தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Sunday, 22 January 2017

மெரினா புரட்சி!


சல்லிக்கட்டுக்கான மாணவர்கள், இளைஞர்களின் போராட்டம் நிறைவுபெற்று விட்டதா, மேலும் தொடருமா என்று உறுதியாகத் தெரியாத சூழலில் இதனைப் பதிவிடுகின்றேன். கிடைத்திருப்பது முழு வெற்றியில்லை, முதல் வெற்றிதான் என்று போராட்டக் களத்திலிருந்து மாணவர்கள் சிலர் கூறுவதைக் கேட்க முடிந்தது. உண்மைதான். ஆனாலும் கிடைத்துள்ள முதல் வெற்றி அவ்வளவு எளிதானதன்று. மக்களின் கோரிக்கையை மதித்தும், ஏற்றும் இவ்வளவு குறுகிய நாளில் ஓர் அவசரச் சட்டம், இதற்கு முன் இயற்றப்பட்டுள்ளதாகத்  தெரியவில்லை. 


பெற்றுள்ள வெற்றியைக் கொண்டாடுவதும், அடுத்த முழு வெற்றியை நோக்கி நகர்வதுமே இன்றைய சூழலில் சரியானதாக இருக்க   முடியும். இல்லையில்லை, இறுதி வெற்றி பெரும் வரையில் போராட்டம் தொடரும் என்பது நடைமுறைச் சிக்கல்களைக் கொண்டது. இறுதி வெற்றி அல்லது நிரந்தரத் தீர்வு என்று அவர்கள் குறிப்பிடுவது சட்டத் திருத்தமாகவே இருக்க முடியும். 

1960ஆம் ஆண்டு விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்படுவதே இளைஞர்கள் வேண்டும் இறுதித் தீர்வாக இருக்கலாம். அதனை எட்டுவதற்கு ஒரு குறிப்பிட்ட காலம் கண்டிப்பாக ஆகும். சட்டத் திருத்த முன்வடிவம், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட வேண்டும். அந்த நடைமுறை ஓரிரு நாள்களில், அவசரச்  சட்டம் இயற்றுவது போல முடிந்துவிடக் கூடியது இல்லை.  அவ்வளவு நாள்கள் அத்தனை  பேரும்  தங்கள் படிப்பு, வேலை எல்லாவற்றையும் விட்டுவிட்டுப் போராட்டக் களத்திலேயே இருப்புக் கொள்வது இயலக்கூடியதா என்பதை இளைஞர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

நாள்கள் ஓடும்போது, போராட்டத்தின் வீச்சு குறைவதற்கும், கூடியிருப்போர் மெல்லக் கலைவதற்கும் வாய்ப்புகள் உண்டு. எனவே உரிய நேரத்தில் உரிய முடிவை எடுப்பதே விவேகம். 

மாணவர்களின் போராட்டத்தை மழுங்கடிப்பதற்காக இப்படி நான் எழுதுவதாக ஒரு சிலர் கூறக்கூடும். 'தமிழ்த் துரோகி' பட்டத்தைக் கூட சிலர் வழங்கக்கூடும்.. அது குறித்தெல்லாம் கவலைப்பட்டுக் கொண்டிருந்தால், உண்மை பேச முடியாது. நான் ஒன்றும் சல்லிக்கட்டு ஆதரவாளன் இல்லை.  'ஏறு தழுவுதல்' நம் பழந்தமிழ்ப் பண்பாடுதான் என்றாலும், இன்றைய யுகத்திற்கு அது  பொருந்துமா என்ற எண்ணம் உடையவன்தான். ஆனாலும் இளைஞர்களின் போராட்ட உறுதியையும், ஒழுங்கையும் கண்டு வியந்தேன். அந்த "மெரினா புரட்சி' வெல்ல வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இக்கருத்தைப் பதிவு செய்கின்றேன்.

போற்றுவோர் போற்றட்டும், புழுதி வாரித்  தூற்றுவோர் தூற்றட்டும்!


21 comments:

 1. உண்மையில் நல்ல கருத்துதான்.நன்றி ஐயா!

  ReplyDelete
 2. உசுப்பேற்றி விட்டால் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் தமிழர்கள் என்பதை எல்லாருமே (நம் எதிரிகளையும் சேர்த்து) தெரிந்து வைத்துள்ளனர். தனித்தமிழ் நாடு என்று ஆரம்பிக்கிறார்கள். இது எவ்வளவு பெரிய விளைவை ஏற்படுத்தும் என்று தெரிந்தே சொல்கிறார்கள். நான் பார்த்த வாடஸப் செய்தியில் கர்நாடகாவிலும் இதே போல போராட்டம் வந்து அவசர சட்டம் இயற்ற சொன்னால் நாம் எங்கு தண்ணீருக்கு போவோம் என்றது. வழிகாட்ட உண்மையான தலைவனை தேர்ந்தெடுக்காத சமூகம் யார் நல்லவர் யார் கெட்டவர் என்று அறியாத சமூகம் இப்படித்தான் அவதியுறும்.

  ReplyDelete
 3. OPS அவர்கள் அவரால் முடிந்தவரை செய்துவிட்டார். ஜல்லிக்கட்டு இந்த வருடம் நடத்த அனுமதி கிடைத்து விட்டது.. இனியும் நடக்கும் என்றும் சொல்லிவிட்டார். திமுக செய்த தவறால் தொடங்கிய இந்த சிக்கல், ஜெயலலிதாவால் சரி செய்யப்படவில்லை. ஆனால் OPS மிகச்சிறப்பாக செயல்பட்டுள்ளார். OPS க்கு எதிராக சசி குரூப் மக்களை தூண்டிவிடுவது போல் தெரிகிறது. எங்கே OPS க்கு நல்ல பெயர் கிடைச்சிருமோனு அவங்க பயப்படறாங்க.

  வரதா புயலின் பொழுது OPS சிறப்பாக செயல்பட்டார்.
  சந்திரபாபு நாய்டுவிடம் பேசி தண்ணீர் பெற்றுத்தந்தார்.
  இப்போது ஜல்லிக்கட்டு நடக்கவும் வழிவகை செய்து விட்டார். ஒரு முதலமைச்சர் இதற்கு மேல் என்ன செய்ய முடியும்?

  லாரன்ஸ் போன்ற சினிமா ஆட்கள் எல்லாம் OPS ஐ கேலி செய்வது மிகத்தவறு. ஜெயா இருந்திருந்தால் இப்படி பேசிருப்பாங்களா. முதலமைச்சரை நம்பி போராட்டத்தை கை விடுவது நல்லது.

  ReplyDelete
  Replies
  1. அது என்ன அய்யரே பொத்தாம் பொதுவாக தி.மு.க மீது சேற்றை வாரி வீசி விட்டு. ஜெயலலிதா விடம் செல்லமாக கண்டித்தும் பதில் அளிப்பது. ஆதாரத்துடன் பழி கூறும்.

   Delete
  2. உண்மையை அறியாமல் பேசுகிறாரா, அல்லது மறைக்கப் பார்க்கிறாரா, ஐயர்? நீங்க சொன்னது போல திமுக தான் காரணம் என்றால், சட்டம் எழுதப்பட்டபோதே சல்லிக்கட்டு தடை செய்யப்பட்டிருக்க வேண்டுமே. எப்படி 2014 வரை நடத்தப்பட்டது?

   Delete
  3. ஜல்லிக்கட்டுக்கு தடை விதிப் பதற்கு திமுக, காங்கிரஸ்தான் காரணம். காங்கிரஸ் அரசில் 11.7.2011-ல் காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் பட்டியலில் காளைகள் சேர்க்கப்பட்டன. திமுக ஆதரவு இல்லையேல் அன்றைய காங்கிரஸ் அரசு பதவியில் நீடிக்க முடியாது. மேலும் கலைஞர் அவர்களது வழி காட்டுதலில் தான் அன்றைய மத்திய அரசு செயல்படுவதாக திமுகவினர் தொடர்ந்து பெருமை பேசி வந்தனர். விரும்பிய இலாகா கிடைக்காத சூழ்நிலையில் ஆதரவு கடிதத்தை கொடுக்காமல் தாமதம் செய்தவர்கள் , இந்த பிரச்சனைக்காக சிறு மிரட்டல் கூட விடவில்லை. இப்படி பிரச்சனைக்கு மூல காரணமாக அமைந்த திமுக வை விமர்சிக்காமல் எப்படி விட முடியும்?

   Delete
 4. முதலில் வாழ்த்துக்கள் இந்த பதிவிற்கு. தேவையான பதிவு. உங்களுடைய அறிவு முதிர்ச்சி எனக்கு வியப்பை அளிக்கிறது. ஏனென்றால் ஒரு போராட்டத்தை தொடங்குவது எளிது ஆனால் எங்கே முடிக்க வேண்டும் என்பது அதை விட முக்கியம் என்பதை முன்கூட்டியே கூறியதற்கு. முப்பது ஆண்டுகளாக புத்தகங்கள் வாயிலாகவும் 10 ஆண்டுகளாக இணையம் வாயிலாகவும் தொடர்ந்து அரசியல் சமூகம் சார்ந்த நிகழ்வுகளை வாசித்து வருகிறேன். ஆனால் இந்த ஓரிரண்டு ஆண்டாக இணையத்தில் நடக்கும் எழுத்து போர் சொல்லி மாலாது. எழுத்து போர் என்று கூட சொல்ல முடியாது ஒருவித காழ்புணர்ச்சியே காணப்படுகிறது. யாரை எப்படி வேண்டுமானாலும் வசைபாடுவது தரமில்லாத சொல் பிரயோகங்கள். நம் ஆற்றலை காட்ட வேண்டிய தளம் நாறி போய் கிடக்கிறது. இந்த ஒரே போராட்டத்தில் தமிழகத்தினுடைய அணைத்து சிக்கல்களையும் அணைவருக்குமான சிக்கல்களையும் தீர்த்து விடமுடியும் என்கிற மன நிலையை மாணவர்கள் மத்தியில் திணிக்கும் விதமான சூழ்நிலையை பார்க்கிறேன். இது சாத்தியமில்லை என்பதை எல்லோரும் அறிவர். இந்த மாதிரி மாணவர்களை தூண்டும் விதமாக எழுதி பலர் தன்னை ஒரு முற்போக்கு எழுத்தாளர் சிந்தனையாளர் என்று காட்டிக்கொள்வதாகவே தோன்றுகிறது. மாணவர்களுக்குள் ஒரு நெருப்பை தூண்டி]விட்டு அதில் குளிர் காயவும் முகநூல்களில் தன்னை பின்தொடர்பபவர்களை அதிகப்படுத்தி கொள்ளும் தந்திரமாகவுமே அவர்களுடைய அருவருப்பான எழுத்துக்களில் உணரமுடிகிறது. அதிலும் சிலர் பெரியாரையும் திராவிடத்தையும் தோளில் சுமப்பதாக அறிவித்து கொள்கிறார்கள். ஏராளமான பதிவுகளில் புரட்சி புரட்சி என்ற வார்த்தையை காணமுடிகிறது. புரட்சியை படைப்பதற்கு முன் புரட்சியை படிக்கவும் வேண்டும் என்பது எண்ணம். பலர் படித்திருப்பார்கள். அவர்கள் தெரிந்து களமாடுவது தவறில்லை. புரட்சி என்னவென்றே அறியாத மாணவ மணிகள் பலியிடப்படுவது அவர்களின் எதிர்காலம் பாழ்படுத்தப்படுவது ஏற்கவே முடியாத ஒன்று. 50 ஆண்டுகாலமாக போராட்டமே வாழ்க்கையாக போராட்டத்திற்கு பழகிய நம் ஈழ சகோதர சகோதரிகள் நடத்தப்பட்ட இனப்படுகொலையில் கொத்துக் கொத்தாக மாண்டத்திலிருந்து இன்னும் மீளமுடியவில்லை. எந்தவொரு சிக்கலிலுமே ஒவ்வொரு முடிச்சாக அவிழ்த்தால்தான் அதற்கான தீர்வு கிட்டும். ஒட்டுமொத்தமாக தீர்ப்பதென்பது இயலாத ஒன்று என்பதாகவே தோன்றுகிறது.

  ReplyDelete
 5. மாணவர்கள் அவர்களுக்கான அகில இந்திய அளவிலான "நீட்" நுழைவு தேர்வுக்கு எதிராகவும் கல்வி வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீட்டை முழுமையாக அமுல்படுத்த கோரியும் பள்ளி கல்லூரிகளில் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கவும் சர்வதேச தரம் வாய்ந்த தரமான அனைவருக்கும் சமமான கல்வி அளிக்கவும் மாணவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் பொருட்டும் புதிய தொழில் முனைவோராகவும் தங்களை தயார் படுத்திக் கொள்ள தேவையான வாய்ப்புகளை உருவாக்கி கொடுக்கவும் மத்திய மாநில அரசுகளை நோக்கி இம்மாதிரியான மிக பெரிய போராட்டங்களை முன்னெடுக்கலாம். தங்கள் நிலையை உயர்த்திக் கொண்டு குடும்பத்தையும் உயர்த்தி அனைவரோடும் சமமாக இந்த சமூகத்தில் வாழும் நிலையை ஏற்படுத்திக் கொண்டால் நாட்டின் எதிர்காலம் தானே உருவாகும். மாணவர்கள் தங்கள் புரட்சியை தங்கள் வாக்கு செலுத்தும்போது கவனமாக இருந்து சிந்தித்து நல்ல தலைமையை தேர்தெடுத்தாலே எல்லாம் மாறும்.

  ReplyDelete
 6. 1991ம் ஆண்டில் இருந்த " சுபவீ " யை இப்போது பார்க்கிறேன்

  ReplyDelete
 7. இந்த போராட்டம் ஒவ்வொருவனும் தலைவனே என்ற உண்மையை தெளிவு படுத்தியது. வாட்சப் போல சமூக ஊடகங்கள் மூலம் நாம் சாதிக்கலாம் என்ற நம்பிக்கையை நம்மவர்களுக்கு இந்த போராட்டம் வழங்கி இருக்கிறது. இந்த ஒற்றுமைதான் அடுத்த தலை முறைக்கு் எந்த கஷ்டமும் இல்லாத நிம்மதியான வாழ்க்கை, உணவு, உறைவிடம், தூய்மையான காற்று, நல்ல நீர், பரந்த விளையாட்டு மைதானங்கள், எங்கும் பசுமை, அகலமான சாலைகள், அனைவருக்கும் கார் என்று சந்தோசமான வாழ்க்கையை பெற்றுத்தர போகிறது. போராட்டமும் ஒற்றுமையும் நல்ல விஷயங்கள், ஆனால்..

  போராட்டம் கொடுத்த அனுபவத்தில் நடந்தவற்றை யோசித்தேன். அதற்கு முன்பு சிறிய சினிமா செய்தி. ஜேசி டேனியல் என்ற படத்தில் ஒரு டயலாக் எனக்கு ஞாபகம் வருகிறது. அந்த படத்தில் வந்த டயலாக்,..அவர் நல்லவர் ஆனால் சாதி வெறியர் என்று ஒருவர் அப்படத்தில் சொல்லுவார். நல்லவர் சாதி வெறியராக அல்லது மத வெறியராக இருந்தால் எப்படி அவரை நம்புவது. உன்னை விட நான் பெரியவன் அல்லது சளைத்தவன் அல்ல என்ற எண்ணம்தான் சாதி உணர்வு உயிர்ப்போடு இருக்க காரணம். சாதி மதம் ஒற்றுமையால் இணைவதே அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாகும். ஆனால் சாதியே பிரச்சனைகளை கொண்டு வருகிறது. போராட்டத்தை திசைதிருப்பும் சில காட்சிகள் இந்த போராட்டத்தில் காண நேர்ந்தது.

  இந்த போராட்டத்தை திசைதிருப்புபவர்கள யார் . அவர் ஒரு தமிழ் சாதியாக இருக்கலாம் மதமாக இருக்கலாம் வேற்று மொழி பேசுபவராக இருக்கலாம். யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அவரிடம் உண்மை என்ற ஒன்று மட்டும் இல்லை. உணர்ச்சி வசப்பட்டு அனைவருக்கும் ஏதாவது சங்கடத்தை கொண்டு வந்து விடுவார்களோ என்று நம் மக்களை பார்த்து முதல் முதலாக எனக்கு ஒரு வித அச்சம் வந்தது. ஹிப்ஹாப் தமிழா ஆதி சொன்ன மாதிரி எதற்காக இந்த போராட்டம் தொடங்கியதோ அதை விடுத்து தனித்தமிழ்நாடு, தேசிய கொடி எரித்தல் ,மோடி வெறுப்பு துண்டு பிரசுரங்கள் என்று என்னென்னவோ செய்தார்கள். ஆனால் அவரை யார் என்று கண்டுபிடித்து நாம் பெயர் சொன்னால என்ன சொல்வார்கள். ஒரு சில பேர் தவறு செய்வதற்கு ஒட்டு மொத்த சமூகமும் பொறுப்பா என்பார்கள். அதுவும் உண்மைதான் ஒரு சிலர் தவறு செயவதற்கு ஒட்டு மொத்தமாக மொத்த சமூகத்தை குறை சொல்ல முடியாது. எவ்வளவோ நல்லவர்கள் எல்லா சமூகத்தில் உண்டு. இதற்கு என்னதான் தீர்வு யோசித்தேன்.

  ReplyDelete
 8. கவர்ச்சி அரசியலையும் தனிநபர் ஹீரோயிச அரசியலையும் ஓரம் கட்டி மக்கள் அனைவரது குரலையும் ஒலிக்கச்செய்யும் கொள்கை சார்ந்த ஒரு யோசனை தோன்றியது. தலைவன் முக்கியமல்ல கொள்கைகளே முக்கியம் என்று மக்கள் மனதில் எப்படி பதிய வைப்பது. அதற்கான தீர்வு சாதியாக அல்லது மதமாக இணைதல்தான் என்று தோன்றியது. தலைவர் சரியாக அமைந்தால் எல்லாம் சரியாக அமையும்.
  சுழற்சி முறை முதல்வர் என்ற திட்டம் அனைத்துக்கும் தீர்வாய் அமையும் என்று தோன்றியது.

  முதலில் கொள்கை சார்ந்து என்று சொன்னேன் அல்லவா. அந்த கொள்கைகள் எப்படி உருவாக்குவது. அவை அடுத்த தலைமுறையை மனதில் வைத்து உருவாக்கப்பட்ட கொள்கைகள். இவை மேலும் விரிவடையும். உதாரணமாக சிலவற்றை கீழே சொல்லி இருக்கிறேன்.

  1) அரசாங்கம் தனியார் இணைவில் அனைத்து துறைகளையும் இணைப்பது. தனியாருக்கு 30 அரசுக்கு 70 என லாபம் பிரிப்பது. நிர்வாகத்துக்கு தனியார் ஆனால் அரசுக்கும் லாபம். இதில் கல்வி மருத்துவம் உள்கட்டமைப்பு மிக முக்கியம். எல்லா தனியார் துறையிலும் தகுதியை கொண்டு வந்து அனைத்து சாதிகளையும் பங்கு பெற வைத்தல்.
  2) நில மேம்பாடு் அரசோடு இணைய வேண்டும். 2 ஏக்கருக்கு மேல் நிலங்கள் இருந்தால் அது அரசிடம் செல்லும். நில மேம்பாடு அரசிடம் வந்தால்தான் தென் அமெரிக்கா போல நல்ல சாலைகள் அமையும். சைனா போல உள்கட்டமைப்பு மேம்படும். விவசாயத்தை கார்ப்பரேட் கம்பெனி போல செய்ய முடியும். பரம்பரை பணக்காரன் முறை ஒழியும்.
  3) அடுத்த தலைமுறையை அழிக்கும் பிளாஸ்டிக் தடை
  4) நீர் நிலை மேம்பாடு
  5) காடுகள் மேம்பாடு
  6) குறைந்த இடத்தில் அடுக்கு மாடி வீடுகள் கட்டுவதால் மும்பை போல அதிக போக்குவரத்தை உருவாக்க்கூடிய உயர்ந்த அடுக்கு மாடி வீடுகள் 4 அடுக்கோடு நிறுத்துமாறு சட்டம் இயற்றல்.
  7) ஆராய்ச்சியில் கண்டு பிடிப்பாளர்களுக்கு அடுத்த தலைமுறைக்கும் அனைத்தும் இலவசம்.
  8) இரு மொழிக்கொள்கையோ மும்மொழிக்கல்வியோ ஆனால் தமிழ் கட்டாயம்.
  9) அரசு வேலைகளில் எல்லா துறைகளிலும் உடல் தகுதி முக்கியம். அப்போதுதான் விளையாட்டு ஊக்கமடையும்.
  10) பெண்களை ஆண்கள் மதித்தால்தான் அவர்களின் மேலான குற்றச்செயல்கள் குறையும். பெண்களை ஆண்கள் மதிக்கப்பட வேண்டும் என்றால் அவர்களை கடவுளாக பார்க்கப்பட வேண்டும். இன்றைய தினத்தில் உயிர் தரும் கடவுள் மருத்துவர்கள். ஆகவே பெண்களுக்கு மருத்துவதுறையில் 50 சதவீத இட ஒதுக்கீடு.

  ReplyDelete
 9. இன்னும் பல உள்ளன. இப்போது கொள்கைக்கு வருவோம். அனைவருக்கும் வாய்ப்பை பெற்று தரும் இந்த சுழற்சி முறை முதல்வர் என்றால் என்ன. தனித்தனி சாதியாக நாம் இணைய வேண்டிய தேவைதான் அது.அது எப்படி இணைவது. ஒவ்வொரு சமூகத்திலும் நல்லவர்கள் உண்மை பேசுபவர்கள் நன்கு சிந்திக்கக்கூடியவர்கள் இருக்கிறார்கள் அல்லவா அவர்கள் இணைவதுதான் சாதியாக இணைதல். ஆண் பெண் தடையில்லை. ஆனால் அவர்களை எப்படி நல்லவர் என்று தெரிந்து கொள்வது. ஒவ்வொரு சமூகத்தில் இருந்தும் ( சாதி அல்லது மதம் கலந்த அதாவது தலித் சமூகம் முதலியார் மற்றும் பிள்ளை கவுண்டர் வன்னியர் முக்குலத்தோர் நாடார் முத்தரையர் பிராமணர் செட்டியார் நாயுடு்..மேலும் இஸ்லாமியர் கிறிஸ்தவர் ) 30வது வயதில் தனித்தனியாக 50 பேர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அவரவர் மக்கள் தொகைக்கு தகுந்தவாறு சரி விகிதமாக பிரிக்க வேண்டும். மொத்தம் 10 சமூகங்கள் ஆக பிரித்தால் மொத்தம் 10X50 ஆக மொத்தம் 500 பேர். கிட்டத்தட்ட 10 வருடங்கள் அவர்கள் 500 பேரும் வாட்ஸப் போன்று குறுஞ்செய்தி ஊடகங்களின் வாயிலாக பேச வேண்டும். அரசியல் சமூகம் தொழில் என்று அனைத்தும் கலந்து நட்பாகவும் ஜாலியாகவும் அவர்களது உரையாடல் இருக்க வேண்டும் . இதற்கு கல்வியை ஒரு தகுதியாக வைக்கக்கூடாது. வாட்சப் பயன்படுத்தும் அளவுக்கு தெளிவு இருந்தால் போதும். ஏனென்றால் நல்லவர்கள் எல்லா நிலையிலும் உண்டு.நல்லவர்களில் கூச்ச சுபாவம் உடையோர் உண்டு. எனவே அவர்களை வாட்சப்பில் பேசவிட்டால் அப்போது தெரிந்து விடும் யார் நல்லவர் கெட்டவர் என்று. கூச்ச சுபாவம் உடையவர் ஆக இருந்தாலும் நல்லவர் என்று தெரிந்தால் விடக்கூடாது. நீயா நானாவில் வருபவர்கள் மாதிரி எவ்வளவு கருத்தாக பேசுகிறார் என்று பார்த்து தேர்வு செய்ய வேண்டும். எவ்வளவு கம்பீரமாக பேசுகிறார் அழகாக பேசுகிறார் என்று தனிமனித கவர்ச்சி கூடவே கூடாது.

  30ல் இருந்து 40 வயதுக்கு வரும்போது அதில் இருந்து 10 பேர் தேர்வு செய்யப்பட வேண்டும். அந்த 10 பேர் மற்ற சமூகத்தினரால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். பிறகு அந்த 10 பேரில் இருந்து 5 வருடம் கழித்து 45 வயதில் 2 பேர் அதாவது முதல்வர் மற்றும் துணை முதல்வர் தேர்வு செய்யப்பட வேண்டும்.அவரை முதல்வர் வேட்பாளராக்கி 5 வருட ஆட்சியில் முதல்வர் ஒரு சமூகமாகவும் துணை முதல்வர் ஒரு சமூகமாகவும் தேர்வு செய்யப்பட வேண்டும். இப்படியே இது ஒரு சைக்கிள் ஆக தொடராக தொடர வேண்டும். வயது கூட குறைய இருக்கலாம். 2040 ல் இந்த சமூகத்தை சேர்ந்தவர் என்று முடிவு செய்தால் 2025 ல் இப்படி இந்த முறையால் தலைவர்களை உருவாக்க வேண்டும். ஒவ்வொரு ஐந்து வருடத்திற்கும் ஒருமுறை இப்படி ஒரு சமூகத்திற்காக 500 பேர் தேர்வு செய்யப்பட்டு பிறகு மேலே குறிப்பிட்ட முறையில் தலைவர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு 5 வருடமும் 500 பேர் இதற்கு முன்னே தேர்வு செய்யப்பட்ட 500 நல்லவர்களாலும் மற்ற சமூக மக்களாலும் தேர்வு செய்யப்பட வேண்டும். வெறும் இரண்டு பேருக்காக(முதல்வர் மற்றும் துணை முதல்வர்) 500 பேர் உழைக்க வேண்டும். உழைத்தால்தான் நல்ல தலைவர்கள் நமக்கு கிடைப்பார்கள். ஆகவே இதற்கு அந்த 500 பேர் மட்டும் இல்லாமல் ஒட்டு மொத்த சமூகங்களும் 5 வருடத்திற்கு ஒருமுறை மிக மிக கடுமையாக உழைக்க வேண்டும். ஒரு சாதி முதல்வர் பதவியில் இருக்கும்போது அடுத்த சாதியை யார் வர இருக்கிறார்களோ அவர் 5 வருடம் இப்போதைய முதல்வரிடம் பயிற்சி அல்லது கவனித்தல் வேண்டும். இது இப்படியே தொடர வேண்டும்.

  என் வாழ்க்கையில் இது நடந்தது. அதனால்தான் நான் இந்த முறையை மிகவும் நம்பிக்கையுடன் வழிமொழிகிறேன். என்னுடைய அபார்ட்மென்டில் 400 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன..முகமே பார்க்காமல் வாட்சப்பில் பேச ஆரம்பித்த நான் எத்தனையோ பேர் பேசினாலும் உரையாடலை வைத்தே நல்லவர் யார் சிந்திக்க கூடியவர் யார் என்று உணர முடிந்தது. அவர்களோடு நட்பால் இணைந்து நற்பெரும் பணியாற்ற முடிந்தது. ஆகவேதான் இந்த முறையை தேர்ந்தெடுத்தேன்.

  மேலே குறிப்பிட்ட இந்த முறையில் உண்மை இருப்பது உணர்ந்தால் எனது வாட்சப் குரூப்போடு இணையுங்கள். குரூப்பின் பெயர் : இணைவோம் தமிழால்

  வாட்சப்பில் இணைய முதலில் உங்கள் போன் நம்பர் மற்றும் உங்கள் பற்றிய சிறு தகவலை sivasubramanian79@yahoo.com என்ற இமெயில் முகவரிக்கு அனுப்பவும்

  ReplyDelete
  Replies
  1. உங்கள் கருத்துகள் யாவும் உங்கள் சிந்தனை ஓட்டமே சரி என்ற நிலையில் உருவாக்கபட்டது.Utopian (நிறைவேற்ற இயலாத கற்பனை கனவுகள்) கருத்துக்களோ என்று தோன்றுகிறது.

   Delete
  2. வல்லபாய் படேல் இந்தியாவை தனிநாடு கேட்ட மன்னரகளிடம் இருந்து மீட்கும் வரை இந்தியா என்ற உருவம் கற்பனையே. தமிழகத்தில் புதுபுது அரசியல் வாதிகள் எப்படி வந்து கொண்டே இருக்கிறார்கள். திமுக அதிமுக தேமுதிக பாமக காங்கிரஸ் பிஜேபி போன்ற கட்சிகள் தங்கள் வேட்பாளரை ஏற்கனவே தேர்ந்தெடுத்து விட்டன. எனவே அவர் பழம் தின்று கொட்டை போட்ட இடத்தில் தான் வர முடியாது என்பதால் புதிதாக கட்சி ஆரம்பிப்பவரோடு சேர்கிறார்கள். அப்படி என்றால் அவர் அந்த புதுக்கட்சியில் சேர்வதற்கு காரணம் தனக்காக மட்டுமே. ஒரு ஏரியாவில் தன்னை பெரிய ஆள் ஆக்கிக்கொள்வதற்காக மட்டுமே. அங்கே சுயநலம் வெல்கிறது. சல்லிக்கட்டு சிவசேனாதிபதி காங்கேயம் காளைகள் இனம் தழைக்க வேண்டும் என்று 2013 ல் 15 பேரோடு போராட்டத்தை ஆரம்பித்தார். மக்கள் சேர்ந்தார்கள் பொதுநலம் வென்றது. இப்படி சுயநலமும் பொதுநலமும் மாறிமாறி ஜெயிக்கிறது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் சுயநலம்தான் அதிகம் வெல்கிறது. நல்லவர்கள் பின்னே மக்கள் சேர்வது சல்லிக்கட்டு மாதிரி அபூர்வமாகத்தான் நடக்கிறது. என்னவென்றால் ஒருவன் நல்லவன் என்று நீங்கள் முடிவு செய்ய உங்கள் ஏழாம் அறிவு வேலை செய்ய வேண்டும். அப்படி முடிவு எடுத்து விட்டால் அவரின் முடிவுக்கு எல்லாரும் ஆதரவு தருவார்கள்.

   Delete
 10. ஜல்லிகட்டு போராட்டத்தின் வெற்றியை செரிமானம் செய்துகொள்ள முடியாதவர்கள் அதன் மீது கரிபூசிய நிகழ்வுதான் போலீசின் அடக்குமுறையாகும். சில நேரம் சிறுவர்கள் விளையாடும் போது தாம் தோற்றுவிட்டால் ஆட்டத்தை குழப்புவார்கள்.அது போலத்தான் அதிமுக பாஜக கூட்டணி அரங்கேற்றிய அலங்கோலம். உண்மையில் ஜல்லிகட்டு போராட்டத்தின் வீச்சின் அளவு எவ்வளவு தூரம் ஆதிக்கவாதிகளுக்கு அடி கொடுத்திருக்கிறது என்பதை ஊகிக்க முடிகிறது. போராட்டகாரர்கள் பலவித அரசியல் கருத்துக்களை பேசியுள்ளார்கள். அதனால் மிகப்பெரும் ஆபத்து எதிர்காலத்தில் வரக்கூடும் என சிலர் அச்சபடுவதாக கூறுகின்றனர். விரும்பியோ விரும்பாமலோ கடந்த பல ஆண்டுகள் தமிழக வாக்காளர் தாங்கள் தெரிவு செய்த ஆட்சியாளர்கள் எப்படி நாட்டை ஆண்டு வந்தார்கள் என்ற கேள்வியை இப்போது கேட்க வேண்டிய நேரமாகும். எம்ஜியார் காலத்தில் இருந்து போஸ்ட் மார்டம் செய்து பார்க்க வேண்டும். எந்த ஒரு விளைவுக்கும் ஒரு எதிர்விளைவு உண்டு. கவர்சிக்குதானே முதலிடம் கொடுத்தோம்? கருத்துக்கு எங்கே செவி கொடுத்தோம்? கவர்ச்சிக்கும் காசுக்கும் நாட்டு நலத்தை விற்றதில் எமக்கும் பங்குண்டு அல்லவா? இனியாவது அந்த மெரீனாவை கொஞ்சம் விழித்து கொள்ள விடுங்கள். பயந்து கோழைத்தனமாக சிந்திக்கும் சமுதாயம் படு மோசமான சர்வாதிகளைதான் உருவாக்கும். தூரத்து உதாரணங்கள் தேட வேண்டியதில்லை. கூப்பிடு தூரத்திலேயே கண்டோம். ஏன் நம்ம வீட்டிலேயே /நாட்டிலேயே கண்டோமே?

  ReplyDelete
 11. சிந்தன்25 January 2017 at 16:11

  உங்களுக்கென்ன புரட்சி புடலங்காய் என்று எதுகை மோனை பேச்சுக்களோடு போராட்டத்தில் பங்கேற்காமல் சுகவாழ்வு வாழ்விர்கள்;புகழ்வது போல இளைஞர்களை தூண்டிவிடுவிர்கள்.போலீஸிடம் லத்தியடி,பூட்ஸ் உதை வாங்குபவனுக்குத் தானே தெரியும் அதன் வலி.பல இளைஞர்கள் ஊமைக்காயத்துடன் வலி தாங்காமல் கதறிக்கொண்டுள்ளனர்.ஆகவே ஒருமுறையாவது போலீஸிடம் லத்தியடி,பூட்ஸ் உதை வாங்கிவிட்டு பிறகு தூண்டிவிடுங்கள் இளைஞர்களை!.

  ReplyDelete
 12. ஹெச்.அபுசாலி25 January 2017 at 17:33

  சில ஆயிரம் போலீஸை பார்த்தவுடன் அவிழ்ந்த மூட்டையிலிருந்து சிதறிய நெல்லிக்காய்கள் போல சிதறி ஓடிய போராடிய சில லட்சம் இளைஞர்களை பார்க்கும் போது குரானின் வசனமான "ஒரு சிங்கத்தைப் பார்த்ததும் சிதறி ஓடிய கழுதைக் கூட்டங்கள்"என்ற வசனம் என் நினைவுக்கு வருகிறது.Mob alone can't win in a struggle.For Eg., In Egypt one dictator is now replaced by a another dictator!.Government has the power to chase out and even kill some any youth crowd as we seen in anti Hindi agitation,anti Srilankan massacre agitation,anti alcohol agitation,Rohit Vehmula agitation,JNU agitation etc., etc.,

  ReplyDelete
 13. சமூகவிரோதிகளால்,தேசவிரோத சக்திகளால், பிரிவினைவாதிகளால் ஜல்லிக்கட்டுக்காக கூடிய கூட்டத்தை, வாடிவாசல் திறந்தால்தான் வீடுவாசல் செல்வோம் என்று கூறிய கூட்டத்தை ஜல்லிக்கட்டை தவிர்த்து வேறு விடயங்கள் நோக்கி திசை திருப்ப முயற்சிக்கப்பட்டதால்,வெறுப்பை ஊமிழும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதால் இறுதியில் போராட்டம் வேதனையான முடிவுக்கு வந்துள்ளது.உள்நோக்கம் கொண்டோரின் மெரினா புரட்சிதான் தோல்வியடைந்தது.

  ReplyDelete
 14. காவலர்கள் போராட்டத்தை கலைத்த பிறகு:
  அரசாங்கம் செய்ததை உடனுக்குடன் எனது குடும்பத்துடன் பார்த்தோம் இந்த முறை நிச்சியமாக மாற்றம் வரவேண்டும் நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டும்

  பெரியார் எடுத்த அளவுக்கு தற்போதுள்ள திராவிட கழகம் செயல்பாட்டில் இல்லை

  இது போன்ற மக்கள் இயக்கம் ஒரு பக்கமாக சாயாமல் நடுநிலையுடன் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்
  தங்கள் இயக்கம் பழையபடி ஆட்சியை நிர்ணயிக்கும் சக்தியாக இருக்க வாழ்த்துக்கள்

  நான் கவனமாக உள்வாங்குவது சுப வீ ஐயா அவர்களுடைய பேச்சு

  நிதானம் , பொருள் , வார்த்தை பிரயோகம் அனைத்தும் அருமை

  ReplyDelete