தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Monday 7 March 2016

அனைவரும் வாரீர்!

திராவிட இயக்கத் தமிழர் பேரவை மகளிர் அணி நடத்தும்
மகளிர் நாள் கருத்தரங்கம்


2 comments:

  1. சுபவீ அவர்களே,உலக உழைக்கும் பெண்கள் நாளில் 'பீ' அள்ளும் பெண்களை புறக்கணிக்காதீர்கள்.வெற்று சீன் மகளிர் தினத்தில் கூட,'பீ'அள்ளும் பெண்களை புறக்கணிக்கும் மேட்டுக்குடிகளுக்கும் அதேபோன்ற மேட்டுக்குடி பெண்ணியவாதிகளின் மனநிலை உங்களுக்கும்,திராவிட இயக்கத் தமிழர் பேரவை மகளிர் அணிக்கும் இல்லை என்றால் அந்த அவலத்தை எதிர்த்துப்பேசி ஆதரவு கரம் நீட்டுங்கள்!
    மார்ச் 8,உலக உழைக்கும் பெண்கள் நாளில்,சுபவீ அவர்களே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை மகளிர்களே மலமள்ளும் அவலத்திலிருந்து பெண்களை மீட்டெடுக்க சூளுரையுங்கள்!.மாற்றத்தைக் காண மக்களை உசுப்புங்கள்!.மகளிரிருக்கான இந்த மாநாட்டை மகளிர் இழிவொழிப்பு மகளிர் மாநாடு ஆக்குங்கள்!.பெண்களின் தலையில் "மனிதன் கழித்த மலத்தை" சுமக்க வைப்பது தமிழ்நாட்டிற்க்கு அவமானம் இல்லையா? தமிழச்சிகளுக்கு அவமானம் இல்லையா?.மலமள்ளி இழிவைச் சுமக்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கையில் 80 சதவீகத்திற்கும் மேலானவர்கள் பெண்கள்தான் என்பது கேவலத்திலும் கேவலம் இல்லையா?.சகப் பெண்கள் இழிவைச் சுமக்க சகித்துக் கொண்டு வேடிக்கை பார்ப்பது,மகளிர் மாநாடு நடத்தும் உங்களுக்கும்,பெண்ணியவாதிகளுக்கு பெருமையாக இருக்கின்றதா?.'பீப்' பாடலுக்கு எதிராக பீரிட்டுக் கிளம்பிய சுபவீ&பெண்ணியவாதிகளின் குரல்கள் "பீயை" சுமக்கும் பெண்களைப் பற்றி உலக உழைக்கும் பெண்கள் நாளில் பேசாமல் மவுனம் காப்பது பேரிழுக்கு இல்லையா?.இழிவென்று தெரிந்தும் இதை ஏன் செய்கிறார்கள் என்று பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிக் கூண்டில் நிறுத்திவிட்டு நழுவிக்கொள்வதுதான் முற்போக்காளர்களின் முற்போக்கான சிந்தனையா?. இதுவெல்லாம் ஒரு பிரச்சினையா?
    என அலட்சியத்தோடு அணுகும் அதிகாரிகளும், காவல்துறையும் கள்ளச்சாரயம் காய்ச்சுவதையும், கஞ்சா விற்பதையும், குழந்தைத்தொழில் முறையையும் "விரும்பி செய்தால்" விட்டுவைக்குமா?.தமிழ் ஈழமும், காவிரி முல்லைப் பெரியாறும், அணுஉலையும்,மீத்தேனும், பொதுப் பிரச்சினைகள் என்றால் இதுமட்டும் தனிப்பிரச்சினையா?.இவர்கள் செய்யவில்லை என்றால்,இதை நாம் வீட்டு பெண்கள்தானே செய்யவேண்டும் என்ற சுயநல சாதிய உள் நோக்கமா?.

    ReplyDelete
  2. Sir, What is the need for separate magalir ani in political parties? Is there separate wing in dravidar kazhagam also?

    ReplyDelete