தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Wednesday 16 August 2017

நேர்படப் பேசு 14-08-2017

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நேர்படப் பேசு நிகழ்ச்சியில் " நீட்டுக்கு ஓராண்டு விலக்கு… நிரந்தரத் தீர்வைக் கேட்கும் எதிர்க்கட்சிகள்…காலத்தில் கொடுக்கும் சலுகையா? தாமதித்த நீதியா? தடை தீர்வாகுமா?" பற்றிய விவாதத்தில் சுபவீ


5 comments:

  1. NEET தேர்விலிருந்து நிரந்தர விலக்கு என்ற கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. CBSE முறையில் படிக்காத மாணவர்களுக்கு போதுமான அவகாசம் கொடுத்து தங்களை தயார் செய்து கொள்ள வாய்ப்பளிக்க வேண்டும். போதுமான காலம் கொடுத்தால் சமச்சீர் கல்வியில் படித்த மாணவர்கள் தங்களை நீட் தேர்வுக்கு முழுமையாக தயார் செய்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இன்னொன்று, சமச்சீர் கல்வியை விட CBSE கடிமானது என்பதே என்னுடைய பார்வை.

    ஆனால் CBSE ஒன்றும் rocket science அல்ல. போதுமான காலமும் இது தான் syllabus என்ற தெளிவும் இருந்தால் யார் வேண்டுமானாலும் படிக்கலாம், வெற்றிகரமாக தேர்வு எழுதலாம். நம்முடைய பிள்ளைகள் மீது சுபவீ அவர்களுக்கு அந்த நம்பிக்கை இருக்கிறதா என்பது தான் கேள்வி.

    ReplyDelete
  2. J K ராசமாணிக்கம்17 August 2017 at 23:36

    அய்யா NEETயை விளக்கி ஏழை எளியவர்கள் பயன்பெற வேண்டும என்று அடிக்கடி குரல் கொடுத்து கவலைப்படுகிறிர்கள் அது மிகவும் நியாயமானதே! அதை நடைமுறைப்படுத்த NEET இல்லாமல் பிற்படுத்தப்பட்ட,மிகபிற்படுத்தப்பட்ட இடஒதுக்கீட்டில் 'Creamy Layer'யை நடைமுறைப்படுத்தக் குரல் கொடுங்கள் மற்றும் போராடுங்கள் அய்யா.அப்போது தான் சொல்லிலும் செயலிலும் நீங்கள் பிற்படுத்தப்பட்ட மாணவர்களிலுள்ள ஏழை எளிய மாணவர்களுக்காக உண்மையான அக்கறையுள்ளவர் என்று கருத முடியும் இல்லையென்றால் லட்சங்களில் செலவு செய்து சென்னை கோவை நாமக்கல் ராசிபுரம் போன்ற இடங்களில் பயிலும் வசதிபடைத்த பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்காகவே NEETயை எதிர்க்கிறிர்கள் என்பதே உண்மை!.

    ReplyDelete
  3. Dear mr.Suresh, I appreciate your interest and accept CBSE is tougher than state board syllabus.Tougher never means better or superior.Please note if the NEET exam is prepared on the basis of State Board syllabus CBSE students will not suffer.what is wrong with the State Board Syllabus.

    ReplyDelete
  4. கிரண்குமார்21 August 2017 at 23:13

    கிராமப்புற ஏழை எளிய மாணவர்களுக்காக நீட் தேர்வு வேண்டாமென்ற உங்களின், Dr.ரவீந்தர்தநாத்தின் கருத்துக்கள் "ஆடு நனையுதே என்று ஓநாய்கள் அழுத கதைதான்!".

    ReplyDelete
  5. மருதுவக் கல்வியின் தரம் தமிழ்நாட்டு மாணவர்களால் கெட்டுப்போகின்றது எனும் கூற்று இந்த கேள்வியில் அர்த்தமில்லாமல் போகின்றது.

    நல்ல கல்வித்தரம் இல்லாத மாணவர்கள் மருத்துவப்படிப்பில் சேர்கின்றார்கள் என்றால் அவர்கள் எப்படி மருத்துவ இறுதித் தேர்வில் தேர்ச்சி பெறுகின்றனர்?.

    அதுபோல பாஜக அரசாங்கம் எப்படி எளியவர்களும் படித்து முன்னேறுகின்றனரே என்ற வயிற்றெரிச்சலில் மற்றுமே நீட் தேர்வினை திணிக்கின்றனர் என்பது கீழ்க்கண்ட கேள்வியில் பட்டவர்த்தனமாக தெளிவாகும்.

    உன்மையிலேயே தரமான மருத்துவர்களை உருவாக்க வேண்டுமெஇன்று நினைத்தால், நீட் பயிற்சியையும் ஒரு பாடமாக மருத்துவப்படிப்பில் வைத்து அதையும் மருத்துவ தேர்ச்சியின் ஒரு காரணியாக ஏன் ஆக்கவில்லை?

    [ சுப வீ அய்யா, இவைகளை ஏன், நீட் எதிப்பாளர்கள் எங்குமே சொல்லவில்லை?)

    ReplyDelete