தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Wednesday, 1 June 2016

தமிழருவி ஏன் விலகினார்?


தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வந்தபின்னர், கடுமையான தோல்வியைச் சந்தித்த காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன், தான் பொது வாழ்விலிருந்து விலகிக் கொள்வதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். நட்பு வலைத் தளங்களில் அதனை விமர்சித்தும், கேலி செய்தும் பலர் தங்கள் பதிவுகளைச் செய்துள்ளனர்.

ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், நண்பர் தமிழருவி மணியனை நான் ஒருபோதும் தரக்குறைவாகக் கருதியதும், பேசியதும் இல்லை. அவருடைய பரந்துபட்ட படிப்பையும், மிகச் சிறந்த சொற்பொழிவு ஆற்றலையும், அறிவார்ந்த கருத்துகளையும் என்றும் மதிப்பவன் நான். தனிப்பட்ட முறையில் இனிமையாகப் பழகும் பண்புடையவர் அவர். எல்லாவற்றையும் தாண்டி, பொதுவாழ்வில் அவர் நேர்மையானவர் என்பதால் அவரை என்றும்  நான் குறைத்து மதிப்பிட்டதே இல்லை.


ஆனால் அவருடைய அரசியல் நிலைப்பாடு என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியாத ஒன்று. திராவிட இயக்க எதிர்ப்பு அவர் ரத்தத்தில் ஊறிக் கிடக்கிறது. அதே போல, மக்களைக் குறையுடையவர்களாகப் பார்க்கும் பார்வை அவரிடம் எப்போதும் உண்டு. தன்னுடைய விலகல் அறிக்கையிலும் கூட, "காட்டுக் குயில் பாட்டைக் காது கொடுத்துக் கேளாதவர்கள், குத்துப் பாட்டில் குதூகலித்துக் கிடப்பவர்கள், மது மயக்கத்தில் மயங்கிப் போனவர்கள்" என்றெல்லாம் வாக்காளர்களை  வசை பாடியிருப்பது கண்டனத்திற்குரியது.

இதே மக்கள்தானே, 2014ஆம் ஆண்டும் வாக்களித்தார்கள்? அப்போதும் அ.தி.மு.க.தானே பெரு வெற்றி பெற்றது? தமிழருவி முன்னிறுத்திய கூட்டணி தோல்வியைத்தானே தழுவியது? அப்போது ஏன் அவர் சினம் கொள்ளவில்லை?  அப்போதே ஏன் பொது வாழ்வை விட்டு அவர் விலகவில்லை?

ஏனெனில், அந்தத் தேர்தலில் தி.மு.க. பெரிய தோல்வியைச் சந்தித்தது. ஓர் இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அதனை எண்ணி எண்ணி மகிழ்ந்தார் மணியன். இந்தத் தேர்தலிலும், அ.தி.மு.க ஓர் அரக்கு மாளிகை என்றும், 130 இடங்களில் அக்கட்சி வெற்றிபெறும் என்றும் எழுதியிருந்தார். ஆகவே, இந்தத் தேர்தல் முடிவுகள் அவருக்கு எதிர்பாராத அதிர்ச்சியைக் கொடுத்திருக்க வாய்ப்பில்லை.

ஆனால் தி.மு.க. இத்தனை இடங்களில் வெற்றிபெறும் என்று அவர் கனவில் கூடக் கருதவில்லை. அங்குதான் அவர் கணிப்பு முற்றிலும் பொய்த்துப்போய் விட்டது. இப்போது தி.மு.க. வெற்றிக்கு அருகில் வந்துவிட்டது. வலிமையான எதிர்க் கட்சியாய் சட்டமன்றத்தில் உள்ளது. அதனை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

அவர் பொது வாழ்விலிருந்து விலகுவதற்கு அவருடைய தோல்வி கூடக் காரணமில்லை, 98 இடங்களில் தி.மு.க. அணி வென்றிருப்பதே காரணம். அந்த ஆற்றாமையும், விரக்தியும்தான் அவரைப் பொது வாழ்விலிருந்து விரட்டியுள்ளன.

என் கருத்தை, ஓய்வாக அமர்ந்து சிந்தித்துப் பார்த்தால் இதுதான் உண்மை என்பதை அவரே உணர்வார்!

போகட்டும், இனியேனும் தி.மு.க. வெறுப்பு அரசியலிலிருந்து விலகி, அவர் அறிவும், படிப்பும் சமூக, இலக்கிய மேம்பாட்டிற்கு உதவட்டும்!!13 comments:

 1. from this angle, nobody can think like except you.Great Sir

  ReplyDelete
 2. Since this article for Mr. Maniyan, we cannot neglect your analysis and points...Sir.

  Regards,
  Sudhakar K (IT)

  ReplyDelete
  Replies
  1. His points maybe right BUT thats not the truth. Its only his opinion Mr Sudhakar.

   Delete
 3. இந்த தேர்தல் குறித்து எனது கருத்து என்று சொல்வதை விட ஆதங்கத்தை பதிவு செய்கிறேன் என்றே சொல்ல வேண்டும். இந்த மக்கள் தீர்ப்பை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. என்ன தான் நாம் பெரிய எதிர்க்கட்சியாக வந்துவிட்டோம் என்று சொல்லிக்கொண்டாலும் நாம் தோல்வியை ஒத்துக்கொள்ள வேண்டும் ....இவ்வளவு கேவலமான அய்ந்தாண்டு கால ஆட்சிக்கு பிறகும் நம்மால் ஏன் இந்த ஆட்சிக்கு எதிராக பெரிய மக்கள் எதிர்ப்பு அலையை உருவாக்க முடியவில்லை .? இதற்க்கு மூன்று காரணங்கள் உண்டென்று நினைக்கிறேன்

  1.எந்த தேர்தலிலும் இல்லாத விசித்திரமாக இந்த தேர்தலில் ஆளுங்கட்சியான ஆ தி மு க வை விட தி மு க வே அணைத்து எதிர்க்கட்சிகளும் விமர்சித்தன ...இதற்கான காரணத்தை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது... அவர்கள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெற வேண்டும் என்ற நோக்கதில் அதை செய்தன....இதை வரும் காலத்தில் தி மு க மாற்ற முடியும்.

  ௨. ஊடகம். இதைதான் புரிந்து கொள்ளவே முடியவில்லை. ஏன் எந்த ஊடகமும இந்த ஆட்சியை விமர்சிக்க மறுத்தன ? பார்பனிய ஊடகங்கள் மட்டுமல்லாமல் மற்றவையும் அதைதானே செய்தார்கள் ? அவர்கள் தி மு க ஆதரவு நிலை எடுக்க வில்லை என்றாலும் நியாயமாக கூட விமர்சிக்கவில்லையே ? செயற்கை பேரிடரான வெள்ளத்தை கூட மூடி மறைதனவே ? ஊடகங்கள் ஒடுக்கப்படுகின்றதா ? விலைக்கு வாங்கப்படுகிறதா ? இதைக்க் கண்டறிந்த மாற்றி அமைக்காமல் ஆட்சிக்கு எதிராக இனியும் மக்களை ஒருன்கினைப்பது கடினம் ....

  3. மேற்கண்ட அணைத்து காரணங்களையும் மீறி மக்கள் தி மு க வுக்கு வாக்களித்ததர்க்கு காரணம் ஸ்டாலின் அவர்களின் உழைப்பு. அனால் வலுவான கூட்டணி அமைப்பதில் கலைஞரின் வழிகாட்டுதலை மேலும் பின்பற்றியிருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது ... எந்த எதிர்க்கட்சியையும் தி மு க வோடு இணைய விடாமல் தடுத்தத்தில் அம்மையார் வெற்றி பெற்றுரிக்கிறார்....வெறும் 500 வாக்குகளில் தி மு க தோவி அடைந்த தொகுதிகளில் கூட்டணி பலம் இருந்திருந்தால் எளிதில் வெற்றி பெற்றிருக்கலாம். ஆத்சிக்கு எதிராக கணிசமானோர் வாக்களித்தும் ஆட்சி அகற்றப்படததர்க்கு காரணம் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணையாமல் போனதே....

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் குறிப்பிட்ட 2 ,3 காரணங்கள் எனக்கும் உகந்த்தே.ஐந்தி விழுக்காடு வாக்கு வங்கிகூட இல்லாதவர்கள் கட்சியை வளர்தெடுக்க முயல வேண்டும் அதைவிட்டு ஆட்சி அதிகாரத்துக்கு ஆசைப்படுவது . . .- வில்லவன்கோதை

   Delete
 4. வாக்கு சதவிகித அடிப்படையில் பார்த்தாலும் 25 % -30 % என்ன நடந்தாலும் அ தி மு க வுக்கு ஒட்டு போடுபவர்கள் என்று வைத்துக்கொண்டாலும் 40 % பேர் அ தி மு க வுக்கு வாக்களிதிருக்கிரர்கள் ... அந்த 10% பேரை இந்த ஆட்சியின் அவலங்கள் பாதிக்கவில்லை என்றால் அதற்க்கு கண்டிப்பாக ஊடகங்களின் போக்கே காரணம். தி மு க வினர் என்ன தான் ஆதாரத்தோடு குற்றம் சாட்டினாலும் பொதுமக்கள், அவர்கள் கட்சிக்காரர்கள் அப்படிதான் பெர்சுவார்கள் என்றே எண்ணுவார்கள்.

  மினசரப்ப் பற்றாக்குறையால் தொழில் முடங்கி ஊரை விட்டு செல்லும் நிலைக்கு தொழில் மண்டலன்கலான திருப்பூரும், கோவையும் கூட அ தி மு க வுக்கு ஆதரவாக வாக்களிக்கின்றன என்றால், ஊடகங்கள் அவர்களிடம் இந்த ஆட்சியின் குறைபாடுகளை எடுத்து செல்லவே இல்லை என்றே புரிந்துகொள்ள வேண்டி உள்ளது

  ReplyDelete
 5. மிக சரியான பதிவு. தமிழருவி மணியன் ஏற்று கொள்வாரா என்று தெரியவில்லை. அவரை கூர் தீட்டி திமுக விற்கு எதிராக பயன்படுத்தியவர்களை அவர் புரிந்து கொள்ள வில்லை. அவருடைய பேச்சின் பெரும் பகுதியை தான் யோக்கியர் என்பதை நிறுவுவதிலேயே கவனம் செலுத்துவார். நல்ல பேச்சாளராயிருந்தாலும் ஊடக மயக்கத்தால் நேர்மையற்ற முறையில் திமுக வை எதிர்த்தவர்.

  ReplyDelete
 6. Whatever comments you gave on your behalf towards தமிழருவி மணியன் is your own opinion. But the reality is திமுக could have won tremendously in this election, THAT DOESNT MEAN திமுக is/was a NOBLE PARTY WITH NO SPOTS OR BLEMISH. திமுக has a made a history on CORRUPTIONS DURING ITS STAY AS THE GOVERNMENT IN THE PAST. திமுக which carries தந்தை பெரியார்'s slogans NEVER FOLLOWED/ABIDE TO HIS CALLS. Being a hippocrite party using MONEY TO LURE IN THE VOTES IS NOT OR NEVER WILL BE APPRECIATED. As time goes by, i and most of us are just waiting to see திமுக split when the mains is switched off.Then we can see Two திமுக's, one headed by Stalin n the other lead by Alagri. The Tamils will also see you(சுபவீரபாண்டியன்) nuetrality.

  ReplyDelete
  Replies
  1. அய்யா வீரசிங்கம் செல்லையா அவர்களே ஒரு தமிழ் இணையத்தில் தமிழில் எழுதப்பட்ட ஒரு கட்டுரைக்கு தமிழில் எழுத தெரியாத உங்கள் இயலாமைக்கு எனது அனுதாபத்தை தெரிவித்து கொள்கிறேன். தயவு செய்து முதலில் தமிழை கற்று கொள்ளுங்கள். அடுத்தது தமிழ்நாட்டு அரசியல் பற்றிய தங்கள் ஆர்வம் நல்லதுதான் . ஆனால் அதைப்பற்றி கொஞ்சமாவது வரலாறு படித்திருக்கவேண்டும். தங்களின் கருத்துக்களில் இருந்து எனக்கு தெரியவருவது, தாங்கள் மிகவும் பாமரனாக இருக்கிறீர்கள். மொழியிலும் வரலாற்றிலும் கொஞ்சமாவது உங்களை வளர்த்துக்கொள்ளுங்கள். பொது மேடையில் தாங்கள் ஒரு ஜப்பானிய Bonsai போல் தெரிவதை பார்க்கும் பொழுது கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது.

   Delete
 7. அய்யா கற்ற கல்வியை சதா நஞ்சு நஞ்சாகவே கக்குவதற்கே பயன்படுத்தியவர் இவர். புலிகளை போற்றி பாடுகிறேன் பேர்வழி என்ற புறப்பட்ட இவர் வரலாறுகளை திரித்த திருப்புகள் இருக்கிறதே இயற்கை கூட பொறுக்காது. கலைஞரை எவ்வளவு கேவலமாக தாக்க முடியுமோ அவ்வளவு கேவலப்படுத்தியவர். இவரை போன்ற தமிழக அரசியல் தரகர்கள்தான் புலிகளுக்கு கொம்பு சீவி விட்டு கப்பலை வெறும் கானல் நீரில் மிதக்க விட்டவர்கள். இந்த விடயத்தில் வைகோ நெடுமா போன்றவர்களுடன் தமிழருவியும் போட்டி போட்டுகொண்டு பிரசாரம் செய்தவர்கள். புலி ஆதரவாளர்களை குஷிப்படுத்துவதர்க்காக கலைஞரையும் திராவிட முன்னேற்ற கழகத்தையும் ஒரு மனிதனால் எவ்வளவு கீழ்த்தரமாக வசை பாட முடியுமோ அவ்வளவு தூரம் வசை பாடினார்கள். இவரது பேச்சை எல்லாம் எதோ பொய்யா மொழிகளாக எண்ணி உருப்போட்டு கொண்டு இருந்த மக்களை நான் அதிகம் அறிந்துள்ளேன். இவர் கூறுவதெல்லாம் வெறும் கபடம் நிறைந்த சொற்கள் என்பதை இப்போது அவர்கள் எல்லாம் கொஞ்சமாக உணர்கிறார்கள்.

  ReplyDelete
 8. பாவும் சுபவீ அவர்கள் திமுகவின் தோல்வின் விரக்தியில் இருந்து மீளவில்லைபோலும்......தமிழருவி மணியனுக்கு புத்தி சொல்லும் அளவுக்கு சுபவீ இன்னும் வளரவில்லை தன்னை வார்த்துக்கொள்ளவுமில்லை......ஆம் அவர் காந்தியின் பாதையில் காமராசரின் வழியில் தன் அரசியல் பயணத்தை தொடங்கியவர்....நிர்வாண உலகத்தில் கோமணம் கட்டியவன் முட்டாள் என்பதுபோல....ஊழலையும், குடியையும் சேவையென தமிழகம் முழுக்க பரவச்செய்த பெருமை திராவிடத்தையே சாரும்.... இதை பொறுக்கமுடியாமல் மக்கள் செய்ததை சகிக்கமுடியால் இந்த அரசியல் விலகல்....

  ReplyDelete
 9. திரு சுப வீ அவர்களே
  தங்கள் மீது மிகுந்த மதிப்பு கொண்டவன். தங்களது பொதுவான காணொளிகளை பின் தொடர்பவன். நான் மறத்தமிழன். கலப்புத் தமிழன் அல்ல. சமீபத்தில் பலர் கண்ணெதிரே நடந்த படுகொலையை தரம் தாழ்ந்து போன ஊடகங்கள் தங்களது இழிவான கற்பனைகளை புனைந்து பர பரப்புக்காக தினம் ஒரு செய்தியாக வெளியிட்டு வருகின்றன
  அந்த இனத்தை சேர்ந்த ஒரு முன்னாள் நடிகர் ஒருவர் முக நூலில் பகிர்ந்த பதிவை பற்றி தங்களது காணொளியையும் பார்த்தேன். அதில் முதல் செய்தியை விட்டு விடலாம். அது மற்ற மதத்தினரை சார்ந்தது. இரண்டாவது " திராவிடப் பொறுக்கிகள்" என்பது. இது அவர் பகிர்ந்த பதிவு தான் பதிந்த செய்தியல்ல. இதை 100 க்கு 150 சதவீதம் மிகச் சரியான செய்திதான் என்றே நான் கருதுகிறேன்

  பீத்தின்னி பொறுக்கிகளாக காலில் விழுவதும் கார் டயர் முன் விழுவதும் ஹெலிகாப்டர் நிழலை தொட்டுக்கும்பிடுவதும் பார்ப்பன பொறுக்கிகளா திராவிட பொறுக்கிகளா
  இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் சிதம்பரம் கல்லூரி மாணவர்களை தூண்டிவிட்டு சுகுமார் கொலை வழக்கில் பெற்ற தாய் தந்தையரையே இது என் மகனில்லை என்று சொல்ல வைத்தது பார்பனப் பொறுக்கியா அல்லது த்ராவிடப் பொறிக்கியா
  பொறுக்கிகளால் கொல்லப் பட்ட த கிருட்டிணன் அவர்களோடு இரண்டு முறை கள ஆய்வில் அதிகாரி என்ற முறையில் இரண்டு முறை கலந்து கொண்டேன். அதிகாரிகளை மிகவும் மரியாதையாகவும் மதிப்பாகவும் நடந்து கொண்டவர். அவரை பட்டப் பகலில் அரிவாளால் வெட்டி சாய்த்தது பார்பனப்
  பொறுக்கியா த்ராவிடப் பொறுக்கியா

  இன்றைக்கு தேர்தல் நேர்மையாக நடத்த வில்லை என்று புலம்புவர்கள் திருமங்கலம் பார்முலா என்று மார் தட்டி கொண்டவர்கள் பார்பனப் பொறுக்கிகளா அல்லது த்ராவிடப் பொறுக்கிகளா

  சமீப காலமாக அரங்கேறி வரும் கொலை கொள்ளை திருட்டு வழிப்பறி கற்பழிப்பு ஆசிட் வீச்சு போன்ற நாலாந்தர பொறுக்கித் தனத்தை அரங்கேற்றிக் கொண்டிருப்பவர்கள் பார்பனப் பொறுக்கிகளா த்ராவிடப் பொறுக்கிகளா

  பாப்பிரெட்டிபட்டியில் ஒதுக்கப்பட்ட ஊராட்சியில் ஊராட்சி தேர்தலை நடக்க விடாமல் தொடர்ந்து தடுத்தது பார்பனப் பொறுக்கிகளா த்ராவிடப் பொறுக்கிகளா

  தூத்துக்குடியில் பொறியியல் கல்லூரி முதல்வரை வெட்டி சாய்த்தவர்கள் பிராமிணப் பொறுக்கிகளா த்ராவிடப் பொறுக்கிகளா
  தாழ்ந்த வகுப்பு பையன் மிகவும் பிற்படுத்தப் பட்ட வகுப்பை சேர்ந்த பெண்ணை மனம் செய்து கொண்டால் ஊரே திரண்டு துரத்தி துரத்தி வெட்டி சாய்ப்பது பார்பனப் பொறுக்கிகளா த்ராவிடப் பொறுக்கிகளா

  தாழ்ந்த வகுப்பினர் , மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று பெயர் வைத்து தங்களை தரம் தாழ்த்திக் கொண்டவர்கள் அவாளா அல்லது இவாளா

  ஆம் 50, 60, களில் அவர்கள் சற்று வரம்பு மீறி நடந்து கொண்டது உண்மைதான் . மன்னார்குடி அருகில் இருக்கும் கிராமத்தில் வசித்து வந்த என் தாய் வழி தாத்தா சொல்லியிருக்கிறார். வீட்டுக்கு அக்ரகாரம் வழியாகத்தான் செல்ல வேண்டும் அக்ரகாரம் வந்தவுடன் தோளில் போட்டிருக்கும் துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டும் காலில் உள்ள செருப்பை எடுத்து கையில் வைத்துக் கொண்டும் செல்ல வேண்டும் என்ற நடை முறை இருந்ததாக சொல்லுவார். நான் எனது நினைவு தெரிந்த நாள் முதல் ( 1978) அதே தாத்தா பாட்டியை பார்க்க அக்ரகாரம் வழியாக தான் அன்று முதல் 1983 வரை சென்று வந்தேன். நான் எனது ட்ரவுசரையோ செருப்பையோ ஒரு முறை கூட கழட்டிக்கொண்டு சென்றதில்லை. எனது மாமா அதே ஊரில் அக்கிரகாரத்தில் 1982 ம் ஆண்டு பிராமிணர்கள் மத்தியில் ஒரு
  வீட்டை வாங்கி இன்றும் வசித்து வருகிறர். இன்றும் அவரைத் தேடி அக்கம் பக்கம் உள்ள பிராமிணர்கள் சகஜமாக வீட்டிற்கு வந்து போகிறார்கள். ஆனால்
  என்தந்தை வழி தாத்தா பக்கத்து வீட்டு பிராமிணன் கூட ஏற்பட்ட சண்டையில் மீனை கழுவிய நீரை அவர் வீட்டு வாசலில் ஊற்றினார் என்பதை இன்றும் வருத்தத்தோடு என் தந்தை சொல்லுவார். இன்னொரு பக்கத்து வீட்டு பிராமிணப் பெண்ணை காதலித்த குற்றத்திற்காக எனது சித்தப்பாவை வீட்டை விட்டு துரத்தியது மற்றுமில்லாமல் அந்த பிராமிணப் பெண் குடும்பத்தையும் சண்டை போட்டு வீட்டை விட்டு காலி செய்தவர்தான். எனது சித்தப்பா கல்யாணமே வேண்டாம் என்று கடைசி வரை வாழ்ந்து விட்டு பனிரெண்டு ஆண்டுகளுக்கு முன் மடிந்து போனார்.

  80 களின் மத்தியில் இருந்து ஊடகங்களை கவனித்து வருகிறேன். கீதாஞ்சலி ஐயரையும் கேட்டிருக்கின்றேன். சரோஜ் நாராயண சாமியையும் கேட்டிருக்கிறேன். பிபிசி தமிழோசையின் சங்கர மூர்த்தி சங்கர் ( மூன்றாண்டுகளுக்கு முன் காலமாகி விட்டார் ) ஆனந்தி கீதா பாலா விமல் சொக்கநாதன் போன்றவர்களையும் கேட்டிருக்கிறேன். ஆனால் சமீப காலமாக ஊடகங்கள் எவ்வளவு தரம் தாழ்ந்து வீழ்ந்து கிடக்கிறது என்பதையும் பார்க்கிறேன். இதற்கு கூட பார்பனப் பொறுக்கிகள்தான் காரணம்.  ReplyDelete
 10. 80 களின் மத்தியில் இருந்து ஊடகங்களை கவனித்து வருகிறேன். கீதாஞ்சலி ஐயரையும் கேட்டிருக்கின்றேன். சரோஜ் நாராயண சாமியையும் கேட்டிருக்கிறேன். பிபிசி தமிழோசையின் சங்கர மூர்த்தி சங்கர் ( மூன்றாண்டுகளுக்கு முன் காலமாகி விட்டார் ) ஆனந்தி கீதா பாலா விமல் சொக்கநாதன் போன்றவர்களையும் கேட்டிருக்கிறேன். ஆனால் சமீப காலமாக ஊடகங்கள் எவ்வளவு தரம் தாழ்ந்து வீழ்ந்து கிடக்கிறது என்பதையும் பார்க்கிறேன். இதற்கு கூட பார்பனப் பொறுக்கிகள்தான் காரணம்.

  நான் 1979 மற்றும் 80 ஆம் ஆண்டுகளில் பள்ளி மாணவனாக இரு முறை திருச்சி வானொலி நிலையத்திற்கு சென்று சிறுவர்க்கான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளேன். இன்று ஒரு பொறுக்கித் தனத்தை செய்தால் போதும் சுலபமாக ஊடகங்களில் தலை காட்டி விடலாம். 35 ஆண்டுகளுக்கு முன்னாள் நிலைமை வேறு. என்னை அன்று கூட்டிச் சென்று திருச்சி வானொலி நிகழ்ச்சியில் பங்கேற்க வைத்த மூன்று ஆசிரியர்களும் பிராமிணப் பொறுக்கிகள்தான் நான் தஞ்சையில் சங்கர மடம் மிக அருகிலேயே இருக்கும் எனது வீட்டில் மாணவப் பருவம் முழுவதையும் கழித்தவன். சமஸ்க்ரிதம் கூட சிறு வயதில் இலவசமாக பயின்றவன். பல பிராமிணர்களுக்கு மத்தியில் பயின்றவன். என்னை ஒரு நாளும் ஒருவரும் இழிவாக பேசியதில்லை சுமார் நான்காண்டு காலம் சமஸ்கிரதம் பயின்றவன்
  தற்போது 30 ஆண்டு காலத்திற்கும் மேலாகி விட்டதால் சிறிதளவு கூட நினைவில் இல்லை. ஆனால் அது எனது தமிழ் உச்சரிப்பை செம்மை படுத்த உதவியது.

  சமஸ்க்ரிதம் ஒரு விஞ்சான மொழி என்று நான் சொல்ல வில்லை இன்றும் மாட்டுக் கறி மற்றும் பன்றிக் கறியை உண்ணலாம் என்று முகநூலில் ஆதரவு தெரிவிக்கும் முன்னாள் தலைமை நீதிபதி சொல்கிறார். என்று வாழ்க வளமுடன் வகுப்பில் சில ஆண்டுகளுக்கு முன் சேர்ந்தேனோ அன்று முதல் புலால் உண்பதை முழுவதுமாக நிறுத்தி விட்டேன். நாங்கள் தஞ்சை வீட்டில் வசித்த போது மீன் மற்றும் ஆட்டுக்கு கறி மாதம் ஒன்று அல்லது இரு முறை
  சமைப்போம். பக்கத்தில் இருந்த பிராமிணப் பொறுக்கிகள் யாரும் கொடி பிடிக்க வில்லை.

  நான் இந்த பதிவை எழுதி கொண்டிருக்கும் போதே பட்டிணப் பாக்கத்தில் செயின் அறுபட்டு ஒரு பெண் கொல்லப்பட்டாள் என்ற செய்தியை தொலை காட்சி வழியாக பார்க்கிறேன். இந்த கொடூரத்தை செய்தது பார்பனப் பொறுக்கியா அல்லது த்ராவிடப் பொறுக்கியா

  பெரியார் 40 ஆண்டுகளுக்கு முன் அடித்துப் போட்டுவிட்டு போன பாம்பை தங்களது கேவல அரசியல் பிழைப்புக்காக இன்னும் தூக்கி பிடித்துக் கொண்டிருக்க வேண்டாமே.

  ReplyDelete