தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Sunday 5 March 2017

இவரல்லவோ உத்தமர்!


நியூஸ் 18 தொலைக்காட்சியில் 04.03.2017 இரவு 10 மணிக்கு, சாமியார் ஜக்கி வாசுதேவின் நேர்காணல் ஒளிபரப்பாயிற்று. வினாக்களைத் தொடுப்பதில் தனக்கென்று ஒரு பாணி வைத்திருக்கும் கண்ணன் கேள்விகளைத் தொடுத்தார்

இணையத்தள இணைப்பில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக, முதல் அரை மணி நேரம் மட்டும்தான் பார்க்க முடிந்தது. அடடா, சாதுவின் முகத்தில்தான் எவ்வளவு கோபம்! என்னை ஏன் ஜக்கி என்று அழைக்கிறீர்கள் என்று கேட்டார், ஜக்கி.  இல்லை, ஜக்கி அவர்கள் என்றுதானே சொல்கிறேன் என்றார் கண்ணன். அதெல்லாம் வேண்டாம், சதகுரு என்று அழையுங்கள் என மரியாதையை கேட்டு வாங்கி கொண்டார் ஜக்கி. வெளிநாட்டிலிருந்து வந்தால் போப் என்கிறீர்கள், பாதர் என்கிறீர்கள், என்னை மட்டும் ஏன் ஜக்கி என்று கூற வேண்டும் என்று சினம் பொங்கப் பேசினார்.

சாதுக்கள் என்றால் இவ்வளவு ஆணவமாக இருக்க வேண்டும் போலிருக்கிறது. பிற மதத்தின் மீது எவ்வளவு கோபமாக இருக்கிறார் என்பதும் புரிந்தது. "நீங்கள் இவ்வளவு கோபப்படலாமா?" என்று கண்ணன் கேட்க, "நான் சிரித்துக் கொண்டுதானே இருக்கிறேன்?" என்றார் ஜக்கி. "ஆம், முகம் மட்டும் சிரிக்கிறது" என்று அழகாய் விடை சொன்னார் கண்ணன்.   

"நான் கோபப்படவில்லை, உரத்துச் சொல்கிறேன். வண்டி செல்லும் பாதையில், குறுக்கே சில எருமைகள் வந்துவிட்டால், பீப்பீபீ என்று சத்தமாகத்தானே ஒலி எழுப்ப வேண்டும்" என்றார் ஜக்கி. ஓ, அவரை எதிர்த்துக் கேள்வி கேட்பவர்கள் எல்லோரும் எருமைகள் போலிருக்கிறது!

உருவ வழிபாடு வேண்டாம் என்று சொன்ன நீங்கள் இப்போது, 'ஆதியோகி' சிலை அமைத்திருப்பதின் மூலம், பழைய கோட்பாட்டிலிருந்து மாறி விட்டீர்களா? என்ற கேள்விக்குத் தன்னால் இயன்றவரை குழப்பினார். கடவுளுக்கு உருவம் கொடுக்கவில்லை, உருவத்தில் கடவுள் தன்மையைக் கொண்டு வந்திருக்கிறோம் என்றார். எவ்வளவு பெரிய தத்துவம்! 


வனப்பகுதியில் ஓர் அங்குலத்தைக் கூடச் சட்டத்திற்குப் புறம்பாக வளைக்கவில்லையாம். சொல்கிறார் உத்தமர். நம்புவோமாக!

8 comments:

  1. மேற்படியாரின் விஸ்வாசிகள் படிக்க வேண்டும் இதுபோன்ற தத்துவங்களளை

    ReplyDelete
  2. Jakki being exposed. Thank you sir !!!

    ReplyDelete
  3. அன்றைய காலகட்டத்தில் தமிழக மக்கள் முழுவதும் இதுபோன்ற மூடநம்பிக்கைகளில் மூழ்கி இருந்தார்கள் அதனால் மக்கள் இவர்களை எதிர்க்கவில்லை இவர்கள் வலுபெற்று வாழ்ந்தார்கள்,,,, இன்றைய காலகட்டத்தில் மக்களுக்கு இவர்கள் மேல் நம்பிக்கை பெறும்அளவில் இல்லை பெறுமளவில் மக்கள் குறிப்பாக இளைஞர்கள் கடும் கோபமாக இருக்கிறார்கள் ,,, இருந்தாலும் இவர்கள் வலுபெற்று தான் வாழ்கிறார்கள்,,,, இவர்களை யாராலும் தடுக்க இயலவில்லை

    ReplyDelete
  4. இரத்தினவேல்5 March 2017 at 11:45

    இந்த சாமியார்கள் தங்களுக்குத் தாங்களே சத்குரு, லோக குரு என்று பெயர் சூட்டிக் கொள்கிறார்கள். யானைகளின் வழித்தடத்தில் ஆதியோகி சிலையை அமைத்து ஆனந்த நடம் புரியும் ஜக்கியின் அட்டகாசம் தாங்க முடியவில்லை.

    ReplyDelete
  5. xD ! Please watch the full interview sir,the most funny part are in end.He is totally arrogant after the modi's visit.

    ReplyDelete
  6. கேடு கெட்ட மனிதர். பூர்வாஸ்ரமம் மிகவும் கேவலம்

    ReplyDelete
  7. ஜக்கி மீது எனக்கு எந்த அனுதாபமும் இல்லை என்பதை முதலில் தெளிவு படுத்தி விட்டு தொடருகிறேன்.

    தந்தி TV யில் 6.3.2௦17 அன்று திராவிடக் கட்சி ஆட்சி அமைந்து 5௦ ஆண்டு நிறைவு குறித்த கலந்துரையாடலில் திரு. எஸ்ரா சற்குணம் என்ற கிறித்துவப் பேராயர் கலந்து கொண்டார்.

    கற்றாய்ந்த பேராயர் முகலாயர் ஆட்சி 12௦௦ ஆண்டு நடைபெற்றது என்றார். சரியான காலகட்டம் என்ன என்று 7ம் வகுப்பு படிக்கும் குழந்தை கூட சொல்லும்.

    ஒருவேளை இஸ்லாமியர் ஆட்சி என்பதற்கு பதிலாக முகலாயர் என்று சொன்னாரா என்று தெரியவில்லை. அப்போதும் இரண்டுக்கும் உள்ள வேறுபாடு அவருக்கு தெரியவில்லை என்பது தவிர , இஸ்லாமியர் ஆட்சியும் 12௦௦ வருடம் நடைபெறவில்லை என்பது தெளிவு.

    மேலும் சுதந்திரத்துக்குப் பிந்தைய 5௦ ஆண்டு ஆட்சியை விட முகலாய, ஆங்கிலேயர் ஆட்சி சிறந்தது என்றார். அதில் திமுக ஆட்சிக் காலமும் உண்டு என்பது அவருக்கு தெரியவில்லை போலும்.

    ஒரு சோறு பதம் இந்த 1200 ஆண்டுகளில் பாபரின் எள்ளுத் தாத்தாவான தைமூர் என்ற மன்னர் ஒருவன் மட்டுமே டெல்லியில் இலட்சக் கணக்கான , போரில் எந்த விதத்திலும் சம்பந்தம் இல்லாத அப்பாவி பொது மக்கள், இஸ்லாமியர் உட்பட, அனைவரையும் ஒரே நாளில் கொன்று குவித்தது பேராயருக்கு தெரியுமா? .

    பிரிட்டிஷ் ஆட்சி உலகப் பொருளாதரத்தில் 23 சதவிகிதம் பங்கு வகித்த இந்தியாவை சுரண்டி, தாங்கள் வெளியேறும்போது 4 சதவீதம் அளவுக்கு குறைத்தது என்பது இவருக்கு தெரியுமா? ( இதை தரவுகளுடன் சொல்பவர் கூட்டணி கட்சியான காங்கிரசின் சசி தரூர்).

    இப்படி எந்த குறைந்த பட்ச தகவல்கள் , அடிப்படை ஆதாரம் இல்லாமல் பேச வந்தது மட்டுமன்றி , தான் வகித்து வரும் ஆன்மீக பதவிக்கு கொஞ்சமும் ஏற்புதையதாக இல்லாத அரசியல் நிலைபாட்டை எடுத்து , ஒரு அரசியல் வாதி போலவே இறுமாப்புடன் பேசினார்.

    இந்த சாமியாரின் பேச்செல்லாம் உங்கள் கவனத்துக்கும் , கண்டனத்துக்கும் உள்ளாகாதா?. மதம் அரசியலில் கலக்கலாகாது என்பீர்களே ? இவரது செயல்கள் எத்தகையவை?

    ReplyDelete
  8. ஜக்கி போன்ற இறை விற்பன்னர்களின் அட்டகாசம் சமீபகாலமாக எல்லை கடந்து செல்கிறது என்பது மறுக்கமுடியா உண்மை....மொட்டை அடிக்கப்பட்டு பெற்றோர்களிடமிருந்து அந்த இரண்டு பெண்குழந்தைகளை நினைக்கும் போதெல்லாம்..ஒரு பெண் பிள்ளையை பெற்ற தகப்பன் என்கின்ற முறையில் என் நெஞ்சம் ஒரு வித கோவை உணர்வையும் பய உணர்வையும் ஒருங்கே அனுபவிக்கிறது....

    இறை விற்பவன்

    நெஞ்சு பொறுக்குதிலையே நஞ்சு நெஞ்சவராம்
    பிஞ்சுப்பிணை மான்களின் நெஞ்சை துஞ்சவைத்து
    கெஞ்சும் ஈன்றோரின் நெஞ்சும் கிழிந்திடவே
    வஞ்சம் செய்தனரே கொஞ்சமமும் இரக்கமின்றி...

    முற்றும் துறந்தவராம் பற்றும் அறுத்தவராம்
    பெற்றதம் பெண்ணவளும் பூச்சூட பார்த்தவராம்
    மற்றவரின் மகளவரை மடத்தினில் சேர்த்தவராம்
    பெற்றவரின் உயிர்பிரித்து பிறைசூடியில் கலப்பவராம்

    இறை விற்று இரை தேடும்
    அரைகுறை ஆன்மிக ரிடத்து - பொருள்
    இறைத்திறைத்து அருள் இரந்து நிற்கும்
    குறைமிகு கூட்டமாய் நரையெய்தல் தகுமோ..?

    ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
    நோற்பாரின் நோன்மை உடைத்து - உயர்கருத்து
    நற்பாட்டி லுரைத்தாரெம் பாட்டன் வள்ளுவர்
    அதைவீட்டி லொழுகி நற்வீட்டை யடைவோமே.

    கோபிநாதன் பச்சையப்பன்...

    ReplyDelete