தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Thursday 13 April 2017

வலி 7 – காதல், காதல், காதல்!


அது 1978 அல்லது 79 ஆம் ஆண்டாக இருக்கலாம். அப்போதுதான் அந்த நிகழ்வு நடந்தது. நான், சென்னை, எஸ்.ஐ.வி.இ.டி. கல்லூரியில் பயிற்றுனனாக (TUTOR) வேலையில் சேர்ந்த நேரம். தாம்பரத்திற்கு அருகில், இராசகீழ்ப்பாக்கம் என்னும் பகுதியில், வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கியிருந்தோம். வயது 30க்கும் கீழே. இரண்டு குழந்தைகள். தமிழகத்தின் தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஓர் இளைஞனும், ஒரு பெண்ணும் காதலித்தனர். ஆனால் இருவரும் வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதால், குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதோடு, அவர்களை மிரட்டவும் செய்தனர். வேறு வழியின்றி இருவரும் சென்னைக்குப் புறப்பட்டு வந்துவிட்டனர். அந்த இளைஞர்,  என் நெருக்கமான நண்பரான ஒரு பேராசிரியரின் பள்ளிக்கூட வகுப்பு நண்பர். எனவே அவர் தன் நண்பருக்கு உதவி செய்ய நினைத்து, என்னை அணுகினார். 

மேலும் படிக்க
வலி 7 – காதல், காதல், காதல்!

4 comments:

  1. சாதிகள் ஒழிவதற்கு ஆண்டுகளாகும். முதலில் உயிர் வாழ்வதற்கான வழிகளை யோசிக்கலாம். இன்றைய இளைஞர்களுக்கு எத்தனை பேருக்கு குழந்தையின்மை பிரச்சினை இருக்கிறது தெரியுமா..ஓ எம் ஆர் ரோட்டில் எத்தனை போர்டுகள் வைத்திருக்கிறார்கள் பாருங்கள் குழந்தையின்மைக்கு நாங்கள் தருகிறோம் தீர்வு என்று. ஐஸ்கிரீம் நகை விளம்பரங்களை போல கவர்ச்சிகரமாக வைத்திருக்கிறார்கள். இயற்கையாக நடைபெற வேண்டியதை மருத்துவ உதவியுடன் ஆரோக்கிய குறைபாடுகளால் இளைஞர்களுக்கு அமைப்பதுதான் உங்களின் குறிக்கோளா.

    எடப்பாடியார்
    தளபதியார்
    பொன்னார்
    திருமாவளவனார்

    இன்னும் எத்தனை ஆறுகள் வந்தாலும் மக்கள் பிரச்சனைகளை மறந்து எதிர்கால திட்டங்களை கோட்டை விடுகிறார்கள். திருமாவளவன் போன்றவர்கள் நல்ல திட்டங்களுக்காக குரல் எழுப்ப வேண்டும் என்று மக்கள் எதிர் பார்க்கிறார்கள்.
    இவர்கள் அனைவருமே தன்னையும் சாதிகளையும் கடந்து மக்களின் எதிர்கால நலன் பற்றி மட்டுமே யோசித்தால் எவ்வளவு ஆரோக்கியத்தை மக்களுக்கு தரலாம். ஒருமுறை ஊருக்கு சென்றால் செங்கலபட்டு அடைவதற்கு 3 மணி நேரம் ஆகிறது. எவ்வளவோ தூசி புகைகள் நுரையீரலுக்கு சென்று கேடு விளைவிக்கிறது. சைனாவில் 22000 கிலோமீட்டர்கள் அதிவேக ரயில்சேவை உள்ளது. செங்கல்பட்டு செல்ல எடுக்கும் நேரத்தில் பாதிதான் தஞ்சைக்கு செல்ல சைனாவில் எடுக்கிறது. அவர்களின் உழைப்பு வேறு. இருக்கின்ற கட்டமைப்பினை பயன்படுத்தி என்ன செய்தால் மக்களுக்கு ஆரோக்கியம் கிடைக்கும் என்று யோசியுங்கள். இல்லையென்றால் என்னைப்போல(கர்வம் கொண்டவன் என்று எண்ண வேண்டாம. என் வேலை நேரம் தவிர கிடைக்கும் நேரம் எல்லாம் தமிழர் நலன் சார்ந்த சிந்தனை மட்டுமே உள்ளது) சில நல்ல பைத்தியக்காரர்களிடம் கேளுங்கள். இந்த போக்குவரத்திற்கு மிகச்சிறந்த தீர்வு பேருந்து நிலையத்தை இரண்டாக பிரிப்பது. கோயம்பேடு பேருந்து நிலையம் வேலூர் மார்க்கமாகவும் செங்கல்பட்டில் ஒரு பேருந்து நிலையத்தை அமைத்து அது தின்டிவனம் மார்க்கமாகவும் அமைப்பது ஆகும். இடத்தை ஒதுக்கி பேருந்துகளை நிறுத்தசெய்யுங்கள் பிறகு பேருந்து நிலையம் அமைக்கலாம். யோகி ஆதித்யநாத்தை பாருங்கள் கல்வி மருத்துவம் பிளாஸ்டிக் ஒழிப்பு என்று வந்த உடனே அதிரடியாக ஸ்கோர் செய்கிறார். அதிரடியான நல்ல திட்டங்கள்தான் உங்களுக்கு நல்ல பெயரை கொண்டு வந்து சேர்க்கும். அது மாநில அளவோடு நில்லாமல் தேசிய அளவிலும் கூட யோசித்தால் திராவிடத்தை கொண்டு செல்ல முடியும். உங்கள் கைகளில்தான் உள்ளது.

    ReplyDelete
  2. செங்கல்பட்டு தாண்டும் வரை ஆட்சியாளர்களையும் அதிகாரிகளையும் மனதிற்குள் திட்டிக்கொண்டே அமர்ந்திருப்பேன். பேருந்திலும் நிறுத்தங்களிலும் என்னை சுற்றி மக்கள் படும் கஷ்டங்கள் அப்படி என்னை கோபப்பட வைக்கும். ஒரே ஒரு ஆணையில் எல்லா கஷ்டங்களும் போய்விடுமே இப்படி செய்கிறார்களே என்று.. மக்களும் எதையுமே வேண்டாமல் எல்லாவற்றையும் அடக்கி அடக்கி கிடைப்பதை வைத்து வாழ்க்கையை ஓட்டி விடுகிறார்களே என்று மக்கள் மேலும் கோபம் செல்லும். அதனால்தான் மக்கள் இப்போதெல்லாம் ஓவராக உணர்ச்சிவசப்படுகிறார்கள். அது அடக்கி வைத்த கோபம். தட்டுங்கள் திறக்கப்படும் என்று சொல்கிறார்கள். எதையுமே வேண்டாத நம் மக்களை நினைக்கையில் கோழி ஞாபகம் வரும். அடித்து சாப்பிட்டு போய்விடுவார்களே என்று வருந்துவேன். சிங்கம் போல என்று மாறுவார்கள் என்று ஏங்குவேன்.

    ReplyDelete
  3. மக்களுக்கு சுத்தமான காற்றை கொடுங்கள். சந்திரபாபுவின் அமராவதி நகரம் 50 சதவீத இயற்கையை கொண்டது. நம் சென்னையை பாதுகாக்க மக்களுக்கு ஆரோக்கியத்தை வழங்க சில வழிமுறைகள்.

    1) கோயம்பேடு பேருந்து நிலையம் வேலூர் மார்க்கமாகவும் 2) செங்கல்பட்டில் தின்டிவனம் மார்க்கம் 3) ஈ சி ஆர் பேருந்துகள் கேளம்பாக்கத்திலும் அமைக்கப்பட்டால் நகர மக்கள் சுத்தமான காற்றை பெறுவார்கள்

    ReplyDelete
  4. Mostly we are opportunists.If we want kidney for replacement we won't bother for any thing.If we need eyes for replacement ,we will go after that with out considering the rays,religion,language and castes.If we need heart for replacement we will not hesitate to get from any one.If we need blood for our self we ready to get it from any source.If we want to enjoy illegally we will go all out to grab any woman but we will only think think and analyse to their own daughter in marriage for any one

    ReplyDelete