தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Friday 1 September 2017

06-09-2017 கண்டன ஆர்ப்பாட்டம்!



அனிதாவின் தற்கொலைக்குக் காரணமான, நீட் தேர்வை எதிர்த்து   06.09.17 காலை 11 மணிக்கு, சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகில், திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். சமூக நீதி காக்க அனைவரும் அணி திரள்வோம்.

தலைமை: பேரவையின் பொதுச் செயலாளர்  சுப.வீரபாண்டியன்

10 comments:

  1. கார்ப்பரேட் அரசியல்வாதிகளால் கொல்லப்பட்ட சகோதரி அனிதாவின் மரணம் நெஞ்சை உளுக்குகிறது.

    உயர்திரு திருமாவளவன் அவர்களுக்கு இந்த சுபவீ அய்யா மூலமாக ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன்.

    நீங்கள் இந்தியா முழுவதும் உள்ள தலித் சகோதரர்களை ஒன்று சேருங்கள். உங்கள் பின்னால் பார்ப்பண ஆதரவில்லாத கார்ப்பரேட் ஆதரவில்லாத, எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று உண்மையாகவே நினைக்கிற, கம்யூனிச சிந்தனையுள்ள எங்களை போன்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த நடுத்தர மக்கள் உங்கள் பின்னால் அணி திரள்கிறோம். எங்களுக்கு எங்கள் சாதி பணக்காரர்களை நினைத்து பெருமைப்படுகிற மனம் போய்விட்டது.அடுத்த தலைமுறை எல்லாரும் நன்றாக இருக்க வேண்டும். ஆனால் ஒன்றே ஒன்றை இப்போது சொல்லி கொள்ள விரும்புகிறேன். கட்டாய காதல்கள் எந்த விதத்திலும் உதவாது. அது இயல்பாக நடைபெற வேண்டும். காதலை ஊக்குவிக்கும் நீங்கள் நல்லவர்களின் ஒற்றுமையை ஊக்குவித்தால் அடுத்த தலைமுறை வரும்போது எல்லாம் இயல்பாக நடக்கும்.

    ReplyDelete
  2. மண் மூடிப் போகாது உன் கனவு, எங்கள் மனதில் குடி கொண்டுள்ளது. சென்றுவா தங்கையே!!

    ReplyDelete
  3. அனிதாவின் தற்கொலை அவர் நமது நீதிபரி(றி)பாலன முறைமீது கொண்டிருந்தகொண்டிருந்த நம்பிக்கையின்மையை வெளிப்படுத்துகிறது. அவர் காறித்துப்பிய எச்சல் காயுமுன் சமூக நீதியை சிதைத்த அனைத்து கயவர்களும் முகத்தை துடைத்துக்கொள்ளுங்கள்.
    நமது அரசாங்கங்கள் எல்லாம் பங்குபிரித்துக்கொள்ளும் பாழடைந்த மண்டபகங்களாகின. அவைகளின் பெயர்களை சட்டமன்றம் என்பதற்குபதிலாக அரசுமன்றம் என்றும் நீதிமன்றங்களை சட்டமன்றங்கள் என்றும் பெயர் மாற்றம் செய்யலாம். Court of Law என்றுதான் சொல்கிறார்கள், Court of Justice என்று சொல்வதில்லை. எனவே நீதிக்கும் அவர்களுக்கும் சம்பந்தமில்லை; ஒரு சில அபூர்வ நிகழ்வுகள் புண்ணியவான்கள் தவிர.
    மருத்துவம் பயில சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும்வேண்டும் என்று சதிவலை பின்னிய எய்த்துப்பிழைக்கும் கூட்டம் மீண்டும் தலைதூக்க துவங்கியுள்ளது. மாட்டுக்கு வந்த சொரனை நீட்டுக்கு வராத மாணவர் சமுதாயம் உடனே விழித்துக்கொள்ளவேண்டும். இல்லையெனில், மலம் அள்ளும் வேலை மட்டுமே உனக்கு.

    ReplyDelete
  4. குழப்ப அறிவி்ப்புகளால் ஏற்பட்ட விளைவால் அனைவரும் வருத்தமடைந்துள்ளோம். மறைந்த முதலமைச்சர் உயிரோடு ஆட்சி புரிந்திருந்தால் இதற்கு " உண்டு அல்லது இல்லை" என்ற தீர்வை -
    தீர்க்கமான முடிவை என்றோ அறிவித்திருப்பார்.மனதை சரி செய்திருப்பார். அதுதான் மக்கள் செல்வாக்கோடு வாழும் தலைவர்களுக்கான அழகு.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. ஜெயலலிதா இருந்திருந்தால் அதை செய்திருப்பார் இதை செய்திருப்பார் என்று ஒரு சிலர் இப்போது சொல்கிறார்கள். மக்கள் விரோத அரசு நடத்தியவரை உயர்த்திப்பிடிப்பவர்களை நினைக்கும்போது மிக வேதனை. எடப்பாடி ஆட்சியும் நீட் தேர்வும் நேரடியாக மக்களை கொல்கிறது. பார்ப்பணர்கள் மறைமுகமாக மக்களை கொல்வதில் வல்லவர்கள். செய்வதே தெரியாது. ஆனால் பாதிப்புகள் நிச்சயம். ஒரு உதாரணம் ஜெயலலிதா ஆட்சியில் போடப்பட்ட கொலைகார ரோடுகள். அதிக உயிர்களை பலி கொண்ட இசிஆர் ரோடு ஜெயலலிதா ஆட்சியில் போடப்பட்டது. இந்த மூன்று லேன் உள்ள உள்ள டிவைடர் இல்லாத ரோடுகள் மிக ஆபத்தானவை. பொன் ராதாகிருஷ்ணன் எத்தனையோ முறை நான்கு வழி சாலையாக மாற்ற கோரி கதறியும் ஜெயலலிதா அனுமதி தரவில்லை. அந்த ஒரே காரணத்தினால் நான் மிக நேசிக்கும் என் மாமா கல்பாக்கம் அருகே விபத்தில் உயிரிழந்தார். அவர் உயிரிழந்ததற்கு காரணம் யார். இந்த ரோடு மட்டுமல்ல தஞ்சை நாகை ரோடும் தஞ்சை புதுக்கோட்டை ரோடும் மூன்று வழி கொலைகார சாலையாக போடப்படுகிறது. இது ஆபத்தான இசிஆர் சாலை போன்றது. கலைஞர் நான்கு வழி சாலைகள் போட்டு தர வில்லை என்றால் எத்தனை யோ உயிர்கள் போயிருக்கும். ராஜாஜி 26000 பள்ளிகளை மூடினார். இதுதான் பார்ப்பணர்களின் வழிமுறை. செய்வதே தெரியாது. ஏனென்றால் நேரடி பாதிப்போ உடனடி பாதிப்போ இருக்காது. ஆனால் நாம் அடிமைகள் ஆகி இருப்போம்.

    ReplyDelete
  7. சார் உங்கள் தொலைபேசி எண் என்ன ? உங்களோடு உரையாட ஆவலாய் இருக்கின்றேன்.

    எனது கேள்விகள்
    1). பெரியார் கொள்கைகளை ஆதரித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டால் எனது வலது சாரி நன்பர்களின் வருத்தத்துக்கு உள்ளாவேன். ஆனாலும் தமிழர்கள் ஆரியத்தினால் ஆதிக்கம் செல்த்தப்படுவது கண்டு மனம் வெதும்புகின்றேன். நான் ஏன செய்வது>

    2). ஆரியத்தின் அடக்குமுறை கண்டு உள்ளம் கொதிக்கின்றது ஒரு கணணி பொறியாளனாக அமெர்க்காவில் தமிழ்நாட்டுக்கு வெள்யில் பணிபுரியும் நான் எந்த வழியில் சமூக நீதிக்கு ஆதரவாக செயல் பட முடியும்?

    3). பாஜக வினர் தமிழர்கள் மீது பல் முனைத்தாக்குதல் நடத்துகின்றனர், அதை நாம் எதிக்கொள்கின்றோமா? அதை முறியடிக்கும் வலுவில் இருக்கின்றோமா?

    4). தந்தை பரியாரி அடுத்த தலைமுறைக்கு கொன்டு போய்ச் சேர்க்கும் பணிகள் சரியாக நடந்துகொண்டிருக்கின்றதா?

    5). மக்கள் இன்னும் ஏன் எம்ஜியார் காலத்தையே நினைத்துக்கொன்டிருக்குன்றார்கள்? அந்த தேர்தலிலாவது யதார்ட்தத்தை உணர்ந்து வாக்களிப்பார்களா?

    6). உச்ச நீதிமன்ற நீதிபதிகளே சமூக நீதி பற்றிய புரிந்துணர்வு கொள்ளாமலிருக்கின்றனரே? உன்மையிலேயே நேரு போல அவர்களுக்கும் புரியலையா? இல்லை பாஜக வின் கைப்பிள்ளையுஅஅக இருக்கின்றனரா?

    7). 3 வருடங்ங்களுக்கு முன்னர், பாஜக வினர் பெரியார் மீது வசவுச்சொற்கள் மற்றும் இழிச்சொற்கள் கொண்டு தாக்குதல்களை ஊடகங்களில் மேற்ப்கொண்டனர், அப்பொழுது சாமானியர்களும் வெகுண்டெழுந்து கொடுத்த அடியில் பாஜகவினர் வாலைச் ருட்டிக்கொன்ட்பனர், பெரியார் அப்படி தமிழர்களுடன் இரண்டறக் கலந்துவிட்டார் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய தர்க்கமா?

    8). ஓடுக்கு காசு வாங்கிக்கொண்டு மக்கள் மொட்டுப்பொடுவத்யு மக்களின் தவறா இல்லை மக்களை அந்த நிலைக்கு இட்டுச்சென்ற யாரோவின் தவறா:? அந்த யாரொ யார்?

    8). நான் அறிந்து கொண்ட பெரியாரின் பகுத்தறிவு என்பது இதுதான். இது சரியா?

    யார் எதைச் சொனனாலும் அதை எஎறூகொள்ளும் முன் உன் மனதில் நிறுத்தி , தர்க்கரீதியாக மற்றும் அறிவில பூர்வமாக இது உன்மையா சாத்தியமா, என்று ஆராய்ந்து உன் மனதுக்கு ஒப்பினால் ஏற்றுக்கொள். மனித உழைப்பு, மனிதனின் தன்நம்பிக்கை மற்றும் மநித வாழ்வின் ஒழுக்கம் தான் முக்கியம், இதில் நீ நம்பிக்கை இழந்து விட்டால் பிறகு கடவுளிடம் போ. ஆனாலும் கடவுள் என்பது மதத்தினர்களின் இடையே பல்லுருவம் எடுத்து இஒருக்கின்றார். அதையெல்லாம் ஆராய்ந்து அறிந்துகொள். உன்மையான கடவுள் இயற்கைதான். என்பதை பகுத்து அறிந்துகொள்.

    9); தமிழர்கள் உசத்தியா> எந்த விதத்தில்?

    9). ஐரோப்[பிய நாகரீகம் குறித்து உங்கள் உரை என்ன? . தமிழர் நாகரீகத்தைவிட ஐட்ரோ[பிய நாகரீகமானது பழமையான் மற்றும் உயர்ந்த் நாகரீகமா?
    '
    10. ஜெர்மானியுடன் 2ம் உலக்கப்போரில் ஐரோப்பா ஜெர்மனிக்கு என்றும், மற்றும் ஆசியா ஜப்பானுக்கு என்று ஒப்பந்தம் போட்டுகொண்டு பேயாட்டம் ஆடிய ஜப்பான், ஒடுங்கிப்போய் ஆதிக்கத்தில் இருந்து விலகி உழைப்பில் கவனம் செலுத்தி உலகுக்கெ கந்துவட்டிக்காரனாயிருக்கும் ஜப்பான் , மீண்டும் அப்படி ஒரு கடுமையான நிலைக்கு போகும் சாத்தியம் இருக்கா? இல்லை நாகாசாகி, ஹிரோஷிமா நிகழ்வுகளை தங்களது குற்றங்களிநண்டனையா கருதி, பாவ மண்ணிப்பு கோரும் வகையில், மவுனித்தே இருப்பார்க:ளா?

    தயவு செய்து video பதிலாக கொடுக்கும்படி கேட்டுக்கொள்கின்றேன்

    ReplyDelete
  8. அனிதா தற்கொலைக்கு கண்டன ஆர்ப்பாட்டம் செய்யும் நீங்கள் நீட் தேர்வு விலக்குக்கு ஆதரவு என மத்திய அமைச்சர் சொன்ன பிறகு வேலுரை சேர்ந்த நீட் தேர்வு எழுதிய மாணவனின் தாய் தற்கொலை செய்து கொணடதற்கு உங்கள் வலைப்பூவில் ஒரு இரங்கலைக்கூட பதிவு செய்யாதது ஏன்?

    ReplyDelete
  9. தமிழக அரசியல் கட்சிகள்,மாணவர்கள் எதிர்ப்பிற்காக நீட் தேர்வை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகும் ஏற்கமாட்டோம் என்றால் கர்நாடகம் தமிழகத்திற்கு காவிரி நீர் வழங்கவேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் போது கர்நாடக அரசியல் கட்சிகளின் எதிர்ப்பின் காரணமாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகும் நாங்கள் காவிரி நீர் வழங்கமாட்டோம் என கர்நாடகம் சொன்னால் தமிழக அரசியல் கட்சிகள் ஏற்றுக்கொள்ளத் தயாரா?

    ReplyDelete
    Replies

    1. இது விதண்டா வாதம். நியாயமற்ற முறையில் நீதிமன்றம் வழங்கிய இடைக்காலத்தீர்ப்பு.CBSEபாட பாடத்திட்டத்தில் கேள்விகள் கேட்கப்பட்டதால் தமிழ் மாணவர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறார்கள். பரவலாக வடநாட்டில் நடக்கும் முறைகேடுகள் தமிழ் நாட்டிலும் நடந்திருக்கிறது.உள்நோக்கத்துடன் வழங்கப்பட்ட இடைக்காலத்தீர்ப்பை ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும்?

      Delete