தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Saturday 14 January 2017

வலியோடு ஒரு வாழ்த்து!


கருகிக் கிடக்கும் பயிர்களைக் கண்டு 
உருகி ஓடும் உழவரின் உயிர்கள் 

கொத்துக் கொத்தாய் உழவர்கள் இப்படிச் 
செத்த தில்லை இதுவரை நாட்டில் 

இந்தப் பொங்கலில் இதயம் மகிழ்ந்து 
எந்த வகையில் வாழ்த்து சொல்ல? 

வலிகள்  குறைந்து வாழ்க்கை செழிக்க 

வாழ்த்திக் கொள்வோம் ஒருவரை ஒருவர்!

1 comment:

  1. இதற்கு என்னதான் தீர்வு..

    டிஸ்கவரி சானலில் சீன கார்பரேட் நிறுவனங்கள் ரஷ்யாவிற்கு சென்று நிலங்களை வாங்கி விவசாயம் செய்வது காண்பித்தார்கள். சீன கார்ப்பரேட் விவசாயிகள் சதுர கிலோமீட்டர் கணக்கில் ரஷ்ய நிலங்களை வாங்கி விவசாயம் செய்கிறார்கள். அடுத்து விவசாயத்திற்கு ஏற்ற உக்ரைன் நாட்டு நிலங்களை வாங்கி விவசாயம் செய்ய இருப்பதாக சொல்கிறார்கள்.

    நம் ஊரில் ஒரு விவசாயியிடம் பேச நேர்ந்தது. யதார்த்த நிலவரத்தை தெளிவாக எடுத்து கூறினார்.ஐடிசி கார்ப்பரேட் நிறுவனம் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வாங்கி குவிப்பதாக சொன்னார். கார்ப்பரேட் நிறுவனங்கள் விவசாயத்தில் இறங்கும் என்றும் அடித்து சொன்னார். மேலும் விவசாய தொழிலாளர்களை வட மாநிலங்களில் இருந்து நம் ஊருக்கு வர வைக்க வேண்டிய தேவை (நம் ஊரில் விவசாய கூலி உயர்வு)இருப்பதாகவும் சொன்னார்.
    ரியல் எஸ்டேட்டில் பாதி நிலங்களை இழந்த விவசாயிகள் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் அடுத்து நிலங்களை இழக்க போகிறார்கள். இதற்கு ஒரே தீர்வு கூட்டு விவசாயம்தான். விவசாயிகள் ஒன்றாக இணைந்து கார்ப்பரேட் நிறுவனங்கள் எப்படி நிர்வாகம் செய்கிறதோ அதே போல நிர்வாகம் செய்ய வேண்டும். வரப்புகளை உடைத்தெரிய வேண்டும். ரஷ்யா போல ஆயிரக்கணக்கான சதுர கிலோமீட்டர் கணக்கில் விவசாயம் செய்ய வேண்டும்.அவரவர் நில அளவுக்கு தகுந்தவாறு விளைச்சலை பிரித்து கொள்ள வேண்டும்.

    ReplyDelete