தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Sunday 17 September 2017

ஆணவத்திற்கு விழுந்த அடி!



70, 80 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பார்ப்பனர்கள் எப்படித் திமிராகப் பேசுவார்களோ, அதே திமிருடன் இன்றும் பேசிக் கொண்டிருப்பவர், பாஜகவின் தேசியக் செயலாளர் ஹெச். ராஜா என்றார் புலவர் ஜெயபால் சண்முகம். நூற்றுக்கு நூறு உண்மையான சொல் அது!


கடந்த 15 ஆம் தேதி கூட, ஈ.வே.ரா. வைப் பின்பற்றுபவர்கள் எல்லோரும் முட்டாள்கள் என்று கூட்டமொன்றில் உளறிக்  கொண்டிருந்தார். அத்தனை ஆணவத்திற்கும் சேர்த்து  விழுந்தது மறுநாள்  ஓர் அடி! 16.09.2017 அன்று நடைபெற்ற தமிழ்நாடு சாரண-சாரணியர் இயக்கத் தலைவருக்கான தேர்தலில், ஹெச். ராஜாவும், முன்னாள் பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் மணியும் போட்டியிட்டனர்.  அந்தப் பொறுப்புக்கு ஓர் அரசியல்வாதி போட்டியிடுவது இதுதான் முதல்முறை. 

மொத்தம் பதிவான 286 வாக்குகளில், மணி 232 வாக்குகளைப் பெற்று மாபெரும் வெற்றி பெற்றார். இரண்டு வாக்குகள் செல்லாத வாக்குகள். 52 வாக்குகளை மட்டுமே பெற்று, ஹெச். ராஜா படுதோல்வி அடைந்தார். 


அடுத்தவர் தோல்வியில் மகிழ்வது நம் இயல்பில்லை.  ஆனால் ஹெச். ராஜா போன்ற ஆணவக்காரர்களின் படுதோல்வி கண்டு நம்மால் மகிழாமல் இருக்க முடியவில்லை!!

1 comment:

  1. பிராமணர்களில் பலர் தந்தை பெரியார் அவர்களை சக மனிதராக ஏற்று கொண்டுள்ளார்கள். இவரோ பெரியாரை வெறுக்கிறார்.ஏனோ தெரியவில்லை. தமிழக அரசியல் வரலாற்றில் பெரியார் கொள்கைகள் இனி ஆண்டாண்டு காலம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். காரணம் : இங்கு சூத்திரர்கள்தான் பெரும்பான்மை.

    ReplyDelete