தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Saturday, 14 January 2017

கோபண்ணாவின் கிடுக்கிப்பிடி13.01.2017 இரவு தந்தி தொலைக்காட்சியில்  'ஆயுத எழுத்து'  பகுதியில் சல்லிக்கட்டு பற்றிய விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. வசந்தி ஸ்டான்லி (தி.மு.க), நிர்மலா பெரியசாமி (அ.தி.மு.க), கே.டி. ராகவன் (பா.ஜ.க) மற்றும் பொதுமக்கள் சார்பில் ரஞ்சித் என்னும் ஒருவர் ஆகியோர் விவாதித்துக் கொண்டிருந்தனர். ஹரி நெறியாளராக இருந்து நடத்திக் கொண்டிருந்தார்.


அப்போது ராகவன், "தங்கள் தேர்தல் அறிக்கையில், சல்லிக்கட்டை ஒழிப்போம் என்று கூறியிருந்த காங்கிரஸ் கட்சியோடு ஓரே மேடையில் நின்று பேசிய ஸ்டாலின், இப்போது சல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்"  என்று கூறினார். காங்கிரஸ் கட்சி தன் தேர்தல் அறிக்கையில் அப்படிக் கூறியிருந்ததாக எனக்கு நினைவு  இல்லை. இருப்பினும், கட்சியின் பொறுப்பான பதவியில் உள்ள ஒருவர் அப்படிக் கூறும்போது அதனைச் சரி பார்க்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன்.அந்த நேரம் சட்டென்று தொலைக்காட்சி நிலையத்தாரோடு  தொலைபேசியில் தொடர்புக்கு வந்தார், காங்கிரஸ் கட்சியின் ஊடகத் துறைப் பொறுப்பாளர் கோபண்ணா.   "இதோ என் கையில் எங்கள் கட்சியின் அறிக்கை  உள்ளது. ராகவன் சொல்வது வடிகட்டிய பொய். அவர் சொன்ன வரி எங்கே இருக்கிறது என்று படித்துக் காட்டச் சொல்லுங்கள். மாறாக, சல்லிக்கட்டு நடத்த முயற்சிகள் எடுப்போம் என்றுதான் இருக்கிறது" என்றார்.

உடனே ஹரி ராகவனைப் பார்த்து, நீங்கள் குறிப்பிட்ட வரி எங்கே இருக்கிறது என்று கேட்க, அவர் தன் கையில் இருந்த இரண்டு தாள்களை எடுத்தார். "இதோ நான் படித்த செய்தித்தாளில் அப்படித்தான் இருக்கிறது" என்று காட்டினார். அது எந்தச் செய்தித்தாள் என்று கூறவில்லை. அடுத்தவர்களை எல்லாம் பல நேரங்களில் ஏளனமாகப் பேசும் ராகவன், தக்க ஆதாரத்தை வைத்துக் கொண்டு அல்லவா பேச வேண்டும்? ஏதோ ஒரு செய்தித்தாளில் வந்தது அல்லது வந்ததாகச் சொல்வது  எப்படி ஆதாரமாகும்? 

பா.ஜ.க.வினர் இப்படிக் கூசாமல் பொய் சொல்ல எங்குதான் கற்றார்களோ தெரியவில்லை..நமக்கு வாய்த்த எதிரிகள் நல்லவர்களாகவும் இல்லை, நாணயமானவர்களாகவும் இல்லை.


6 comments:

 1. பதில்: அவாள் புத்திக்கு இது அப்பட்டமான எடுத்துக்காட்டு. பேசு நா இரண்டுடையாய் போற்றி போற்றி என்று ஆரிய மாயைபற்றி அண்ணா சொன்னதற்கு அரிய உதாரணம்!

  ReplyDelete
 2. இரத்தினவேல்14 January 2017 at 10:54

  பாலைவனத்தில்கூட சோலைகளைக் காணலாம். ஆனால் பா.ஜ.க.வினரிடம் நேர்மை, நாணயத்தைக் காண இயலாது.

  ReplyDelete
  Replies
  1. nice மிக அழகாக சொன்னிர்கள்

   Delete
 3. அது வழி வழியா வருகிறது, புராணம் என்ற பெயரிலே இவர்கள் கூறும் புரட்டுகளும், அவற்றை தற்போதுள்ள படித்தவர்கள் நம்ப வேண்டும் என்பதற்காக நாசாவே சொல்லிருச்சு நாயுடு ஹாலும் ஒத்துக்கிச்சு புருடா விடுறவங்கதான இவங்க?!

  ReplyDelete
 4. ஆம் ! வடிகட்டிய பொய்யர்கள் !

  ReplyDelete
 5. நீண்ட நெடுங்காலமாக ஏராளமான பொய்களை விதைத்து பழக்கப்பட்டு போன அந்த வாய்களுக்கு தங்கள் ஆட்டம் முடிந்து போன விபரம் இன்னும் தெரியவில்லை. அல்லது தெரிந்தாலும் மனம் ஒப்புகொள்ள மறுக்கிறது எனவே மீண்டும் மீண்டும் எல்லாவற்றை பற்றியும் சதா பொய்கதைகளை அவிழ்த்து விட்டே மீண்டும் ஆண்டுவிடலாம் என்று கனவு காண்கிறார்கள்.. வரலாற்றில் முதல் தடவையாக எல்லோருக்கும் எல்லாமும் தெரிகின்ற ஒரு சூழ்நிலை விஞ்ஞான வளர்ச்சியால் ஏற்பட்டு விட்டது. தெருக்கோடியில் இருக்கும் குப்பனும் சுப்பனும் கூட கையில் லாப்டாப் வைத்துகொண்டு படித்த பாப்புக்களை கேள்விகளால் துளைத்து எடுக்கிறான். நாசாவின் சாட்டர்லயிட் திருவண்ணாமலையில் வழிபாடு செய்கிறது. வேத பாஷயங்களை வைத்துக்கொண்டுதான் ஐன்ஸ்டீன் கண்டுபிடிப்புக்களை மேற்கொண்டார். புட்டினும் டொனால்ட் ட்ரம்பும் புரோகிதர்கள் மூலம் நட்சதிர பலன் பார்க்கிறார்கள் என்று இப்போதெல்லாம் கப்சா விட முடிவதில்லை. பார்பனர்களுக்கு இப்படியான எத்தனையோ சோகம்...ஆண்டு ருசிகண்ட பரம்பரை இப்போ அதிகாரம் சுருங்கி கொண்டே வருகிறதே என்ற பதைபதைப்பு .. என்ன செய்வது உளறத்தான் செய்வார்கள்? முன்பெல்லாம் அமேரிக்கா இங்கிலாந்து என்று கதை அளப்பார்கள் இப்போ அது முடிந்து போய்விட்டது. அங்கெல்லாம் பச்சை தமிழன் தமிழை நிலை நாட்டி விட்டான். ஆதங்கம் ஒன்றா இரண்டா? இத்துடன் முடியாது. உலக அரங்கில் சாதிப்பாகுபாடு மனித குலத்திற்கு எதிரான குற்றமாக கனடா அமெரிக்கா ஐரோப்பா போன்ற தேசங்களின் அரசியல் சாசனத்தில் இடம்பெற போகிறது. அத்துடன் சகல சாதிப்பெயர்களும் அங்கெல்லாம் நீக்கப்பட போகிறது. எதிர்பாருங்கள் ஆதிக்க ஜாதியரே தந்தை பெரியாரின் குரல் கண்டங்கள் தோறும் ஒலிக்க போகிறது

  ReplyDelete