தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Sunday 23 July 2017

வலி 15 – கல் சுமந்து, மண் சுமந்து…



பல ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சி. அப்போது நான் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அன்று சற்றுக் காலந்தாழ்ந்து புறப்பட நேர்ந்தது. முதல் மணி வகுப்பு எனக்கு. விரைந்து போய்விட வேண்டுமே என்ற கவலையுடன், பேருந்து ஏறினேன். புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, போக்குவரத்து நெரிசல். ஓர் ஊர்வலம் போய்க் கொண்டிருந்ததால், வண்டிகள் எல்லாம் நின்றுவிட்டன. கட்டிடத் தொழிலாளர்கள், பணியில் இருக்கும்போது விபத்து நேர்ந்தால், உரிய இழப்பீடு வேண்டும் என்று கேட்டு ஊர்வலம் போவதாகச் சொன்னார்கள். பேருந்தில் இருந்தவர்கள் பலருக்கும் எரிச்சல். தாமதமாகிறதே என்று எனக்கு கூட ஒரு கோபம்தான். இதுக்கெல்லாம் போலீஸ் அனுமதியே கொடுக்கக் கூடாதுஎன்றார் ஒருவர். எல்லாரும் சங்கம் வச்சிட்டாங்க. ஒரு இடத்திலேயும் ஒழுங்கா வேல நடக்கிறதில்லஎன்று சலித்துக் கொண்டார் இன்னொருவர். நான் உள்பட, அந்த ஏழைத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக யாரும் ஒரு சொல் கூடச் சொல்லவில்லை. அடுத்த மாதம், ஊதிய உயர்வு கேட்டு, கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் நாங்கள் நூற்றுக்கணக்கில் அதே பாதையில் ஊர்வலம் போனோம்.

மேலும் படிக்க

No comments:

Post a Comment