தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Thursday 26 May 2016

புதுப்புது அர்த்தங்கள் - 25-05-2016

25-05-2016 அன்று புதிய தலைமுறை தொலைக்காட்சியின் புதுப் புது அர்த்தங்கள் நிகழ்ச்சியில் சுபவீ


7 comments:

  1. நன்று ஐயா,, சகோதரர் ஆலூர் ஷாணவஸ் நமது தி மு கழகம் பற்றி மிக தவறான விமர்சனங்கள் மற்றும் அவதூறுகள் தேர்தல் வுக்கு முன்னால் தொலைக்காட்சிகளில் பதிவு செய்தார்,தேர்தல் முடிவு பிறகும் அவர் மாறவில்லை,

    ReplyDelete
  2. மதிப்பிற்குரிய சுபவீ ஐயா,, உங்கள் பதிவுகளை தவறாமல் பார்க்கிறேன்,, தாங்கள் ஆற்றிய "தீட்டு மற்றும் புனிதம்" "புலால் × மரக்கறி" ஆகிய உரைகள் கேட்டேன் தேன் வரலாறை தேன் சுவை சொட்ட சொட்ட எடுத்துறைத்திருக்கிறீர்கள்,, பெரியார் இன் மேல் பற்று கொண்டதால்,, உங்களை போல பெரியவர்களின் பேச்சு மற்றும் எழுத்து,, சமுதாய பணிகளை பின்பற்றுகிறேன்,, நீங்கள் தலைவர் கலைஞர் ஐ சந்தித்த மகிழ்ச்சியில் "அவர் கன்னிமயின் கதகதப்பில்" என்று வலைப்பூவில் பதிவு செய்திர்கள், அதை போல் நானும் உங்களை சந்திக்க மற்றும் நிந்திக காத்திருக்கிறேன்,, உங்களுடன் அலை பேசியில் உரையடினால் இந்த மாணவனின் பெரியார் பற்றிய சிந்தனை வளர்ச்சியடைய ஆசிரியர் ஆய் நீங்கள் உதவலாம்

    ReplyDelete
  3. செந்தில்நாதன்27 May 2016 at 00:05

    தமிழருவி மணியன் போன்றவர்கள் தன்மீது வக்கிரத்தோடு வீசப்படும் வசைகளையும், இழிவுபடுத்துலையும் பொறுத்துக் கொண்டு இனியும் அரசியலில் தொடர்ந்து நீடிக்க வேண்டிய அவசியம் இல்லை.கொள்கைகளை மேல்பூச்சாக கேடயமாக பயன்படுத்திக் கொண்டு அரசியலை ஊழல் செய்வதற்கான களமாக மாற்றி கொள்ளையடித்து கருப்புபணத்தை குவித்துவைத்துக்கொண்டு அதில் சிறிய பங்கை வாக்காளர்களுக்கு எலும்புத்துண்டுகளாக வீசியெறிந்து வாக்கு பொறுக்கும் திராவிட(அதிமுக& திமுக)அரசியல்வாதிகளுக்கும்,அவர்களின் துதிபாடும் சகுனிகளுக்கு&சுபவீக்களுக்குத்தான் இங்கு இடம். வைகோ போன்றவர்கள் மீது தனது வக்கிரத்தை பொழிந்த இந்த முகநூல் போராளிகள்(?பெரும்பாலும் திமுகவினர்)அதில் சிறிய அளவு கூட வாக்குகளை விலைபேசி அறுவடை செய்த அதிமுக&திமுக ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் அதிமுக&திமுக கருப்பு பண முதலைகள் மீது காட்டியதில்லை.இனி தமிழகத்தில் தனிநபர் நேர்மை சார்ந்த அரசியலுக்கு,அறம் சார்ந்த அரசியலுக்கு இடமே இல்லை.தமிழருவிமணியன் அவர்கள் ஒன்றும் ஊழல் செய்ததாகவோ அல்லது அதற்கு துணை போனதாகவோ வரலாறு இல்லை...
    அருவி போல உரையாற்றகூடிய தமிழ் பேசும் இனத்தை சார்ந்த நபர்.அவர் அதிகம் பிரகாசிக்கமால் போனது தமிழ் மண்ணுக்கும் மக்களுக்கும் இழப்பே தவிர வேறு ஒன்றும் இல்லை..மாநில திட்டக்குழு அதிகாரத்தில் இருந்தாலும் அதனை துச்சமென ஈழத்தமிழனுக்காக தூக்கி எறிந்த நல்ல உள்ளத்துக்கு சொந்தக்காரர் என்கின்ற வரலாற்றை தமிழர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.வாழ்க அவர் தொண்டு.. தொடரட்டும் அவர் சமூகப்பணி.

    ReplyDelete
  4. "திமுக தலித் சமுதாயத்தை புறக்கணிக்காது ஆனால் தலித் மக்களுக்காக எந்த சமுதாயத்தையும் பகைத்தும் கொள்ளாது" என்ற ஷாநவாஸ் அவர்களின் வாதம் நூற்றுக்கு நூறு உண்மையானது. ஆதித்தமிழர் பேரவை என்ற சக்கிலியர் அமைப்புக்கு திமுகவிடம் இந்த தேர்தலில் கிடைத்த மிகக் கசப்பான அனுபவமே அதற்கு சாட்சி. இரண்டு ஆண்டுகளாகவும், தேர்தல் இறுதி வரையிலும் சீட் கொடுக்கிறேன் என்று கூறி அந்த அமைப்பை திமுக வை விட்டு செல்லாமல் பிடித்து வைத்து, கடைசி நேரத்தில் சீட் கொடுக்காமல் கழுத்தறுத்த கட்சி தான் திமுக. எனவே அவர்களால் கடைசி நேரத்தில் வேறு எந்த முடிவும் எடுக்க முடியாமல் திமுக ஆதரவு நிலையே தொடர வேண்டியதாயிற்று. திமுக இவர்களுக்கு சீட் கொடுக்காததற்கு காரணம் மேற்கு மாவட்டங்களில் கவுண்டர்களை திமுக பகைத்துக் கொள்ள விரும்பாததுதான். எனவே ஷாநவாஸ் கூற்று மிகச் சரியானது. "ஆதித்தமிழர் பேரவைக்கு ஏன் நீங்கள் சீட் கொடுக்கவில்லை?" என்று ஷாநவாஸ் கேள்வி கேட்டிருந்தால் சுபவீ அவர்கள் என்ன பதில் கூறியிருப்பார்?

    ReplyDelete
  5. தமிழருவி மணியன் உங்களைப் போன்றவர்களை (திராவிடக் கட்சி ஆதரவாளர்களை)சாராயம் குடித்து விட்டு அரை நிர்வாண குத்தாட்டத்தை ரசிக்கக் கூடிய கூட்டத்தைப் போன்றவர்கள் என்றும் அறமற்ற ஈனர்கள் என்றும் கூறியிருக்கிறார்.மேலும் NEWS7 TVயில் உங்களைப் போன்றவர்களை(திராவிடக் கட்சி ஆதரவாளர்களை)நீசர்களென்றும்,அசுரக்கூட்டமென்றும் அப்படிப் பட்டவர்களுக்குதான் தமிழகத்தில் அரசியலில் வெற்றி கிட்டும் என மனம் நொந்து கூறியிருக்கிறார். அதனால்தான் தான் தமிழக அரசியலிருந்து வெளியேறுவதாகவும் மனம் வெம்பி கூறியிருக்கிறார் தமிழருவி மணியன்.

    ReplyDelete
  6. நம்ம டான் (தமிழருவிமணியன்) அரசியல விட்டுப் போறேன்னு வெளியிட்ட அறிக்கையை எத்தனை பேரு முழுசா படிசிருகீங்கன்னு தெரியல. பார்ப்பனீயம், சாதிவெறி, வர்க்கவேறுபாடு, முதலாளித்துவ திமிர் என்று அத்துணை விடயங்களும் அப்பட்டமாக வெளிப்படும் படுமோசமான அறிக்கை. அந்த அறிக்கை விமர்சனம் செய்யக்கூட லாயக்கற்றது என்றாலும் மனது கேட்கவில்லை. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக, சமூக நீதிக்காக பாடுபடும் எத்தனையோ தலைவர்கள் இருக்கும்பொழுது அவர்களையெல்லாம் அடையாளப் படுத்தாமல், ஓராயிரம் முறை நம்ம டானை அக்னிப் பரிட்சையில் அமரவைக்கும் Puthiya Thalaimurai TV புதியதலைமுறை தொலைகாட்சியினை மிக மிக வன்மையாக கண்டிக்கின்றேன். இதில் மிகப்பெரிய காமெடி என்னவென்றால் "சுப்ரமணியசாமியை நான் ஒரு மனிதராகக் கூட கருதவில்லை" என்று டான் எப்போதும் கூறுவார். இது டானுக்கும் பொருந்தும் என்று தெரியவில்லை பாவம். டானோட அறிக்கையின் லிங்க்- http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=166472

    ReplyDelete
  7. கி.திருமுருகன்29 May 2016 at 23:31

    2 வருடங்களில் தமிழக அரசியலில் தான் நினைத்த,சொன்ன,செய்த பல காரியங்களை வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டியவர் தமிழருவி மணியன்[உ.ம் 2014ல் தந்திரமாக செயல்பட்டு அவர் நினைத்தபடி திமுகவை சேர்ந்த ஒருவர் கூட மக்களவைக்குள் நுழையவிடாமல் தடுத்தார்.2015ல் திமுக பள்ளத்தில் விழுந்த யானை ஆட்சிக்கு மீண்டும் வரவே முடியாது என்றார் அதுதான் இப்போது நடந்துள்ளது.2016ல் தீர்கதரிசியாகி அதிமுக 130 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியமைக்குமென்றார் அவர் சொன்னது போல 132 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது] அப்படிப்பட்டவரை இப்போது இரண்டு திராவிடக்கட்சிகளின்,தமிழக மக்களின் அசிங்கமான செயல்பாடுகள் அவரையே தமிழக அரசியலிருந்தே விரட்டியடித்திருக்கிறது அதனால் அவருக்கு எந்த நஷ்டமுமில்லை தமிழகத்துக்கு தான் எல்லா நஷ்டங்களும்.

    ReplyDelete