தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Tuesday 27 June 2017

நடிகர் எஸ்.வி.சேகர் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்

                                       

திரு எஸ்.வி.சேகர் அவர்களுக்கு

வணக்கம். நேற்று வெளியான உங்களின் 11 நிமிடக் காணொளியைக் கண்டேன். அதுகுறித்துச் சில செய்திகளை உங்களோடு பேசுவதற்காகவே இந்த மடல். ஊர் அறிய வேண்டும் என்பதற்காக இதனைத் திறந்த மடலாக வெளியிடுகின்றேன்

நியூஸ் 7 தொலைக்காட்சியில் நண்பர்கள் நாராயணன், மதிமாறன் இருவருக்குமிடையே சில நாள்களுக்கு முன் நடைபெற்ற உரையாடலின் அடிப்படையில் உங்கள் காணொளி அமைந்துள்ளது. அந்த தொலைக்காட்சி நிகழ்வை நானும் பார்த்தேன்


1. நீங்களும் நானும் அடிப்படையில் முற்றிலும் நேர் எதிரான கொள்கைகளைக் கொண்டவர்கள் என்பது வெளிப்படை. மீண்டும் அதனை உங்கள் காணொளி உறுதிப்படுத்தியுள்ளது. "சாதியும்  மதமும் நமக்குத் தாய், தந்தை போல" என்று கூறியுள்ளதோடு, "ஒவ்வொருத்தரும் தங்கள் சாதியை ஒசத்திப் பேசுங்க. அதிலே தப்பில்ல" என்றும் நீங்கள் காணொளியில் குறிப்பிட்டுள்ளீர்கள்.  எங்களை இழிவுபடுத்தும் சாதி உங்களுக்குத் தாய் போலத் தெரிகிறது. சாதி தாய் என்றால், 'சாதிகள் இல்லையடி பாப்பா  என்று சொன்ன  பாரதி பற்றிய உங்கள் பார்வை என்னசாதியைக் காப்பாறுவதுதான் உங்கள் நோக்கம் என்பதை நாங்கள் அறிவோம். சாதி அமைப்பு இருந்தால்தானே, சிலர் மேலும், பலர் கீழுமாக இந்தச் சமூகத்தில் வாழ முடியும்! ஆனால் சாதியை ஒழிக்க வேண்டும் என்பதுதான் எங்களின்  நோக்கம். எனவே நாம் இருவரும் ஒரு புள்ளியில் சந்திக்க வாய்ப்பே இல்லை

2. "எந்தப்  பார்ப்பனர் மீதாவது ஒரு எப்..ஆர். உள்ளதா என்று கேட்கிறீர்கள். இந்திய ராணுவ ரகசியங்களை வெளிநாட்டிற்கு விற்ற கூமர் நாராயணன் யார் சேகர்? அது பழைய கதை என்பீர்கள். சங்கரராமன் கொலைவழக்கில் ஒரு பார்ப்பனர் மீதன்று, பல பார்ப்பனர்கள் மீது எப்..ஆர். போடப்பட்டதே? வழக்கும் நடந்ததே. அவர்கள் விடுதலையாகி  விட்டனர் என்பீர்கள்

ஜெயலலிதா மீது வழக்குத்  தொடுக்கப்பட்டு, உச்ச நீதிமன்றம் தண்டனையும் வழங்கியுள்ளதே, அது கூடவா உங்களுக்கு மறந்து போய்விட்டது

3. 99.9% மதிப்பெண் வாங்கினால் கூட, பார்ப்பன மாணவர்களுக்கு, படிப்பதற்கு இடம் கிடைப்பதில்லை என்று கூறியுள்ளீர்கள். அப்படியானால், இன்று பள்ளி, கல்லூரிகளில் படித்துக் கொண்டுள்ள பார்ப்பன மாணவர்கள் அனைவரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றவர்களா? பொய்யைக் கூட உங்களால் பொருந்தச்  சொல்ல முடியவில்லையே

4. நண்பர் மதிமாறன், மதியில்லாதவர், குறுக்குப்புத்திக்காரர் என்றெல்லாம் வசைபாடும் நீங்கள், அடுத்தவரை வெறுக்காமல் வாழக்  கற்றுக்கொள்ள வேண்டும் என்று எங்களுக்கு அறிவுரை வேறு கூறுகின்றீர்கள்.  மதிமாறனின் புத்திக் கூர்மையான வினாக்களுக்கு விடை சொல்ல முடியாமல் தடுமாறிய 'பிரபலங்களைத்'  தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் நாங்களும் பார்த்துள்ளோம். அது போகட்டும், அவர் அடுத்த சாதியினரை அசிங்கமாகப் பேசினார், பார்ப்பனர்களைத் திட்டினார் என்று பொத்தாம் பொதுவாகவே கடைசி வரையில் பேசியுள்ளீர்களே தவிர, அப்படி என்ன பேசினார் என்று எந்த இடத்திலும் கூறவே இல்லையே ஏன்? அங்குதான், சான்று இல்லாமல் பழி தூற்றும் உங்கள் தந்திரம் இருக்கிறது என்பதை நாங்கள் அறிவோம்

அந்த விவாதத்தில் நாராயணன் அவ்வளவு அமைதியாகவா பேசினார்? எவ்வளவு இரைச்சல்! அடுத்தவரைப் பேச விடாமல் தடுக்கின்ற ஆர்ப்பாட்டம்! யோகா செய்தால் மன அமைதி வரும், நிதானம் வரும் என்றெல்லாம் சொல்கின்றீர்கள், நண்பர் நாராயணன் யோகா செய்வதே இல்லையா

அன்று  மதிமாறன் என்ன கேட்டார்? யோகா நல்லது என்கின்றீர்களே, சுன்னத் செய்வதும் நல்லது என்றுதான் மருத்துவ அறிவியல் சொல்கிறது. அதற்காக அனைவரும் சுன்னத் செய்து கொள்ள வேண்டும் என்று சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா என்று கேட்டார். அறிவார்ந்த இந்தக் கேள்வி உங்களைக் கோபப்படுத்தத்தான் செய்யும்

6. திமுக செயல் தலைவர் தளபதி ஸ்டாலின் அவர்களுக்கு நன்றியும், பாராட்டும் சொல்லியுள்ளீர்களே, அங்குதான் உங்களின் மூளை அபாரமாக வேலை செய்துள்ளது. மக்கள் செல்வாக்கு உள்ள ஒருவரை நேரடியாகப் பகைத்துக் கொள்ளக் கூடாது என்பதில்தான் எத்தனை கவனம்

ஸ்டாலின் அவர்கள் மீதும் , திராவிட இயக்கத்தின்  மீதும் உங்களுக்கெல்லாம் எவ்வளவு அடங்காச் சினம் உண்டு என்பது எங்களுக்குத் தெரியாதா? சில நாள்களுக்கு முன்பு கூட, ரஜினி, அஜித், விஜய் மூவரும் சேர்ந்து கட்சி தொடங்க வேண்டும் என்று பேட்டி கொடுத்தீர்கள், அதன் உட்பொருள் என்ன? என்ன செய்தாவது திமுக ஆட்சிக்கு வருவதைத் தடுத்துவிட வேண்டும் என்பதுதானே! செயல் தலைவர் மீது இவ்வளவு கோபத்தை உள்வைத்துக் கொண்டு, வெளியில் நன்றியும், பாராட்டும் சொல்கின்றீர்களே, தேர்ந்த நடிகர்தான் நீங்கள்!

செயல் தலைவர் தளபதி அவர்களையும், ஆசிரியர் வீரமணி அவர்களையும், என்னையும், தம்பி மதிமாறனையும் வெட்டிப் போட்டு விட்டால்,   உங்களின்  கோபம் தீர்ந்துவிடுமா? அப்போது கூட எங்களை வெட்டுவதற்கு, அறியாமையிலும், வறுமையிலும் உள்ள எங்கள்  சகோதரன் ஒருவனிடம்தான் அரிவாளைக் கொடுத்து விடுவீர்கள். நீங்கள் வெட்டினால், உங்கள் மீது எப்..ஆர் வந்துவிடுமே!  

இப்போதும் அன்புடன் 
சுப. வீரபாண்டியன்


27 comments:

  1. தோழரே sv சேகரின் போன்ற பார்ப்பனர்களின்ப பேச்சு தற்பொழுது வரம்பு மீறி செல்லும்தொனி அதிகரித்து வருகிறது,,,அதிகார திமிர்.

    ReplyDelete
  2. ரூபன்27 June 2017 at 10:06

    ஐயா உங்களை போன்ற திறந்த மனப்பான்பை உடைய தமிழர்கள் தமிழ் தேசிய நீரோட்டத்தில் இணைய வேண்டும். திக, திமுக வை நமது சகோதரர்களாக கருத வேண்டும். சமஸ்கிருதத்தை அறவே தமிழில் இருந்து ஒழிக்க முனைவு காட்ட வேண்டும். சாதி என்பதே தமிழ் சொல்லே அல்ல. சாதி பார்க்கும் எந்த மடையனும் தமிழன் அல்ல

    நன்றி ஐயா

    ReplyDelete
  3. அருமை ஐயா..! இவர்களின் யோகா நாடகம் அமீரகம் வரை அரங்கேறுகிறது, அதன் உள்அர்த்தம் புரியாமலே. என்ன செய்ய, நம் ஈரோட்டுக் கண்ணாடி எல்லோரிடத்தும் இல்லையே..!!

    ReplyDelete
  4. மிக அருமையான பதிவு.

    ReplyDelete
  5. "FIR on Brahmins involving communal fights". Why are you twisting what he said. I stopped reading any further.

    ReplyDelete
    Replies
    1. Yes they will not invlove communal fights but they will ask to lift everyone's caste, which is directly proportional to the communal violence.

      Delete
    2. அருமையான பதிவு ஐயா

      Delete
  6. மற்ற கருத்துக்கள் எல்லாம் சரி. ஆனால் யோகா , சுன்னத் ? சில மாதங்களுக்கு முன் ஒரு தமிழ் கலை விழா சென்றேன். அங்கு யோகா என்பது பண்டைய தமிழர்களின் " ஓகக்கலை " என்று பறை சாற்றி இருந்தது. ஓகக்கலை , பறை , சிறு தானியங்கள், தமிழ் மொழி என்று அருமையான ஒரு விழா. மறைமலையடிகள் " தமிழர் மதம் " என்ற புத்தகம் ஒன்று படித்தேன் ,. அதில் எவ்வாறு வாடா நாட்டு பிராமணர்கள் இங்கு நுழைந்து நமது மதம், கலை, கலாச்சாரம் பயின்று பின்னர் அதை தங்களுடைத்தாக ஆக்கி மாற்றி மீண்டும் நமக்கு சொல்கிறார்கள். சுன்னத் என்பது இங்கு மருத்துவர்களால் ( Circumcision ) சில குழந்தைகளுக்கு மருத்துவ தேவைக்கேற்று செய்யப்படுகிறது. இரண்டும் ஒன்றல்ல. ஜிம் , ஏரோபிக்ஸ் போன்று யோகா ஒரு உடல் பயிற்சி .

    ReplyDelete
    Replies
    1. ராஜ்மோகன் அவர்கள் குறிப்பட்டதுபோல், யோகா என்பது ஆரியரியரின் கலை அல்ல என்பதும் அது ஆதி தமிழர்களின் கலை; அதை காப்பியடித்துத் தமதுபோல் ஆக்கிக்கொண்டார்கள் ஆரியர்கள் என்பது வரலாற்று அறிஞர்களின் கருத்து!

      Delete
  7. அருமை. ஆனால் இந்த காரம் உரைக்காது. எந்த காரமும் உரைக்காது. மத்தியிலும் மாநிலத்திலும் அவர்கள் ஆட்சி அதனால் துள்ளல் இருக்கும்தான். ஆனால் வரும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் உத்திரபிரதேச பாணியை கடைபிடித்து தேர்தல் ஆணையத்தின் உதவியால் இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்து ஆட்சியை பிடிக்கும் அபாயத்தை எப்படி எதிர்கொள்ளப்போகிரீர்கள். கைபேசியில் ஒரு வசதி உண்டு. Anykey answer என்று. ஒரு தொலைபேசி அழைப்பை நீங்கள் அதற்க்கான பிரத்யோக பொத்தானை அழுத்தி மட்டுமே பேசவேண்டும் என்பதில்லை. Anykey answer முறையில் எந்த பொத்தானை அழுத்தினாலும் அது அழைப்பை ஏற்கும் பொத்தானை அழுத்துவதற்கு ஒப்பாகும். இதே முறை அல்லது இதைவிட மேம்பட்ட தொழில்நுட்ப வசதியுடன் வாக்குபதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியும் என்பது என் எண்ணம். இந்த ஆபத்தை தடுக்க நடவடிக்கை எடுங்கள். அடுத்தமுறையும் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் இவர்களின் ஆட்டம் நாடு தாங்காது.

    ReplyDelete
  8. Sv சேகர்லாம் ஒரு ஆள்னு அவனுக்கு ஒரு மடல். அவன் மேடையில நடிச்சத விட அதிகமா நடிச்சது அரசியல் வியாதியாதான்.

    சோ ராமசாமியின் இடத்தை நிறப்ப வந்த மற்றுமொரு Advocate for Brahmins and Casteism.

    His suggestion for Rajini Ajith and Vijay to start a party, clearly shows how much he knows about TN politics and how much he cares for the Tamils.

    ReplyDelete
  9. Dear Sir,

    Very clear and straight forward points!...

    ReplyDelete
  10. தங்களின் ஒவ்வொரு சொல்லும், ஒவ்வொரு வார்த்தையும், உண்மையைச் சுமந்து வலம் வருகின்றன ஐயா

    ReplyDelete
  11. என்ன வௌளுத்தாலும் கறைபோகாத துணியைபோன்றவர்கள் பாரபனர்கள்.இவர்கள் மாறாமலிருப்பதற்கு உயர்சாதியென கருதிக்கொள்ளும் சூத்திர்கள்தான.

    ReplyDelete
  12. Super subavee avargalae. We need 1000persons like you, to strengthen our Dravidian ideology, to save our Tamil culture and language.

    ReplyDelete
  13. Dravidian will rule India shortly, dravidian ideology will take India to next stage...thanks to Mother foundation dravida kalagam.fake Aiadmk who supports BJP will throw away sortly

    ReplyDelete
  14. Nedunchezhian D29 June 2017 at 01:40

    என்ன ஒரு நிதானம், தெளிவு. Ultimate maturity. Clearly picturized sekhar. பார்ப்பனியர்களின் தாறு மாறான வேகம் நல்லதல்லது என்பது உண்மை, இயற்கை.

    ReplyDelete
  15. இவர்கள் இப்படி ஆடுவதற்கு யார் காரணம். செட்டியாரில் கூட நாங்கள் ஒன்றும் தமிழ் செட்டியார்களை போல கீழானவர்கள் அல்ல என்று ஆந்திராவை சேர்ந்த ஆரிய செட்டி என்னும் இனம் பதிவிடுகின்றது. கீழே உள்ள வாடசப் மெசேஜ் இதை அழுத்தமாக சொல்கிறது.

    Fwd..
    🦅 *_ஆர்.எஸ்.எஸ்.காரன் ஒரு தலித்தாகவே இருந்தாலும் அவன் பார்ப்பன கைக்கூலிதான்_*👁‍🗨


    *✍🏼ஒருவேளை தமிழ்நாட்டில் ராமராஜ்ஜியம் வந்து அந்த ராமராஜ்ஜியத்தில் தமிழிசையின் முன்னோர்கள் தங்களுடைய பெண்களின் முதல் இரவை நம்பூதிரியுடன்தான் கழிக்கவேண்டும் என்ற சட்டத்தை மீண்டும் கொண்டுவந்தாலும், இல்லை ரவிக்கை அணியாமல் தான் நாடார்சாதி பெண்கள் பொதுவெளியில் நடமாட வேண்டும் என்று மோடி அரசு உத்திரவிட்டாலும் அதை உடன் பணிந்து செய்யும் மானங்கெட்டவர்களாகத்தான் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்ததைக் கடைபிடிக்கும் நபர்கள் இருப்பார்கள்.*

    _✍🏼#அவர்களுக்கு தங்களது இழி நிலையைப் பற்றி எந்தப் பிரக்ஞையும் கிடையாது. பார்ப்பனியத்தால் ஆண்டு ஆண்டுகாலமாக தங்களுடைய இனம் நாயைவிடக் கேவலமாக நடத்தப்பட்டதைப் பற்றி அவர்கள் பெருமித உணர்வு அடைகின்றார்கள். தங்களுடைய இனம் இப்படியே சமூகத்தில் கீழ்சாதி என்ற பெயரில் ஊருக்கு வெளியே குடிவைக்கப்பட்டு *பீயை அள்ளவும்,* செத்த மாட்டை தூக்கவும், இழவு செய்தி சொல்லவும் நிர்பந்தப்படுத்தப்படுவதைப் பற்றி அவர்களுக்கு எந்தக் கவலையும் கிடையாது._ *இன்னும் சொல்லப்போனால் ஆர்.எஸ்.எஸ்.இல் இருக்கும் ஒரு தலித் இதைப் பெரிதும் விரும்புகின்றார்.* அந்த _இழி தொழில்களை புனிதமான ஒன்றாக கடவுளின் சேவையாகப் பார்க்கின்றார். காந்தியை தாழ்த்தப்பட்ட மக்களை அரிஜனங்கள் என்று பெயர்வைக்கத் தூண்டியதும் அர்ஜுன் சம்பத்தை தாழ்த்தப்பட்ட மக்களை திருக்குலத்தோர் என அழைக்கவேண்டும் என கேட்க வைத்ததற்குமான மன உந்துதலைக் கொடுத்தது பார்ப்பனிய சிந்தனையே ஆகும்._ *அந்தப் பார்ப்பனிய சிந்தனைதான் பனியாவையும், தலித்தையும் ஒரே முகமாக அடிமைத்தனத்தை, சாதிய இழிவை ஒன்றுபோலவே புனிதமான ஒன்றாகப் பார்க்க வைக்கின்றது.*

    *_✍🏼அந்த அடிப்படையில் இருந்துதான் நாம் ராம்நாத் கோவிந்தைப் பார்க்கவேண்டும்.* _அவர் சாதியால் தலித்தாக இருந்தாலும் அவர் சிந்தனையால் ஒரு பார்ப்பனர். தன்னைச் சுற்றி மலக்குவியல்கள் கொட்டிக்கிடந்தாலும் தனது மூக்கில் மட்டும் நறுமணம் பரவுவதாக போலியான மன உணர்வில் வாழ்பவர்._ *_அந்த உணர்வை அவருக்குப் பார்ப்பனிய சிந்தனா முறை வழங்கியுள்ளது. பல்வேறு அரசு பதவிகளில் அவர் இருந்ததாக பத்திரிக்கைகள் பட்டியல் இடுகின்றன. எம்.பி, வழக்கறிஞர், ஆளுநர் இன்னும் பிஜேபியில் தலித் அமைப்பான தலித் மோர்ச்சாவின் தலைவர் என பல பதவிகளை அவர் வகித்திருக்கின்றார்._* _ஆனால் இதெல்லாம் அவரை மதிப்பிட போதுமா என்றால் நிச்சயம் இல்லை. அவர் எந்தப் பதவியை வேண்டும் என்றாலும் அலங்கரித்து இருக்கலாம். அதற்காக அவரை இந்திய மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயமில்லை. அவர் எந்த மாதிரியான சிந்தனை கொண்டவர் என்பதுதான் மிக முக்கியமானது._ *அடிப்படையில் இஸ்லாமிய மக்களுக்கும் கிருஸ்தவ மக்களுக்கும் எதிரான வன்மமான ஆர்.எஸ்.எஸ் கருத்துக்களை பிரச்சாரம் செய்பவராகவும், இடஒதுக்கீட்டிற்கு எதிரான சிந்தனை கொண்டவராகவும் இருக்கும் ராம்நாத் கோவிந்தை நாம் எப்படி ஒரு தலித்தாகப் பார்க்க முடியும்?* _இப்படி ஒரு நபரை அதுவும் தலித் என்ற அடையாளத்துடன் மோசடியாக ஆர்.எஸ்.எஸ்-பிஜேபி கும்பல் அறிவித்ததன் மூலம் ஆதிக்க சாதிகளின் கருத்தியலுக்கு ஒத்தூதவும், சிறுபான்மையின மக்களின் உரிமைகளை குழிதோண்டிப் புதைக்கவும், தலித்துகள் மீது கட்டற்ற வன்முறையை எதிர்ப்பின்றி நடத்தவும் வழி ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது._
    *🦅கழுகு பார்வை👁*⬇


    ReplyDelete
  16. mr subavee. i respect your ideology but your association with DMK and so called thalaivar and thalapathy defies rationalism.i know you know it as well

    ReplyDelete
  17. Neengal kuriputtula koomar narayanan yar ...yaravathu vilakungalaen .

    ReplyDelete
  18. ஐயய்யோ, என்ன ஆச்சி உங்களுக்கு. உங்களை ஒரு அறிவுஜீவியாக நினைத்துக்கொண்டிருக்கிறோம். இப்படி எஸ் வி சேகருக்கெல்லாம் பதில் எழுதியா உங்கள் தரத்தை நீங்களே தாழ்த்திக்கொள்வது. Not worth Suba Vee ஐயா.

    ReplyDelete
  19. பலரின் எண்ணக்குமுறல்களை பிரதிபலிக்கும் பதிவு ஐயா...!

    ReplyDelete