தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Thursday, 14 July 2016

மதவெறி வளர்க்கும் மத்திய அரசு!


"வாடிப் போகாத பூவும் இல்லை 
மோடி போகாத நாடும் இல்லை"

என்று அண்மையில் கட்சேவி ஊடகத்தில் (வாட்ஸ் அப்) ஒரு பதிவைப் பார்த்தேன். உண்மைதான். மோடி அரசில் இரண்டு நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. ஒன்று, பிரதமரின் வெளிநாட்டுப் பயணம். இன்னொன்று, இந்துத்துவத் திணிப்பு!


ஆர்.எஸ்.எஸ். வழிகாட்டலில் தொடர்ந்து நடைபோடும் இன்றைய பா,ஜ,க. அரசு,  கங்கை ஆற்றின் தண்ணீரை விற்பனை செய்யும் பணியை .இப்போது  அஞ்சலகத்திற்குக் கொடுத்துள்ளது. இந்திய அஞ்சல் துறை ஏறத்தாழத் தன் இறுதி மூச்சை விட்டுக் கொண்டுள்ளது. அஞ்சல் துறை மிகப் பெரிதும் தனியார் வயம் சென்றுவிட்டது. உடனடியாகக் கடிதம் செல்ல வேண்டுமானால், தூதஞ்சல் (கூரியர்), எப்போது வேண்டுமானாலும் சென்றால் குற்றமில்லை என்றால் அரசின் அஞ்சல் துறை என்ற நிலையே இன்று உள்ளது. 

அஞ்சல் துறையில் கடிதங்களைப்  பிரிக்கும் பகுதி (sorting section) இப்போது இல்லை. அதனால் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலை வாய்ப்பை இழந்துவிட்டனர்.  அதன் விளைவாகக் கடிதங்கள் காலம் தாழ்ந்து போய்ச் சேருவதால் பொது  மக்களுக்கும் ஒரு சலிப்பு. இவைகளையெல்லாம் சரி செய்யாமல், கங்கை நீர் விற்பனையை இன்று அவர்களின் பணியாக ஆக்கியிருப்பது எவ்வளவு பெரிய கேலிக்கூத்து!

கங்கை ஆறு புனிதமானதென்றால், இந்தியாவில் ஓடும் மற்ற ஆறுகள் எல்லாம் புனிதம் இல்லாதவைகளா? ஆறு என்றால் எல்லாம் ஆறுதான். இதில் ஒன்றைப் புனிதம் என்று கூறுவதன் மூலம், ஒரு குறிப்பிட்ட மத நம்பிக்கையை மக்கள் மனங்களில் விதைப்பதுதானே அரசின் நோக்கம்?

சரி, கங்கை ஆற்றில்தான் என்ன புனிதம் உள்ளது? 2525 கிலோமீட்டர் ஓடுகின்ற ஒரு மிக  நீளமான ஆறு அது. உத்தரகாண்ட் மாநிலத்தில் தொடங்கி, ஓரிரு மாநிலங்களைக் கடந்து பங்களா தேசத்திற்குப் போய், வங்காளக் குடாக்  கடலில் கலக்கின்ற ஆறுதான் கங்கை. இமாலய மலையிலிருந்து தோன்றி, ஓடி வருகிற ஆறு. நம்மில்  பலர் ரிஷிகேஷ் சென்றிருப்போம். அந்த ஆறு அங்கே ஓடி வருகிற அழகைப் பேரழகு என்றுதான் சொல்ல வேண்டும். அதில் ஒன்றும் மதம்  எல்லாம் இல்லை.  ஆற்றுக்கு ஏது மதம்? ஆற்றுக்கு ஏது கடவுள்? ரிஷிகேஷில் கங்கை ஓடி வருகிறபோது அந்தப் பாலத்திற்குத்தான் ராமர் பாலம், லக்ஷ்மன் பாலம் என்று இவர்கள் கடவுள் பெயர் வைத்திருக்கிறார்கள். ஹரித்துவாருக்கு வருகிற வரையில் ஆறு ஆறாகவே இருக்கிறது. ஹரித்துவாருக்கு வருகிறபோது கொஞ்சம் களங்கப்படுகிறது. வாரணாசிக்குப் (காசி) போனால் முடிந்து போயிற்று. பிணங்கள் இருப்பதற்கான ஒரு ஆறாக அது மாறிப் போய் விடுகிறது.

கங்கையைப் பற்றி இன்னொரு செய்தி! இந்து  மதச் சார்புடையோர் அதனைப் புனிதம் என்கின்றனர். ஆனால் அறிவியல் அந்த ஆற்றைப் பற்றி என்ன சொல்கிறது? ஆங்கிலத்தில் அந்த வரியை அப்படியே பார்க்கலாம் - "the most fifth polluted water in the world") என்று சொல்கிறது. உலகத்திலேயே மிகவும் மாசு படுத்தப்பட்டுப் போயிருக்கிற ஐந்தாவது ஆறு கங்கை. நம்மை மிஞ்சி நான்கு ஆறுகள்  இருக்கின்றன.

வாரணாசிப் பகுதியிலிருந்து கடலில் கலக்கின்ற வரைக்கும் 40 கோடி மக்களைத் தாண்டி அந்த ஆறு ஓடுகிறது. நாற்பது கோடி மக்களுக்கும் முடிந்தவரையில் எல்லா நோய்களையும் எடுத்துச் செல்கிறது. குறிப்பாக, 10 லட்சம் மக்கள் வாரணாசியில் அன்றாடப் பயன்பாடுகளுக்கு அந்த கங்கை ஆற்றை நம்பியுள்ளனர். வாரணாசியில் இரண்டு கரைகளிலும் வீடுகள். இந்தப் பக்கமெல்லாம் பிணத்தை எரித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தப் பக்கம் மக்கள் வாழ்கிறார்கள்.

காசிக்குப் போனவர்கள் எல்லோரும் ஒரு போத்தலில் தண்ணீர் எடுத்துக் கொண்டு வருவார்கள். தெரியாமல் கூட குடித்து விடக் கூடாது. பொதுவாக அதனை யாருக்கு கொடுப்பார்கள் என்றால், இறந்துபோகிற நிலையில் இருப்பவனுக்கு கொடுப்பார்கள். கடைசியாக வழியனுப்புகிற விழா அது. அதைக் கொடுத்த உடனே முடிந்தது. அப்புறம் பிழைக்கவே மாட்டான்.

மனிதனின் கழிவிலிருந்து உற்பத்தியாகிற நோய்க் கிருமிகள் கங்கையில் உள்ளன. அது பொதுவாக ஆறுகளில் இருக்கும். ஆனால் அந்த அளவைக் காட்டிலும் 120 மடங்கு கங்கை ஆற்றில் கூடுதலாக இருக்கிறதாம். என்ன ஆவது? 

ஹைதராபாத்திலிருக்கிற அணுசக்தி தேசிய மையம் மூன்று ஆண்டுகளுக்கு முன்னாள் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. கங்கை ஆற்றைச் சுத்தப் படுத்தாமல் வைத்திருந்தால் இங்கே விரைவில் நாடு முழுவதும் புற்று நோய் பரவுமென்று கூறியுள்ளது. அதற்குப் பிறகுதான், உமாபாரதி அதற்கான அமைச்சராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். ‘புனிதமான ஆற்றை புனிதப்படுத்துவதற்கு’ ஓர் அமைச்சகம்.  புனித ஆறு யாரையும் காப்பாற்றவில்லை. புனித ஆற்றை அரசு காப்பாற்ற வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

1985 ஆவது ஆண்டு மட்டும் உலக வாங்கி 2.2 கோடி டாலர் பணத்தை அதற்காகக் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து உலக வங்கியும், உலக நிதி மையமும் பணத்தை அள்ளி வீசிக் கொண்டே இருக்கிறார்கள். பணம் கரைந்து கொண்டே இருக்கிறது. ஆனால் கங்கை சுத்தப்படவில்லை. பிணத்தை எரிப்பதை நிறுத்தினால்தானே அது சுத்தமாகும்? இன்றைக்கும் பிணத்தை எரித்து எரித்து  ஆற்றுக்குள் தள்ளிவிடும் ஒரு போக்கு நடைமுறையில் இருக்கிறது. இந்தப் புனித ஆற்றினுடைய நிலை இது.

இந்த ஆற்று நீரைத்தான் புனிதம் என்று சொல்லி இன்று அஞ்சல் நிலையங்களில் விற்பனை செய்யத் தொடங்கியுள்ளது மத்திய அரசு. இந்துக்கள் என்று தங்களை நினைத்துக் கொண்டிருப்போரின் நம்பிக்கை இப்போது போத்தல்களில் அடைக்கப்பட்டு எல்லோருக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மத்திய அரசின் இந்தப் போக்கை மதச் சார்பற்றவர்கள் அனைவரும் ஒன்று கூடிக் கண்டிக்க வேண்டும்!

10 comments:

 1. இரத்தினவேல்14 July 2016 at 11:39

  மதவெறி, சிந்திக்கும் ஆற்றலை அழித்து விடுகிறது.

  ReplyDelete
 2. மாடுகள் புனிதம் என்றும், மனிதர்கள் தீட்டு என்றும் கருதும் நாட்டில் இதை கண்டு வியபுடிய தேவை இல்லை ஆசிரியர் ஏ

  ReplyDelete
 3. கங்கை நீரை வாங்க கட்டாயப்படுத்தவில்லையே. விரும்பறவங்க வாங்கப்போறாங்க இதுல யாருக்கு என்ன தொந்தரவு.
  உங்கள் கேள்வி //ஒரு குறிப்பிட்ட மத நம்பிக்கையை மக்கள் மனங்களில் விதைப்பதுதானே அரசின் நோக்கம்?// - இதில் இன்னுமா சந்தேகம். பாஜாக என்ற கட்சி இருப்பது அதற்க்காக தானே. இது எல்லோரும் அறிந்ததே. திராவிட கட்சி ஆட்சிக்கு வரும் பொழுது அவர்களின் திராவிட கொள்கைகளை செயல் படுத்துவார்கள். தமிழ் தேசிய கட்சி ஆட்சிக்கு வந்தால் அது சார்ந்த கொள்கைகளை செய்யப் படுத்துவார்கள். அதே போல், பாஜக ஹிந்துத்வா கொள்கைகளை செயல் படுத்திகிறார்கள். இதுநாள் கிறிஸ்துவர்களுக்கோ, இஸ்லாமயிர்களுக்கோ எந்த பாதிப்பும் இல்லை. - Some facts about ganga that I read - Ganga has 15-25 times more oxygen level than other rivers. There is presence of bacteriophage only in very few rivers across the world. High oxygen content helps in self-cleansing. Britishers used to carry large barrels of ganga water while travelling in ships because the oxygen content kept the water pure till they reached london. It is all scientific stuff. The info I wrote here may not be completely right. If you search for Ganga+Oxygen you will find lot of information with proof.

  ReplyDelete
  Replies
  1. Mr.Sriram Ganges flows through 29 cities with population over 100,000; 23 cities with population between 50,000 and 100,000, and about 48 towns.[7] A large proportion of the sewage water with higher organic load in the Ganges is from this population through domestic water usage. Unimaginable quantity of human waste floating in Holy ganga jal.
   Amount toxic and non-biodegradable waste is another hazard.
   Industrial cities on the bank of river Ganga such as Kanpur, Allahabad, Varanasi and Patna, countless tanneries, chemical plants, textile mills, distilleries, slaughterhouses, and hospitals prosper and grow along this and contribute to the pollution of the Ganga by dumping untreated waste into it.[8] Industrial effluents are about 12% of the total volume of effluent reaching the Ganga. Although a relatively low proportion, they are a cause for major concern .

   Delete
 4. ஏராளமான பொய் பித்தலாட்ட புழுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டு ஆட்சியை பிடித்தார்கள்.
  இப்போது அந்த ஸ்டாக்கும் தீர்ந்து விட்டது என்பதைத்தான் இந்த கங்காஜல் கண்றாவி எடுத்து காட்டுகிறது.
  உல்லாசபயணம் என்பதே ஏதொ ஒரு தீர்த்த யாத்திரை என்று தவறாக கருதிக்கொண்ட சமயவாதிகள் கங்கைக்கு இன்னமும் பயணித்து கொண்டிருந்தாலும் அவர்களில் பலர் அந்த நீரின் அழுக்கை புரிந்துதான் உள்ளார்கள்.
  Water திரைப்படத்தை பார்த்து இந்துத்வாக்கள் பயந்த பயமே இதற்கு சான்று.
  பெரிய பெரிய வில்லன்கள் எல்லாம் இறுதி காட்சிகளில் வெறும் ஜோக்கரகளாக காட்சியளிப்பது அபூர்வமாக சில திரைப்படங்களில் வரும் காட்சியாகும். மோடி சினிமாவும் அப்படித்தான்.

  ReplyDelete
 5. கங்கை ஆற்றின் நீர் பிடித்து அடைக்கப்படும் இடம் தெளிவுற தெரிந்தால் சுகாதாரத்திற்குரிய சர்ச்சை அறவே நீங்கும்.

  ReplyDelete
 6. என்னிடமும் இது சம்பந்தமாக சில விமர்சனங்கள் உண்டு.
  1. கங்கை நதியை சுத்தப் படுத்துவதற்காக ஒரு அமைச்சரை ஒதுக்கிய அரசு அந்த பணி எந்த அளவிற்கு இருக்கிறது என்பதே ஒரு பெரிய கேள்விக்குறி. சுத்தப்படுத்தப்படாத நதியின் நீர் எப்படி புனித நீராகும். அது கழிவு நீர் அல்லவா?
  2. கங்கை நதியின் மாசுபாட்டால் புற்றுநோய் பரவும் செயதி உள்ளபோது, அதை காலங்களில் அடைத்து விற்க வேண்டியதன் நோக்கம் என்ன? மெதுவாக பரவக்கூடியதை வேகமாக்குகிறர்களா? இது போல நோயை பரப்பி விட்டு , மோடி வெளிநாடுகளில் சுற்றிக்கொண்டு அந்நாடுகளின் மருத்துவ நிறுவனங்களிடம் சிகிச்சைக்கான ஒப்பந்தம் போட்டு அவர்களுக்கு வியாபாரம் தேடித்தர போகிறாரோ?
  3. மேலும் இந்த நீரை குடிப்பதற்கு உகந்ததல்ல என்று கலனில் எழுதியுள்ளதாகக் கேள்விப்பட்டேன். இதுபோன்ற உபயோகமுறையை distilled நீருக்கல்லவா கேள்விப்பட்டிருக்கிறேன். குடிக்க கூடாது. தெளித்துக் கொள்ளலாம். அப்படிச் செய்தல் நோய் ஏதும் பரவக்கூடிய அபாயம் இருக்காதா? இதற்கு பெயர் தீர்த்தமா?

  மக்களிடம் ஏற்கனவே நீங்கள் பரப்பியுள்ள மூடநம்பிக்கைகள் போதாதா? இப்போது மூடநம்பிக்கையோடு சேர்த்து நோயையும் பரப்பி விடப்போவதுதான் பாஜக அரசின் திட்டம் & சாதனையாகப் போகிறதா?

  மூடநம்பிக்கைகளாவது அறிவை அழிக்கும். மூடப்பழக்கங்களோ அறிவோடு சேர்த்து மனிதனையும் அல்லவா அழிக்கும்!

  அறிவில்லாமல் உயிர் எதற்கு என்றுதான் இந்த புது யுக்தியோ?

  இனி புகை & மதுப்பழக்கத்திற்க்கான எச்சரிக்கையை இந்த கங்கை நீருக்கும் கொடுக்கச் சொல்லி போராட்டம் நடத்த வேண்டியிருக்கும்.
  கங்கை நீர் நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்கு கேடு. இந்த நீரை குடித்தல் புற்று நோயை வரவழைக்கும்.!!

  ReplyDelete
 7. ர.யுவராஜ்18 July 2016 at 13:21

  அய்யா நீங்களும் பிற திராவிடக் கட்சிகளும் தமிழகத்தில் பாசிச திராவிட பேரினவாதத்தை,பாசிச திராவிட இனவெறியை வளர்க்கவில்லையா?.உங்களிடம் அந்த பாசிச அழுக்கை வைத்துக் கொண்டு பிறரிடம் குற்றம் குறை கண்டு பிடிப்பதில் என்ன நேர்மை இருக்கிறது?. ஆகவே ஒழிக்கப்படவேண்டியது மதவெறியை மட்டுமல்ல, ஜாதிவெறியை&உங்களிடம்,பிற திராவிடக் கட்சிகளிடமுள்ள இனவெறியையும் சேர்த்துதான்!

  ReplyDelete
  Replies
  1. யுவராஜ் அவர்களே பாசிச திராவிட பேரினவாதம் என்ற சொற்கள் பற்றிய தங்களது அறிவு பற்றி எனக்கு போதிய விளக்கம் தேவைப்படுகிறது. பாசிசம் என்ற சொற்பிரயோகம் அம்மையார் ஜெயலலிதாவின் பண்புகள் குறித்து தங்களது அப்பிபிராயம் என்றே கருதுகிறேன். அவரின் கட்சிக்காரர்கள் காலில் விழுந்து நாக்கை, விரல்களை துண்டுகளாக்கி காணிக்கை கொடுத்தல் போன்றவை பற்றி தானே குறிப்பிடுகிறீர்கள் இதைப்பற்றி அதிமுககாரர்களிடம் தான் தாங்கள் கேட்டிருக்கவேண்டும்.
   திராவிடம் பேரினவாதமா? அப்படியாயின் இந்தி ஆரியம் எல்லாம என்ன இனவாதம் என்று விளங்க வைப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
   அடுத்தது ஜாதிவெறி எங்கு முதலில் களையப்படவேண்டும் என்பதை பற்றிதான் எழுதியுள்ளீர்கள். தமிழ் தேசியம் பேசுபவர்கள்தான் தற்போது ஜாதிவெறி சாம்பியன்களாக இருக்கிறார்கள். எனவே இதையும் பாமக ராமதாஸ் போன்றவர்களிடம் கேட்பதுதான் முறை?

   Delete
 8. இந்து மதம் இரக்கமில்லாத அரக்க குணம் கொண்ட சுய நல வாதிகளை உருவாக்குகிறது. இந்த பிணம் போடுகிற பழக்கம் எங்கு இருந்து வந்தது. இந்தியாவுக்கு கொண்டு வந்தவர்கள் யார். ஆரிய குல கடவுள்கள் தானே. இதனை இந்துக்களின் பழக்கம் என்று பொதுவான பழக்கம் ஆக்கியது யார்.
  இந்து மதம் பற்றி எனது நண்பர் சொன்னது எப்போதும் எனக்கு ஞாபகம் வருகிறது. இந்து மதம் இதை செய் அது கிடைக்கும். அதை செய் இது கிடைக்கும் என்கிறது. உதரணமாக மந்திரம் சொன்னால் அது கிடைக்கும். அந்த கடவுளை தரிசித்தால் இந்த கடவுளை சுத்தி வந்தால் எதோ கிடைக்கும் என்று மனிதனின் சுயநலன்களை மற்றுமே போதிக்கிறது.அது கிடைக்கவும் கூட செய்யலாம். அதனால் ஒரு தனி மனிதன் மட்டுமே மேன்மை பெறுகிறான். ஒரு கூட்டமாக நாம் வளர முடியாது. கூட்டமாக வளர வேண்டும் என்றால் ஒரு மதம் இரக்கம் மற்றும் மனித நேயத்தை போதிக்க வேண்டும்.
  இந்து மதம் இந்த முக்கியமான இருக்க வேண்டிய அவசிய குணம் ஆன இரக்கம் அல்லது மனித நேயம் என்பது போதிப்பது இல்லை. இரக்கம் என்ற ஒரு விஷயத்தை கிறிஸ்தவம் போதிக்கிறது. இரக்கத்தின் ஒரு வடிவமாக symbol ஆக அதன் கடவுள் இருக்கிறார். பிரான்சில் mercy என்ற சொல்லை அடிக்கடி பயன் படுத்துகிறார்கள். அதனால் அவர்கள் எல்லாவற்றிலும் அந்த இரக்கத்தை கொண்டு வந்து விடுகிறார்கள்.
  அதனால் நண்பர் சொன்னார்.. கிறிஸ்தவத்தில் Basement strong ..Building week .. இந்து மதத்தில் Building strong ..Basement week என்று சொன்னார். Basement வீக் ஆனால் அது ஆட்டம் காணத்தான் செய்யும். ஒரு நாள் சாய்ந்து விடும் என்றார். அது ஏற்று கொள்ள கூடியதாகவே இருக்கிறது.

  ReplyDelete