தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Friday 3 June 2016

கங்கைக் கரையில் காவிரித் தென்றல்


நம் அருமைத் தலைவர் கலைஞர் அவர்களின் பல பிறந்தநாள்கள் தேர்தல் முடிவுகள் வெளிவந்த நேரத்தை ஒட்டியவையே! தேர்தல்களில் வெற்றியும் தோல்வியும் மாறி மாறியே வந்துள்ளன. இரண்டு நிலைகளிலும் வெற்றி கண்டு  வீராப்பும்,தோல்வி கண்டு துயரமும் இன்றி, அடுத்த பணிக்கு அடுத்த நாளே திரும்பி விடுவதுதான் தலைவரின் இயல்பு.

இந்தத் தேர்தலில் நமக்கு ஏற்பட்டுள்ளது வெற்றியும் இல்லை, தோல்வியும் இல்லை  உடனடித் தோல்வி என்றாலும், தொலைநோக்குப் பார்வையில் வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும். இதற்கு முன் தலைவர் சந்தித்துள்ள பல நிகழ்வுகளை எண்ணிப் பார்க்கும்போது, இது மிகச் சாதாரணம் என்றே  தோன்றுகிறது.


1991 ஆம் ஆண்டு நம் ஆட்சி, மத்தியில் ஆட்சியிலிருந்த பிரதமர் சந்திரசேகரால் கலைக்கப்பட்டது. அப்போது, 'கலைக்கும் சர்க்கார், நிலைக்கும் சர்க்காரா?' என்று ஒரு கடிதத்தை நம் தலைவர் எழுதியிருந்தார். தன் ஆட்சி கலைக்கப்பட்டதை எண்ணிப் புலம்பாமல், எய்தவன் இருக்க அம்பை நோவதேன் என்னும் பாணியில் ஒரு கடிதத்தை எழுதியிருந்தார். அவருடைய அஞ்சாத் தன்மையையும், தொலைநோக்குப் பார்வையையும் அக்கடிதம் எடுத்துக் காட்டியது.

யாரையோ திருப்தி செய்ய நம் ஆட்சியை அவர் கலைத்தார். ஆனால் அவருடைய ஆட்சியும் இன்னும் எத்தனை நாள் நிலைக்கப் போகிறதோ என்ற தொனியில் தலைவர் எழுதியிருந்தார். அவர் எழுத்து அப்படியே உண்மையாகி விட்டது. நம் ஆட்சி கலைக்கப்பட்ட 34ஆவது நாள் சந்திரசேகரின் ஆட்சி தில்லியில் கலைக்கப்பட்டு விட்டது.

அந்தச் சூழலில், 1991 மார்ச் 18 அன்று பீகாரின் தலைநகரமான பாட்னாவில், தேசிய முன்னணி சார்பில் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் பரப்புரைக் கூட்டம் தொடங்கியது. கடந்ததை எண்ணிக் கவலை கொள்ளாமல்,அடுத்த பணிக்கு ஆயத்தமானார் தலைவர். வி.பி.சிங், என்.டி.ராமாராவ் ஆகியோருடன் தலைவரும் அக்கூட்டத்தில் கலந்து கொண்டார். வெள்ளம் போல் பீகாரிகளின் கூட்டம் அங்கு கூடியிருந்தது.

ராஜ் மோகன் காந்தி மொழிபெயர்க்க,  தலைவர் பேசத் தொடங்கினார். "நான் முதலில் என்னை அறிமுகப் படுத்திக் கொள்கிறேன். என் பெயர் கருணாநிதி. நான் ஒரு தேசத் துரோகி! இந்த நாட்டில் நான் ஒரு அபாயமான பேர்வழி!" என்று தொடங்கினார். "ஆம். அப்படிச் சொல்லித்தான் தமிழ்நாட்டில் எங்கள் ஆட்சியைக் கவிழ்த்தனர்" என்று விளக்கினார். கூட்டம் ஆர்ப்பரித்தது. பேசி முடித்தபோது, அந்த மக்கள் வெள்ளம் எழுந்து நின்று கை தட்டியது.

அடுத்த நாள், டைம்ஸ் ஆப் இந்தியா ஏடு "stealing the show" என்ற தலைப்பில், நம் தலைவரின் உரையைப் பாராட்டி ஒரு பெரிய செய்தியை வெளியிட்டிருந்தது. அது குறித்து, அன்று நம் கட்சியில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இருந்த ஒருவர், "கங்கைக் கரையில் காவிரித் தென்றல்" என்ற தலைப்பில் அங்கு நடந்தவைகளை விவரித்து முரசொலியில்  எழுதியிருந்தார். "வடபுலம் மலைக்க, வந்தவர் வியக்க, பாடலிபுத்திரம் வென்ற கலைஞர்" என்று வியந்து பாராட்டியிருந்தார்.  அவர் இன்று நம் கட்சியிலும்   இல்லை, நன்றி உடையவராகவும் இல்லை. ஆனாலும் அவர் அன்று எழுதியவை இன்றும் பொருந்தியே போகின்றன. 

எந்தத் துயரையும் ஏந்திக் கொள்ளும் இடிதாங்கிக்கு, இப்போது வந்திருப்பது முக்கால் வெற்றி. முழு வெற்றியை நாடும், நாமும் விரைவில் பெறுவோம்!
                                               


5 comments:

  1. S வெற்றிவேல்3 June 2016 at 13:45

    2011 தொடங்கி கடந்த ஐந்தாண்டுகாலமாக கலைஞரும் அதை தாண்டி நீங்களும் இந்த ஆட்சியில் இந்த ஆட்சியில்......என்று புலம்பிய புலம்பல்கள் மறந்து விட்டதா? அந்த புலம்பல்கள் இப்போது மேலும் ஐந்தாண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.இலவசங்கள் நிறைந்த ஆட்சியில் அதன் பிறகும் நீங்கள் கனவு காண்பதை போல இந்த ஆட்சி நீடிக்காது என்பதற்கும் எந்த உத்திரவாதமுமில்லை.2006ல் 96 MLAக்களை வைத்துக் கொண்டு[கூட்டணியில்லாமல்]ஆட்சியை ஐந்தாண்டுகள் நடத்தியவர் கலைஞர்.ஆகவே 133 என்பது ஆட்சியில் அமர்ந்த பிறகு ஆட்சியை தொடர்வதற்கு [அவர் ஜெயிலுக்குப் போனாலும்]எந்த பிரச்சனையுமிருக்காது.ஆட்சியிலிருக்கும் கட்சியிலிருந்து ஆட்சியிலில்லாத தன் பக்கம் 18 க்கள் வருவார்கள் என்று கலைஞர் எண்ணிக் காத்திருப்பதும் அதீத கற்பனையே!

    ReplyDelete
  2. ரவிக்குமார்3 June 2016 at 14:46

    மொத்த வெற்றியும் பல கூறுகளான சதவிகித வித்தியாச வெற்றியும் கிட்டத்தட்ட ஒன்று போல்தான் உள்ளது அதிமுகவிற்கும் திமுக+ற்கும் பிறகு எதற்கு இந்த ஐந்து லட்சம் வாக்குகள் வித்தியாசம் என்ற புலம்பல்கள் எல்லாம்?.ஒரு வாக்கில் வெற்றி பெற்றாலும் அது வெற்றிதான் என்பது இன்றையவரைக்குமான சட்டம்.ஆறு முனைப்போட்டியில் ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என்பது அனைத்து தரப்பாலும் தேர்தலுக்கு முன்பிருந்தே மீண்டும் மீண்டும் கூறப்பட்ட உண்மையாகும்.அதுதான் இப்போது நடந்துள்ளது.

    மொத்தமாக வெற்றி பெற்ற தொகுதிகள் அதிமுக-134(57.75%) திமுக+-98(42.25%)

    <1% வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதிகள் அதிமுக-13(59%) திமுக+-9(41%)

    1.1 - 4.9% வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதிகள் அதிமுக-37(58.7%) திமுக+-29(41.3%)

    >5% வாக்கு வித்தியாசத்தில்வெற்றி பெற்ற தொகுதிகள் அதிமுக-84(58.3%) திமுக+-60(41.7%)

    விசிகவால் திமுகவிற்கு 20தொகுதிகளில் தோல்வி ஏற்பட்டுள்ளது!.இப்போது தெரிந்திருக்கும் விசிகவின் அருமை திமுகவிற்கு!!.இப்போது இதற்கு யார் காரணம்?.கூட்டணி ஆட்சி என்ற விசிகவின் உன்னத கோட்பாட்டை ஏற்றிருந்தால் இந்த நிலை வந்திருக்குமா திமுகவிற்கு?.இப்போது இந்த இந்த ஐந்து லட்சம் வாக்கு வித்தியாசம் என்ற புலம்பல்கள் எல்லாம் தேவைபட்டிருக்குமா திமுகவிற்கு மற்றும் உங்களுக்கு?. இந்நேரம் அதிமுக அல்லவா இந்த ஐந்து லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வி என்ற புலம்பல்களை எல்லாம் புலம்பிக்கொண்டிருக்கும்!.

    ReplyDelete
  3. திரு ரவிக்குமார்,

    திமுக புலபவும் இல்லை, அதை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்!...

    திமுக வாக்கு வங்கி உயர்த்து உள்ளது, மிக அறுகாமையில் வாய்ப்பை இழந்துள்ளது...அடுத்த தேர்தலில் மிக கணிசமாக வெல்லும்!...

    தளபதி ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமையும், பெருபான்மை இர்ருபினும், கூட்டணி கட்சிகளுக்கு உரிய அதிகாரம் வழங்கப்படும்!... உங்கள் கட்சி அதனை வெள்ளியில் இர்ருந்து பார்த்து புலம்பலாம் (ரசிக்கலாம்)...

    கூட்டணி ஆட்சி பற்றி திமுகவிடம் கடுமையாக பேசும் நீங்கள், ஏன் அதிமுகவிடம் அதனை பெசிபார்கவேண்டியது தானே ?

    திமுக வாக்கு வித்தியாசத்தை பேசும் நீங்கள், உங்கள் கட்சி வாக்கு வங்கி என்னவானது என்றும் பேச வேண்டும்....

    திமுகவை பற்றி கவலை படாமல் மநகூ தொண்டர்கள் புலம்புவதை கவனித்தால் நல்லது...

    அதிமுக வென்றாலும் பரவாஇல்லை, திமுக வெல்ல கூடாது என்ற மநகூ எண்ணம் மிக உயர்த்து...உங்கள் ஒருகினைபாளர் குணம் கூடனி அப்படிதான் இறுக்கும். இனி இந்த 5 வருடம் அதிமுக வை பற்றி பேச, கேள்வி கேக்க உங்கள்ளுக்கு அருகதை உள்ளதா ?

    கட்டுவிரியன், கண்ணாடி விரியன் போன்ற பாம்புகலை பற்றி நீங்கள் ஏன் கவலை படுகின்றீர்கள்...உங்கள் ஒருகினைபாளர் சிங்கம் இறுக்கும்வரை வீரநடை போடுங்கள்....

    முட்டு சந்தில் மாட்டி கொள்ளாதவரை நல்லது!...

    அன்புடன்,
    சுதாகர் IT

    ReplyDelete
    Replies
    1. கலைஞர் அவர்களை மிக கடுமையாக சாடும் நீங்கள் ஏன் மற்ற கட்சிகளை விமர்சிக்க மறுகின்றிர்கள். அன்று இலங்கை போரின்போது கூட்டணியில் இருந்த மற்ற மத்திய mp கலை விமர்சிக்காமல் இருகின்றிங்கள்.

      உலக நாடுகளே போர் நிறுத்த முயற்சியில் தொரபோது எப்படி ஒரு மாநிலத்தின் முதல் அமைச்சர் நிறுத்த முடியும்.... சீனா அரசு 3 பில்லியன் டாலர் ஆயுதம் இலங்கைக்கு கொடுத்தது அதற்கும் கலைஞர் தன காரணமா? என்ன உங்கள் நேர்மை?

      ரவிகுமார் அவர்களே, திமுகவின் தொழ்விக்கு நீங்கள் வருந்த வேண்டாம் அதை திமுக பார்த்துகொள்ளும் ... உங்கள் கட்சின் வாக்கு சரிவை எப்படி உயர்த்துவது என்று முயற்சிசெய்யுங்கள் .... நீங்கள் நம்பி சென்ற சிங்கம் கடைசியில் போரிலிருந்து ஒரு நாடகம் நடத்தி விட்டு புறமுதுகு கட்டி போட்டி இடாமல் ஓடிவிட்டது ஏன் என்று யொசிவுங்கல்....

      ஏதேனும் தவறாக மனம் கோணும்படி பெசிஉருந்தல் மனிக்கவும் ......

      Delete
  4. "கங்கைக் கரையில் காவிரித் தென்றல்" "வடபுலம் மலைக்க,வந்தவர் வியக்க,பாடலிபுத்திரம் வென்ற கலைஞர்" என்று என்றோ >25 ஆண்டுகளுக்கு முன்பு வியந்து பாராட்டியதை இன்று சொல்லிப் பெருமைப்பட என்ன இருக்கிறது?.அதன் பிறகு அண்ணன் கலைஞர் தமிழக இலங்கை தமிழர்களுக்கு பல துரோகம் செய்தவர் என நூறு முறையல்ல ஆயிரம் முறை மேடைகளில் கொதித்து முழங்கியதில் தொடங்கி அவர் மகனைப்பார்த்து ஒரு தொடை நடுங்கிக்கு எதற்கு தளபதி பட்டம்? என்ற சத்திரியனுக்கேயுரிய வீராவேசமாகக் கோபம் கொண்டு சீறியது,இறுதியாக சமீபத்தில் தேர்தலுக்கு முன்பு கலைஞருக்கு'சூத்திரப்பட்டம்'கொடுத்து தன் நெடுநாள் ஆசையை சரியான நேரத்தில் நிறைவு செய்து கொண்டவர் வைகோ அவர்கள்.அதனால் ஆதிக்க சாதிகளின் ஓட்டுக்கள் கலைஞருக்கு போடுவது குறைந்து பாதிக்கப்பட்டது திமுக(அந்த timingஆல் ஒரே கல்லில் இரண்டு மாங்காயை அடித்துள்ளர் வைகோ).மேலும் விஜய்காந்துக்கு 130க்கும் மேற்பட்ட தொகுதிகளை அள்ளிக் கொடுத்து அவரை திமுக பக்கம் போகவிடாமல் தன்வசப்படுத்திய செய்த dealingஆல் நிர்வாக திறமையின்மையால் பெரு வெள்ள பாதிப்புகள்,மதுவிலக்கு எதிர்ப்பு நிலை போன்ற முடிவுகளால் அதிமுக எதிர்ப்பு அலை மக்களிடம் இருந்த போதும் அதையும் தாண்டி தான் நினைத்தபடி திமுக இன்று ஆட்சிக்கு வராமல், கலைஞர் முதலமைச்சராகாமல் போனதிற்கு கிட்டத்தட்ட 100%காரணம் வைகோ தான்.இப்போது தேர்தல் முடிந்து விட்டது எதுகை மோனைப் பேச்சுக்கள் மற்றும் வசனங்களோடு மீண்டும் உரிமயோடு அண்ணன் கலைஞர் அண்ணன் கலைஞர் என்று உறவாட வருவார் அதை சுபவீ அவர்கள் இன்னும் 25 ஆண்டுகள் கழித்து தனது வலைப்பூவில் பதிவு செய்து கொண்டிருப்பார்!.

    ReplyDelete