தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Friday, 20 January 2017

நல்ல தொடக்கம்

                                                


50 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ஒருமுறை தங்கள் வலிமையை மெய்ப்பித்து உள்ளது தமிழ் மாணவர்கள், இளைஞர்கள் படை. கடற்கரையில் மக்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் இப்படி கடற்கரை மறையும் அளவுக்கு  மக்களைப்  பார்த்ததில்லை. இந்நிலையில் மூன்று செய்திகளை நாம் குறிக்க வேண்டும்


(1) இளைஞர்களின் போர்க்குணம் 

(2)  சமூக வலைத்தளங்களின் வலிமை 

(3)  போராடும் மாணவர்களிடம் காணப்படும் கட்டுப்பாடு 

கொட்டும் பனியையும், குளிரையும் பொருட்படுத்தாமல் கூடியிருக்கும் இளைஞர்கள், இரவு பகலாக உறுதியாக நின்று போராடுகிறார்கள். மணிக்கு மணி அங்கு வந்து இணைபவர்களின்  எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது. குப்பைகளையெல்லாம் அவர்களே சுத்தம் செய்து விடும் ஒழுங்கும், எந்த வன்முறையிலும் ஈடுபடாத அவர்களின் உறுதியும் அனைவரையும் வியக்க வைக்கின்றன.

போராட்டத்திற்குப் பழக்கமில்லாதவர்கள் - கேலியும், மகிழ்வுமாய் வாழ்ந்து பழகியவர்கள் - வீட்டிலேயே முடங்கி கிடந்தவர்கள், இன்று வீதிக்கு வந்துள்ளனர் போராடுவதற்காக. அதனை முதலில் அனைவரும் பாராட்ட வேண்டும்.  சல்லிக்கட்டு தடையை நீக்குவதுதான் அவர்களின் முதல் நோக்கம் என்றாலும், அத்தோடு மாணவர்களும், இளைஞர்களும் இனி அடங்கிவிட மாட்டார்கள் என்று தோன்றுகிறது. அடுத்தடுத்த கல்வி, சமூகச் சிக்கல்களுக்கும் அவர்கள் முகம் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை பிறந்துள்ளதுஇன்று போராடும் இளைஞர்களில் மிகப் பலர், 2014 ஆம் ஆண்டுத் தேர்தலில், மோடி என்னும் மாய பிம்பத்தை வெகுவாக நம்பி வாக்களித்தவர்கள். இன்று மோடியின் சாயம் வெளுத்துவிட்டது. தில்லி சென்ற தமிழக முதலமைச்சரிடம், முகத்தில் அடித்தாற்போல் பேசி அனுப்பியுள்ளார் மோடி.  அவரின் உண்மை முகத்தை நாடு நன்கு புரிந்துகொண்டுவிட்டது. இனிமேல் காவிகளின் காற்று கூட இங்கு வீசுவதற்கு அடுத்த தலைமுறை அனுமதிக்காது

நல்ல தொடக்கம்!


10 comments:

 1. நல்ல தொடக்கம் நல்லதொரு முடிவினைப் பெற்றுத் தரட்டும் ஐயா

  ReplyDelete
 2. மக்கள் நாளை நன்றாக இருக்க இன்று என்ன செயய வேண்டும் என்று யோசித்தாலே புதிய எண்ணங்கள் நல்ல திட்டங்கள் தோன்றும். ஆனால் அப்படி எல்லாம் யாரும் யோசிப்பது இல்லை. கொள்கை என்ற சொல்லி தான் வாழும் காலத்தில் என்னென்னவோ செய்து வீணடித்து விட்டு போய்விடுகிறார்கள். ஹிந்தி எதிர்ப்பால் ஆட்சியை பிடித்து இன்று தாராளமாக சிபிஎஸ்சி் பள்ளிகளை நடத்துகிறார்கள். மோடியை ஏன் எதிர்க்கிறோம் என்றே அறியாமல்தான் இன்று பலர் எதிர்க்கிறார்கள். மம்தா பானர்ஜி மோடி தவிர யார் பிரதமராக இருந்தாலும் தான் வரவேற்பதாக சொன்னார். அவர் ஆதரிப்பதாக சொன்னது அத்வானி அருண் ஜெட்லி போன்ற பார்ப்பணர்கள் மற்றும் ராஜ்நாத் சிங் போன்ற பார்ப்பண ஆதரவாளர்கள். பார்ப்பணரான அவர் இடைநிலைசாதியிலிருந்து வந்த மோடியை வெறுப்பதில் அர்த்தம் இருக்கிறது. மம்தா மட்டுமல்ல பல பார்ப்பணர்கள் அவருக்கு எதிராக வேலை செய்வதை(பிஜேபி கட்சியிலேயே இருந்தோ இல்லாமலோ..) பார்க்க முடிகிறது. இடைநிலைசாதியிலிருந்து இப்போதுதான் ஒருவர் வந்திருக்கிறார். அவர் இடைநிலைசாதியினாலேயே உங்களை போல வெறுக்கப்படுவது நம் மேல் நமக்கு உள்ள நம்பிக்கையின்மையை காட்டுகிறது. நீங்கள் பார்ப்பன காங்கிரசை ஆதரிப்பவர் ஆதலால் இப்படி சொல்கிறீர்கள் என்று எடுத்து கொள்வோம். அப்படி என்றால் நீங்கள் பார்ப்பண ஆதரவாளர் என்றாகி விடுகிறது. அதை விடுத்து பிழைப்பு வாத அரசியல் என்ற ஒன்றும் உண்டு. அதனை பற்றியும் நிறைய விவாதிக்கப்படுகிறது. பார்ப்பணரும் வாஜ்பாய் போல நேர்மையானவராக இருந்தால் நாம் வரவேற்கிறோம். ஆனால் இன்று யார் அவர் போல இருக்கிறார்கள். இந்தியாவில் ஆட்சியாளர்கள் சரியில்லாமல் போனதால்தான் நாம் இப்படி இருக்கிறோம் என்று சராசரி மனிதன் பேசுவதை போல சொல்கிறீர்கள். இந்த 70 வருடங்களாக இடைநிலைசாதியிலிருந்து ஒருவர் நம்மை ஆட்சி செய்து இருந்தால் நாம் முன்னேறி இருப்போம் என்பது என்னுடைய கருத்து. மிகப்பெரிய வணிகர்களாக சங்க காலத்தில் இருந்தே இருந்தவர்கள் வணிகம் கொண்டு தமிழ் வளர்த்தவர்கள இன்று கொஞ்சம் கொஞ்சமாக கீழே போவது கண்டு மனம் வருந்துகிறது. இதற்கு காரணம் உங்களை போன்றவர்களின் தவறான நண்பர்களுடனான கூட்டணி. தவறான கணிப்புகள்.இந்தியா முன்னேறாமல் போக பார்ப்பண அரசியலும் பிழைப்பு வாத அரசியலும் மிக முக்கிய காரணங்கள். வினவு வெப் ஊடகத்தில் இருந்து..

  [17/01, 1:48 PM] Sivasubramanian: எம்.ஜி.ஆர் : முழு வரலாறு ! - http://www.vinavu.com/2014/12/24/mgr-led-tamilnadu-politics-to-degradation/?utm_source=WhatsApp&utm_medium=IM&utm_campaign=share button

  [17/01, 1:48 PM] Sivasubramanian: http://www.vinavu.com/2014/11/08/jayalalithaa-lords-over-tamil-society-with-brahminical-arrogance/

  [17/01, 1:51 PM] Sivasubramanian: http://www.vinavu.com/2009/09/16/annadurai/

  ReplyDelete
 3. இரத்தினவேல்20 January 2017 at 11:58

  1965ஆம் ஆண்டு மொழிகாப்புப் போராட்டத்திற்குப் பிறகு, தன்னெழுச்சியாக மாணவர்கள் சமூக அக்கறையுடன் போராட்டக் களத்திற்கு வந்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏறு தழுவுதல் மட்டுமின்றி, தமிழ்நாட்டைப் பாதிக்கும் அனைத்துப் பிரச்சினைகளிலும் இனிக் கவனம் செலுத்துவார்கள் என்று நம்புவோம்.

  ReplyDelete
 4. " 2014 ஆம் ஆண்டுத் தேர்தலில், மோடி என்னும் மாய பிம்பத்தை வெகுவாக நம்பி வாக்களித்தவர்கள். இன்று மோடியின் சாயம் வெளுத்துவிட்டது " 100% சரியான வார்த்தை , நமது மண்ணில் நமது கலாச்சாரத்தை பின் பற்றுவதை தடுக்க 'பீட்டா' யார் ? மோடி யார் ?

  ReplyDelete
  Replies
  1. 2014 ஆம் ஆண்டுத் தேர்தலில் மோடிக்கு நீங்கள் நிச்சயம் வாக்களித்து இருக்கமாட்டிர்கள்.நீங்கள் மட்டுமல்ல தமிழகத்தில் யார்யாரெல்லாம் வாக்களிக்கவில்லையோ, யார்யாரெல்லாம் வாக்களிக்கவேண்டாம் என்று எதிர் பிரச்சாரம் செய்தார்களோ அவர்கள்தான் என்னமோ அவருக்கு வாக்களித்தது போல போலியாக நடித்து அங்கலாயிக்கிறார்கள்!.இங்கு அவருக்கு கிடத்தது ஒரு தொகுதி மட்டுமே.அதுவும் காவிரி பிரச்சனை, ஜல்லிக்கட்டு பிரச்சனைக்கு சம்மந்தமில்லாத கேரளா மனநிலை கொண்ட கன்னியாக்குமரி தொகுதியில்!. அதுவும் பொன்னார் அவர்களுக்கு கிடைத்த நாடார்களின் கணிசமான ஓட்டுக்களால்,பிஜேபிக்கு கிடைத்த இந்துக்களின் கணிசமான ஓட்டுக்களால்.மோடி தமிழகத்தை நம்பி ஒருபோதும் அரசியல் நடத்தவில்லை. இருந்தும் முல்லைப்பெரியார் பிரச்சனையில் சாதகமான முடிவெடுத்தார்.காங்கிரஸ் ஆட்சியிலிருந்தால் அதுவும் நடந்திருக்காது.ஜல்லிக்கட்டு பிரச்சனைலும் சாதகமான முடிவெடுத்திருக்கிறார்.இப்போது கேரளாவில் வாக்கு வங்கி பிஜேபிக்கு 11% சதவிகிதமாகிவுள்ளது ஆனால் தமிழகத்தில் 3% சதவிகிதம் தான்.ஆகவே அவர் இப்போதாவது யோசிக்க வேண்டும் முல்லைப்பெரியார் பிரச்சனையில் சாதகம் செய்தும் நன்றிகெட்ட மக்களுக்கு, சாராயத்திற்கும் பிரியாணிக்கும் பணத்திற்கும் திமுகவிற்கும் அதிமுகவிற்கும் மாறி மாறி ஓட்டு போடும் பொறுக்கிகளுக்கு ஏன் இனி சாதகம் செய்ய வேண்டுமென்று!.

   Delete
 5. இன்றைய நிலையில் தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சி இருந்தால் என்ன நடந்திருக்கும் என்று யோசித்தேன்.அவர் அன்று காவல்துறை உயரதிகாரி பதவியில் அமர்த்தியவர்கள் யாரும் இன்று இல்லை. அவர்கள் இருந்திருந்தால்..

  1) ஜெயலலிதாவின் பேச்சை அப்படியே கேட்கும் காவல்துறை மக்களை இளைஞர்களை அடித்து நொறுக்கியிருக்கும்
  2) வன்முறை போராட்டமாக மாற்றப்பட்டிருக்கும்
  3) குறைந்தது 15 மாணவர்கள் பலியாகியிருப்பார்கள்.
  4) வன்முறை கட்டுக்குள் வந்தது என்று தொலைக்காட்சியில் செய்தி வந்திருக்கும்

  ஆனால் இன்று அப்படி எதுவுமே நடக்க வில்லை. ஒற்றுமை தரும் சுகத்தில் அன்பில் அப்படியே நனைந்து கொண்டு இருக்கிறேன். நான் மேலே குறிப்பிட்ட 2 வது கருத்தின் அர்த்தம் இதுவே. நம்மை இந்த ஒற்றுமையின் ஆனந்தத்தை அறிய விடாமலேயே செய்திருப்பார் ஜெயலலிதா.

  ReplyDelete
 6. த மணியன்21 January 2017 at 16:59

  திராவிட அரசியல்வாதிகளால்,உங்களைப் போன்ற வன்ம உணர்வோடு,உள்நோக்கத்தோடு உலா வருபவர்களால் பல காலமாக எவ்வளவோ முயன்றும் போராட்டத்திற்கு கவர்ந்திழுக்க முடியாத இளைஞர்களை 'ஜல்லிக்கட்டு' கவர்ந்திழுத்தது வியக்க வைக்கிறது!. திராவிட அரசியல்வாதிகளும் தாராளமாக இந்த போராட்டத்தில் பங்கேற்களாம்,ஆனால் கரை வேட்டிகளை கழட்டி எரிந்துவிட்டு!.

  ReplyDelete
 7. இடைநிலைசாதியிலேயே பார்பபனர்களைத் தூக்கிப் பிடித்துத் தன் சொந்த சகோதரர் தீயினில் வாடக் கண்டும் சிந்தை யிறங்காத கயவர்கள் உண்டு. நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்த
  நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் ! கோடாரிக் காம்புகள் !

  ReplyDelete
 8. இது மாடு பிடி என்ற ஒற்றை சொல்லை மையபடுத்தி வந்தது இவர்களை வேண்டுமானால் கல்விக்காக போராட செய்யுங்கள் பார்கலாம்

  ReplyDelete
  Replies
  1. வாய்ப்பு குறைவு.தமிழர்களை வெளியே வர அகங்காரத்தை தூண்டுவது போல பிரச்சணைகள் தேவைப்படுகின்றன. முக்கிய பிரச்சணைகளைப் பற்றி தமிழர்கள் யோசிக்கவே மாட்டார்கள்

   Delete