நான் பங்கேற்ற தந்தி தொலைக்காட்சியின் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சி ஒளிபரப்பான அந்த நிமிடம் தொடங்கி, தொடர்ந்து தொலைபேசி அழைப்புகளால் சூழப்பட்டேன் நான். நிறையப் பாராட்டுகள், சில குற்றச்சாற்றுகள், சில ஐயங்கள் இவைகளைத் தாண்டி, அன்று இரவு முழுவதும் ஆபாசச் சொற்கள் கலந்த மிரட்டல்கள்! கவிப்பேரரசு வைரமுத்துவின் ஆண்டாள் தொடர்பான கட்டுரை விவாதம் அதே அழுகல் வாடையுடன்இன்னும் தொடர்கிறது.
அது கேள்விக்கென்ன பதிலா அல்லது கேள்வி மேல் கேள்வியா என்று கேட்டிருந்தார் ஒரு நண்பர். உண்மைதான். அரங்கில் நான் உணரவில்லை. தொலைக்காட்சியில் பார்க்கும்போதுதான் தெரிந்தது. முதல் 20 நிமிடங்களில், திரு பாண்டே என்னை ஒரு வினாவிற்குக் கூட முழுமையாக விடை சொல்ல அனுமதிக்கவில்லை. கேள்விக்கு மேல் கேள்வியாகக் கேட்டுக்கொண்டிருக்கிறார். இது அவருடைய வழக்கமான பாணிதான். இடையிடையே அந்த நக்கல் சிரிப்பும் அவருடைய வழக்கமான உடல்மொழிதான். எனினும் அவாள் சிலரிடம் பேசும்போது இந்த நக்கல் சிரிப்பை அவரிடம் பார்க்க முடியாது.
54 நிமிடங்கள் எடுக்கப்பட்ட ஒளிப்பதிவு 42 நிமிடங்கள் ஒளிபரப்பப்பட்டது. வெட்டப்பட்ட 12 நிமிடங்கள் நேரப்பிரச்சினைதான் என்று அவர்கள் கூறுவதை ஏற்கிறேன். ஆனால் அதில் விடுபட்ட சில முதன்மையான செய்திகளை நான் இங்கு பகிர்ந்துள்ளேன்.
குறிப்பாக இரண்டு செய்திகள். 1. தேவதாசி என்ற சொல்லுக்காக இவ்வளவு சினம்கொள்ளும் பார்ப்பனர்கள்தாம் அந்த முறை, இந்த மண்ணில் நிலைக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் வாதாடியவர்கள். அதனை எதிர்த்தவர்கள் நாம். தந்தை பெரியார், மூவலூர் ராமாமிர்தத்தம்மையார், மருத்துவர் முத்துலட்சுமி ஆகியோர் அதனை எதிர்த்தனர். சத்தியமூர்த்தி ஐயர், எம்.கே. ஆச்சார்யா போன்றவர்கள் ஆதரித்தனர். ஆக, நம் வீட்டுப் பெண்கள் தேவதாசிகளாக இருக்க வேண்டும், அவர்கள் வீட்டுப் பெண்கள் அதற்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உடைந்து போகிறது என்பதே அவர்களின் கவலை.
2. அவர்கள் மனம் புண்பட்டு விட்டததாகக் கவலைப்படுவோர், "நீறு இல்லா நெற்றி பாழ்" என்று சொன்னபோதும், "நாத்திகம் பேசி நாத்தளும்பேறியோர்" என்று பாடியபோதும் எங்கள் மனம் புண்படும் என்பதை எண்ணிப்பார்க்கவில்லையே, ஏன்? புண்படுவது ஒருவழிப்பாதையா என்ன?
மேலே உள்ள செய்திகள் நேரமின்மையாலோ, கவனமாகவோ விடுபட்டுள்ளன.
வழக்கத்திற்கு மாறாக, அன்று நான் உணர்ச்சிவயமாகவும், சற்றுச் சினத்துடனும் பேசினேன் என்று பலரும் கூறினர். உண்மைதான். இயல்பாக நான் கோபப்படுவதில்லை என்றாலும், கோபமே கொள்வதில்லை என்ற விரதம் ஏதும் என்னிடம் இல்லை.
என்னை மட்டுமில்லை, நாட்டு நடப்புகள் நம் எல்லோரையும் கோபப்படவே வைக்கின்றன. ஒன்றுமில்லாத சிக்கலை இத்தனை பெரிதாக்கி, அவர்கள் மொழியில் சொல்வதானால், பேனைப் பெருமாளாக்கித் தெருவுக்கு வருவார்களெனில், நாமும் தெருவுக்கு வந்து எதிர்நிலை அறப் போராட்டங்களில் இறங்குவதைத் தவிர வேறு என்ன வழி இருக்கிறது?
கவிப்பேரரசின் கவின்மிகு அழகிய தமிழுக்கு எதிராக, காவி உடை அணிந்துள்ள சாமியார்ப் பெண்கள் தொடங்கி அத்தனை பேர் பயன்படுத்தும் சொற்களும் அழுகிய வாடையுடன்தான் வெளிப்படுகின்றன. தன்மானமுள்ள தமிழ்க்கூட்டமே எழு, சுத்தப்படுத்த வேண்டிய நேரம் தொடங்கிவிட்டது.
ஓரிரு மாதங்களுக்கு முன் அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்லிக் சேனலில் வெளிவந்த சங்கராச்சாரியின் இந்து கடவுள்கள் எல்லாம் கிரிமினல்கள் என்ற வாக்குமூலத்திற்கு எதிராக எந்த ஒரு பார்ப்பனர்களும் ஏன் போராடவில்லை என்று ஒரு அழுத்தமான கேள்வி உங்களால் எழுப்பப்படும் என்று எதிர்பார்த்தேன். சங்கராச்சாரி சொல்லவில்லை என்று மறுப்பார்களானால் செய்தி வெளியிட்ட ரிபப்லிக் சேனலை எதிர்த்தாவது போராடியிருக்க வேண்டும். இரண்டும் செய்யவில்லை. இதை செய்தியாக்க கேட்டுக்கொள்கிறேன் .
ReplyDeleteஅருமையான விடயம்
Deleteராமனுக்கு எதற்க்கு கோவில் என்று வைரமுத்து விமர்சனம் வைப்பது போல, இஸ்லாமியரை, கிருஸ்துவரை விமர்சிக்க முடியுமா என கேட்கிறார் பாண்டே.. பாபர் மசூதியை இடித்து நாட்டில் கலவரத்தை உண்டாக்கியது சர்ச் கட்டுவதற்கு இல்லையே? ராமனுக்கு கோவில் கட்டத்தானே.. பின் அவரை விமர்சிக்காமல் எப்படியிருக்க முடியும்..?
ReplyDeleteநேரம் குறைவாளல்ல , கவனமாகத்தான் அகற்றிருக்கிறார்கள்.
ReplyDeleteஆமாம்...
Deleteஇதெல்லாம் தெரியாம கட் பண்ண மாதிரி இல்லை ..
ReplyDeleteஆண்டாள் ஒரு தேவதாசி ன்னு எழுதியவர் இன்னும் உயிரோட தான் இருகாரு. அவர கண்டுபிடிச்ச தந்தி டிவி அவர் கிட்ட ஏன் ஆதாரமே இல்லமே இப்படி எழுதிருக்கீங்க ன்னு ஒரு கேள்வி கூட கேட்கல.
ReplyDeleteஏன்னா ஒருத்தர் பேரு நாராயணன் இன்னொருத்தர் கேசவன்.
Delete
ReplyDeleteஅம்பேத்கர்: "சிறுபாண்மை என்று யாரும் இல்லை. அனைவரும் இந்துக்கள் என்கிறீர்களே. ஓர் இந்து, இந்துச் சமயச் சடங்கில் புரோகிதராக பணியாற்ற முடியுமா?"
அவர்களிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. ஒரு நூற்றாண்டு சம்பவம் இன்று தந்தி தொலைகாட்சி ரங்கராஜ் பாண்டே தோழர் சு.ப.வீ விவாத்தில் பார்க்க முடிந்தது.
சுப.வீ பார்ப்பனர் பார்ப்பனரல்லாதவர் என்று குறிப்பிட்ட போது பாண்டே குறுக்கிட்டு ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்கிற தற்போதைய சமூக சூழலில் உள்ளோம். நீங்கள் சாதியை முன்வைத்து குறிப்பிடுவது தவறில்லையா? என்று கேட்கிறார் ரங்கராஜ் பாண்டே.
சுப.வீ என்ன செய்திருக்க வேண்டும்?
அப்படியா? ரங்கராஜ் பாண்டே அவர்களே நீங்கள் சாதியில் பிராமணர் தானே? என்று கேட்டிருக்க வேண்டும். தமிழ்நாட்டில் சாதி அடையாளத்தை பெயருடன் சுமந்து திரியும் வழக்கொழிந்து போய்விட்ட நிலையில் பாண்டே என்னும் சாதிப்பெயருடன் ஏன் திரிய வேண்டும் என்று ரங்கராஜ் பாண்டேவை திணற அடித்திருக்க வேண்டும்.
இது ரங்கராஜ் பாண்டே உடனான தொலைகாட்சி விவாதங்களில் சுப.வீ ஏன் அதிமுக்கியத்துவம் வாய்ந்த இந்த கேள்வியை எழுப்பவே இல்லை என்பது புரியாத புதிரான எனக்கு தோன்றுகிறது!
தினத்தந்தியும்,பாண்டேயும் தான் யார் என்பதையும், தாங்கள் யாருக்கானவர்கள் என்பதையும் தெளிவு படுத்தியுள்ளாகள்.
ReplyDeletetrue.you are right.
Deleteஉங்களிடம் நேர்காணல் செய்யும்போது ஏதோ குடுத்த கடனை வசூல் செய்வது போல முகத்தை கடுப்பாக வைத்து கொள்வதும் அவாளிடம் பேட்டி காணும்போது ஏதோ இவர் கடன் பட்டவர் போல முகத்தை வைத்து கொண்டு இளிப்பதும் பாண்டேவின் வழக்கமான முறைதான்.
ReplyDeleteபண்பாட்டு படைபெடுப்பு, பார்ப்பன சூத்திரப்போர் என்பதைப் பதிவு செய்தீரகள்.
ReplyDeleteவசவுகளுக்குத் தமிழிசை ,பதவிக்கு நிர்மலா சீதாராமன்.
சூத்திரர்களை முன்னிறுத்தி பார்ப்பனர் களியாட்டம் காலித்தனம். நன்றாகச் சொன்னீர்கள்.
நாகசாமி எழுதிய நூல் Thirukkural, an abridgement of Sastras என்ற நூலுக்கு மறுப்பளியுங்கள்.
சென்ற ஆண்டு வெளியான என்நூல் சரியான மறுப்பு. ஆனால் அது ஏழை சொல். அம்பலம் ஏறவில்லை.
நீங்கள் நாகநாதனுக்கு விடையளிக்க வேண்டும். தேவையானது.
பேராசிரியர் விசுவேசுவரன்
த.பெ.சமணக்கல்லூரி ( ஓய்வு, 2000 )
திரு சுபவீ அவர்களே,
ReplyDeleteஎப்போது இந்த விவகாரத்தைப்பற்றி உங்களிடம் என் எண்ணங்களை பகிர்ந்துகொள்ள முடியும் என்று காத்துக்கொண்டிருந்தேன்.
நீங்கள் எல்லோருமே ஒரு விஷயத்தை வலியுறுத்தி சொல்ல தவருகிறீர்கள். உங்களுக்கு அது தெரியும், ஆனால் எதிரியின் தளத்தில் எளிதாக சிக்கிக்கொண்டு விடுகிறீர்கள். பாஜகவின் உண்மையான நோக்கம் வன்முறையை தூண்டுவது என்று பல முறை சொல்லி வருகிறீர்கள். சற்று சிந்தித்துப்பாருங்கள். அதுவா பாஜகவின் உண்மையான நோக்கம்?
யார் மனதில் மதவாத சிந்தனை ஏற்கனவே இருக்கிறதோ அதை ஊதி பெரிதாக்குவதும், யார் மனதில் மதவாத சிந்தனை இல்லையோ அதை விதைப்பதும், இவைகளின் வாயிலாக வாக்கு வங்கிகளை ஏற்படுத்திக்கொள்வதும்,அதன் மூலம் அவர்களுக்கு தேர்தலில் அதிக வாக்குகளை விழவைப்பதும் தான் அவர்களுடைய உண்மையான உள்நோக்கம். இதை போகுற போக்கில் சொன்னால் கூட போதாது. இதைத்தான் வலியுறுத்தி சொல்ல வேண்டும். H. ராஜா போன்றவர்களுக்கு நாலு பேர் அடித்துக்கொண்டு செத்தால் என்ன கவலை? அவருக்கு ஆண்டாளைப்பற்றியோ ஆழ்வார்களைப்பற்றியோ அல்லது நாயன்மார்களைப்பற்றியோ உண்மையான கவலை எதுவும் இல்லை. அவர்களுடைய தேர்தல் அரசியலில் ஆண்டாள், பெரியாழ்வார், வைரமுத்து இவர்களெல்லாம் வெறும் கருவிகள், அவ்வளவுதான்.
உங்களுடைய அணுகுமுறையில் மிகப்பெரிய பிழை இருக்கிறது. நீங்களோ அல்லது கனிமொழியோ அல்லது வீரமணியோ ஹிந்து மதத்தை தாக்கி பேசும்போதெல்லாம் நீங்களே பாஜகவினருக்கு உங்களை அடிக்க ஆயுதத்தை எடுத்து கொடுத்து விடுகிறீர்கள். அவர்களுடைய தந்திரத்தை புரிந்து கொண்டு செயல்படுங்கள்.
சமீபத்தில் நடந்த துக்ளக் ஆண்டு விழாவில் குருமூர்த்தி பேசியதை கவனித்தீர்களா? "கனிமொழி ஒரு பொன்னான வார்த்தையை சொன்னார்கள்" என்று குறிப்பிட்டார், கனிமொழியின் திருப்பதியைப்பற்றிய கருத்தை குறிப்பிட்டு. "பொன்னான" என்று அவர் சொன்னது ஏதோ நைய்யாண்டிக்காக சொன்னது அல்ல. உங்கள் அணியைச்சேர்ந்தவர்கள் ஹிந்து மதத்தை தாக்கி பேசும் ஒவ்வொரு சொல்லும் அவர்களுக்கு பொன்னான சொற்கள் தான். அப்போது தான் மதவாதத்தை தூண்டிவிட முடியும், வாக்குகளை பெருக்கிக்கொள்ள முடியும், பாஜக தமிழகத்தில் காலூன்ற முடியும். H. ராஜா மீண்டும் மீண்டும் அண்ணாதுரை எப்போதோ சொன்ன "அடியே மீனாட்சி உனக்கெதுக்கடி வைர மூக்குத்தி கழட்டடி கள்ளி" என்ற வசனத்தை கூறி வருகிறாரே, இந்த ஒரு உதாரணம் போதாதா?
இதை புரிந்து கொள்ளாமல் "வாருங்கள் நேரடியாக மோதிப்பார்கலாம், பகுத்தறிவா, ஆர்யமா" என்ற ஒரு அணுகுமுறையை கொண்டுள்ளீர்கள் நீங்கள் எல்லோரும். உங்கள் நேர்மையையும் துணிவையும் பாராட்டுகிறேன். ஆனால் தந்திரத்தை அப்படி வீழ்த்திவிட முடியாது. உங்களை அழிக்க நீங்களே அவர்களுக்கு ஆயுதங்களை கொடுத்துவிடாதீர்கள். ஹிந்து மதத்தை தாக்கி பேசுவதற்கு பதிலாக மக்களுக்கு இந்த பாஜகவின் சூட்சுமத்தைப்பற்றிய விழிப்புணர்வை கொடுப்பதில் கவனம் செலுத்துங்கள்.அவர்களுடைய அரசியல் தந்திரத்தை மைய்யப்படுத்திப்பேசுங்கள்.இந்த புருஷ சூக்தம், பகவத் கீதை, மனு ஸ்ம்ரிதி, தலையில் பிறந்தான் காலில் பிறந்தான் என்பதையெல்லாம் தூக்கி குப்பையில் போடுங்கள். இவைகளைப்பற்றியே பேசிப்பேசி சங்க் பரிவாரின் தந்திரத்தை வீழ்த்திவிட முடியாது. இது தான் உங்களுக்கு புரியவே இல்லை.
ஒரு மிகப்பெரிய சித்தாந்தப்போர் துவங்கி இருப்பது என்னவோ உண்மை தான். ஆனால் அவர்கள் ஒரு நாளும் நேர்மையுடன் போரிடமாட்டார்கள். அவர்களுடைய சாதுர்யத்தைப்புரிந்துகொண்டு உங்கள் யுக்திகளை வடிவமைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் விரித்த வலையில் சிக்கிக்கொள்ளாதீர்கள்.
இன்னொன்று, வைரமுத்துவை கண்டிக்க பெருந்திரளாக வந்தார்களே வைணவர்கள், அவர்கள் ஒரு நாயன்மாரைப்பற்றி வைரமுத்து ஏதாவது சொல்லி இருந்தால் வந்திருக்க மாட்டார்கள். ஆம், இன்றைக்கும் சைவமும் வைணவமும் இருவேறு மதங்களாகத்தான் இருக்கின்றன. இந்த "ஹிந்து மதம்" என்பது ஒரு மாயப்போர்வை. அப்படி ஒரு மதமே இல்லை என்பதற்கு இந்த வைரமுத்து-ஆண்டாள் விவகாரமே ஒரு நல்ல எடுத்துக்காட்டு. இல்லாத ஒரு மதத்தை வைத்துக்கொண்டு மதவாதத்தை தூண்டிவிட பார்க்கிறது பாஜக. தமிழக மக்கள் விழித்துக்கொள்ள வேண்டும்.
இது பகுத்தறிவுவாதிகளுக்கு பெரும் சோதனை காலம். இன்னும் சோதனைகள் வரப்போகின்றன. ஏற்கனவே துக்ளக் பத்திரிகை காவி நிறத்தால் முழுமையாக சாயம் பூசப்பட்டுவிட்டது. தமிழகம் முழுவதையும் காவி நிறத்தால் சாயம் பூசாத வரையில் பாஜகவினர் ஓய மாட்டார்கள். பகுத்தறிவையும் பெரியார் இயக்கங்களையும் முற்றிலுமாக அழிக்கும் வரை அவர்கள் ஓய மாட்டார்கள். இது போர் காலம். போரில் வீரமும் வேண்டும் விவேகமும் வேண்டும். விவேகமின்றி செயல்பட்டால் நீங்கள் தோல்வி அடைவது நிச்சயம்.
நன்றி,
சுரேஷ்
எச் ராஜா பேசியது வருந்தத்தக்கதாம்.
ReplyDeleteநயினார் நாகேந்திரன் பேசியது அபாயகரமானதாம்.
கடைசி வரை ஒப்புக்கு கூட அது கண்டிக்கத்தக்கது என்று கூற மனம் வரவேயில்லை பாண்டேவிற்கு.
தீவிரவாதத்தை தூண்டும் பேச்சுக்கு தன் மறைமுக ஆதரவை தேர்ந்தெடுக்கபட்ட வார்த்தைகளால் வெளிப்படுத்தும் பாண்டே போன்றவர்களுக்கு அதற்கு எதிர்வினையாற்றிய பாரதிராஜாவிற்கு ஆதரவு என்று "வா ஒரு கை பாத்துடலாம்" என்பதுபோல் நேரிடையாக பதில் சொன்ன சுப.வீ யின் முறைதான் மிகச்சரி.
இதுதான் பாண்டேவின் விஷத்துக்கு தக்க பதிலடி.
Super Talaivaa,
ReplyDeleteTell the truth, even K veeramani was kind of stumped by Pandey
Tala only you trumped him on his turf...
The important points of Subavee are
1.) The crux of issue is not analysis of Andal or her poetry nor of vairamuthu and his skill of writing or his ability to cite
* But of a Brahman Vs non-Brahmanism ideology struggle (Davida Vs Brahmanism)
* An attempt to convert it as market it as an issue between Hindus and non Hindus.
* We don't say what Vairamuthu said is correct it could be wrong, but prove that with better research article and better citations [ why convert it into a violent rowdyism].
* They will not directly attack, rather will use one non brahimin against another to capture power its a old Aryan golden policy of divide and rule, ideal example is Utter pradesh, Madhya pradesh, chattisgarh.
2.) I don't need your IQ certificate (should have added I need not hung that certificate even in my bathroom)
3.) Even if Periyar or Kalainar become theists
it has no relevance as we are concerned with concept rather than individual.
4.)We are not in the business of correcting any-body, we simply state our ideology without any prejudice in a scientific manner its for the individual to think/research then make a informed decision to accept or reject it.
5.) we don't force our ideology on anyone including our spouse, its their free-will to follow what they prefer.
6.) Yes we don't criticize other religions such as Judism, abharamic religions as much as we criticize Brahmanism
* We are born hindus; in that context :- we are born as Sudras in Hinduism and it directly affects our self respect and our day to day affairs & livelihood therefore its our priority to defend from Brahmanism.
[ It should be noted we dont attack certain sects in hinduism such as Vallalar, Buddhist, Jainism or Sikhism - legally they are hindus).
Finally if born out of feet or born as sudhra is so great then why the heck you rather become a sudhra rather than calling yourself brahimin
Talaivaa I feel I can write a book based on your arguments.
நமது சமுகத்தில் இரண்டு வகை மக்கள் கேடாக இருந்து வருகிறார்கள்.
ReplyDelete1. பார்ப்பனர்கள்
2. பார்ப்பானிய கொள்கையைத் தருமமாக எண்ணி அவர்களின் மேலாண்மையை ஏற்று புத்திமழுங்கி வாழ்ந்து வரும் பார்ப்பானியத்தமிழர்கள்.
இதை "மோடி பார்பானில்லை" என்கிற பான்டேவின் கருத்தின் மீது இந்த அளவில் அண்ணன் சுபவீ அனுகி பதில் தந்திருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன்.
இன்னொன்று, இட்டப்பணியை செவ்வனே செய்து முடிப்பதில் வல்லவர்கள் யாவர் என்றால் அவர்கள் சூத்திரர்களே. ஆம் சனாதன ஹிந்து தத்துவத்தை ஏற்று அதுவே பிரம்மன் படைப்பு என்று எண்ணி நம்பி பார்ப்பான் இட்ட இடும் பணியை செய்து வரும் பார்ப்பனர் அல்லாத மக்கள் அதாவது பார்ப்பனர்களின் அடிமைகள்தான் இந்த அளவு செவ்வனே செய்து முடித்திடுவார்கள்.
ஆனால் அதைப்போன்று பார்ப்பான் இடும் பணியை செய்வதற்கு முன்பு நீ என்ன என்னை செய்ய சொல்வது? என்று குறுக்கே கேள்வி கேட்கும் குணமும் வாய்ப்பும் கொண்டிருப்பதால் பார்ப்பான்கள் அடிமை பணி செய்ய அமர்த்த படுவதில்லை.
பினாமி அரசு நடக்கும் தைரியத்தில் தொலைபேசியில் அசிங்கமாகப் பேசும் அயோக்கியர்களின் தொலைபேசி எண்களை மறவாமல் குறித்துவைத்துக்கொள்ளுங்கள். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சுளுக்கெடுக்க வசதியாக இருக்கும்!
ReplyDelete//
ReplyDeleteஅவர்கள் மனம் புண்பட்டு விட்டததாகக் கவலைப்படுவோர், "நீறு இல்லா நெற்றி பாழ்" என்று சொன்னபோதும், "நாத்திகம் பேசி நாத்தளும்பேறியோர்" என்று பாடியபோதும் எங்கள் மனம் புண்படும் என்பதை எண்ணிப்பார்க்கவில்லையே, ஏன்? புண்படுவது ஒருவழிப்பாதையா என்ன?
//
Sixer😍😍
Sir, We have to give them them back!
ReplyDeleteகத்தியால் குத்தியவனை கண்டானைக் கண்டேன் என்ற கதையாய் சொன்னவனை விடுத்து கேட்டு சொன்னவனை வசைபாடும் அந்த கூட்டத்திற்கு பிரச்சினை கருத்தா, வைரமுத்துவா?. கையை வெட்டு, கழுத்தை வெட்டு என்ற கலீஜுக்கு போனபிறகும் நாத்திக சிந்தனையாளர்களும், பொதுவுடமைத் தோழர்களும், தோழமையாளர்களும் ஒன்று திரண்ட எதிர்ப்புகளை காட்டவேண்டாமோ,தனித்தனியே அறிக்கை விடுவது அழகா என்ற ஆதங்கம் வருகிறது.இப்போதாவது திரளுங்கள் தோழர்களே. தி.தா.நாராயணன்
ReplyDeleteபெரியார் திராவிடத்தின் எதிரி ஆரியம் என்று சொன்னது மட்டுமில்லாமல் தன் இறுதி மூச்சுவரை ஆரியத்தை கடுமையாக எதிர்த்தார். ஆனால் திராவிடக் கட்சிகள் பார்ப்பன எதிர்ப்பை கைவிட்டதன் விளைவு இன்று பார்ப்பனர்கள் தந்திரமாக இந்துக்கள் என்ற முகமூடி அணிந்து ஆள் சேர்க்கிறார்கள் திராவிடத்தை அழிக்க!
ReplyDeleteஇன்று திமுகவினர் பார்ப்பனர்கள் என்ற சொல்லக்கூட பயன்படுத்துவதில்லை. விவாதங்களில் இந்துக்களுக்கு ஆபத்து இந்துக்களுக்கு ஆபத்து என்று கூப்பாடு போட்டு ஒட்டு மொத்தம் இந்துக்களின் பாதுகாவலனாக காட்டிக்கொள்ள முயலும் பார்ப்பனர்களின் தந்திரத்தை திமுகவினர் சரியாக எதிர்கொள்வதில்லை. அவர்களின் பார்ப்பன முகத்திரையை கிழிக்க முற்படுவதே இல்லை! இந்துக்கள் என்ற முகத்திரையை பார்ப்பனர்கள் அணிந்து வரும்போது திராவிடர்கள் வேறு பார்ப்பனர்கள் வேறு என்று முகத்திரையை கிழிக்க வேண்டாமா? திமுக தற்காப்பு ஆட்டம் ஆட நினைத்தால் கேடாகவே முடியும்!
ராஜா, பிஜேபி செய்யும் தவறுகளுக்கு பொத்தாம் பொதுவாக ப்ராஹ்மணர்களை பழிப்பது ஏன்? எந்த பிராமணன் கையில் அருவாளோடு அலைகிறான்? அடித்தால் வாய் பேசாமல் அடிவாங்கி கொண்டு போகும் ஒரு இனம். பதில் கூறவில்லை என்பதற்காகவே அவர்களையே பழி பேசுவது அழகு அல்ல.
ReplyDeleteஉங்களை போல ஒரு பிராமணரைதான் தேடிக்கொண்டிருக்கிறேன். உங்கள் ஒருவருக்காவது பார்ப்பணர் செய்வது தவறு என்று தெரிந்திருக்கிறது. மற்ற பார்ப்பணர்களுக்கு தான் செய்வது தவறு என்று கூட உணர்வது இல்லை. நீங்கள் போய் உங்கள் உறவினர்களிடம் சொல்லுங்கள். பார்ப்பணர்கள் மற்றும் பார்ப்பணர்களுக்கு பிறந்தவர்களால் இந்த தேசம் மதத்தின் பெயரால் துண்டாடப்படுகிறது என்று சொல்லுங்கள். இந்த மக்களை பிரித்தாலும் தந்திரம் இனியும் உதவாது என்று சொல்லுங்கள். தானும் வளர்ந்து மற்ற சாதி மக்களையும் வளர்ப்பதற்கு என்ன செய்வது என்று ஆக்கபூர்வமாக யோசிக்க சொல்லுங்கள்.
Deleteஎன்ன தவறு செய்கிறார்கள் என்று கூறினால் போய் எல்லோரையும் திருத்தலாம். எல்லோரும் பார்ப்பனர்கள் சரி இல்லை, பார்ப்பனர்கள் நம்மை ஆள பார்க்கிறார்கள் என்று பொத்தாம் பொதுவாக கூறுகிறார்களே தவிர யாரும் specific ஆக இதுதான் பிரச்சனை என்று கூறுவதே இல்லை. மோடி பிராமணர் இல்லை. நயினார் நாகேந்திரன் பிராமணன் இல்லை. தமிழிசை பிராமணர் இல்லை. பொன்னார் பிராமணர் இல்லை. உங்கள் கண்களுக்கு ராஜா மட்டும் தெரிகிறார் என்றால் அதற்கு பேர் selection bias. பிஜேபி hindutva கொள்கைகளை பரப்ப முயல்கிறது என்பதை ஒத்து கொள்கிறேன். ஆனால் பிஜேபி பின் நின்று பார்ப்பனர்கள் பார்ப்பனியத்தை வளர்க்க முயல்கிறார்கள் என்பது லாஜிக் இல்லாத வாதம். தமிழ்நாட்டில் பார்ப்பனர்களுக்கு எதிரான மனப்போக்கு இருப்பதால் எல்லோரும் சேர்ந்து இதே விஷயத்தை கத்தி கொண்டிருக்கிறார்கள்.
Deleteபிராமண கலப்பு எல்லா சாதிகளிலும் அதாவது தலித்துகள் வரை இருப்பதால் யாரை பார்த்து திருந்த சொல்வது என்பது குழப்பம் தருவதே. திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது
Deleteதிரு சுபவீ அவர்களே,
ReplyDeleteமேலும் இரு விஷயங்களை குறிப்பிட விரும்புகிறேன்.
ஆண்டாள் தோட்டத்தில் கண்டெடுத்த பிள்ளையாக இருக்க வேண்டும், அல்லது பெரியாழ்வார் பெற்றெடுத்த பிள்ளையாக இருக்க வேண்டும். இரண்டுமே உண்மையாக இருக்க முடியாது.முதலில் அவர்களுடைய கதைகளில் இருக்கும் குழப்பத்தை தீர்த்திவிட்டு வரட்டும் பிறகு பேசலாம். இதை நீங்கள் பாண்டேவிடம் சொல்வீர்கள் என்று எதிர்பாத்தேன்.
மற்றோரு விஷயம், இஸ்லாமையும் கிறிஸ்து மதத்தையும் ஏன் விமர்சனம் செய்ய மறுக்கிறீர்கள் என்பதற்கு நீங்கள் எவ்வளவு சமாதானம் சொன்னாலும் ஏற்க்க மாட்டார்கள். இதற்க்கு தீர்வு, குரானிலும் பைபிலிலும் இருக்கும் அறிவியலுக்கு எதிரான செய்திகளில் சிலவற்றையாவது உதாரணமாக எடுத்து நீங்கள் விமர்சனம் செய்வது தான் இதற்க்கு ஒரே தீர்வு. இல்லையென்றால் அச்சப்படுகிறீர்கள், சிறுபான்மையினரின் ஆதரவை எண்ணி தயங்குகிறீர்கள் என்ற கருத்தை நீங்கள் அழிக்கவே முடியாது.
நன்றி.
அன்புடன்,
சுரேஷ்.
சுப.வீ தங்கள்பேச்சு அருமை.
ReplyDeleteVanakkam
ReplyDeleteI appreciate your matured and well informed debates. I just want to point few hints .
1. BJP and Bramin Association blame that Dravidian parties destroyed development in TN.
TN performed much better in health, education' social justice, law and order, GDP share, employment, Gender equality, IT sector when compared with most BJP ruled states.
2. BJP claims that jeeyar represented hindus who are angry with Dravidian parties.
BJP and Jeeyar forget one thing..Hindus have been voting for Dravidian parties and made tgem win so
Since 1965? Hindus are not fanatics like BJP or Jeeyar or Sankaratha Acharyar or sanga tamil insulting lunatics ...
3. Arayam is not Indian word. Iranian King called himself Aryan...sanskrit is indo-aryan language with more than 40% tamil wors as substrate. SUCH SUBSTRATE, according to Linguistics, indicates sanskrit is a derivative of Tamil ! Also san means no, skrit means letters..sanscript mean a language withiut a letter.
Thanks Thodarattum thangal Pani
Dr Kannan Australia
Also san means no, skrit means letters..sanscript mean a language withiut a letter.
Deleteஅந்த மொழி இறந்துபோனதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.
ANNA UNIVERSITY VC DR M.K. SURAPPA WAS FOUND INCOMPETENT BY GOVERNMENT OF INDIA, HRD MINISTER SMRITI IRANI. HRD MINISTER has rejected recommendations by government-appointed search panels, which had shortlisted Dr M. K. Surappa. (Smriti bins IIT heads shortlist; https://www.telegraphindia.com/1150218/jsp/nation/story_4052.jsp#. VPKw83WUeDU) Directors of IITs at Bhubneshwar, Patna and Ropar were not found suitable by the MHRD -- SOME ARE CAUGHT NECK DEEP IN CORRUPTION AND SOME ARE FOUND TO BE PLAIN INCOMPETENT. None of the incumbent directors of these IITs (INCLUDING DR SURAPPA) was given a second term, since two of them were facing corruption cases while one was not found suitable.
ReplyDeleteDID PUROHIT PICKED DR SURAPPA FOR ANNA UNI VC POST FROM THE REJECTED BINS OF GOI HRD? ANNA UNIVERSITY IS NOW UNDER AN INCOMPETENT VC!! PUROHIT FOUND TAMIL ACADEMICS MORE COMPETENT SO RJECTED AND SLECTED INCOMPETENT SURAPPA?? RECYCLED FROM DUST BIN OF HRD MINISTER!!!