தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Tuesday, 27 March 2018

எல்லாம் முடிந்துவிடும்!
                 
                       (ஒரு நண்பரின் இறப்புச் செய்தி கேட்டு 
                        எழுந்த கவிதை)

          
                      எல்லாம் ஒருநாள் முடிந்துவிடும் 
                         எதையும் காலம் கடந்துவிடும் 

                      வெல்லம் போலே இனித்தவைகள் 
                          வேப்பங் காயாய்க் கசந்தவைகள் 
                      முல்லைப் பூவாய் மணந்தவைகள் 
                          முடைநாற் றத்தில் கிடந்தவைகள் 
                      எல்லை யில்லாப் புகழ்வானம் 
                          எவர்க்கும் நேரும் அவமானம் 

                      எல்லாம் ஒருநாள் முடிந்துவிடும் 
                          எதையும் காலம் கடந்துவிடும்!

5 comments:

  1. தங்கள் நண்பரின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள் ஐயா

    ReplyDelete
  2. தேர்தல் ஆணையம் கர்நாடக தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே பாஜக தகவல் துறை தலைவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். பாஜக தேசிய செய்தி சேனல் ஒளிபரப்பில் கூறுகிறார்கள். தேர்தல் ஆணையம் பாஜகவினரால் நடத்தப்படுகிறது என்பதற்கு வேறு ஆதாரம் தேவையா?

    ReplyDelete
  3. Arumai Ayya! Manadhil irundu vandha varthaigal.

    ReplyDelete