தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Thursday, 28 July 2016

மாடுகள் வாழட்டும், மனிதர்கள் சாகட்டும்!


கடந்த 11ஆம் தேதி 4 இளைஞர்களை இரும்புச் சங்கிலியால் கட்டிவைத்து, இரும்புக் கம்பிகளால் தாக்கிய ஈவு இரக்கமற்ற கொடூரக் காட்சியை ஊடகங்களின் வாயிலாக நாடே பார்த்தது.


கொடூரம் நடந்த மாநிலம், பிரதமர் மோடியின் குஜராத். தாக்கப்பட்டவர்கள் தலித் இளைஞர்கள். தாக்கியவர்கள், ஆர்.எஸ்.எஸ். துணை அமைப்பான கோ ரக்ஷன் சமிதி. தாக்குதலுக்கான காரணம், இறந்துபோன மாட்டின் தோலை அவர்கள் வைத்திருந்தனர்  என்பதுதான்.

குஜராத் மாநிலம் கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள மொட்டா சமதியாலா என்னும் சிற்றூரில்தான் இந்த மாபெரும் வன்முறை நடந்துள்ளது. பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில், திமிர் பிடித்த இந்துத்துவ வெறியர்கள் இந்தக் காட்சியை அரங்கேற்றி உள்ளனர். கைகட்டி வேடிக்கை பார்த்துள்ளது காவல்துறை. தங்களின் 'வீர பிரதாபத்தை' அவர்கள் படமாக எடுத்து, சமூக வலைத்தளங்களில் வேறு வெளியிட்டுள்ளனர்.

ஆனால் இந்த முறை, குஜராத்தில் வாழும்  தலித் மக்கள் அஞ்சி ஒடுங்கவில்லை. ஆவேசமாகக் கிளர்ந்தெழுந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் திரண்டு தங்கள் போர்க்குணத்தைக் காட்டியுள்ளனர். அவர்களின் போராட்டம் ஒரு புதிய முறையில் அமைந்துள்ளது.

பசுவைப் பாதுகாப்பதாகக் கூறும் பார்ப்பனர்கள், ஒரு நாளாவது மாடுகளைக் குளிப்பாட்டி இருக்கின்றனரா? மாட்டுக்குப் புல்  அறுத்துப் போட்டதுண்டா? தடவிக் கொடுத்துத் தண்ணீர் காட்டியிருப்பார்களா? உழைக்கும் மக்களே அனைத்தையும் செய்கின்றனர். அந்த மாடுகள் இறந்த பின்னும் தலித் மக்களே அவற்றை எரிக்கின்றனர். ஆனால் தாங்கள்தான் பசுக்களைக் காப்பாற்றுகிறோம் என்கிறது பார்ப்பனக் கும்பல்.
இப்போது செத்த மாடுகளுடன் தெருக்களில் புறப்பட்டுள்ளனர் தலித் மக்கள். இறந்துபோன மாடுகளை லாரிகளில்  கொண்டுவந்து சுரேந்திரநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொட்டியுள்ளனர்.  கோன்டல் துணை ஆட்சியர் அலுவலகம் மாட்டு எலும்புகளால் நிரம்பி வழிகிறது. இறந்த மாட்டுத் தலைகளுடன் மக்கள் ஊர்வலம் வருவதைத் திவ்ய பாஸ்கர் என்னும் குஜராத்தி இதழ் வெளியிட்டுள்ளது.

இனிமேல் இறந்த மாடுகளை நீங்களே அப்புறப்  படுத்திக் கொள்ளுங்கள் என்கின்றனர் போர்க்கோலம் கொண்டுள்ள அம்மக்கள்.

உழைக்கும் மக்களின் வலிமை என்ன என்பதை உணர வேண்டிய கட்டாயம் சங் பரிவாரங்களுக்கு  வந்திருக்கிறது. நாறிக் கொண்டிருக்கிறது குஜராத்!

   

17 comments:

 1. போராட்டம் வெல்லட்டும்
  உழைக்கும் மக்களின் வலிமையை குஜராத் உணரட்டும்

  ReplyDelete
 2. மு. சந்தோஷ் குமார்28 July 2016 at 08:32

  இதுதான் மாட்டு தர்மாமோ!!!
  மனிதம் எங்கே!! அங்கே!!!

  ReplyDelete
 3. தலித்மக்களின் எழுச்சி வெல்லட்டும்.

  ReplyDelete
 4. வரலாற்று சிறப்பு மிக்க போராட்டம். மாதா மாதா என்று சொன்னவர்கள் இப்போது மாதாவின் பிணத்தை தொட்டு தூக்குவார்களா என்று பார்ப்போம் ? !!!

  ReplyDelete
 5. குமரகுரு28 July 2016 at 14:59

  அய்யா இந்நாட்டில் உள்ள ஆயிரம் ஆயிரம் கால மரபுகள் வாழ்வியல் முறைகள் யாரையும் கைவிட்டு விடவில்லை.மாட்டின் கீழ் கிடைக்கும் பால் சிலருக்கென்றால்,மாட்டின் பின்னிலிருந்து கிடைக்கும் சாணி&மூத்திரம் உங்களைப் போன்றவர்களுக்கு(அதை வைத்து எரிபொருளான விராட்டி தட்டியோ,கோபர் கேஸ் பிளாண்ட் அமைத்து,உரமாக,பூச்சிக்கொல்லி பஞ்சகாவ்யா கலக்கியோ பிழைத்துக்கொள்ளலாம்), மாடு சாகும் தறுவாயில் மேலேயுள்ள தோலும், உள்ளேயுள்ள கொத்துக்கறியும் வேறு சிலருக்கு (முணுமுணுக்க வேண்டாம் உங்களுக்கு பிடித்த கொத்துக்கறியில் வேண்டுமென்றால் உங்களுக்கும் நிச்சயம் பங்கு உண்டு).ஆகவே மாட்டிலிருந்து கிடைக்கும் பொருள்களை சமூகத்திலுள்ள அனைவரும் பங்கிட்டுக்கொண்டு சுமூகமாக வாழ்ந்தார்கள்.நாடும் அமைதிப்பூங்காவாக இருந்து செழிப்புற்றது.இப்போது உங்களைப் போன்ற மக்களிடம் சிண்டுமுடிபவர்களால்,ஆயிரம் ஆயிரம் கால மரபுகள் வாழ்வியல் முறைகளை மதிக்காதவர்களால்தான் இதைப்போன்ற அவலநிலை ஏற்பட்டுள்ளது.

  ReplyDelete
 6. குமரகுரு28 July 2016 at 15:09

  இது ஒரு உதாரணம்தான்.இதைப்போல நிலம்,நீர்,காற்று,இப்போது பூமி(பிறர் நில அபகரிப்பு),Engineering&Medical Colleges, பெட்ரோல் பங்குகள்,மீன்பிடி போட்டுகள், நிலக்கரி, ஸ்பெக்ட்ரம், ஏர்செல்,BSNL lines etc., போன்றவைகளையும் பங்கிட்டுக்கொண்டு வளமாக வாழ்கிறார்கள்.

  ReplyDelete
 7. இந்த கொடுஞ்செயலுக்கு இன்றுவரை மோடி கண்டனம் தெரிவிக்காதது ஏன்?
  ஓ! வாயைத் திறக்கவும், வார்த்தை திறக்கவும் சாவி RSS 'இடம் அல்லவா இருக்கிறது!!
  மத்திய அரசுக்கும், நம்முடைய மாநில அரசுக்கும் ஏறக்குறைய ஒரு ஒற்றுமையை உணர்கிறேன். RSS and JJ எழுதிக் கொடுக்கிறதோ அல்லது கட்டளையிடுகிறதோ அதைத்தான் கீழுள்ளவர்கள் செய்ய வேண்டும்.

  ReplyDelete
 8. ஜெயகுமார்28 July 2016 at 20:26

  தலித்துக்கள் அழிந்து மாடுகள் வாழ ஒபாமாவிடம் திட்டம் ஏதும் உள்ளதா என்று அறிய அடுத்த பயணத்துக்கு தயார்

  ReplyDelete
 9. மாட்டு தோலில் உருவாக்கப்பட்டுள்ள "மிருதங்கத்தை"தானே அவா எல்லா மேடைகளிலும் அடித்து கச்சேரி பண்றா!அது என்ன நியாயம்.செத்த மாட்டு தோலை மிருதங்கம் என்ற இசைகருவியில் மாட்டி பார்ப்பனாஸ் அவா வீட்டில வச்சிருக்காளே!இதான் கோ ரஷ்ணத்தின் இலட்சணம். :(

  ReplyDelete
  Replies
  1. மாட்டுத்தோலுக்காக அடித்தவர்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் என்ன தொடர்பு. எதுக்கெடுத்தாலும் பார்ப்பனர்கள் தான் காரணமா? நியாயத்தை பேசுங்கள். நாங்கள் இந்தியாவில் மொத்தம் 6 கோடிக்கு மேல் பிராமணர்கள் இருக்கிறோம். இந்திய அளவில் அதிக அளவு எண்ணிக்கை உள்ள ஒரே சாதி பிராமணர்கள் மட்டும் தான். நாங்கள் மட்டுமே ஒரே வர்ண-சாதி கட்டம்மைப்புக்குள் இருக்கிறோம். உலகவில் எண்ணிக்கையை சேர்த்தால் 8 கோடிக்கு மேல் உள்ளோம். போன தலைமுறை தமிழ் பிராமணர்கள் போல் இந்த தலைமுறையை எண்ணிவிடாதீர்கள். ஆணாகிரிகம பேசுவதோ திருப்பி அடிப்போத தேவ இல்லை என்று செல்கிறோம். உங்கள் பாதையை மாத்திக்கொள்வது நல்லது.

   Delete
  2. ஜெயகுமார்30 July 2016 at 13:42

   ஸ்ரீராம், உங்கள் பதில் வேடிக்கையாக இருக்கிறது, 6 கோடி என்று சொல்லும் நீங்கள் மற்றவர்களை அடிமைப்படுத்த பிற பல சாதிகளாக பிரித்து வைத்துள்ளீர்கள், சூத்திர பட்டம் அவன் கேட்டுவாங்கியதா, 6கோடி நீங்கள் அரசு உயர் பதவியில் எத்தனை % இருக்கிறீர்கள்

   Delete
  3. உண்மையிலே அடிமைப்படுத்தவது வைசிய (பனியா) சாதிகள் தான். அவர்கள் கையில் தான் இந்திய பொருளாதாரம் அடங்கியுள்ளது. இப்போ இருக்குற இளைய தலைமுறை தமிழ் பிராமணர்கள் பெரும்பாலும் தனியார் நிறுவணங்கில் தான் வேலை செய்கிறார்கள். என் சொந்தகாரங்க பசங்க எல்லாம் IT , அல்லது AUTO செக்டரில் தான் பெருமபாலும் வேலை பார்க்கிறார்கள். எங்கள் சாதி இளைஞர்கள் கடந்த 10 ஆண்டுகளாக பெரும்பாலும் வெளிநாடு போக தான் ஆர்வமாக உள்ளனர். (அநேகமா அமெரிக்காவில் அக்ராகரம் வந்துரும்னு நனைக்கறன் :D ) நீங்க இன்னும் அரசு வேலை சதவீதத்தை பற்றியே பேசிட்டு இருக்கீங்க. தமிழ்நாடு specific statistics உங்களிடம் உள்ளதா? அதில் கண்டிப்பாக தமிழ் பிராமணர்கள் அதிகமாக இருக்க வாய்ப்பில்லை. நீங்க 30 வருஷம் முன்னாடி இருந்த நிலைமையை பேசிட்டு இருக்கீங்க.

   Delete
 10. வியனரசு29 July 2016 at 19:47

  ஆயிரம் மைல்களுக்கு அப்பால் குஜராத்தில் மாட்டுத்தோல் வைத்திருந்ததாகச் சொல்லி தலித் இளைஞர்களை ஊரே வரிசை கட்டி நின்று தாக்கியதை கண்டு நியாயமாக பதைபதைக்கும் நீங்கள் அந்தக் கொடுமை பெரியாரின் தமிழகத்தில் நிகழாது என்பதற்கு எதாவது உத்திரவாதத்தை தரமுடியுமா உங்களால்?.நத்தம் காலனி எரிப்பு, இளவரசன் உயிர்பறிப்பு,கோகுல்ராஜ் தலையெடுப்பு, உடுமலை சங்கர் படுகொலை என்று அடுத்தடுத்து சாதிவெறித் தாக்குதல்களின் தொடர்ச்சியாக நம் தமிழகத்தின் கொங்கு மண்டலத்தில் கரூர் மாவட்டம், புலியூர் வெள்ளாளப்பட்டியில் 18.07.16 அன்று நடந்த சாதிவெறித்தாக்குதல் பற்றி மூச்சுவிடகூட மறுக்கிறீர்களே ஏன்?.பள்ளிப் பேருந்தில் வந்த தங்கள் ஊர் மாணவிகளைப் பார்த்து(6, 7-ம் வகுப்பு படிக்கும் சிறுமிகள்)டாட்டா காட்டியதாகச் சொல்லி 10,11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களைத் தாக்கியுள்ளனர் கொங்கு வேளாளக் கவுண்டர் சாதியினர்.அம்மாணவர்கள் தாங்கள் எதற்காக தாக்கப்பட்டோம் என்பது கூட தெரியாமல் தங்கள் பெற்றோரிடம் முறையிடவே,அவர்கள் தாக்கியவர்களிடம் சென்று எதற்காக தாக்கினீர்கள் என்று நியாயம் கேட்டுள்ளனர்.“சக்கிலிய பசங்க எங்க புள்ளைங்களுக்கு டாட்டா காட்டுவதா”என்று இழிவு படுத்தியுள்ளனர்.இதனால் மேலும் கோபமடைந்த ஒரு மாணவனின் தாய்,கேட்டவனின் சட்டையைக் கோர்த்துப் பிடித்து தகராறு செய்துள்ளார்.தள்ளுமுள்ளு நடந்ததில் அந்த தாயும் தாக்கப்பட்டார்.பள்ளி மாணவர்கள் டாட்டா காட்டியத்தைக் கூட பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள் இதை தங்கள் சாதிக்கு விடுக்கப்பட்ட சவாலாக எடுத்துக்கொண்டு உடனடியாக ஃபோன் மற்றும் வாட்ஸ்-அப் மூலம் சுமார் 50-க்கு மேற்பட்ட இளைஞர்களைத் திரட்டிக்கொண்டு கம்பி,கத்தி, உருட்டுக்கட்டையுடன் 7 மணியளவில் அருந்ததியர் தெருவிற்குள் தாக்குதல் தொடுக்க நுழைந்துள்ளனர். கோவிலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த நாம் தமிழர் கட்சியின் இராசேந்திரன் என்பவர் தாக்க வருவதில் தன்னுடன் படித்த நபர்களும் இருக்கவே,“என்ன பிரச்சினை, எதுவாயிருந்தாலும் பேசிக்கொள்ளலாம்” என்று கூறிக்கொண்டிருக்கும் போதே அவரை சுற்றி வளைத்து தாக்கி மண்டையைப் பிளந்தது அந்தக்கூட்டம். நீதான்டா எல்லாத்துக்கும் காரணம் உன்னை கவனிச்சா எல்லாம் சரியாகும் என்று சொல்லி தாக்கினர்.இவர் ஊரின் நலனுக்காக தகவல் உரிமைச்சட்டத்தில் மனு போட்டு பல நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடங்கி கவுன்சிலரிடம் சென்று வாதாடுவது வரை பல விசயங்களில் ஆதிக்க சக்திகளின் எதிர்ப்பை சம்பாதித்து வைத்துள்ளவர்,இவர்.இவர் மீதான தாக்குதலைத் தடுக்க வந்த இவரது தம்பி இராமலிங்கத்தையும் சுற்றி வளைத்து தாக்கி காலை உடைத்தனர்.ஏற்கெனவே அவரது கால் உடைந்து பிளேட் வைக்கப்பட்டு மெல்ல நடக்க ஆரம்பித்த அந்த காலை மீண்டும் உடைத்துள்ளனர்.குறிப்பாக கும்பலில் ஒருவன் இதுதானடா உடைந்த கால் என்று கேட்டே தாக்கி உடைத்துள்ளார்கள்.வட தமிழகத்தில் வன்னியர்களாலும்,தென் தமிழகத்தில் தேவர் சாதிகளாலும் விசிறி விடப்பட்ட சாதி வெறி தற்போது மேற்கு மண்டலத்தில் கொங்கு வெள்ளாள சாதி சங்கங்களால் திட்டமிட்டு வளர்க்கப்பட்டு வட,தென் தமிழகத்திலுள்ளது போல மேற்கு தமிழகத்திலும் சாதி வெறி கொழுந்து விட்டு எரிகிறது!.உங்களின் திராவிடராய்,தமிழராய் ஒன்றிணைவோம் என்ற வெற்று சவடலால் என்ன பயன்?.இங்கு நடந்த இந்தக் கொடுமைகளை கண்டித்து போராடாமல் தவிர்த்து விட்டு ஆயிரம் மைல்களுக்கு அப்பால் குஜராத்தில் நடந்ததை மட்டும் எழுதுவதென்பது நேர்மையான,நியாயமான செயல்தானா?.

  ReplyDelete
  Replies
  1. ஜெயகுமார்30 July 2016 at 13:55

   According a report by Indiaspend, in 2014, only 3.4% of crimes against the Scheduled Castes in Gujarat ended in convictions, compared to a national rate of 28.8%. “Over the decade ending 2014, the average conviction rate in cases of crimes against SCs in Gujarat was 5%; in crimes against STs, it was 4.3%. The national average was 29.2% and 25.6% respectively,” the report says.

   Delete
  2. திரு வியனராசு அவர்களுக்கு, உங்கள் பதிவில் எங்கள் மீது ஒரு கடுமையான குற்றச்சாற்று இடம்பெற்றுள்ளது.இங்கே நடக்கும் ஜாதிக் கொடுமைகளுக்கு முகம் கொடுக்காமல் எங்கோ ஆயிரம் மைல்களுக்கு அப்பால் நடக்கும் ஒன்றைப் பற்றி பேசுவதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். தருமபுரி இளவரசன்,கோகுல்நாத், உடுமலை சங்கர் ஆகியோர் குறித்து நங்கள் மூச்சு கூட விடவில்லை என்கிறீர்கள்.

   மனசாட்சி உள்ள எவராலும் இப்படி எழுத முடியாது. நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்துக் கொடுமைகளுக்கும் எதிராக உடனடியாகக் குரல் கொடுத்த இயக்கம் திராவிடஇயக்கத் தமிழர் பேரவை. அவற்றைக் கண்டித்து ஆர்ப்பாட்டம், கருத்தரங்குகள் நடத்தியுள்ளோம். தொலைக்காட்சிகளில் பலமுறை நான் மிகக் கடுமையாகக் கண்டித்துப் பேசியுள்ளேன். அதற்காக என்னைக் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டுமென்று தென் மாவட்டங்களில் சுவரொட்டி ஒட்டப்பட்டது. அண்மையில் கூட யுவராஜின் ஒலிப்பதிவில் மிரட்டல் விடப்பட்டது.

   ஜாதி ஒழிப்பில் என்றும் எங்கள் பங்கைச் செலுத்த நாங்கள் தவறியதில்லை. உண்மைகளை மறைக்க முயல்வது நேர்மையாகாது.-

   Delete
 11. பள்ளியில் மட்டுமல்ல, வழிபாட்டு உரிமையிலும் கூட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இன்றும் முழு உரிமை கிடைக்கவில்லை. மறுபுறம் தலித் மக்களின் பிரதிநிதிகளாக சொல்லிக் கொள்கிற தலித் கட்சிகளும் கூட அம்மக்களின் சமத்துவ உரிமைகளுக்காக மற்ற உழைக்கும் மக்களோடு ஐக்கியப் பட்டு போராடாமல் சராசரி ஓட்டுக் கட்சி வழிமுறைகளையே பிரதானமான அரசியல் வழிமுறைகளாக வைத்திருக்கின்றனர். அதன்படி திருவிழா வசூல், கட்டப் பஞ்சாயத்து என்று பிழைப்புவாதத்தில் மூழ்கிவிட்டனர். இறுதியில் ஆதிக்க சாதி வெறியர்களின் அட்டூழியங்களும் அதிகரித்துக் கொண்டே போகிறது. அத்தோடு பா.ம.க போன்ற சாதிவெறிக் கட்சிகளும் தமது பிரதான அடிப்படையாக சாதிவெறியை கொம்பு சீவிவிடுவதையே வைத்திருக்கின்றனர்.

  எனவே திருவிழா, பள்ளி, இன்னபிற பொது இடங்களில் எந்நேரமும் சாதிக் கலவரம் வெடிக்கும் அபாயம் உள்ளது. இதில் பெரும்பகுதி தாழ்த்தப்பட்ட மக்களும் சிறுபகுதி ஆதிக்க சாதி மக்களும் பாதிக்கப்படுகின்றனர். இதுதான் ஆதிக்க சாதி வெறியர்களின் ஓட்டுக் கட்சி முதலீடாக உள்ளது.

  எனவே ஆதிக்க சாதிவெறியர்களை குறிவைத்து அதே சாதிகளில் உள்ள உழைக்கும் மக்கள் தாழ்த்தப்பட்ட மக்களோடு இணைந்து போராட வேண்டும் என தொடர்ந்து சாதி ஒழிப்பு களத்திலிருந்து நேர்மையாக அயராது போராடும் அய்யா சுப.வீ அவர்களின் உழைப்பை கேள்வி கேட்க்கும் வியனரசுவின் அமைப்பையும்,கொள்கையும் சொல்லுங்கள்.

  இனி நாங்கள் சொல்கிறோம்
  நீங்கள் யாரென்று!!!

  ReplyDelete
 12. பார்பன தோழர் சிறீராம் அவர்களுக்கு:

  நாங்கள் 30 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த்தை பேசவில்லை.

  3000 ஆண்டுகளாக இருக்கும் நிலையை கட்டுடைக்கப் போராடிக் கொண்டிருக்கிறோம்!

  அதி புத்திசாலி தனமாக பேசும் பார்பன நண்பரே
  வேறு ஏதும் வேண்டாம் உங்கள் அர்சகர் உரிமையை கூட விட்டுத்தர முடியாத நீங்கள் அமெரிக்காவுல தான் இனி மணியாட்டனும்!

  ReplyDelete