தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Sunday 25 December 2016

அமெரிக்க நண்பர்களுடன் ஓர் உரையாடல்


தந்தை பெரியார் நினைவு நாளையொட்டி,24.12.2016 அன்று காலை இந்திய நேரப்படி 6.40 முதல் 8.05 வரையில் அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் வாழும்  தமிழக நண்பர்களுடன் தொலைபேசி வழியாக  உரையாடும் நல்ல  வாய்ப்பை, பெரியார் பன்னாட்டு நிறுவனப் பொறுப்பாளர், மருத்துவர் இளங்கோவன் அவர்கள் ஏற்படுத்திக் கொடுத்தார்.


பெரியாரும் இன்றைய தமிழகமும் என்னும் தலைப்பில் நான் 20 நிமிடங்கள் உரையாற்றியபின், நண்பர்கள் வினாக்களைத் தொடுத்தனர்.  ஏறத்தாழ ஒரு மணி நேரம் நீண்ட அவ்வுரையாடலில் பல்வேறு செய்திகள் பகிர்ந்து கொள்ளப் பட்டன.

பெரியாருக்குப் பின் தமிழ்நாட்டின் நிலை என்னவாக உள்ளது, ஏன் சாதியம்  மேலும் மேலும் இறுகிக்  கொண்டே போகிறது, திராவிடம் என்னும் சொல்லின் இன்றைய பொருத்தப்பாடு என்ன, மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்டபோது தேவிகுளம், பீர்மேடு ஆகிய பகுதிகளைக் காப்பாற்றப்  பெரியார் முயற்சி எடுக்கவில்லை என்பது உண்மையா என்பன போன்ற வினாக்கள் தொடுக்கப்பட்டன. பெரியாரிய இயக்கங்கள் அனைத்தும் ஒன்றுபட்டுச் செயலாற்ற வேண்டிய காலகட்டமாக இன்றைய தமிழகச் சூழல் உள்ளது என்னும் கருத்தினை அமெரிக்க  நண்பர்கள் வலியுறுத்தினர்.

அண்மையில் அமெரிக்கா சென்றுவந்த சிலர், பெரியாருக்கும், ,  திராவிட இயக்கத்திற்கும்  எதிரான தங்கள் கருத்துகளை அங்கும் விதைக்க முயன்றுள்ளனர் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.  ஆனால் அந்தப் பொய்யுரைகள் அங்கு எடுபடவில்லை என்பதையும் அறிந்து கொள்ள முடிந்தது. 

திராவிடம் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவதுதான் தங்களின் லட்சியம் என்று சில நாள்களுக்கு முன் ஆர்.எஸ்.எஸ். குருமூர்த்தி ஓர் ஆங்கில நாளேட்டில் கூறியுள்ளார். தமிழ்த் தேசியர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் சிலருக்கும் அதுதான் கனவாக உள்ளது. திராவிடம் வீழ்ந்தால்தான் ஆரியம் மீண்டும் எழும் என்பதை அவர்கள் அறிந்து வைத்துள்ளனர். 

இன்னும் ஒரு நூற்றாண்டு சென்றாலும், அவர்களின் கனவு நிறைவேறப்  போவதில்லை. 



5 comments:

  1. திராவிடம் நிலைத்து நிற்கும்

    ReplyDelete
  2. ஆம் ! தமிழன் தான் திராவிடன் ! கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகியவற்றைத் தாய் மொழியாகக் கொண்டோர் தங்களை திராவிடர் அன்று கூறினால் அவ்ர்களையும் வரவேற்ப்போம். தமிழ் எல்லோருக்கும் மூத்தகுடி ! அதின் நாடு தான் எங்கள் திராவிடப் பொன் நாடே !

    ReplyDelete
    Replies
    1. மிக சரியான கருத்து.

      Delete
  3. Dravidar kazhagam is the proof to the whole world that rationalist can fight and should fight against social inequality wherever it is necessary by uniting all the rationalist together with persistence.

    ReplyDelete
  4. Balaji Varadarajan26 December 2016 at 00:27

    திராவிடம் என்பதே சமஸ்க்ரித சொல்லாமே?
    திராவிடம் என்றால் தென்னகத்து பிராமணர்கள் என்று பொருளாமே?
    மணியரசன் ஆதாரத்தோடு சொல்கிறாரே. சுபவீ உங்கள் பதில்?

    ReplyDelete