டு விட்டதே என்றும் சொல்கிறார்கள். உங்கள் ஒட்டு வீண் ஆகி விடாதீர்கள் அதிமுகவிற்கு அது சாதகமாகி விடும் என்று சொன்னால் ஏற்பதில்லை. திமுக தவிர யார் வந்தாலும் ஒட்டு மக்களுக்கு பயன் கிடையாது என்று சொன்னால் மறுக்கிறார்கள்.

    இம்மாதிரி நடுநிலயலர்களுக்கு என்று திமுகவின் சாதனை விளக்க கூட்டங்கள் திமுகவால் நடத்த பட வேண்டும். வெறும் கடந்த கால ஆட்சி மட்டும் அல்லாமல் திமுக ஆரம்பித்த காலம் முதல் இன்று வரை என்ன என்ன மக்கள் நல திட்டங்கள் செயல் படுத்த பட்டுள்ளன என்று விளக்கமாக எடுத்துரைக்க வேண்டும்.
    மக்களின் வாழ்க்கைக்கு அடிப்படை வேர் என்ன என்று அவர்களுக்கு தெரிய படுத்த வேண்டும். உள் கட்டமைப்பு (infrastructure ), நிம்மதியான வாழ்கை தரும் சுற்று சூழல் ( உதரணமாக ஜெயலிதா உயர்ந்த அடுக்கு மாடி வீடுகளை கட்டி தருகிறார், இது நிம்மதியான வாழ்கை தரும் சுற்று சூழல் ஏற்பதல்ல), நீர் மேலாண்மை, பூங்காக்கள், நான்கு வழி சாலைகள், அனைவருக்குமான வளர்ச்சி(ஒரு சில சாதி வளர்வது அல்ல), மிக பெரிய பரந்த பல்கலை கழகங்கள், மிக பரந்த விளையாட்டு இடங்கள்( உதாரணமாக திமுக கொண்டு வந்த பையனூர் 1000 ஏக்கர் விளையாட்டு பூங்காவை அதிமுக தடை செய்து விட்டது, இது மக்களின் ஆரோக்கியத்திற்கு வேர் ) இம்மாதிரி மக்களிடம் வேர் என்றால் என்ன என்று தெரிய படுத்தி விட்டு உதரணமாக வெளி நாடுகளை வளர்ந்த நாடுகளை காட்டி தெரிய படுத்த வேண்டும். பின்பு திமுக அதனை செய்யும் என்று சொல்ல வேண்டும். நிச்சயமாக இதனை வேறு யாரும் செய்ய மாட்டார்கள் என்று சொல்லி அதிமுக ஆரம்ப காலம் முதல் இப்போது வரை மக்களின் வேறன திட்டங்களை செய்ய தவறியவற்றை சொல்ல வேண்டும்.

    எல்லா உள்கட்டமைப்பு திட்டங்களும் திமுகவால்தான் செயல்படுதபட்டுள்ளன என்று ஆதரங்களுடன் விளக்க வேண்டும். அவர்கள் மனம் மாறுவதற்கு மிக மிக கடுமையாக உழைக்க வேண்டும். நாங்கள் நல்லவர்கள் மட்டும் அல்ல அதற்கும் மேல என்று செயல் பட வேண்டும்.

    நல்ல பல விசயங்களை ஊடகங்களும் செய்ய முடியும். மக்கள் அரசியல் வாதிகள் மேல் வெறுப்பு கொள்வதற்கு மிக முக்கிய காரணம் நில அபகரிப்பு, நீர் நிலை ஆக்கிரமிப்பு. இவைகளை காப்பதற்கு என்று ஒரு சேனல் சன் டிவி யால் தொடங்க பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்த சேனல் தமிழகம் இயற்கை வளம் காபதற்கு என்று அர்பணிப்புடன் செயல் பட வேண்டும். இனிமேல் ஒரு சதுர அடி நிலம் கூட அரசியல் வாதிகளால் ஆக்கிரமிப்பு செய்ய படாது என்னும் அளவிற்கு இயற்கை வளம் சார்ந்த செய்திகளை துல்லியமாக சாடெலிட்(salelie ) மூலமாக துல்லியமாக விளக்க வேண்டும். வெளி நாடுகள் எப்படி இயற்கை வளம் காக்கின்றன எனும் செய்திகளை வெளியிட வேண்டும்.

    நிச்சயம் திமுக உண்மையால் வெல்லும். நிச்சயம் திமுக உண்மையால் வெல்லும். நிச்சயம் திமுக உண்மையால் வெல்லும்.

    ReplyDelete
  3. இது கலைஞரின் ராஜதந்திரமா? தற்செயலாக நடந்ததா? கலைஞர் பத்திரிகையாளர்களிடம் கருத்துசொன்ன சில மணிநேரங்களில் "டேக் ஆப்" ஆன மநகூவை இறக்கி விநகூவாக மாற்றி விஜயகாந்தை ஏற்றிக்கொண்டார் வைகோ. ஆனால் செல்லுமிடம் சரியாகப் போய் சேருமா என்றுதான் தெரியவில்லை. மலேசிய விமானம் போல காணாமல் போகாமல் இருந்தால் சரி.

    ReplyDelete
  4. வழக்கமாக ஆளுங்கட்சியை எதிர்த்து தான் எதிர்கட்சிகள் அணி திரளும். தற்போது அனைவரும் திமுகவை குறி வைத்து எதிர்ப்பதைப் பார்த்தால்,திமுக தான் ஆளும்கட்சி என்பதைப் போன்ற ஒரு தோற்றம் ஏற்பட்டுள்ளது.
    எனவே,விஜயகாந்த் அணிக்கும் அதிமுகவுக்கும் இடையில் 'திமுக எதிர்ப்பு வாக்கு' பிரியும். பாஜக தனித்து போட்டியிடுவதால் அது அதிமுகவிற்கு வழக்கமாகக் கிடைக்கும் பார்ப்பன மற்றும் பிற முற்படுத்தப்பட்டோர் வகுப்பினர்(FC/OC) வாக்குகளைப் பிரிக்கும்.
    ஆகவே,திமுகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை. உற்சாகமாக நம்பிக்கையுடன் பயணிப்போம் தோழர்களே,சுப.வீ அய்யாவின் வழிகாட்டுதலில்!

    ReplyDelete
  5. நடுநிலயலர்களுக்கு என்று திமுகவின் சாதனை விளக்க கூட்டங்கள் திமுகவால் நடத்த பட வேண்டும். வெறும் கடந்த கால ஆட்சி மட்டும் அல்லாமல் திமுக ஆரம்பித்த காலம் முதல் இன்று வரை என்ன என்ன மக்கள் நல திட்டங்கள் செயல் படுத்த பட்டுள்ளன என்று விளக்கமாக எடுத்துரைக்க வேண்டும்.
    மக்களின் வாழ்க்கைக்கு அடிப்படை வேர் என்ன என்று அவர்களுக்கு தெரிய படுத்த வேண்டும். உள் கட்டமைப்பு (infrastructure ), நிம்மதியான வாழ்கை தரும் சுற்று சூழல் ( உதரணமாக ஜெயலிதா உயர்ந்த அடுக்கு மாடி வீடுகளை கட்டி தருகிறார், இது நிம்மதியான வாழ்கை தரும் சுற்று சூழல் ஏற்பதல்ல), நீர் மேலாண்மை, பூங்காக்கள், நான்கு வழி சாலைகள், அனைவருக்குமான வளர்ச்சி(ஒரு சில சாதி வளர்வது அல்ல), மிக பெரிய பரந்த பல்கலை கழகங்கள், மிக பரந்த விளையாட்டு இடங்கள்( உதாரணமாக திமுக கொண்டு வந்த பையனூர் 1000 ஏக்கர் விளையாட்டு பூங்காவை அதிமுக தடை செய்து விட்டது, இது மக்களின் ஆரோக்கியத்திற்கு வேர் ) இம்மாதிரி மக்களிடம் வேர் என்றால் என்ன என்று தெரிய படுத்தி விட்டு உதரணமாக வெளி நாடுகளை வளர்ந்த நாடுகளை காட்டி தெரிய படுத்த வேண்டும். பின்பு திமுக அதனை செய்யும் என்று சொல்ல வேண்டும். நிச்சயமாக இதனை வேறு யாரும் செய்ய மாட்டார்கள் என்று சொல்லி அதிமுக ஆரம்ப காலம் முதல் இப்போது வரை மக்களின் வேறன திட்டங்களை செய்ய தவறியவற்றை சொல்ல வேண்டும்.

    எல்லா உள்கட்டமைப்பு திட்டங்களும் திமுகவால்தான் செயல்படுதபட்டுள்ளன என்று ஆதரங்களுடன் விளக்க வேண்டும். அவர்கள் மனம் மாறுவதற்கு மிக மிக கடுமையாக உழைக்க வேண்டும். நாங்கள் நல்லவர்கள் மட்டும் அல்ல அதற்கும் மேல என்று செயல் பட வேண்டும்.

    நல்ல பல விசயங்களை ஊடகங்களும் செய்ய முடியும். மக்கள் அரசியல் வாதிகள் மேல் வெறுப்பு கொள்வதற்கு மிக முக்கிய காரணம் நில அபகரிப்பு, நீர் நிலை ஆக்கிரமிப்பு. இவைகளை காப்பதற்கு என்று ஒரு சேனல் சன் டிவி யால் தொடங்க பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்த சேனல் தமிழகம் இயற்கை வளம் காபதற்கு என்று அர்பணிப்புடன் செயல் பட வேண்டும். இனிமேல் ஒரு சதுர அடி நிலம் கூட அரசியல் வாதிகளால் ஆக்கிரமிப்பு செய்ய படாது என்னும் அளவிற்கு இயற்கை வளம் சார்ந்த செய்திகளை துல்லியமாக சாடெலிட்(salelie ) மூலமாக துல்லியமாக விளக்க வேண்டும். வெளி நாடுகள் எப்படி இயற்கை வளம் காக்கின்றன எனும் செய்திகளை வெளியிட வேண்டும்.

    நிச்சயம் திமுக உண்மையால் வெல்லும். நிச்சயம் திமுக உண்மையால் வெல்லும். நிச்சயம் திமுக உண்மையால் வெல்லும்.

    ReplyDelete
  6. தொண்டர் படை ஒப்பனையில் சேர்ந்ததன்று, சலிக்காத மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வென்று காட்டிய இயக்கம். தேர்தல்- கட்சி அடையாளங்களால் கூட்டணி அமைப்பதே
    மக்களின் அடையாளமாக கருத முடிவதால்....காசுக்கு மாரடிக்கா கூட்டம்
    கழக தொண்டர் கூட்டம். வெல்வோம் மக்கள் பணி செய்வோம்

    ReplyDelete
  7. திமுகவின் கொள்கை பற்றுள்ள தொண்டர்கள் இனி நிம்மதியாக பிரசாரத்தை மேற்கொள்ளலாம்.
    விஜயகாந்த் பிரேமலதாவை வைத்து கொண்டு எப்படி சுயமரியாதை, சமூகநீதியை பற்றி எல்லாம் பேச முடியும்? அவற்றின் அர்த்தம் கூட அவர்களுக்கு புரியுமா? இருவரும் லியாகத் அலிகான் எழுதி கொடுத்த வசனங்களின் ஹாங் ஓவரில் இருந்து இன்னும் விடுபடவில்லை.
    அதே பாணியில்தான் பேசுகிறார்கள். அவர்களின் நோக்கம் ஏரியா விற்பனைதான் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் கிடையாது. அதுதான் இப்போதும் நடந்திருக்கிறது என்ற சந்தேகம் எனக்கு உண்டு.இவர்களின் அந்தரங்க சுத்தி அப்படி.
    நமக்கு உள்ள கவலை எல்லாம் விஜயகாந்த் இனியும் மனம் மாறாமல் அங்கேயே இருக்க வேண்டும் என்பதுதான்.
    சதா அம்மாவை மையப்படுத்தியே அரசியல் செய்துவரும் வைகோ இனி பிரேமலதாவை மையப்படுத்தி என்னன்ன ஜெங்கிஸ்கான் கதையெல்லாம் கூற போகிறாரோ?

    ReplyDelete
  8. தாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த கருத்து தான் திமு கழக தொண்டர்களின் உள்ளார்ந்த எண்ணம் ஆகும். காலம் அதற்கு சரியான செயல் வடிவம் கொடுத்துள்ளது தலைமை தொண்டர்களின் உழைப்பை ஒருங்கிணைத்து செயலாற்றினால் தமிழனத்தின் வெற்றி வெகு தூரத்தில் இல்லை

    ReplyDelete
  9. செம்பரம்பாக்கம் ஆத்தாவின் ஆட்சி அகல வேண்டும் என்று தமிழகமே மன்றாடுகிறது்மேலும் தளபதியின் நமக்கு நாமே பயணம் ஒவ்வொரு திமுக தொண்டனுக்கும் மிகுந்த உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது தலைவர் கலைஞர் தே தி மு கடசியை அழைத்து அவர் வராத காரணத்தினால் ஏதோ திமுகவிற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக பிம்பத்தை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் இன்றைய ஊடகங்களுக்கு நாய் விற்ற காசுக்கு குறைத்துத்தான் ஆக வேண்டிய நிலையில் இன்றைய ஊடகத்தின் நிலைமை இப்போது எல்லா திமுக தொண்டனும் மிகுந்த் மகிழ்ச்சியில் உள்ளனர் இது பெரும் வெற்றியாக மாறும் என்பது திண்ணம்

    ReplyDelete
  10. உங்கள் காணொளிகளை தொடர்ந்து பார்க்கிறேன் . நீங்கள் எழுதிய புத்தகங்களை படித்து இருக்கிறேன் . புலனம் (whatsapp) இல் உங்கள் ஒரு நிமிட செய்தியை பெறுவது எப்படிங்க தோழர் ?

    ReplyDelete
    Replies
    1. தங்கள் அலைப்பேசி எண் மற்றும் பெயரை subavee.blog@gmail என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்

      Delete
  11. சில கம்பெனிகளில் பிரச்சனைகளுக்கு முதலாளியை விட தொழிலாளி குதிப்பார்கள் , அந்த விதத்தில் சுபவீ இப்போது .................

    ReplyDelete
  12. இது தி.மு.க காரர்கள் ஒவ்வொருவரின் குரல்.வராமல் போனதே நல்லது.விசயகாந்த் ஒலிபெருக்கியை தூக்கி எறிவதும்,நாக்கைத் துருத்துவதும் பார்க்கவே அருவருப்பு .எப்படித் தமிழன் இப்படி,முட்டாளாகிப் போனான் ?நீங்கள் சொல்வது போல் அவர்மனைவி அல்லி ராணியே என்று கத்துவதைப் பார்த்தால் பயமாக உள்ளது.கழுத்துக்கு வர இருந்த கத்தியிடமிருந்து தலைதப்பியது.தி .மு .க வின் பலம் அதன் தொண்டர்கள்தான்.ஏன்இவர்கள் பற்றி நாம் விவாதம் செய்யவேண்டும்?

    ReplyDelete
  13. திமுக – வெற்றி பெற வேண்டுமானால், கீழ் கண்ட செயல் திட்டங்கள் தேர்தல் வாக்குறுதிகளில் பிரதிபலிக்க வேண்டும்.

    1. ஊழல் ஒழிப்பு.
    2. மது ஒழிப்பு.
    3. நிதி மேம்பாடு.
    4. கடமைக்குள் கட்டுப்படுகிற வேலை வாய்ப்பு
    5. சுகாதாரம்/ தூய்மை/ மருத்துவம்
    6. தொழில் வளம் பெருக்குதல்
    7. உணவு உற்பத்தி
    8. முதியோர் பாதுகாப்பு
    9. சட்டம் ஒழுங்கு பராமரிப்பு
    10. தமிழ் மொழி மேம்படுத்துதல் ……… இன்னும் பல

    கூடவே கூடாது: இலவசங்கள்

    Nowadays tamil people got tired and felt with no tangible results observed by voting the major political parties. They are desperately looking for a change where they will get good governance through the hassle free plans. No doubt, the Dravidian parties’ principles are great and need to be preserved. At the same time, in the pragmatic approach, upliftment of people is vital both socially and economically. So the plans should be cynosure to accomplish the desired results.

    ReplyDelete
  14. Rightly said.. Adding to it - candidate selection too plays a major role attracting neutral voters..

    ReplyDelete
  15. சரி நல்லது. இப்போது இதைப் படிங்க.

    வைகோ பதில் தரட்டும்.

    மநகூ பெயரை விஜயகாந்த் அணி என்று அழைக்க ரகசியமாக எண்ணியிருந்தார் வைகோ என்று குற்றம் சாட்டுகிறேன்.

    மநகூ பிரசாரங்களில் இதுவரை காணப்படாமல் இருந்து இப்போது திடீர் உதயம் ஆகி முதல்வர் வேட்பாளராக விஜயகாந்தை ஆக்கியிருப்பது ஒரு ரகசிய திட்டம். அதை தனது சகாக்களுக்கும் தெரியாமல் ரகசியமாக மனதில் எண்ணியிருந்தார் வைகோ என்று குற்றம் சாட்டுகிறேன்.

    124 தொகுதிகளை தேமுதிகவுக்கு கொடுப்பது தனது சகாக்களுக்கு குறைத்து கொள்வது என்பது ஒரு ரகசிய திட்டம். அதை ரகசியமாக எண்ணி இருந்தவர் வைகோ என்று குற்றம் சாட்டுகிறேன்.

    தொடையில் பிறந்த பீமன் முக்கியமானவன். அந்த பீமன் திருமாவளவன் என்று வருணித்து சூத்திரப்பட்டத்தை சாதூர்யமாக திருமாவுக்கு சூட்டியிருக்கிறார்கள். இப்படி அவரை வருணிப்பதற்குத்தான் திருமாவை அந்த வரிசையில் அந்தவகையில் உட்கார வைத்து இருந்து இருக்கிறார்கள். அதை முன்பே அறிவார் வைகோ என்று குற்றம் சாட்டுகிறேன்.

    விஜயகாந்த் உடன்வந்தால் வெற்றி வாய்ப்பு கூடும் என்று திமுக நினைத்து இருந்திருக்கலாம். ஆனால் 80 தொகுதி 500 கோடி பணம் திமுக தேமுதிக வுக்கு தரத்தயாராக இருந்தது என்று வைகோ குற்றம் கூறுவதற்க்கு காரணம் தனது ரகசிய திட்டம் வெளியே தெரியாமல் இருப்பதற்கான ஒரு ரகசிய அனுகுமுறை. உண்மையில் என்ன நடந்து இருக்கும் என்றால் தனக்கு விஜயகாந்த் 50கோடி தருவதாக இருந்தால் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்தை அறிவிப்பதோடு மநகூவைவிட கூடுதல் தொகுதி தேமுதிக வுக்கு கிடைக்க முயல்வதாக விஜயகாந்துக்கு ரகசியமாக வாக்கு கொடுத்து இருந்து இருக்கிறார் வைகோ. கேட்டப்படி கிடைத்ததும் சொன்ன படி நடந்து கொண்டார். இதை தனது சகாக்கள் அறியாவன்னம் வைத்துக்கொண்டார் வைகோ என்று குற்றம் சாட்டுகிறேன்.

    விஜயகாந்தை வைகோ அதனால் தான் கண்ணுமண்ணு தெரியாமல் புகழ்கிறார்.

    நீங்க மநகூ என்பீங்க அப்புறம் விஜயகாந்த் அணின்பீங்க நாங்க ஆகா ஓகோ என்று உங்கள நெனைக்கனுமா வைகோ அவர்களே?

    உங்களிடம் கம்மியா இருக்கு விஜயகாந்திடம் அதிகமா இருக்கு. நான் பணத்தை சொன்னேன். அதை இப்படி கூட்டு வைத்து கறைக்கலாம். வைகோ அவர்களே சூப்பர்.

    குறிப்பு:- தான் எந்தவித பேரத்திலும் ஈடுபடவில்லை என்றார் விஜயகாந்த். அவருக்கு திமுக இவ்வளவு பணம் தர முன்வந்தது என்று பிரமாதமாக பேசி விஜயகாந்த் பேரம் நடத்தி இருந்து இருக்கலாம் என்கிற ஐயத்தை ஏற்படுத்திவிட்டார் வைகோ.

    வைகோ அவர்களே நீங்க நல்லவரா கெட்டவரா?


    ReplyDelete
  16. "தனிப்பட்ட முறையில் என் கருத்து...." என்று சொல்லுவது எதற்கும் நல்லது என்று சுபவீ அவர்கள் புரிந்து கொண்டு விட்டார் போலும். ஏனெனில் கட்சி பொருளாளர் அவர்கள் சுபவீ யை வேறு கட்சிக்காரர், அவரது சொந்த கருத்து என்று எல்லாம் கூறி விட்டால்?

    ReplyDelete
  17. வணக்கம் சுப வீ அவர்களே,நான் திமுக ஆதரவாளன் இல்லை.ஆனால் தேர்தல் அரசியல் அரங்கில் வேறு நாதியற்ற நிலையில், திமுக ஆட்சியில் இருப்பது கொஞ்சமேனும் மக்களாட்சியின் இயல்புகளும்,திராவிட கொள்கைகளின் மிச்சங்களும் ஆங்காங்கே தென்பட்டுக் கொண்டிருக்கும் என்கிற அளவில் நிம்மதி பெறுகின்றவன்.எனக்கு கலைஞரோடும் கூட பிணக்குகள் உண்டுதாம்.திமுக என்கிற அமைப்பு எப்படி சுயமரியாதையுடன் இயங்க வேண்டும் என்று சாதாரண திமுக தொண்டர்களும் என்போலவே அவர்கள் தலைவரோடு முரண்படுகிறார்கள் என்பதை நானறிவேன்.அந்தளவில் உங்களின் இந்த பதிவு பல சாமானிய திமுக காரர்களின் உணர்வை பிரதிபலிக்கிறது என துணிந்து சொல்லலாம்.தேதிமுகவுடன் கூட்டணி என்பது மானங்கெட்ட ஒரு நிலையிலேயே இருக்க முடியும் என்பதால் அதை மென்று விழுங்க வேண்டியிருக்குமே என பலரும் புலம்பி தவித்தனர்.அந்த தொல்லை விட்டது.
    விஜயகாந்த் மற்றும் அவரது குடும்பத்தினரின் ’கட்சி’ தோற்றம் முதலே சந்தர்ப்பவாதம் மட்டுமே கொள்கையாக கொண்ட அமைப்பு.அதனை மூன்றாவது ஒரு சக்தியாக நினைத்து ஆதரவு தெரிவித்தவர்கள் ஒரு வகையில் 49ஒ ஆக நினைத்து(அந்த வசதி வருமுன்னர்)அதனை செய்தார்கள் என்று நான் கருதுகிறேன்.ம ந கூட்டணியினர் இப்போது செய்துவந்த ஒருங்கிணைப்பும் முயற்சிகளும் கூட அந்த பிரிவினர் (49ஒ) மற்றும் அந்தந்த கட்சியினரின் வாக்குகளை மட்டுமே பெறக்கூடிய சாத்தியத்தை கொண்டிருந்தது.அதாவது அதிமுக வை எதிர்க்க வேண்டும் ஆனால் திமுகவை ஆதரிக்க முடியாது என்கிற இருதுருவ வெறுப்பை கொண்டவர்களின் ஆதரவு மட்டுமே ம ந கூட்டணியின் பலம்.அந்த பலம் தான் இப்போது விஜயகாந்த்தை ’கிங்’ ஆக ஏற்றுக் கொண்ட பின் ம ந கூட்டணியினரை விட்டு அகல ஆரம்பித்திருக்கிறது.49ஒ வை விரும்புபவர்கள் ஒரு விசயத்தில் ‘தெளிவு’ கொண்டவர்கள்.அவர்கள் ஓட்டளிக்க விரும்புகின்ற அளவில் யாருமில்லை என்பதற்காக ஒரு மாற்றுக்கு அதாவது ஒப்புக்காக யாரோ ஒரு ‘நல்லவனை’ அவசர கதியில் தேர்ந்தெடுப்பார்களேயன்றி ஆட்சிக்கு அமர்த்துகின்ற நிலையில் ஒருவரை தேர்ந்தெடுக்க அவசரப்படமாட்டார்கள்.
    தமது ஓட்டு விஜகாந்த்தை முதல்வராக்குவதற்கு என்று அரசியல் முதிர்சியுள்ள 49 ஓ காரர்களோ, இரு இடதுசாரி தோழர்களோ கூட இன்றைய நிலையில் விரும்ப மாட்டர்கள்.இந்த நிலையில் ‘கேப்டன் விஜயகாந்த் கட்சி +ம ந கூ தேர்தல் உடன்படிக்கை’ அணி ஒரு வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக திசை மாறி செல்ல துவங்கி விட்டது.இனி திமுக தனது கட்சியை,தொண்டர்களை நம்பி துணிவுடன் முயன்றால் வெற்றி நிச்சயம்.மேற்கொண்டு யாராவது வெளியிலிருந்து வந்தால் தான் வெற்றி என்று நினைத்துக் கொண்டால் அல்லது அழகிரி போன்ற முன்னாள் வித்தைகாரர்கள் வரவை எதிர்பார்த்தால் அதற்கு நேரெதிரான நிலை வருவதற்கே சாத்தியம் அதிகம். உங்களைப்போல கலைஞருடன் உரையாடுகின்ற நிலையில் உள்ளவர்களின் கவனத்திற்கு இதனை ஒரு நல்லெண்ணத்தின் பொருட்டு பதிவு செய்தல் கடமை என்பதாக கருதி முன்வைக்கிறேன். நன்றி!

    ReplyDelete
  18. திராவிடர்களே கேளுங்கள்

    80 தொகுதி 500 கோடி பணம் திமுக தேமுதிக வுக்கு தர முன்வந்தது என்று வைகோ சொன்னார் அல்லவா. அவர் பேட்டியில் அவ்வாறு சொல்லும் போது வைகோ நேரிடையாகவே குற்றம் சுமத்துகிறார். எப்பொருள் எவர்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு. ஆனால் வைகோ அவ்வாறு காணாமல் பேசி இருக்கிறார். தான் நேரிடையாக குற்றம் சுமத்துகிறார் அதன் பிறகு அந்தமாதிரி தகவல் ஒரு செய்தித்தாளிலும் வந்துள்ளது என்று ஏதோ போனால் போகிறது என்பது போல சொல்கிறார். அந்த சொல்லும் வடிவமே அவதூறு குற்றச்சாட்டு என்று ஆகிவிட்டது.

    தனது திடீர் சகோதரன் விஜயகாந்த்க்கு சாமரம் வீசுவதாக எண்ணிக்கொண்டு சாகடித்து கொண்டிருக்கிறார்.

    இவருடைய இந்த வாயைப் பார்த்து பிரேமலதா எரிச்சல் அடைந்து தனது கணவர் விஜயகாந்த், வேலியில் திரிந்து கொண்டு இருந்த மநகூ ஓணானை எடுத்து தனது வேட்டிக்குள் விட்டு கொண்டு விட்டாரோ என்று எண்ணி இருப்பார் அந்த கனமே.

    தனது கணவரை முதல்வர் ஆக்கி அழகுப் பார்க்கலாம் என்று எண்ணினால் விஜயகாந்தை காமடி பீஸாக்கிவிடுவாரோ அண்ணன் வைகோ என்று தங்கை பிரேமா தவித்து போயிருகிறார்.

    மரத்த வெச்சவன்தான் தண்ணீயும் அதுக்கு ஊத்தனும் என்று நினைத்துதான் பிரேமா, "வைகோவே அதை சட்ட ரீதியாக சந்திப்பார்" என்று வீரமாக மேடையில் கத்துகிறார். திராவிடர்களே, நமக்கு அது கேட்டு என்னவாகப்போகிறது? அவதூறு அம்பு விட்ட ஆரிய அர்ஜுனனுக்கு கேட்க வேண்டுமே!

    வழக்கை நீதி மன்றத்தில் சந்திக்க தயார் என்று வைகோ சன்டமாருதம் வாசிக்கிறார்.

    இவர் வாசிக்க யார் ஆடுவது?

    நன்றாக கவனியுங்கள்

    திமுக தேமுதிக வுக்கு பல கோடி பணம் தர முயன்ற செய்தி ஒன்று ஒரு நாளிதழில் கண்டேன். அதற்கு திமுக வின் பதில் என்ன? என்று வைகோ பேசியிருந்தால் அது அவரது அவதூறு குற்றச்சாட்டு ஆகாது.

    இனி என்ன செய்வது?

    வைகோ உள்ளே போய்கோ போய்கோ.





    ReplyDelete
  19. நமது அரசியல்வாதிகள் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை, மக்களுக்கு தெளிவு படுத்தும் வகையில், போட்டிப் போட்டுக்கொண்டு பேசினால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

    ReplyDelete