கமல் கட்சி என்ன சொல்கிறது?
உண்மைதான், கமல் அரசியலுக்கு நேரடியாய் வந்துவிட்டார். இதுவரை எனக்காக வாழ்ந்தேன், இனி எஞ்சிய வாழ்க்கை உங்களுக்காக (மக்களுக்காக) என்றும் அறிவித்துள்ளார்.
கட்சியின் பெயர், கொடி, கொள்கை எல்லாம் 21 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றார். பெயரும், கொடியும் தெளிவாக அறிவிக்கப்பட்டு விட்டன. கொள்கை அவ்வளவு தெளிவாகச் சொல்லப்படவில்லை. இப்போதைக்கு இது போதும், துருவித் துருவிக் கேட்பவர்களுக்கு ஒரு புத்தகமே தயாராகிக் கொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார். எனினும் கொள்கை பற்றிச் சிலவற்றை அவர் சொல்லாமலும் இல்லை.
'இசம்' எல்லாம் பார்த்து இப்போது மக்கள் வாக்களிப்பதில்லை, நேர்மையான நிர்வாகம் என்பதைத்தான் எதிர்பார்க்கின்றனர் என்று சந்திரபாபு நாய்டு கூறியதாகவும், அது தனக்கும் உடன்பாடு என்றும் கூறியுள்ளார். பிறகு வெளிப்படையாகவே, 'இடதா, வலதா என்று சிலர் கேட்கின்றனர். அதற்கு விடையாகவே, கட்சிக்கு மய்யம் என்று பெயர் சூட்டியுள்ளதாக விளக்கியுள்ளார்.
மய்யம் என்னும் சொல்லுக்கு நிறுவனம், நடுநிலை என இரு பொருள் உண்டு. இந்த மய்யம் நடுநிலையைத்தான் குறிக்கிறது என்பது தெளிவாகி விட்டது. "எல்லோருக்கும் நல்லவர்" ஆகும் முயற்சி! அதனால்தான், ஒரு கேள்விக்கு விடை அளிக்கும்போது, ஒருவர் எப்படிப் பல கடவுளை நம்புகின்றாரோ அப்படித் தனக்கு காந்தியார், அம்பேத்கார், பெரியார், காமராஜர் எல்லோரையும் பிடிக்கும் என்கிறார்.
அதாவது, தத்துவம் வேண்டாம், தலைவரை நம்புங்கள் என்பதே கொள்கையின் சுருக்கம். தப்பித்துக் கொள்வதற்காக, மக்கள்தான் தலைவர் என்றும், தான் வெறும் தொண்டர் என்றும் கூறிக் கொள்கிறார். லஞ்சத்தை எப்படி ஒழிப்பீர்கள் என்றால், நான் எப்படி ஒழிக்க முடியும், நாம் அனைவரும் ஒன்று சேர்ந்துதான் ஒழிக்க வேண்டும் என்பது அவரது விடையாக உள்ளது. இதைவிடப் பொத்தாம் பொதுவாக எப்படிப் பேச முடியும்?
காவிரிச் சிக்கலுக்குத் தீர்வு உரையாடல் (டயலாக்) மூலம்தான் கிட்டும் என்று விடை சொல்லும் அவர், இதற்குமுன் எத்தனையோ முறை நடைபெற்றுள்ள உரையாடல்களைப் பற்றி பேசவில்லை. கர்நாடகத்திலிருந்து தண்ணீர் என்ன, ரத்தமே பெற்றுத் தருவேன் (அதாவது ரத்த தானம்) என்று உறுதி அளிக்கிறார். விவசாயத்திற்கு ரத்தம் எப்படிப் பயன்படும் என்று தெரியவில்லை.
யாருக்கும் ஸ்கூட்டர் இலவசம் இல்லை. ஆனால், மற்றவர்களுக்கு நீங்கள் ஸ்கூட்டர் வாங்கி கொடுக்கும் வகையில் பொருளாதாரம் உயர்ந்து விடும் என்கிறார். அந்தக் கற்பனை சமூகத்தில் நாம் யாருக்குதான் ஸ்கூட்டர் வாங்கி கொடுப்பது? எல்லோரும்தான் பணக்காரர்கள் ஆகி விடுவார்களே?
பேசியவர்களில் ஒருவர், தில்லி மாநிலத்தின் முன்னாள் சட்ட அமைச்சர் சோம்நாத் பாரதி. 2015 செப்டெம்பரில் தன் மனைவியை அடித்துத் துன்புறுத்தியதாகக் குற்றச்சாற்றிற்கு ஆளானவர். அவர் மீது உச்சநீதிமன்றம் கைது ஆணையும் பிறப்பித்தது. பெண்களின் உரிமை பற்றி அவரையும் மேடையில் வைத்துக் கொண்டுதான் கமல் பேச வேண்டியிருந்தது.
தான் இடதும் இல்லை, வலதும் இல்லை என்று கமல் சொல்லும் போது, மேடையில் 'தோழர்' பாரதி கிருஷ்ணகுமாரைப் பார்க்க முடிந்தது. நீருக்குப் பதில் ரத்தமே பெற்றுத் தருவேன் என்று அவர் பேசிய மேடையில், விவசாயத் சங்கத் தலைவர் பி.ஆர். பாண்டியனையும் பார்க்க முடிந்தது.
ஊடக வெளிச்சம் மிகப் பெரியதாக இருந்தது. முழக்கங்களும் பெரிதாகத்தான்கேட்டன. கொள்கை மட்டும்தான் மிகச் சிறியதாக இருந்தது.
அய்யா , அவருக்கு பிடித்த தலைவர்கள் பற்றிய கேள்வியில் பெரியார் இருந்தார் ஆனால் அவரது பதிலில் பெரியாரை தவிர்த்து மீதி எல்லோரும் இருந்தனர் எனபதையும் நோக்க வேண்டும்
ReplyDeleteகமல் கம்யூனிசத்தை கையில் எடுப்பார் என்று முன்பே யூகிக்க முடிந்தது. கம்யூனிசத்தின் தேவை உலகெங்கும் பெருகி வருகிறது. கம்யூனிசம் ஒரு அழகிய மாலை. அது இருக்க வேண்டிய இடத்தில் இருக்க வேண்டும். ரஷ்யா அழிவுக்கும் சீனா ஆக்கத்திற்கும் பயன்படுத்துகிறது. மேற்கு வங்காளத்தில் அழிவுக்கும் கேரளாவில் ஆக்கத்திற்கும் பயன்படுகிறது. இப்படி ஆளைப்பொறுத்து கம்யூனிசத்தின் விளைவுகள் மாறுபடும். கமலின் கையில் போனால் அது ஆக்கத்திற்கு பயன்படாது என்று உறுதியாக நம்ப முடியும்.ஏனென்றால் அப்போதுதான் அவர் பார்ப்பணிய டாடா, டிவிஎஸ் ,ஐடிசி முதலாளிகளை பாதுகாக்க முடியும். கமலை ஊடகங்கள் வளர்க்கின்றன. மக்கள் பார்ப்பணிய ஆதரவு ஊடகங்களை (உம்: தினத்தந்தி )ஒதுக்க பழக வேண்டும்.
ReplyDeleteநான் தந்தி டிவி பார்ப்பதில்லை.
Deleteathoda inoru visiyatha kavanika thavaritinga , katchi symbol la standard ah communist oh , VCK key vo use panra star illa , Hindu mathathla use panra star ah therntheduthu use panirkar, avar nashtika parparnar , pagutharivalara illaingrathu ithulirenthey therithu.
ReplyDelete//இதுவரை எனக்காக வாழ்ந்தேன், இனி எஞ்சிய வாழ்க்கை உங்களுக்காக (மக்களுக்காக) என்றும் அறிவித்துள்ளார்.- கமல்ஹாசன்//
ReplyDeleteஇதை படித்தவுடன் எனக்கு ஒன்று ஞாபகம் வருகிறது. முன்பு நான் ஒரு ஸ்போர்ட்ஸ் கிளப்பில் சேர்ந்தபோது லைப் டைம் ஒன் டைம் பேமெண்ட் கட்ட சொன்னார்கள். நான் வாயை வைத்துக்கொண்டு சும்மா இல்லாமல் கிளப் லைப் டைமுக்கா என்னோட லைப் டைமுக்கா என்று கேட்டேன். நகைச்சுவையாகத்தான் கேட்டேன். அவர்களும் சிரித்துக் கொண்டார்கள். ஆனால் என்ன நடந்தது என்றால் ஒரு சில ஆண்டுக்குள்ளாகவே அந்த கிளப் வாழ்வு முடிந்துவிட்டது. அதுதான் கமலின் கருத்தை படித்தவுடன் எனக்கு நினைவுக்கு வந்தது. அதாவது அவர் யாருடைய எஞ்சிய வாழ்வை சொல்கிறார்?
//நேர்மையான நிர்வாகம் என்பதைத்தான் மக்கள் எதிர்பார்க்கின்றனர்//
இதை படிக்கும் பொது நமது தலைவர் பெரியார் சொன்னதுதான் ஞாபகம் வருகிறது. நிர்வாகம் என்பது பற்றி அடிப்படையே தெரியாமல் இருக்கும் மக்கள் நேர்மையான நிர்வாகத்தை பற்றிமட்டும் என்ன தெரியும்? இசம் பார்த்து மக்கள் வாக்கு அளிப்பதில்லை என்கிறார் கமல். எந்த இசத்தை என்று நேரிடையாக சொல்லவேண்டியதுதானே. அண்ணன் சுபவீ சொல்வது சரிதான். கமல் எல்லோருக்கும் நல்லவராக இருக்க பார்க்கிறார். என்னிடம் கோவித்துக்கொண்டால் என்னிடம் பேசவேண்டாம் என்று என் மகள் அம்மாவிடம் கேட்டுக்கொள்வாள். அதைப்போலவே மக்களும் இருக்கிறார்கள். இவர்களிடம் பொதுவாக நல்லவராக இருப்பது என்றால் யாருக்கும் நல்லவரில்லை என்றுதான் ஆகும். கமல் ஒன்றை புரிந்துக்கொள்ளவேண்டும். மக்கள் ஜாதியாய் மதமாய் குலமாய் குலத்துக்கொரு நீதியாய் பிரிந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு பொதுவான நல்லவனாக இருக்கவே முடியாது. இம்மானுவேல் சேகரனுக்கு நல்லவனாக இருப்பதாக முடிவெடுத்தால் முத்துராமலிங்க தேவரை பகைத்தே ஆகவேண்டும். முடியுமா? கமல் கரை தேறுவார். ஆனால் எல்லாம் இழந்து இனி இழப்பதற்கு ஏதுமில்லை . எல்லாம் நடு கடல் மய்யத்தில் போய்விட்டதே என்று கதறுவார்.
alaivaa, Kamalhassan is very dangerous hidden enemy to Dravidian ideology தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும் ஒன்னார் அழுத கண்ணீரும் அனைத்து Here kamal comes with rationalism and communism as his agenda; so he seems harmless to a Dravidian eye - please be careful Dravidian ideology is not atheism its social justice ( The beginning of Dravidian movement is not periyar but in justice party). Kamal is very much against social justice, he is definitely not in favor of reservation; in few films he has purposefully flamed casteism. Kamal is a dangerous double headed snake you cannot predict which direction he will bite, his statements are at the best very concealed. Good thing is he is coming very late to party and might not make an huge impact Many have confused Social Justice with Economic justice 1.) You might have a Dsc in vaishnavam studies, but you cannot be a priest in a srirangam temple 2.) Earlier if you are a nattamai with 500 acre; but still you will be a finger print nattamai, your son will not get admitted to medical college till 1925 as it had knowledge of Sanskrit as prerequisites Irrespective of being rich or poor based on your caste you were discriminated - to solve this we evolved the concept of social justice. - one of them is caste based reservation. This is entirely different from economic justice : you have a seat in medical college you have necessary marks but no money to pay fees - the remedy is scholar-ship, low cost free government hostels more government colleges, mandatory free seats in private colleges etc ************************************ Problem is there is a huge attempt to confuse the two different paradigms with each other, if reservation has served its purpose then it should be removed, but to bring in economic factors into reservation is very dangerous it is only a attempt to dilute the benefits of reservation (unless you read Ambedkar and Anna you will not understand this concept of social justice)
ReplyDeleteகமல்ஹாசன் மற்ற பார்ப்பணர்களிடம் இருந்து வேறுபடாதவர் என்பது அவரது பேச்சிலிருந்தே புரிந்து கொள்ளலாம். தகுதி இருப்பவன் மேலே இருப்பான் என்ற வாக்கியம் எப்போதும் யாரை பற்றி சொன்னாலும் அவரிடம் இருந்து வெளிப்படும். பாரதிராஜா பற்றி பேசினாலும் சிறிதேவி இறந்த போதும் கூட அவர் அடைந்த புகழுக்கு முற்றிலும் தகுதியானவர் என்று சொல்கிறார். ஒருவர் இறந்த அன்று அவரது நல்ல மனம் பற்றிதான் பேச வேண்டும் தவிர அவரது தகுதிகள் பற்றி பேச கூடாது. பார்ப்பணர்கள் அனைத்தையுமே உழைப்பு மற்றும் தகுதி என்று கொண்டு வருவார்கள். பாரதிராஜாவிடம் உழைப்பு என்பதை மீறி உண்மை ரசனை என்று பல விஷயங்கள் அவரிடம் இருக்ககறது. ஆனால் அவற்றை பற்றி பேசினால் எல்லாரும் சரிசமம் ஆகிவிடுவார்கள். நாம் கீழ் வருணத்தில் இருப்பதால் நாம் அனைவருமே அவரை பொறுத்தவரை தகுதி அற்றவர்களே. அதாவது உனக்கு தகுதி இருந்தால் நீ கடுமையாக உழைத்து டாடா நிறுவனம் போல வா என்று அறைகூவல் விடுவார்கள். ஆனால் அப்படி ஒருவன் வரவே முடியாது என்று அவர்களுக்கு தெரியும். டாய்லட் கழுவுவன் சிறப்பாக கழுவ வேண்டும் அதில் பல விருதுகளை பெற வேண்டும் என்று அறிவுரை சொல்வார். இப்படி கீழே இருப்பவன் கீழேயே இருப்பதற்கு உறுதி செய்யவே இப்போது கட்சி ஆரம்பித்துள்ளார். இன்னொரு விஷயம் நண்பர் சொன்னார். உயிர் மெய்யெழுத்தை தமிழக பாடத்திட்டத்திலிருந்து பெரியார் நீக்கசொல்லி எம்ஜிஆரிடம் சொன்னதாகவும் அதை அவரும் செய்து பிறகு மபொசி மற்றும் பலர் போராடியும் எம்ஜிஆரிடம் கோரிக்கை வைத்தும் திரும்ப சேர்த்தனர் என்று நண்பர் சொன்னார். அதை தொடர்ந்து கமலும் உயிர் எழுத்து ஆன மை அல்லாமல் மய்யம் என்று பெயர் வைத்துள்ளதாக சொன்னார். தமிழ் உயிரெழுத்து மேல் இவர்களுக்கு என்ன கோபம் என்று தெரியவில்லை. தெரிந்தால் சொல்லுங்கள் அய்யா..
ReplyDeleteFirst let us not read between lines.
ReplyDeleteதிரு கமல் பல இடங்களில் சாதியை எதிர்த்தும் தமிழுக்கும் தமிழர்களுக்கும் சுபவீ ஐயா அவர்களுக்கும் ஆதரவாக பேசியுள்ளார். இனியும் பேசுவார்.
ஆனால் அவர் இப்போது தி.மு.க. பல இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளபோது தேவையில்லாமல் சில வாக்குகளை வீணடிப்பார்.
தி. மு. க. வெற்றி பெற்றால்தான் தற்சமயம் தமிழ்நாட்டிற்கு நல்லது. அது புரியாமல் இந்த நேரம் பார்த்து இது போல செய்வது, அறிவியல்பூர்வமான செய்கை அல்ல. இதை திரு கமல் உணரவேண்டும்.
இது அனைத்தும் "காலத்தின் கட்டாயம்" போல் உள்ளது.
எனது ஒட்டு சுபவீ ஐயா சுட்டிக்காட்டும் கட்சிக்குத்தான் - ஏனென்றால் அவர் அறிவியல்பூர்வமாக சிந்தித்து பல மக்களுக்கு நன்மை செய்யும் செயலைத்தான் செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது .
அன்புடன்,
விரு
Respectable Subavee Sir,
ReplyDeleteAfter reading your entire article, I saw the video of the event.
I then realized that you had summarized Thiru. Kamal's speech so well.
ON A LIGHTER NOTE: You summarized it so well, it reminded me of this movie "Pammal K Sambandam" where the hero (Thiru. Kamal) of the movie would curse the heroin (Thiru. Simran) in such a way that it would appear as 'praise'. (To watch this particular scene, click here --> http://bit.do/kasim1 )
Regards,
Viru
கமல் ஒரு இந்துத்துவவாதி
ReplyDelete