தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Tuesday 1 March 2016

அரசியல் மேடை - 4

துப்பாக்கி  சுடும்


அரசியல் அரங்கில் மூன்று வகையான மனிதர்களைப் பார்க்க முடியும். எப்போதும் தரம் குறையாமல் பேசுகின்றவர்கள் முதல் வகை. எப்போதேனும் தடுமாறி விடுகின்றவர்கள் இரண்டாவது வகை. எப்போதுமே தரமற்றும், கண்ணியமற்றும் பேசுகின்றவர்கள் மூன்றாவது வகை. பா,ஜ.க.வின் ஹெச்.ராஜா எப்போதும் மூன்றாவது வகையினராகவே  உள்ளார்.


தரக்குறைவான சொற்கள் அல்லது வன்முறையைத் தூண்டும் பேச்சு என்பதே அவரது வழிமுறையாக உள்ளது. பா.ஜ.க.வின் கொள்கைகள்  நமக்கு முற்றிலும் எதிரானவை. என்றாலும் அக்கட்சித் தலைவர்களின் கருத்துகளைக் காது கொடுத்துக் கேட்க நாம் தவறியதில்லை. அவர்களுள் தமிழகத் தலைவர்கள்  பலர் நாகரிகமாகப் பேசக் கூடியவர்கள் என்பதையும் நாம் குறிப்பிட வேண்டும். ஆனால் ஹெச். ராஜா எப்போதும் விதிவிலக்கு.

அண்மையில், பொதுவுடமைக் கட்சித் தலைவர் டி. ராஜாவின் மகளைச் சுட்டுக் கொள்ள வேண்டும் என்பதைப் போலப் பேசியுள்ளார். பிறகு, நான் அப்படிப் பேசவில்லை, என் மகளாக இருந்தால் சுட்டுக் கொன்றிருப்பேன் என்றுதான் சொன்னேன் என்று விளக்கம்  கூறியிருக்கிறார். இரண்டுக்கும் பெரிய வேறுபாடு இல்லை. இரண்டுமே வன்முறைதான். 

ஹெச். ராஜாவிற்கு ஒன்றை நினைவுபடுத்த வேண்டியுள்ளது. "யார் சுட்டாலும் துப்பாக்கி சுடும்." 

7 comments:

  1. மறுக்கமுடியாத உண்மை..

    ReplyDelete
  2. பூனூலின் சாதி வெறி!!

    ReplyDelete
  3. துப்பாக்கியால் சுடுவதுதான் அவர்களுக்கு தெரிந்த அரசியல். சுடுவதெல்லாம் சரி ஆனால் இஸ்லாமியர்களின் பெயர் பச்சை குத்தாமலிருந்தல் சரி.. ஒரு தலைவர் எப்படி இருக்க கூடாது என்பதற்கு எத்தனையோ வரலாற்று உதாரணங்களை காண இயலும். ஆனால் ஹெச் ராஜா ஒரு வாழும் உதாரணம்.

    (யப்பா நான் புள்ள குட்டிக்காரன்.. போட்டு கீட்டு தள்ளீராதீங்கப்பா..)

    ReplyDelete
  4. துஷ்டரை கண்டால் தூர விலகவேண்டும் மறுத்தால் துப்பாக்கி ஏந்தி விடுவர்? மிக தெளிவாக தான் யார் தனது அமைப்பு எப்படிபட்டது என்று கூறியுள்ளார்.போகப்போக தெரியும் இந்த பூவின் வாசம் (தாமரையின் நாற்றம்)புரியும்

    ReplyDelete
  5. அரசியலில் உள்ள, தீண்டத் தகாமல், ஒதுக்கி வைக்க வேண்டிய ஜீவன்கள் பட்டியலில் இந்த மன்னருக்கு முதலிடம் தரப்பட வேண்டும்.

    ReplyDelete
  6. "யார் சுட்டாலும் துப்பாக்கி சுடும்."
    இது வன்முறையைத் தூண்டும் பேச்சு இல்லையா?
    கடைசியில் நீங்களும் எப்போதுமே தரமற்றும், கண்ணியமற்றும் பேசுகின்ற மூன்றாம் வகை தானே

    ReplyDelete