தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Sunday 14 August 2016

அடுத்த களம் அழைக்கிறதா?


இரண்டு நாள்களுக்கு முன் அனைத்திந்திய வானொலி நிலையம் அதிர்ச்சி மிகுந்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. எதிர்ப்புகள் வந்தபின் இப்போது அதனைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

பொதுவாக மாநிலத் தலைநகரங்களில்தான், மாநில மொழிகளின் செய்திப் பிரிவுகள் இருக்கும். அங்கிருந்து ஒலிபரப்பப்படும் செய்திகளே, அந்த மாநிலத்தின் பிற பகுதிகளில் உள்ள வானொலி நிலையங்களில் வழி ஒலிபரப்பாகும். . எனினும், நீண்ட நாள்களாகவே, தலைநகரங்கள் அல்லாத சில குறிப்பிட்ட நகர வானொலி நிலையங்களில் மாநிலச்  செய்திப் பிரிவு உண்டு.இந்தியாவிலேயே, இந்தூர், தார்வார், பூனே, திருச்சி முதலான ஏழு நகரங்களில் மட்டும்  அத்தகைய பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.


அவ்வாறு செயல்பட்டுவந்த திருச்சி வானொலி செய்திப் பிரிவுக்குத் தனி இடமும், மதிப்பும் உண்டு. தமிழகத்தின் தென் மாவட்டங்கள் அனைத்தும் பல்லாண்டுகளாகத் திருச்சி வானொலி நிலையச்  செய்திகளுக்குப் பழக்கப்பட்டவை. 

இப்போது திடீரென்று தலைநகரங்கள் அல்லாத ஊர்களில் செயல்படும்  வானொலி நிலையங்களில் மாநில மொழிச் செய்திகள் நிறுத்தப்படும் என்றும், அங்கு இந்தி, ஆங்கிலம், காஷ்மீரி ஆகிய மூன்று  மொழிகளில் ஒன்றில் மட்டுமே செய்திகள் படிக்கப்பட வேண்டும் என்றும், தேவையே இல்லாமல் ஓர் ஆணை வெளியிடப்பட்டது.

திருச்சி வானொலியில் எதற்கு இந்தியும், காஷ்மீரியும்? ஏற்கனவே ஆங்கிலச் செய்திகள் உள்ளன. மீண்டும் ஏன் இன்னொரு ஆங்கிலச் செய்தி? "நண்டு வளைக்குள் குரங்கு வாலை  விட்டுப் பார்ப்பது போல..."என்று கிராமங்களில் ஒரு சொலவடை உண்டு. மத்திய அரசு அடிக்கடி அந்தச் செயலைத்தான்  செய்து கொண்டிருக்கிறது.

தமிழ்நாடு விழித்துக் கொள்வதற்கு முன், பூனேயிலும், கோழிக்கோட்டிலும் பெரும் எதிர்ப்புகள் ஏற்பட்டு, அந்தந்த வானொலி நிலையங்களுக்கு முன்னாள் ஆர்ப்பாட்டமும் நடந்துள்ளது. பா.ஜ.க.வின் கூட்டணிக் கட்சியான சிவசேனாவே பூனேயில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது. இந்த எதிர்ப்பு மற்ற மாநிலங்களுக்கும் பரவிவிடும் என்பதைப் புரிந்துகொண்ட பின், இப்போது தாற்காலிகத் தடை என்று அறிவித்துள்ளனர். 

தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், தமிழ்ச் செய்திகளுக்குத் தடை என்பது வெறும் வதந்தி என்கிறார்.  அப்படியானால் இப்போது வெளிவந்திருக்கும் தாற்காலிகத் தடைக்கு என்ன பொருள்? ஓ...இந்த அரசு வதந்திகளுக்கு கூடத்  தடை ஆணை போடும் போலிருக்கிறது!!


4 comments:

  1. News in Tamil continues as usual. In today's hindu it is clearly reported.

    A senior official of the All India Radio said that there is much confusion prevailing over the decision. “The news has been widely misread. Though we haven’t received any formal orders, what will likely happen is that the 1.45 p.m. Tiruchi slot will be taken up by Chennai bureau. There is no question of discontinuing Tamil news. Those who were in-charge of news in Tiruchi will be absorbed by Doordarshan. The broadcast from New Delhi will continue,” said a senior official of All India Radio, who requested anonymity.

    ReplyDelete
  2. இந்தித் திணிப்பை எதிர்த்து தமிழ் நாடு தீவிரமாகப் போராடவேண்டும் !

    ReplyDelete
  3. இதையெல்லாம் விட கொடுமை ஒன்று பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. நான் தூத்துக்குடி வானொலி நிகழ்ச்சிகளை நாள்தோறும் தவறாமல் கேட்டு வருகிறேன். நடுவணரசு சமூக நலத்துறை சார்பில் மக்களுக்குத் தேவையான பயனுள்ள செய்திகள் வானொலி மூலம் இந்தியில் விளம்பரங்கள் செய்து வருகிறார்கள். இது தொடர்பாக வானொலி நிலையத்திற்கு கடிதங்கள் அடிக்கடி எழுதினாலும் அவர்கள் கண்டு கொள்வதேயில்லை. முதலில் இந்தப் பகுதியில் உள்ள மக்கள் இந்தி விளம்பரங்களை புரிந்து கொள்ள முடியுமா என்ற அறிவு கொஞ்சம் கூட இல்லாமல் மக்கள் வரிப்பணத்தை வீணடித்து வருகிறார்கள். இந்து ஆங்கில நாளேட்டில் இருமுறை எனது கடிதம் இது தொடர்பாக பிரசுரமாகியுள்ளது. ஆனாலும் பலனில்லை. இதனை எந்தக் கட்சிகளும் கண்டுகொள்வதாகத் தெரியவில்லை. முதலில் தமிழ் நாட்டில் உள்ள வானொலி நிலையங்களில் இந்தியில் அரசு விளம்பரங்கள் செய்யப்படுவது தடுக்கப் படுவது மிகவும் முதன்மையானது. இந்த இந்தி விளம்பரங்கள் வானொலியில் மட்டுமில்லாமல் தமிழ் தொலைக்காட்சிகளிலும் கூட வர ஆரம்பித்து விட்டது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. தடுக்கப்படவும் வேண்டியது. - வே. பாண்டி / தூத்துக்குடி

    ReplyDelete
  4. ""திருச்சி வானொலியில் எதற்கு இந்தியும், காஷ்மீரியும்?""

    அதுபோல மத்திய சென்னை பாராளுமன்றத் தொகுதியிலும், துறைமுகம் சட்டசபை தொகுதியிலும் ஏன் இந்தி மொழியில் தேர்தல் பிரச்சார சுவரொட்டிகள்?

    பள்ளிகளில் , வானொலியில், ரயில் நிலையத்தில் வரக்கூடாத இந்தி, தேர்தல் பிரசாரத்தில் மட்டும் வரலாமா?

    https://www.google.co.in/imgres?imgurl=http%3A%2F%2Fwww.newsbharati.com%2FEncyc%2F2014%2F4%2F7%2F5_08_44_51_dayanidhi_maran_hindi_H%40%40IGHT_290_W%40%40IDTH_460.jpg&imgrefurl=http%3A%2F%2Fwww.newsbharati.com%2FEncyc%2F2014%2F4%2F7%2FDayanidhi-Maran-woos-Hindi-speaking-population-in-Chennai&docid=Vl4ud7WGLjrilM&tbnid=KjygH73j6yPd4M%3A&w=460&h=290&hl=en&bih=667&biw=1366&ved=0ahUKEwjwweKu5cfOAhWLOY8KHWqBAzIQMwghKAAwAA&iact=mrc&uact=8

    ReplyDelete