தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Wednesday 5 April 2017

"பணப்பட்டுவாடா"



கடந்த 3 ஆம் தேதியிலிருந்து காலை 6.30 மணி தொடங்கி, ஆர்.கே.நகர் பகுதியில், அத்தொகுதி மக்களை வீடு வீடாகச் சென்று சந்தித்து, தி.மு.க. வேட்பாளர் மருது கணேஷுக்கு ஆதரவாக வாக்குகள் கேட்டு வருகின்றோம். திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தோழர்களாகிய நாங்கள் 20 பேர் பரப்புரையைத் தொடங்க, நூற்றுக்கணக்கான தி.மு க தோழர்களும், தொண்டர்களும் எங்களுடன் இணைந்து கொள்வார்கள். அந்தந்தப் பகுதிப் பொறுப்பாளர்களாகப் பணியாற்றும் தி மு க  மாவட்டச் செயலாளர்களும், வேட்பாளரின் துணைவியாரும் எங்கள் உடன் வந்து எங்களுக்குப் பெருமை சேர்ப்பார்கள். ஏறத்தாழ மூன்று மணி நேரம் அந்தப் பரப்புரை நடைபெறும். எங்களால் உதய சூரியனுக்கு வாக்குகள் கிடைக்கின்றனவோ இல்லையோ, எங்களுக்கு நிறைய அனுபவங்கள் கிடைத்தன.


வழியில் மாற்றுக்  கட்சியினர் வாக்கு சேகரித்துக் கொண்டு இருந்தால் அவர்களுக்கும் வணக்கம் சொல்லி நகர்வோம். அவர்களும் அதே நாகரிகத்துடன் நடந்து கொள்வர். இன்று (05.04.2017) காலைதான் ஓர் அதிர்ச்சிச் செய்தி காத்திருந்தது. வீடு வீடாகச் சென்று ஒரு வாக்கிற்கு ரூ.4000/ வீதம் பணத்தை அள்ளிக் கொடுத்து, சிலர் 'தொப்பிக்கு' (டி.டி.வி. தினகரன் அணி) வாக்கு கேட்டுள்ளனர். அதனைத் தடுத்த தி மு க தோழர்களைத் தடி கொண்டும், அரிவாள் கொண்டும் அந்தக் குண்டர்கள் தாக்கியுள்ளனர். அடிபட்ட தி.மு க வினர் மருத்துவமனையில் உள்ளனர் என்று கூறினர்.  அந்த வேதனையான செய்தியைத் தாங்கிக்கொண்டு, நாங்கள் பரப்புரைக்குப் புறப்பட்டோம். 

காலை 10 மணிக்கு, அன்றைய பணியை முடித்துத் திரும்பப் போகும் நேரத்தில், சாலையின் எதிர்வரிசையில், ஏழெட்டுப் பேர் ஏதோ ஒரு துண்டறிக்கையை மக்களிடம் கொடுத்துக் கொண்டிருந்தனர். அவர்களில் நான் அறிந்த ஓவியர் சந்தானம், திரைப்பட இயக்குனர் புகழேந்தி தங்கராஜ், புலவர் கி.த. பச்சையப்பன் ஆகியோர் இருந்தனர்.  அடடே, அவர்களும் தேர்தல் பரப்புரையில் இருக்கின்றனர் போலும்  என்று நண்பர்களிடம் கூறிவிட்டு, அருகில் போய் அவர்களுக்கு ஒரு வணக்கம் சொல்லிவிட்டுப் புறப்படலாம் என்றேன். "அவர்கள் யாருக்கு வாக்கு கேட்கிறார்கள் என்று தெரியவில்லையே" என்றார் ஒரு தோழர். "யாருக்கா யிருந்தால் என்ன, அது அவர்கள் விருப்பம். நண்பர்கள் என்ற முறையில் பார்த்துவிட்டுப் போகலாம்" என்றேன்.  ஏதேனும் ஒரு கட்சிக்கு அவர்கள் வாக்கு கேட்கலாம் அல்லது யாருக்கும் வாக்களிக்காதீர்கள் என்று நோட்டாவிற்குக் கூட வாக்கு கேட்கலாம்.எப்படியிருந்தால் என்ன என்று நினைத்தேன்.

ஒரு தோழர் கூறினார், "இல்லை, அவர்கள் தி மு க விற்கு வாக்களிக்காதீர்கள் என்று மட்டும்தான் சொல்கிறார்களாம். பா.ஜ.க வில் உள்ள பார்ப்பன நண்பர் ஒருவர் சொல்லி மகிழ்ந்தார்"  என்றார்.  நான் நம்பவில்லை. "ஒருநாளும் அப்படி இருக்காது. ஏதேனும் ஒரு கட்சி, அல்லது நோட்டா என்றுதான் இருக்கும். தி மு க விற்கு மட்டும் வாக்களிக்காதீர்கள் என்று சொல்கிற அளவுக்கு அவர்கள் நன்றி இல்லாதவர்களோ, நாகரிகம் அற்றவர்களோ இல்லை. அவர்கள் சிறந்த கலைஞர்கள், புலவர்கள். அவர்களை நான் அறிவேன். யாரோ சொல்வதைக் கேட்டுக்கொண்டு,  அவர்களைக் கொச்சைப்படுத்தாதீர்கள்" என்று கடிந்து கொண்டேன்.

நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே, எங்கள் தோழர் எட்வின் நேராக அங்கு சென்று, அவர்கள் கொடுத்துக் கொண்டிருந்த துண்டறிக்கையை வாங்கி வந்தார். எனக்கு ஒரே அதிர்ச்சி. தோழர்களின் முன்னிலையில் நான் ஒரு முட்டாளாகி விட்டேன். ஆம், அவர்கள் அப்படித்தான் அந்தத்  துண்டறிக்கையில் கோரியிருந்தனர். யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது பற்றி எந்தக் குறிப்பும் இல்லை.தி மு வை நிராகரியுங்கள் என்பது மட்டும்தான் அவர்களின் ஒற்றைக் கோரிக்கை. 

  
ஈழ மக்களுக்கு 2009இல் தி மு க துரோகம் இழைத்து விட்டதாம். இப்போது அதனைக் கண்டுபிடித்து, ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வாக்களிக்காதீர்கள் என்கின்றனர்.  நடராசனின் (சசிகலா) நண்பர்களான இவர்கள், டி.டி.வி. தினகரனுக்கு வாக்களியுங்கள் என்று கேட்க வெட்கப்படுகின்றனர் போலும்.  மக்களால் விரட்டியடிக்கப்படும் அவர்களுக்கு இப்படி மறைமுகமாக வாக்கு கேட்கிறார்கள். இவர்களை எல்லாம் நேர்மையாளர்கள் என்று நினைத்தமைக்காக நண்பர்களிடம் நான் வருத்தம் தெரிவித்துக் கொண்டேன்.

ஈழச்  சிக்கலில் இவர்களுக்கு ஜெயலலிதா நல்லவராகி விட்டார். வைகோ, நெடுமாறன் ஆகியோரும் கூட அவ்வப்போது என்னென்ன நிலை எடுத்திருக்கின்றனர் என்பதை அவர்கள் அறிவார்கள். மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகச் சில புகைப்பட ஆதாரங்களைக் கீழே தருகின்றேன். 






பா.ஜ.க.வைச்  சேர்ந்த பார்ப்பன நண்பர் ஏன் மகிழ்ச்சி அடைந்தார் என்பது இப்போது எனக்குப் புரிந்தது. அவர்கள் செய்யக் கூடிய வேலையை இவர்கள் செய்தால் அவர்கள் மகிழத்தானே செய்வார்கள். ஆனாலும் ஓர் ஆறுதல், அந்த அறிக்கையைப் படித்த தி மு க வினர் மட்டுமின்றி, பொது  மக்களும் அதனை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. 

தினகரன் அணி, வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதோடு மட்டுமின்றி, வேறு வகைகளிலும் "பணப்பட்டுவாடா" செய்கிறது போலும்!

6 comments:

  1. மகன் செத்தாலும் பரவாயில்லை மருமகள் தாலி அறுக்க வேண்டும் என்கிற மனநிலையில் இருக்கும் சில புத்திசாலிகள்!

    தி மு கழகத்தை வீழ்த்த இனி எவரும் வரப்போவது இல்லை!

    ReplyDelete
  2. சாதாரணமாக அலுவலங்களிலேயே எத்தனையோ பிரிவுகளை உண்டாக்கி பார்ப்பணர்கள் குளிர் காய்கிறார்கள். மக்கள் மத்தியில் பிரபலமான தமிழர்களை அல்லது திராவிடர்களை காலி செய்யும் முயற்சியில் எப்போதும் பார்ப்பணர்கள் மற்றும் பார்ப்பண ஆதரவாளர்கள் ஈடுபடுகிறார்கள். பாடகி ஜென்சி முதல் சமீபத்தில் நடிகர் வடிவேல் வரை அந்த பட்டியல் நீல்கிறது. ஒட்டு மொத்த தமிழர்களையே காலி செய்வது பெருமுயற்சி என்றால் இன்று பிரபலமாக இருக்கும் பாரப்பணர் அல்லாத தனிமனிதரோ இயக்கமோ அதனை அழிப்பதற்கு எல்லா முயற்சியும் பார்ப்பணர்களால் எடுக்கப்படுகிறது. அதனை கண்டும் காணாமல் சாதி எல்லாம் ஒன்றும் இல்லை என்று சொல்லி நம்மை சமாதானப்படுத்தும் தமிழர்களை பார்க்கையில் இது பயமா அல்லது அலட்சியமா எதற்கு அதை யோசிச்சிகிட்டு என்ற சோர்வா ஏன் இப்படி இருக்கிறார்கள் என்று கேள்விக்கு விடை தெரியாமல் முழிக்கிறேன்.

    ReplyDelete
  3. இரத்தினவேல்6 April 2017 at 14:13

    பார்ப்பனர்களுக்குத் தங்கள் நன்மைக்காக யாரை ஆதரிக்க வேண்டும், யாரை எதிர்க்க வேண்டும் என்னும் தெளிவு இருக்கின்றது., நம்மவர்களுக்குத்தான் இந்தத் தெளிவு இருப்பதில்லை.

    ReplyDelete
  4. The late Mr.Murasoli Maran went to Jaffna and discussed with Tamil people representatives to settle the ethnic issue and the Leader Mr.Prabhakaran had also accepted the plan but all of a sudden one Sadist from Chennai informed Prabhakaran not to accept the plan and this cause the genocide of three hundred thousand Tamilians.My humble suggestion is "why still DMK is hesitating to reveal this sorry episode to all

    ReplyDelete
  5. யாரை வேண்டுமானாலும் நம்பலாம், பார்ப்பரையும், பார்ப்பன அடிவருடிகளையும் நம்பவே முடியாது !

    ReplyDelete
  6. The so called supporters of TamilEzham Vaiko,Nedumaran ans seeman are using the LTTE good will for their own self advancement but the genuine Tamil supporters of DMK could not reveal the truth at the last leg of war due to to some constrain.

    ReplyDelete