தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Wednesday, 2 March 2016

அரசியல் மேடை - 5‏

தெருச் சண்டையா, தொலைகாட்சி விவாதமா?
                       


01.03.2016   அன்று இரவு தந்தி தொலைக்காட்சியில் ஆயுத எழுத்து விவாத அரங்கைப் பார்த்துக் கொண்டிருந்த நான் ஓரிடத்தில் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானேன். பார்த்த பலரும் அந்த அனுபவத்தைப் பெற்றிருப்பார்கள். 

விஜயகாந்த்தின் தே.மு.தி.க. கூட்டணி நிலைப்பாடு குறித்து உரையாடல் நடந்து கொண்டிருந்தது. பேராசிரியர் அருணன், வானதி சீனிவாசன், சீமான், வழக்கறிஞர் சரவணன் ஆகியோர் பங்குபெற்ற அவ்விவாதத்தைப் பாண்டே நடத்திக் கொண்டிருந்தார். 


வரும் தேர்தலில்  மக்கள் நலக் கூட்ட்டணியை விடக் கூடுதலாக  வாக்குகள் வாங்கவில்லையென்றால், தன் கட்சியைக் கலைத்துவிட்டு சி.பி.எம். கட்சியில் சேர்ந்து விடுவதாகச் சீமான் அறைகூவல் விட்டார். அந்தச் சவாலை ஏற்றுக் கொள்வதாக அருணன் கூறினார். இப்படித்தான் 'நகைச்சுவையாக' அந்த உரையாடல் சென்று கொண்டிருந்தது.

திடீரென்று ஒரு கட்டத்தில், சீமான், பேராசிரியர் அருணனைப் பார்த்து, "யோவ், லூசு மாதிரிப் பேசாதே" என்றார். யாரும் எதிர்பார்க்கவில்லை. பொது இடத்தில், லட்சக் கணக்கான மக்கள் பார்த்துக் கொண்டிருக்கும் தொலைக்காட்சியில், ஒரு கட்சியின் தலைவர் இப்படிப் பேசுவார் என்று நினைத்தும் பார்க்க முடியவில்லை. அருணனும் சினம் கொண்டு, "டேய், நீதாண்டா லூசு" என்று திருப்பிச்  சொன்னார். மக்கள் இனி நம்மையெல்லாம் எப்படி மதிப்பார்கள்?

பொது விவாதங்களில் அநாகரிகத்தின் உச்சம் தொட்ட நிகழ்வு  என்று இதனைச் சொல்லலாம். பேராசிரியர் அருணன் வெளியிட்ட கருத்துகள் சில எனக்கும் உடபாடில்லாதவைதான். ஆனாலும் அவருடைய கல்வித் தகுதி, ஆய்வுத்  திறன் எல்லாம் எவ்வளவு உயர்ந்தவை. தமிழகத்தின் இரு நூற்றாண்டு வரலாறு, தமிழர் தத்துவ மரபு, காலந்தோறும் பார்ப்பனியம், கடவுளின் கதை என்று எவ்வளவு அறிவார்ந்த நூல்களை அவர் தமிழ் மண்ணுக்குத் தந்துள்ளார். அவரைப் பார்த்து தடித்த  சொற்களைப் பயன்படுத்துவது எவ்வளவு இழிவானது. 

ஒருவேளை, அருணனுக்குப் பதிலாக , ஒன்றுமே படிக்காத இன்னொருவர் அந்த இடத்தில்  அமர்ந்திருந்தாலும் உரிய மதிப்போடு பேசுவதுதானே "தமிழர் பண்பாக" இருக்க முடியும். தமிழரை விடுங்கள், மனிதப் பண்பு அதுதானே!

ஆனால்   "நாம் தமிழர்" பண்பாடு இதுதான் போலிருக்கிறது.  தோழர் அருணனும் தன்  தரத்தை விட்டுக் கீழே இறங்கிப் பேசியதற்குப் பதிலாக, அந்த அரங்கை விட்டு வெளிநடப்புச் செய்திருக்க வேண்டும். 

சீமான் அல்லது அவர் சார்பாக தந்தி தொலைகாட்சி வருத்தம் தெரிவித்தால் நாகரிகம் சற்றுப் பிழைக்கும்!  


12 comments:

 1. தந்தி டிவி வருத்தம் தெரிவிப்பதற்கு மாறாக அவர் அரங்கை விட்டு வெளியே இருப்பதால் பேச வாய்ப்பு குறைவாக இருப்பதால் சினம் கொண்டு அவ்வாறு பேசினார் என்று அந்த போக்கை நியாய படுத்துவது கண்டிக்கதக்கது

  ReplyDelete
 2. I'm not sure how people like Seemaan and Vijayakanth who cannot even control their own emotions, are dreaming to occupy the chair that was occupied by great people like Kamarajar and Kumaraswamy Raja. The peak tragedy is that they believes this is a good character and manliness to do such acts.

  ReplyDelete
 3. அய்யா சீமானின் கோபம் ஏற்க முடியாததுதான், ஆனால் அது கொஞ்சமாவது விஷயம் தெரிந்தவரின் கோபம். ஆனால் விஜயகாந்த் விவகாரமோ வேறு, என்னெவென்று சொல்வது? விஜயகாந்தை கூட்டணியில் சேர்த்தால் பலநூறு பேராசிரியர் அருணன்கள் பிரசார மேடைகளில் திக்கு முக்காடவேண்டி வரும். தெருவில் போகும் கொள்ளியை தூக்கி யார் மடியில் வைக்க போகிறார்கள்? அது நிச்சயம் வரலாறு காணாத படிப்பினையாக இருக்கும். தனக்கு நிலைமை சாதகமாக இல்லை என்பது விஜயகாந்துக்கு மிகவும் நல்லாகவே தெரியும். அதனால்தான் கூட்டத்துக்கு ஆள்சேர்க்க திருப்பு முனை மாநாடு என்று அறிவிப்பு செய்தார். அங்கு பிரேமலதாவின் வெறுப்பு முனை பேச்சையும். விஜயகாந்தின் வேற்று கிரக வாசிகளின் பாஷையும்தான் காதில் விழுந்தது. தமிழக வாக்காளர்கள் நிறையவே முன்னேறி விட்டார்கள். திமுகவின் கடந்த ஆட்சியின் சாதனைகள் மக்களுக்கு இப்போது திமுக மீது ஒரு நம்பிக்கையை தந்துள்ளது. மக்களுக்கு முன்னுள்ள ஒரே ஒரு சாய்ஸ் திமுகதான் என்று மக்களுக்கு நன்றாகவே புரிகிறது. அதில் குளிர் காய விஜயகாந்தை அனுமதிப்பது ஒரு வரலாற்று தவறாகி விடும் என்றே கருதுகிறேன்.

  ReplyDelete
 4. இனவெறி என்ற சொல்லுக்கு லூசு என்பது எவ்ளவோ பரவாயில்ல.

  ReplyDelete
 5. ஐயா,நான் திராவிட இயக்கத்தைப் பற்றி தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கும் மாணவன்.திராவிட இயக்கத்தை இன்றைய இளைஞர்களிடத்திலும் கொண்டுப்போய் சேர்க்க அயராது உழைக்கும் உங்கள் கரத்தை வலப்படுத்துவதுதான் நியாயமும்கூட. உங்களோடு இணைந்து பயணிக்க வேண்டும் என்ற என் நீண்ட நாள் விருப்பம் அப்படி உதித்ததே. திராவிட இயக்க தமிழர் பேரவையின் தொடர்பு முகவரி/தொலைப் பேசி எண் தேவை ஐயா.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் அலைப்பேசி எண்ணை subavee.blog@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்வோம்.

   Delete
 6. தமிழகத்தை பொறுத்த மட்டில் தேசிய அரசியல் கட்சிகளுக்கு, அல்லது மாநில அரசியல் கட்சிகளுக்கு வாக்களிப்பதை காட்டிலும் தேர்தலில் சுயேட்சையாக நிற்கும் ஒருவருக்கு வாக்களிப்பதே அதி உத்தமம். கொள்கைகளுக்காக அரசியல் கட்சிகள் எதுவும் இல்லை. வெறும் மக்களின் வாக்குகளை கொள்ளை அடிக்கவே அரசியல் கட்சிகள்.

  ReplyDelete
 7. அதிர்ச்சி தந்த நிகழ்வுதான் நேற்றைய அந்த விவாதம்! இருவருக்கும் இது தேவைதான்

  ReplyDelete
 8. நானும் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். இப்போது நடத்தப்படும் விவாதங்களில், இதுபோன்ற அநாகரிகம் அதிகரித்து வருவதை பார்க்க முடிந்தாலும் இது அநாகரிகத்தின் உச்சகட்டம் என்று தான் சொல்லவேண்டும். பேராசிரியர் அருணன் அவர்களும் நாகரிகம் கடைபிடிக்கவேண்டிய இடத்தில் நாம் இருக்கிறோம் என்பதை உணர்ந்திருக்க வேண்டும். தமிழன் என்று மார்தட்டிக்கொள்ளும் அண்ணன் சீமான் தமிழர் பண்பாட்டை காப்பாற்றியிருக்க வேண்டும். அதை விட கொடுமை என்னவென்றால் அதை அடுத்த பத்து நிமிடத்தில் SENSATIONAL VIDEO என்ற பெயரில் வெளியிட்டது தந்தி தொலைக்காட்சியின் ஊடக அறம் தானா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது

  ReplyDelete
 9. சீமான் அவர்களிடம் இதற்கும் மேலே எதிர்பார்க்கலாம், மனிதனை மனிதனாக பார்காதவ்ரிடம் என்ன நாகரீகம் இருக்க இயலும்?? ஆனால் ஐயா அருணனின் எதிர்வினை வருத்தத்திற்குரியது. கோபம் என்பது மணித் இயல்பு தான் அது எப்பேர்பட்ட அறிவு ஜீவிக்கும் வரும் என்பதை நேற்றைய விவாதம் எனக்கு கற்று தந்தது, ஆனால் இதிலெல்லாம் குளிர் காயும் தந்தி டிவி மற்றும் பாண்டேவை கண்டிக்க அனைவரும் முன்வர வேண்டும். தூண்டி விட்டு வேடிக்கை பார்பதுதான் பாண்டே வை போன்ற பார்பனர்களின் வேலை. ஆனால் அதில் பலியானதும் இரண்டு தமிழர்களே. சீமானின் பேச்சு கண்டனத்திற்குரியது. அருணன் அவர்களின் எதிர்வினை வருத்தத்திற்குரியது. நீங்களெல்லாம் அடுத்த தலைமுறைக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டும். அண்ணாவிற்கு பின் அரசியல் நாகரீகத்தை யாரிடமும் காண இயலாதது உண்மை தான்.

  ReplyDelete
 10. விவாதங்களில் யாரையும், எந்தக் கருத்தையும் முழுமையாகப் பேசவிடாமல், குறுக்கீடு செய்யும் பாண்டே, அன்று பேரா.அருணன் அவர்களையும், சீமான் அவர்களையும் பேசவிட்டு வேடிக்கை பார்த்ததில், இருக்கிறது பாண்டேயின் ஊடக ’தர்மம்’.

  ReplyDelete
 11. தமிழர்கள் இரண்டுபட்டால் தமிழரல்லாதவர்க்கு கொண்டாட்டம்...

  ReplyDelete