தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Wednesday, 23 September 2015

பகிர்வு - 12

1938ல் இந்திக்கு எதிரான நிலைப்பாட்டில் பெரியார் முன்னால் நின்று களமாடினார் என்றும், 1965ல் பெரியாரை இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் வரலாறு எதிர்நிலையில் காட்டுகிறதே ஏன். ? இதை பற்றி உங்கள் கருத்துகளை கேட்க ஆவலுடன் இருக்கிறேன்.
-    க ல அபிலாசு நாராயண்
 விடை:  நீங்கள் சொல்லும் செய்தி உண்மைதான். 1938இல் இந்தியைத்  திணித்தவர் ராஜாஜி. எதிர்த்தவர் தந்தை பெரியார். 1965இல், இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை ராஜாஜி ஆதரித்தார். பெரியார் எதிர்த்தார்.
வரலாற்றில் இப்படிச் சில முரண்கள் ஏற்படுவதுண்டு. அன்றைய தமிழ்நாட்டு அரசியலில் காங்கிரஸ் கட்சியை, குறிப்பாக, காமராஜரைப் பெரியார் ஆதரித்தார். காமராஜர்தான் தொடக்கக் கல்வியை மக்களுக்குக் கொடுத்தவர் என்பதால், அவரிடம் இறுதிவரையில் பெரியார் மதிப்பு வைத்திருந்தார். 1965 இந்தி எதிர்ப்புப் போர் காங்கிரசுக்கு எதிரானது என்று பெரியார் கருதினார். மேலும் அறிஞர் அண்ணா தலைமையிலான தி.மு.கழகத்தின் மீது அவருக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. இந்த இரண்டு காரணங்களால் அவர் அப்போராட்டத்தை எதிர்த்திருக்கக் கூடும்! எனினும் அன்றைய பெரியாரின் நிலைப்பாடு எனக்கு உடன்பாடு இல்லாததே! அன்றைய இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழ் உணர்வு மிக்க பல்லாயிரம் இளைஞர்களை உருவாக்கியது என்பதே வரலாறு.  


2 comments:

  1. அப்போது பெரியார் வெளியிட்ட உண்மையான காரணத்தை இங்கு பதியவில்லை சுபவீ அவர்கள் என்பது என்னுடைய கருத்து. அதை பதிந்தால் வாசகர்கள் அறிய வாய்ப்பு ஏற்ப்படும்

    ReplyDelete
  2. எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில் ராஜாஜி இந்த வாய்ப்பை பயன் படுத்தி காமராசரை வீழ்த்த நினைத்தார் அதைப்புரிந்து கொண்டார் பெரியார் என்பதே உண்மை அப்போதும் அவர் தன்னுடைய இந்தி எதிர்ப்பு நிலையிலிருந்து மாறிவிட்டதாக எங்குமே சொல்லவில்லை இந்த மொழி உணர்வை மொழி வெறியாக்கி அந்த வாய்ப்பை பயன்படுத்தி திராவிடர்களுக்குள் வன்முறை மூலம் மோதவிட்டு ரத்தம் குடிக்க செய்த ஆரியத்தின் முயற்ச்சியை பெரியார் விரும்பவில்லை.அதை முறியடிக்கவே விரும்பினார் அறிவாயுதப்புராட்சி செய்த பெரியார்

    ReplyDelete