தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Friday, 28 April 2017

வலி 9 – ஒற்றைப் பெற்றோர்


எங்கள் குடும்பத்தில் ஒரு மணிவிழா! என் அக்காவின் மகன் நாச்சியப்பன் 60 ஆம் அகவையை நிறைவு செய்தபோது, குடும்ப அளவில் அதனை ஒரு சிறிய விழாவாக அனைவரும் கொண்டாடினோம். அவர் என் அண்ணண் மகளைத்தான்  மணந்திருந்தார். எனவே இருவழியிலும் உறவு! அந்த விழாவில் அவர்கள் இருவரையும் பாராட்டியும், வாழ்த்தியும் பலரும் பேசினோம்.அவர்களுக்கு மாதவி, கனகா என்று  இரண்டு மகள்கள். அவர்களுள் மூத்த மகளான மாதவி பேசும்போது ஒரு செய்தியைக் குறிப்பிட்டார். தங்களின் பெற்றோர் தாங்கள் இருவருக்கும் கொடுத்த பெரிய பரிசு என்ன என்பது குறித்து ஒரு செய்தியைக் கூறினார். பொதுவாக எந்தப் பெற்றோரும் தம் பிள்ளைகளுக்குப் பரிசு கொடுத்து மகிழ்வது இயல்புதான். சின்ன வயதில் பொம்மைகள், விளையாட்டுப் பொருள்கள், கொஞ்சம் வளர்ந்தபின் உடைகள், புத்தகங்கள் என்று பரிசுகள் மாறும். அவற்றில் பொதிந்திருக்கும் அன்பு ஒன்றுதான். ஆனாலும் மாதவி குறிப்பிட்ட பரிசு அனைவரையும் வியக்க வைத்தது. "எங்களுக்கு எவ்வளவோ பரிசுகளை எங்கள் பெற்றோர் கொடுத்துள்ளனர்.

மேலும் படிக்க

2 comments:

  1. இன்றைய இளைய தலைமுறையினருக்கு தேவையான தகவல சொல்லி இருக்கிறீர்கள அய்யா. இந்த இளைஞர் /இளைஞி்களுக்கு தன் குழந்தை உள்பட யார் மேலும் அக்கறை இல்லை. தன்னுடைய விருப்பத்தகற்கு எது வேண்டுமானாலும் செய்யலாம். எவ்வித கஷ்டமும் இல்லாமல் செல்லம் கொடுத்து வளர்க்கப்படுக்கப்படும் ஆண்/பெண் பிள்ளைகள் திருமணத்திற்கு பிறகு எடுக்கும் அவசர முடிவுகள் குழந்தைகளை பாதிக்கிறது. என்னன்ன சவால்கள் திருமண/ அலுவலக வாழ்க்கையில் உள்ளன அதன் விளைவுகள் என்ன என்று பெற்றோர்கள் சிறுவயதிலேயே கற்று தரவேண்டும். அப்போதுதான் பெரியவர்களான பிறகு அவர்கள் இது போல அவசர முடிவுகள் எடுக்க மாட்டார்கள்.

    ReplyDelete
  2. மிக சரியான பெற்றோர். இவர்கள்போல் இல்லையே என்ற ஆதங்கம் உள்ளது.

    தற்போது நான் “The Dark Room” - என்ற ஆங்கில புதினத்தை படித்து வருகிறேன். அக்கதையின் மைய கருவே தாயாரும் தந்தையாரும் பிள்ளைகள் மத்தியில் சச்சரவு செய்து கொள்வதும், அதனால் ஏற்படும் தொடர் பிரச்சினைகளை வைத்து நகர்ந்து கொண்டிருக்கிறது.

    சிறந்த பெற்றோர்களாக இருப்பது அவ்வளவு எளிதல்ல.

    ReplyDelete