தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Wednesday, 7 December 2016

அய்யாவின் அடிச்சுவட்டில் (பாகம் 5 ) நூல் வெளியீட்டு விழா 02-12-2016


5 comments:

 1. அருமையான உரை !

  ReplyDelete
 2. நாட்டை முன்னேற வேண்டும் என்று உண்மையோடு உழைப்பவரை பார்த்து 5 சட்டை 4 புடவை என்று எப்படி உங்களுக்கு பேச தோன்றுகிறதோ. மோடி வெறுப்பு ஒரு மனநோயாக மாறி விட்டது என்று ஜெயமோகன் அவர்கள் கூறியதை நினைவு படுத்திகொள்கிறேன்.காவி காவி என்கிறீர்களே பெரியார் ஏன் காவியான ராஜாஜியோடு சேர்ந்து அண்ணாவை வெறுத்தார். ஆந்திராவில் இருந்து இங்கே வந்து தமிழ் பேசினா நாங்கள் தமிழர்கள் ஆகி விடுவோம். நீங்கள் ஆந்திரா வந்து தெலுங்கு பேசினாலும் தெலுங்கர் ஆக முடியாது என்று தெலுங்கு நண்பர் சிரித்து கொண்டே சொன்னார். ஒரு அளவுக்குதான் பெரியாரை எடுத்துகொள்ள முடியும். எத்தனையோ தமிழர்கள் அல்லது தமிழ் சாதியினர் இங்கே தன்னிலை மறந்து தமிழர்களுக்கு தொண்டு செய்திருக்கிறார்கள். பெரியார் சொல்லிகொண்டே இருந்ததை சில வரிகளில் சொல்லிவிட்டு போன தமிழ் தலைவரை அவரது வாடஸ்அப் மெஸ்ஸேஜை படிக்க முடிகிறது. உண்மையான தமிழனாய் வாழ்கின்ற, எல்லா தமிழனும் நல்ல படியாக வாழ்வதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்து கொண்டு இருக்கிற அதனை செயல் படுத்துகிற எத்தனையோ பேருக்கு கிடைக்காத பெயரை பெரியாருக்கு பெற்று தர முயற்சிப்பதன் நோக்கம் என்ன. நிச்சயமாக தெலுங்கு மொழி பேசுபவரை வெறுக்க சொல்ல வில்லை. அவர்களுக்குள்ளும் பிரிவுகள் உள்ளன. நல்லவர் கெட்டவர் உண்டு. ஒரு தனி மனிதராய் பார்க்காமல் ஒரு சமூகமாக ஒரு சாதியாக அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று பார்க்கின்ற பழக்கத்தை மக்களுக்கு உங்களை போன்றவர்கள் ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொருவரும் அவர் சார்ந்த சாதி அவர்கள் எப்படி பொது வாழ்வில் நடந்து கொள்கிறார்கள். நல்லனவற்றை ஒரு சமூகமாக பாராட்டுங்கள். கெட்டது செய்தால் குரல் கொடுங்கள். அதிலும் பாரபட்சம் காட்டாமல் உண்மையாக இருங்கள். கடுமையாக பேசாமல் மென்மையாகவே இதனை சாதிக்கலாம். ஒரு சாதியில் ஒரே ஒருவன் நல்லவனாய் பிறந்து அவரை பாராட்டி கொண்டே இருப்பதால் அதன் பயனை அனுபவிக்க போவது கெட்டவனாக இருந்தாலும் அவர் வழி வந்தவர்தான். இதுதான் நாம் பார்ப்பது. இதுதான் யதார்த்தமும் ஆகும்.

  ReplyDelete
 3. திரு கலைஞர் கருணாநிதி அவர்கள் தம் வயதை ஒட்டிய சில உடல் உபாதைகளால் சிரம்ப்படும் இவ்வேளையில் அவரே கற்றுக்கொடுத்த பகுத்தறிவின் பலத்துடன் அவருக்கு நன்றி சொல்லும் விதமாக இத்தருணத்தைப் பயன்படுத்திக் கொள்ள விழைகிறேன்.
  தமிழ்நாடு தமிழ்நாடாக இத்தனை ஆண்டுகள் வளர்ந்ததற்கும் தமிழர்கள் சாதி பாகுபாடின்றி பரவலாக நன்கு படித்த, உயர்ந்த சிந்தனை உள்ளவர்களாக உயர்ந்ததற்கும் கலைஞர் ஒரு மிகப்பெரிய காரணம்.
  கலைஞர் அவர்களே உமக்கு நன்றி.
  திராவிடர் கழகம் பாதுகாத்து வளர்த்த பெரியாரின் கொள்கைகளைச் செயல்படுத்த திமுக தானே ஆதாரமான அரசியல் இயந்திரமாக இருந்து வந்திருக்கிறது.
  அவ்வாறு செயல்படுத்தப்பட்ட சமத்துவ சுய மரியாதைக் கொள்கைகளால் தானே இன்று சாமானிய கடைக்கோடி தமிழனும் மரியாதையாக வாழ முடிகிறது.
  கலைஞர் அவர்களே உமக்கு நன்றி.
  கலைஞரை மதிப்பவர்கள் அவரை எதிர்ப்பவர்களிடமிருந்து மூன்று காரணிகளால் வேறுபடுவதை என்னால் காண முடிகிறது.
  1. வரலாற்று அறிவும் ஆர்வமும்:
  கலைஞரை மதிக்கிறவனுக்கு வரலாறு தெரிந்திருக்க வேண்டும். வரலாறு தெரிந்து கொள்ளும் ஆர்வமும் அதன் உண்மைகளை ஒத்துக்கொள்ளும் பக்குவமும் வேண்டும்.
  2. சுய மரியாதை:
  கலைஞர் அபிமானி சுயமரியாதைக் கொண்ட்வராகவும் மற்றவர்களும் சுயமரியாதையோடு வாழ்வதை ஊக்குவிப்பவராகவும் இருந்தாக வேண்டும்.
  3. உழைப்பின் மேல் நம்பிக்கை:
  கலைஞரை மதிப்போர் தங்கள் உழைப்பை நம்புவோராக, எதிர்காலத்தின் மேல் நம்பிக்கை உள்ளோராக இருக்க வேண்டும்.
  இந்த மூன்று காரணிகளில் ஒன்றை இழந்தால் கூட திமுகவே அன்னியமாகப் போய் விடுகிறது. இன்னும் சொல்லப்போனால் இந்த 3 காரணிகளையும் உள்ளடக்கிய ஒருவனால் திமுகவைத் தவிர வேறொரு கட்சியை ஆதரிப்பது கடினமாகி விடுகிறது. இப்படி கொள்கையை அடித்தளமாக வைத்து ஒரு இயக்கத்தை எழுப்பியதற்கு
  கலைஞர் அவர்களே உமக்கு நன்றி.
  அறுபதுகளிலும் எழுபதுகளிலும் முக்கால்வாசி தமிழ்ச்சமூகம் இந்த முக்காரணிகளால் ஆட்கொள்ளப்பட்டதன் விளைவு தான் பல துறைகளில் மற்ற மாநிலங்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு தமிழகம் முன்னேறியது.
  கலைஞர் அவர்களே உமக்கு நன்றி.
  திராவிடச் சுயமரியாதை சிந்தனைகள்
  தமிழகத்தில் எந்த அளவு வேரூன்றி விட்டதென்றால்,
  மிகப்பெரிய பத்திரிகை நிறுவனங்கள் தொடர்ந்து செய்துவந்த திட்டமிட்ட
  தாக்குதல்களும்
  பின்னாளில் திரைப்படத்துறையிலிருந்து அரசியலுக்கு வந்தவர்களின் உணர்வு சார்ந்த அரசியலும் கூட
  தமிழர்களை ரொம்பவும் நீர்த்துப் போகவிடாமல்
  திராவிட வைராக்கியம்
  காத்து வருகிறது.
  கலைஞர் அவர்களே உமக்கு நன்றி.
  இந்தியை எதிர்க்காமல் இருந்திருந்தால் இத்தனை நாளில் என் அடையாளத்தை இழந்து இருப்பேனே.
  என் அடுத்த தலைமுறையை வட மாநிலத்தவர் அவர்களில் ஒருவராக ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில்,
  என் பேரக்குழந்தைகள் நகைப்புக்குரியவர்களாக ஆகியிருப்பார்களே. அதை எதிர்கால நோக்கோடு தடுத்து இருக்கிறீர்.
  கலைஞர் அவர்களே உமக்கு நன்றி.

  ReplyDelete
 4. ‌நாம் அவர்களை வெறுக்க வில்லை. அவர்கள்தான் நம்மை வெறுக்கிறார்கள்.அவ்வளவாக அறிமுகம் இல்லாத ஒருவர். தினமும் பார்க்க நேரிடுகிறது. வாசன் ஐகேர் பற்றி அநாவசியமாக தவறான தகவல் பரப்புகிறார். நான் அவரா இவர் என்று யோசிக்கிறேன். நினைத்த மாதிரியே ஒரு வாரத்தில் தெரிய வருகிறது. தெலுங்கை தாய்மொழியாக கொண்டவர். எல்லாரும் இப்படி இல்லை. அவர்களிலேயே ரெட்டி மற்றும் காபு போன்றவர்கள் மனதில் எதுவும் இல்லாமல் யதார்த்தமாக பழகுகிறார்கள். சிலர் அப்படி இல்லை. அவர்கள் இயல்பு அப்படி. தெலுங்கர்களை விடுங்கள்.இங்கே என்ன நடக்கிறது. தமிழர்கள், தமிழர்களை நேசிக்காத சிலரை தலைவராக ஏற்கிறார்கள்.அவர்களுக்காக உயிரை விடுகிறார்கள். தமிழர்களை நேசிக்கும் தமிழையே சுவாசிக்கும் நேசிக்கும் தலைவரை வெறுக்கிறார்கள். அவர் மருத்துவமனை சென்று வருவதை விமர்சிக்கிறார்கள். வாட்ஸப்பில் ஆயிரம் மீம்ஸ் வருகிறது தினமும். அடுத்து ஏதாவது ஒரிசா நடிகையை முதலமைச்சர் ஆக்கி அவர் தமிழகத்தை நாசமாக்கிய பின்னாலும் அதை உணராமல் பிறகு இப்படி கண்ணீர் விடுவானா..மாண்டு போவானா ..தமிழன் என்று வருத்தம் கொள்கிறேன்.

  ReplyDelete
 5. நடராஜன் கண்ணையன்28 December 2016 at 13:35

  ஆசிரியர் வீரமணியின் கோணம் சரியாகப்படவில்லை. பா.ஜ.க. அதி.மு.க.வில் ஊடுருவ முயன்றால் யார் மூலமாக முடியும் ? பா.ஜ.க.வுக்கு நெருக்கமாக உள்ளவர் தம்பி துரைதான். ஆனால் அவருக்கு எந்த நிர்பந்தமும் இல்லை. சிக்கலும் இல்லை. இன்று சிக்கலில் உள்ளவர் யார் ? சசிகலாதான் சொத்துகுவிப்பு வழக்கின் தீர்ப்பை எதிர்நோக்கி இருக்கிறார். வேறு பன்னீரோ, தம்பிதுரையோ அல்லது வேறு தலைவர்களோ அம்மாதிரியான சிக்கல் இல்லை. எனவே பா.ஜ.க. சசிகலாவைத்தான் தனது கருவியாக பயன்படுத்தும். தவிர, ஜெயாவும் சசி கூட்டமும் அடித்த கொள்ளை பணமெல்லாம் எத்தனை கண்டைனர்கள் எங்கு உள்ளது என்ற விபரம் சசிகலா அண்ட் கோ வுக்கு மட்டுமே தெரியும். மற்ற மங்குனி மந்திரிகளுக்குகூட தெரியாது.ஆக சசிகலா கை ஓங்குவது பா.ஜ.க.கை ஓங்குவதாகும். எல்லாமே பா.ஜ.க. கன்னசைவுப்படியே நடக்கும். காவிகள் காலூன்றவும் அதிகாரம் செய்யவும் ஏற்பாடாகும். ஆட்சி கவிழ்ந்தாலும் பா.ஜ.க. அரசு குடியரசுத்தலைவர் ஆட்சியை கொண்டுவந்து மறைமுக ஆட்சி செலுத்தி காலூன்ற முயற்சி செய்யும். எப்படி பார்த்தாலும் 6 மாதத்திற்குமேல் வைத்திருக்கமுடியாது. தேர்தல் நடத்தவேண்டும். அப்படி தேர்தல் வந்தால் தி.மு.க.வெல்லும் ( குடும்ப பிரச்சினை இல்லை என்றால்). பா.ஜ.க. சசிகலா மூலமாக இன்னும் 2019 வரை மூன்று ஆண்டுகாலம் ஆட்சிசெய்து நன்கு காலூன்றலாம். சசிகலா இல்லாமல் ஆட்சியை கவிழ்த்து ஆறுமாதகாலம். மட்டும் ஆட்சி செய்யலாம். பன்னீர் தலைமையில் தொடர்ந்தால் கவிழ்ந்தாலும் தி.மு.க. ஆட்சி உரிமை கோரலாம். எல்லாவற்றையும்விட சசிகலா கொள்ளையடிக்காதவர் என்று வீரமணி சொல்கிறாரா? கொள்ளையடித்த பெண்மணி ஆட்சி செய்ய விரும்புகிறாரா?

  ReplyDelete