தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Sunday, 17 September 2017

பெரும்பான்மை இழந்த அரசும் பேசாமல் இருக்கும் ஆளுநரும்!இன்று வரையில் இப்படி ஓர் அநாகரிகம் தமிழ்நாட்டில் அரங்கேறியதில்லை. ஆளுங்கட்சியினர் அன்றாடம் அடித்துக் கொள்கின்றனர். ஒருவரை ஒருவர் மிக இழிவாகப் பேசிக் கொள்கின்றனர். அடுத்த நாளே மீண்டும் கூடிக் கொள்கின்றனர். நேற்று அந்த அணியில் இருந்தவர்கள், எந்த வெளிப்படையான  காரணமுமில்லாமல் இன்று இந்த அணிக்குத் 'தாவுகின்றனர்'. குதிரை பேரம் நடப்பது நாட்டிற்கே தெரிகிறது. ஆனால் ஆளுநருக்குத்  தெரியவில்லை.  


"ஒரு வாரத்தில் நீ மாமியார் வீட்டுக்குப் போய்விடுவாய்" என்கிறார் தினகரனைப் பார்த்து  முதலமைச்சர். ஒரு 'மாண்புமிகு' முதலமைச்சரின் மொழிநடை எப்படியிருக்கிறது பாருங்கள்! 19 ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் முதல்வர் மீது நம்பிக்கையில்லை என்று நேரடியாக ஆளுநரிடம் சொன்னபிறகும் கூட, இது உட்கட்சிப் பிரச்சினை என்கிறார் ஆளுநர். அந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மீது  நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார் சபாநாயகர். திமுக தலைமையில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆளுனரிடம் சென்று மனு கொடுத்த  பிறகும், அவர் தனக்கும் தமிழ்நாட்டிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது போல, மும்பையில் அமர்ந்திருக்கிறார். 

தாங்கள் தலைகீழாய் நின்றாலும் ஆட்சிக்கு வரமுடியாது, எவ்வளவு தடுத்தாலும் தேர்தல் வைத்தால் மாபெரும் வெற்றி பெற்றுத்  திமுக ஆட்சிக்கு வந்துவிடும் என்ற உண்மை நிலவரம் மத்தியில் ஆளும் பாஜக அரசை உறுத்துகிறது.  எனவே எடப்பாடி அரசு என்னும் பெயரில் ஓர் எடுபிடி அரசே இருந்துவிட்டுப் போகட்டும் என்று நினைக்கிறார் மோடி. 

என்னதான் மோடி வித்தை செய்தாலும், இறுதியில் தளபதியின் படையே  வெல்லும். வரும் காலம் இதனைச் சொல்லும்!

2 comments:

  1. மு. சந்தோஷ் குமார்19 September 2017 at 18:44

    இதுவும் கடந்து போகும்

    ReplyDelete
  2. ஆம். தளபதியின் படை வெல்லும். ஆனால் அதையும் கடைசிநேரத்தில் கெடுக்க தி.மு.க.விலேயே உள்ள புல்லுருவிகளை இனம்கானவேண்டும். சென்ற தேர்தலிலேயே வென்று ஆட்சியை பிடிக்கவேண்டியத்தை கெடுத்த இரவல் இளவரசி இருக்கும்வரை திமுக தேறுவது கடினம். ஒரு தொகுதியில் தமது ஆதரவாளருக்கு சீட் தராமல் ஆத்ரவாளரல்லாத தொகுதியில் நல்லபெயர் உள்ள ஒருத்தருக்கு சீட் கொடுத்துவிட்டார்கள் என்பதற்காக ஒருத்தரும் வேலை செய்யவில்லை. அவர் கட்சியின் அமைப்புரீதியான உயர்பதவியில் இருக்கிறார். இதுமாதிரி இருந்தால் எப்படி தேறுவது ?

    ReplyDelete