தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Sunday, 23 July 2017

பாஜகவின் தலித் ஆதரவு!
இந்தியக் குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  அவருக்கு நம் வாழ்த்துகள்! 

புதிய குடியரசுத் தலைவர் ஒரு தலித் என்று சொல்லப்படுவது அவ்வளவு உண்மையன்று. அவர் கோலி என்னும் சமூகத்தைச் சேர்ந்தவர். நெசவாளர்கள் அவர்கள். அச்சமூகம் எப்போதும் தீண்டாமைக்கு ஆளானதில்லை. அந்தச் சமூகத்தின்  பெயர், அட்டவணைச் சாதியினரின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது என்பது மட்டுமே உண்மை. அதனை வைத்துக் கொண்டு, நாங்கள் தலித் மக்களின் ஆதரவாளர்கள் என்பது போன்ற ஒரு பொய் முகத்தைக் காட்ட பாஜக முயல்கிறது. 


அதே நேரத்தில், வெங்கையா நாயுடுவைத் துணைக் குடியரசுத் தலைவர் ஆக்குவதன் மூலம், முழு அதிகாரத்தையும் அவர் கைக்குக் கொண்டுவர பாஜக  முயலும் என்பது வெளிப்படை.

இது ஒருபுறமிருக்க, தலித் ஆதரவு பேசும் மத்திய அரசு, தலித் மக்களின் வேதனைகளைப் பற்றிப் பேசுவதற்காக, நாடாளுமன்றத்தில் எழுந்த மாயாவதிக்கு மூன்று நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கியது. . எவ்வளவோ நேரம், கூச்சல் குழப்பங்களில் வீணாகும் போது,  தலித் மக்களின் சிக்கல்கள் குறித்துப் பேச 10 நிமிடங்களைக் கூட ஆளும் அரசினால் ஒதுக்க முடியவில்லை. இப்போது அவர் தன் பதவியை விட்டு விலகியிருக்கிறார். 


இதுதான் பாஜகவின் தலித் ஆதரவு முகம்!                                    

4 comments:

 1. ஐயா, நான் நிதிஷ்குமார் அவர்களை மிகவும் கண்ணியமானவர் என்று நினைத்திருந்தேன். ஆனால் எந்த மோடி பிரதம வேட்பாளராக நிறுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக கூட்டணியிலிருந்து விலகினாரோ அதே மோடியின் விருந்தில் மே மாதத்தில் கலந்துகொண்டார். அப்போதே லல்லுவுக்கு எதிரான சதி உருவாகிஉள்ளது. அதன்பின்னர் கலைஞர் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட அத்துணை வடநாட்டு தலைவர்களும் பாஜகவை விமர்சித்து பேசினார்கள். ஆனால் நிதிஷ் கவனமாக பாஜகவை தாக்காமல் தமது பேச்சை அமைத்துக்கொண்டார். அதன்பின்னர்தான் லல்லு வீட்டில் ரைடு. இன்று முதல்வர் பதவியை ராஜினாமா செய்த அடுத்த நொடி மோடி வாழ்த்து தெரிவ்க்கிறார். பாஜக ஆதரவு தெரிவிக்கிறது. ஆளுநரிடம் ஆதரவு கடிதம் கொடுக்கிறது. என்ன ஒரு அவசரம். அரசியல் எவ்வளவு அசிங்கமாக ஆகிவிட்டது. வெட்ககேடு.

  ReplyDelete
 2. ஐயா, நிதிஷ்குமார் ஒரு நல்ல அரசியல்வாதி என்று நினைத்திருந்தேன். அவர் சொல்லுகிறார்,” அதிக பேராசை கூடாது. என்னால் அழுத்தங்களை தாங்கமுடியவில்லை” என்று. ஆக லல்லுவின் கட்சியினர் அல்லது குடும்பத்தினர் அதிக ஆதிக்கம் செலுத்த முயற்சித்திருக்கலாம். அதனை காங்கரஸ் போன்ற தோழமைக்கட்சி உதவியுடன் சமாளித்திருக்கலாம். நாளை பாஜக அதிகாரம் செலுத்தாதா? அழுத்தம் தராதா? அது நிதிஷுக்கு தெரியாதா? தெரியும் ஆனாலும் அவர் பழைய காதலியை நாடிச செல்வதையே விரும்பி இருக்கிறார். தம் கட்சியைவிட அதிக இடங்களை வென்றிருந்தாலும் தேர்தல் பிரச்சாரத்தில் கூறியபடி நிதிஷை முதல்வராக்க லல்லு சம்மதித்த பெருந்தன்மையை நிதிஷ் இவ்வளவு சீக்கிரம் மறந்திருக்கவேண்டாம். லால்லுவுடன் உறவு வைத்துக்கொண்டே பாஜகவுடன் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துகொண்டிருந்துள்ள நிதிஷின் திறமையை பாராட்டத்தான் வேண்டும். பீஹார் மக்கள் பாவம். யாருக்கு ஒட்டு போட்டார்கள் ? யார் இப்போது ஆளுகிறார்கள்! பிள்ளையார் பிடிக்க குரங்காய் போனகதை ஆகிவிட்டது; தமிழ்நாட்டைப்போல!

  ReplyDelete
 3. நிதீஷ் பா.ஜ.க கூட்டணி ஆட்சிக்கு எதிரான வாக்குகள் லாலுவுக்குத்தான் கிடைக்கும் என்பதை உணர்ந்த நிதீஷ் வஞ்சக எண்ணத்துடன் லாலுவின் கூட்டுச்சேர்ந்து முதல்வரான தும் லாலுவின் முதுகில் குத்தியிருக்கிரார்.

  ReplyDelete
 4. இசுலாமியர்களை கொன்றுவிட்டு இந்துத்துவ ஆதரவு இசுலாமியரை குடியரசு தலைவர் ஆக்கினார்கள். அதேபோல், ஒரு பக்கம் பட்டியலினத்தவரை கொன்றுவிட்டு, மறுபுறம் அதே இனத்திலிருந்து இந்துத்துவ மனப்பான்மை கொண்டவரை குடியரசு தலைவர் ஆக்கியிருக்கிறார்கள்.

  ReplyDelete