நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் பெயரில் வெளியாகியிருக்கும் ஒரு பதிவு,
சமூக வலைத்தளங்களில் வெகு விரைவாகப் பரவிக் கொண்டுள்ளது. இப்போது அது குறித்து அவரே ஒரு விளக்கத்தையும்
ஒரு தொலைக்காட்சியில் கூறியுள்ளார்.
அந்தப் பதிவைத் தான் உருவாக்கவில்லை என்றும், தனக்கு வந்த ஒரு செய்தியை,
அதில் நியாயம் இருப்பதாகத் தானும் அந்த நேரத்தில் கருதியதால், பிறருடன் பகிர்ந்து கொண்டதாகக் கூறியுள்ளார். மேலும்
தன்னிடம் தமிழ் எழுத்துகளே இல்லை என்றும், ஆங்கிலம்தான் உள்ளதென்றும் கூறியுள்ளார். (ஒருவேளை சமற்கிருத எழுத்துகளையும் வைத்திருக்கக்கலாம். தமிழ் எழுத்து இருக்க
வாய்ப்பில்லைதான்.)
அவர் கூற்றை நாம் அப்படியே ஏற்றுக்கொள்கிறோம். ஆனாலும் அவர் நேர்காணல்
வெளியிட்டுள்ள பல சாதிய நஞ்சினை நம்மால் ஏற்க முடியவில்லை.
சுவாதியின் படுகொலையை யாரும் கண்டிக்கவில்லை என்பது எள்ளளவும் உண்மையில்லை.
அனைவரும் கண்டித்தனர். அனைத்துக்
கட்சியினரும் கண்டித்தனர். எதிர்க்கட்சித் தலைவர் உட்படப் பல்வேறு கட்சிகளின் தலைவர்களும்
நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளனர். இது போன்ற தரங்கெட்ட பதிவுகளைப் பகிர்ந்ததன் மூலம் ஒய்.ஜி. மகேந்திரன்
போன்றவர்கள்தான், சுவாதி கொலையைப் பற்றி நீண்டிருக்க வேண்டிய விவாதங்களைச் சாதி பற்றியதாக மாற்றிவிட்டனர்.
தனக்கு வரும் செய்தியை மற்றவர்களுக்குப் பகிர்வதற்கு முன், அந்தச்
செய்தியின் தரம் பற்றி எண்ணிப் பார்க்க வேண்டாமா? திராவிடப் பொறுக்கிகள், காம்ராட்
கயவர்கள் என்றெல்லாம் எழுதப்பட்டிருக்கிற அந்தப் பதிவை, மக்களால் அறியப்பெற்ற நீங்கள்
பகிரலாமா? "தெருப்பொறுக்கி ஒய்.ஜி.மகேந்திரன்" என்று யாராவது எனக்கு ஒரு
பதிவை அனுப்பினால், அதனை நான் கண்டிப்பேனே அல்லாமல், அதனை இன்னொருவருக்கு அனுப்ப மாட்டேன்.
அப்படி அனுப்பிவிட்டு, அது என்னுடையதில்லை என்று சொல்லும் கோழையாகவும் வாழமாட்டேன்.
தான் அதனை உருவாக்கி அனுப்பவில்லை என்றாலும், அந்தக் கருத்தில்
அந்த நேரத்தில் தனக்கு உடன்பாடு இருந்தது என்று கூறுவதன் மூலம், தன் சாதி வெறியை அவர் வெளிப்படுத்தியுள்ளார். ஆம், அது சாதி வெறிதானே அன்றிச் சமூக அக்கறை அன்று. சமூக அக்கறை உடையவராக
மகேந்திரன் இருந்திருப்பாரரேயானால், யார் கொலை செய்யப்பட்டாலும் குமுறியிருப்பார்,
குரல் கொடுத்திருப்பார். தருமபுரி இளவரசன், திருச்செங்கோடு கோகுலராஜ், உடுமலைப்பேட்டை
சங்கர் போன்றவர்கள் கொல்லப்பட்டபோது, எத்தனையோ செய்திகள் வலைத்தளங்களில் உலவினவே! அவற்றுள்
எத்தனை செய்திகளை அவர் மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டார்? அவருடைய அம்மா நடத்தும் பள்ளியில் ஒரு சிறுவன்
நீச்சல் குளத்த்தில் இறந்து போனானே, அவனுக்காக மகேந்திரன் தெருவுக்கு வந்து போராடினாரா?
போகட்டும், அவர்களெல்லாம் சூத்திரர்கள், தலித்துகள்! பார்ப்பன சாதியில்
பிறந்த காஞ்சி சங்கரராமன் கொலை செய்யப்பட்டபோது, எத்தனை பதிவுகளை மகேந்திரன் பகிர்ந்துள்ளார்?
அந்த வழக்கில் குற்றம் சாற்றப்பெற்ற அனைவரும் விடுதலை செய்யப்பட்டபோது, கொந்தளித்தாரா
மகேந்திரன்? உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடித்துத் தண்டிக்க வேண்டும் என்பதில் எந்தப்
பார்ப்பனருக்காவது ஆர்வம் உண்டா?
ஒரு தொலைக்காட்சி, சங்கரராமன் கொலைவழக்கில் தீர்ப்பு வெளிவந்த நாளில், நடிகர் எஸ்.வி.சேகரிடம்
பேட்டி கண்டது. "இது இந்துக்களுக்கு கிடைத்த வெற்றி" என்றார் அவர். அடுத்து
என்னிடம் கேட்டார்கள், "அடடா, சங்கரராமன் ஒரு முஸ்லீம் என்று எனக்கு இதுவரை தெரியாமல்
போய்விட்டதே" என்றேன் நான்.
சங்கர்ராமனைக் கொன்றவர்கள் மீதும் பார்ப்பனர்கள் கோபம் கொள்ளவில்லை.
சங்கராச்சாரியைக் கைது செய்த ஜெயலலிதாவின் மீதும் அவர்கள் கோபம் கொள்ளவில்லை. சாதி
வெறிக்கு இதனை விடச் சிறந்த சான்று வேறு என்ன இருக்க முடியும்?
இப்போதும் தமிழக அரசின் மீதோ, முதலமைச்சர் ஜெயலலிதா மீதோ அவர்கள்
ஒரு சிறு கல்லையும் எடுத்து எறியவில்லை. அவரைப் பாதுகாப்பதில் அவ்வளவு கவனமாக உள்ளனர். இரண்டு மணி நேரம் அந்த உடலின்
மீது ஒரு துணியைக் கூடப் போர்த்தாமல், அங்கேயே நின்ற காவல் துறை மீதும், அத்துறையைத்
தன் பொறுப்பில் வைத்திருக்கும் முதலமைச்சர் மீதும் இவர்களுக்கெல்லாம் எந்த வருத்தமும் இல்லை.
தொலைக்காட்சி நேர்காணலில், தன்னை அறியாமல் நடிகர் மகேந்திரன் வெளியில்
வந்து விழுந்திருக்கும் இடம் ஒன்று உள்ளது. "ஒசந்த சாதி" என்பதால் யாரும்
கவனிக்காமல் விட்டு விட்டார்களோ என்று தோன்றியதாகச் சொல்கிறார்.
நீங்கள் "ஒசந்த சாதி" என்றால் நாங்களெல்லாம் யார் மகேந்திரன்?
சுவாதியைக் கொன்றவர்களை மட்டுமில்லை, உங்களைப் போன்ற சாதி வெறியர்களையும் கைது செய்ய வேண்டாமா?
இங்கே சாதி வெறியர்களை சிறையில் வைக்க வேண்டும் என்றால் குறைந்தது 70% மக்கள் சிறைக்கு பின்னாடி தான் இருக்க வேண்டும். இப்போது நீங்கள் கட்டி தழுவிக்கொண்டிருக்கும் பழ கருப்பையா சாதி வெறியர் கிடையாதா? அவர் செட்டியார் என்பதால் விலக்கு உள்ளதா என்று எனக்கு தெரியவில்லை. கொங்கு ஈஸ்வரன், ராமதாஸ் இவர்கள் எல்லாம் சாதிக்கு எதிரானவர்களா? இல்லை என்றால் அவர்களையும் சிறையில் வைக்க சொல்லும் துணிச்சல் உள்ளதா? திருமாவளவனை தி.மு. கழகம் கழட்டி விட்டதற்கு காரணம் வன்னியர் வோட்டுக்குகாக தானே?
ReplyDeleteஎன் தந்தை சொல்லி நான் கேட்டுருக்கிறேன். "பார்ப்பன பெண்களை பொதுவுடைமை ஆக்க வேண்டும்" என்று திராவிட கழக மேடைகளில் பேசியது பொய்யா? ஈழத்தில் சிங்களர்கள் தமிழர்களுக்கு செய்ததும், இங்கே பார்ப்பனர்கள் அனுபவிப்பதற்கும் என்ன வேறுபாடு. சங்கர்ராமன் அய்யர் மேல் என் திராவிட கழகத்தினருக்கு இவ்வளவு பாசம்? அய்யர் என்பதாலா.. இல்லை? இந்த அய்யரை பயன் படுத்திக்கொண்டு அதிகாரம் உள்ள "சங்கராச்சாரியார்" என்ற பெரிய அய்யரை ஒழிக்க. இது கூடுவா எங்களுக்கு புரியாது? நீங்கள் எல்லா கொலைக்கும் வருத்தப்படுவராக இருந்தால் "ஆடிட்டர் ரமேஷ்" கொலைக்கும் அல்லவா இவ்வளவு முக்கியத்துவம் தந்திருக்க வேண்டும். ஏன் தரவில்லை? ஏன் என்றால் அந்த கொலையில் சம்பந்தப்பட்டது இன்னொரு பார்ப்பனர் இல்லை.
நீங்கள் இந்த பதிவை publish பண்ணுவிங்களானு தெரியல. செய்தால் மகிழ்ச்சி.
சுவாதி என்னும் பெண்ணை அரிவாள் ஒருமுறை கொன்றது. சாதி பலமுறை கொல்கிறது!
Deleteஅபாண்டமான பழி இது. கொஞ்சம் மனசாட்சியோட பேசுங்க.
Deleteஅதுமில்லாம ஒரு இசுலாமியர் பெயர சொல்லிட்டு அதுக்கான குற்றவுணரசியே இல்லாம?
என்னத்த ொல்ல. மாட்டுச்சாணம்..
Adhu ennada osandha jaadhi
DeleteJaadhi veri pudicha naayey
பேருல என்ன ஐயர் வேண்டிகிடக்கு? நீங்க ஆகாயதுலேருந்து குதிச்சீங்களா?
Deleteஅடப்பாவிங்களா!! ஒசந்த சாதினு தங்களுக்கு தாங்களே ISO முத்திரை குத்தும் மக்கள்,ஒசந்த சாதி முன்னோரின் அறிவுசெயலை பார்த்தா உடம்பு எல்லாம் மயிர்கூச்செறியும்.இதே ஒசந்த சாதி பெண்கள் கணவனை இழந்தால் அப்பெண்களின் தலைமயிரை மழித்து மொட்டை அடித்து முக்காடிட்டு வீட்டின் மூலையிலே முடக்கி வைத்தனர் பல நூற்றாண்டாய்.இந்த ஒசந்த சாதி முன்னோர்களின் இத்தகு மானங்கெட்ட அறிவுடை செயலை எந்த சங்கராச்சாரி,பகவத்பாதாள்,மத்வாச்சாரிகள்,முனிகள்,சாதுக்கள்,ரிஷிகள் எதிர்த்து போராடி ஒழித்தனர்.அத்தகு பெண்களுக்காகவும் போராடினார் பகுத்தறிவு பகலவன்.பெண்ணை இழிவாக நடத்தியதுதான் தங்களுக்கு தாங்களே முத்திரை குத்தி கொள்ளும் ஒசந்த சாதியினர்.தாங்க முடியல :(
Deleteசபாஷ் Sriram. மிகச் சரியான கருத்துக்கள்.
Deleteசுபவீ அய்யா அறிவாளிகள் YGM கருத்துக்கு எதிர் வினை ஆற்ற மாட்டார்கள்.
Delete#ஈழத்தில் சிங்களர்கள் தமிழர்களுக்கு செய்ததும், இங்கே பார்ப்பனர்கள் அனுபவிப்பதற்கும் என்ன வேறுபாடு?# என்று ஸ்ரீராம் அய்யர் கேட்டுள்ளார். இங்கே ஜெயலலிதா முதலைமச்சராக வர முடியும். ஆனால், தமிழ் நாட்டில் தலித்துக்கள் படும் துன்பம் ஈழத்தில் தமிழர்கள் படும் துன்பதிற்கு இணையானதுதான்
Delete
ReplyDelete2ஜி வழக்கில் ஆர்.ராசா கைதான போது கருணாநிதி என்ன சொன்னார் ??
ராசா தலித் என்பதால் அவர் மீது பழி சுமத்துகிறார்கள்....
பூங்கோதை கனிமொழியும் பேசிய ஆடியோ க்களை பற்றி கேட்ட போது கருணாநிதி என்ன சொன்னார் ?
இரண்டு நாடார் சமுகத்து பெண்கள் பேசியதில் என்ன வியப்பு இருக்குன்னு....கேட்ட
இந்த சம்பாஷனையில் எங்கே சாதி வந்தது ???
ஆனா...
ஒரு கேடு கெட்ட ஆளை தலைவராக கொண்ட அடி மாடுகள் இப்போ YG மகேந்திரன் பேசிட்டாருன்னு பொங்க வைக்குறீங்க
இந்த கேள்விகளை நாங்கள் தாண்ட பிராமணர்களை பார்த்து கேட்கவேண்டும் , நீங்க எண்ணத்தை புடுங்கினீங்க பிற சமுதாயங்கள் பாதிக்கப்படும் பொழுது ? இது ஆண்டவன் செயல் என்று ஒதுங்கி போனீங்க ! இப்ப சாவு உங்களை தேடி வருது.
ReplyDeleteஒரே ஒரு சாவுக்கு இந்த ஓலம் , நாங்க தினந்தோறும் சாவுறும் உங்களால் ,தினந்தோறும் உயிர்பலி உங்க சாதி வெறியர்களால் , DSP விஷ்ணுபிரியா , கடலூர் மூன்று மாணவிகள் , பள்ளிக்கொழந்தைகள் சாதிவெறியர்களால் தலையில் செருப்பை சுமக்க வைத்து அடித்தபொழுது நீங்க எங்கட போனீங்க, தலையை வெட்டி தனியா கிடந்தபொழுது நிறைமாத கர்பிணிப்பெண்கள் கற்பழித்து கொள்ளும் பொழுது உங்களுக்கு எங்கடா போனுச்சு மனசாட்சி !
arumai
Deleteஎந்த சாதிக்கொலையில்,ஆணவக்கொலையில் பிராமனர்கள் ஈடுபட்டார்கள். ஆதிகாலத்து சாதிக்கொடுமைகளை பேசிக்கொண்டிருப்பதில் எந்த பயனும் இல்லை. இன்றைய காலகட்டத்தில் சாதித்தாக்குதல்களை செய்யும் இடத்தீல் இருப்பவர்கள் மற்ற சாதியினர் தான்.
DeleteVery good
DeleteSRIRAM IYER உங்களிடம் ஊறிப்போயுள்ள சாதி வெறி புரிகிறது ! திராவிட கழக மேடைகளில் நீங்கள் சொல்வது போல் பேசியதற்கு ஆதாரம் காட்ட வேண்டும். நீங்கள் திருமணங்களில் ஓதும் மந்திரங்களை விட ஆபாசம் எது ?
ReplyDeleteஎந்த ஆதாரமும் இல்லை. என் பதிவை படியுங்கள். நான் என் தந்தை சொன்னதாக சொன்னேன். திருமணத்தில் ஓதும் மந்திரங்களுக்கும் நான் சொன்னத்துக்கும் என்ன தொடர்பு. நிதானமாக பதிவிடுங்கள்.
Deleteதிருமணத்தில் வாழ்நத்ம்மதுக் கூறுகிறேன் என்ற போர்வையில் திராவிடத்தலைவர்கள் பேசும் அமங்கல வார்த்தைகள் நண்பருக்குத் தேனாய் இனிக்கும். மந்திரங்களில் எது ஆபாசம் என்று ஆதாரம் காட்டமுடியுமா?
Deleteஆடிட்டர் ரமேஷ், இப்போ ஸ்வாதி ரெண்டு உயிர் போனதுக்கு இவ்ளோ பெரிய செய்தியா ஆக்குறீங்க..ஏன் இதற்கு முன் ஆந்திராவில் 20 தமிழர்கள்,பரமக்குடி துப்பாக்கிச் சூட்டில் 4 தமிழர்கள்,இலங்கை இராணுவத்தால் நூற்றுக்கணக்கான தமிழ் மீனவர்கள்,இளவரசன் திவ்யா காதல் சாதி கலவரமாக மாறியது,பல பெண்கள் கற்பழிப்பு...இதற்கெல்லாம் பார்ப்பனிய குரல் எழுந்தது உண்டா????
ReplyDeleteஇறந்த இவர்கள் எல்லாம் மனித உயிர்கள் இல்லையா????
இது எதுவுமே தெரியாத மாதிரி இருக்கும் நீங்க ஒசந்த சாதியா???
இந்த கொலைக்கு சாதி பார்க்காமல் கோடிக்கணக்கான மக்கள் வருத்தம் அடைகின்றோமே ...நாங்கள் தாழ்ந்த சாதியா???
மனித நேயத்தில் நாங்க தான்டா ஒசந்த சாதி.......
பார்ப்பானே!!பார்ப்பானே!!! இன்னுமா இந்த உலகம் உங்களை ஒசந்த சாதி என்று நம்புகின்றது>>>>
Ha ha ha ha ha ha ha ha ha ha....
தன் சமுதாயத்தில் உள்ள பெண் இறந்துவிட்டார் என்பதைவிட தன் சாதி பெண் இறந்துவிட்டதாக எண்ணி அந்த பெண்ணின் சாவை சாதிய பெயரால் அசிங்கப்படுத்தும் சமுதாயமாக தமிழ் சமுதாயம் இருக்கிறது என்பதை என்னி வெட்கப்படுகிறேன்...
ReplyDeleteபெண்ணைவிட சாதியை உயர்த்தி பேசுகிறார்கள் ஓசித்தி சாதிமக்கள்
சமூக காவலர்களே நீங்கள் இங்கே, தாங்கள் தங்கள் ஜாதி எப்படி உயர்த்தி புடிப்பது ,
ReplyDeleteஎன்று வாதிட்டு கொண்டு இருக்குறீர்கள் , இனிமேலும் இப்படி நடக்காமல் இருக்க
என்ன செய்ய வேண்டும் என்று சற்று சிந்தீயுங்கள் ,,
செவிடன் காதில் ஊதிய சங்கு போலத்தான் இருக்கிறது பிராமணர்களிடம் சாதி பற்றி போல பேசுவது. அவர்கள் திருந்தவே மாட்டார்கள். ஒரு பிராமண பெண்ணிற்கு இப்படி நேர்ந்து விட்டதே என்று கவலை கொள்கிறார்கள். ஆனால் நீங்கள் இலங்கையில் நம் தமிழ் மக்கள் இறந்த போது கவலை பட்டீர்களா..? அவர்களுக்கு வாழ தகுதி இல்லை என்றீர்கள். தகுதி உள்ளவன் பிழைத்து கொள்வான் என்று வாழ்கிறீர்கள். இரக்க படுவது கொள்கை அளவில் கூட கிடையாது. பின்பு ஏன் கத்துகிறீர்கள்.
ReplyDeleteநாங்கள் என்ன செய்தொம். புரிய வில்லை. ஜெயலலிதா பிராமணர் தானே? அவர் இலங்கை மக்களுக்கு ஆதரவாக தானே உள்ளார். சின்ன மேளம் சாதியை சேர்ந்த கலைஞரை தானே சீமான் உற்பட எல்லோரும் வெய்கின்றனர். தமிழ் தேசியம் மீண்டும் எழுந்ததற்கு திராவிட தலைவர் கலைஞர் தானே காரணம். பதில் சொல்லாமல் இருந்தால் எந்த பழியை வேணும்னாலும் தூக்கி போடலாம் என்ற என்னமா? ஈழ பிரெச்சனை தரவுகளோடு விவாதிக்க நான் தயார். இந்த டக்கால்டி வேலையெல்லாம் வேண்டாம்.
Deleteகடந்த காலங்களில் கிராமங்களில் மட்டும் சாதி துவேசம் இருந்தது.அது நாகரீக உலகத்தில் சிறிது சிறிதாக மாறி சாதி இல்லாத சமுதாயம் உருவாகும் என்று பலரும் நம்பினோம்.
ReplyDeleteஆனால் இன்று எங்கும் எதிலும் சாதி பார்க்கும் நிலை உருவாகி விட்டது. முகநூல் வந்த பின் யார் என்ன சாதி என்று அனைவரும் அறிந்து கொள்ளமுடிகிறது.இனி சாதியை ஒழிப்பது எளிது அல்ல என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது.
நண்பர்களே! சாதி என்ற போர்வைக்குள் பெண்களை அடக்கி கேவலப்படுத்தாதீர்கள். யார் வீட்டுப் பெண்ணாக இருந்தாலும் அது நம் வீட்டுப் பெண்ணுக்கு நிகழ்ந்ததாக உணர்வதே - மனிதாபிமானம்.
ReplyDeleteசரியான சூடு அண்ணன்....நம்ம ஆட்கள் ஒய்.ஜி.பிலால் மாலிக்காக அவர் படத்தில் தாடி,குல்லா போட்டு விட்டு கலாய்த்துவிட்டார்கள்....ஜோராக...
ReplyDeleteSamooga valaithalam arumayaaga kaththu tharugirathu jaathi sandai... ookkuviththa anaiththu jaathi veriyargalukkum nanri nanri nanri.. ippadikku ilaingar samudhaayam...
ReplyDeleteதிருவாளர் ஒய்.ஜி. மகேந்திரனுக்கு அவர்களுக்கு,
ReplyDeleteஎன்னுடைய பெயர் தில்லைமுத்து . இரவீந்திரன். நான் சென்னையில் வசிக்கிறேன். எனக்கு இரண்டு குழந்தைகள். அவர்களுடைய பெயர் முகிலன் மற்றும் மதிவதனி. நாங்கள் உங்கள் நாடக ரசிகர்கள். எங்களுடைய குடும்ப நண்பர்களில் சில முக்கிய நண்பர்கள் ஆராமுதன், சம்பத், வெங்கடேசன். மதுசூதனன். நானும், என் துணைவியாரும் மற்றும் மேல சொன்ன குடும்ப நண்பர்கள் உடன் பல்வேறு விஷயங்கள் பேசும்பொழுது மறைந்த சுவாதி பற்றிய செய்திகளை பேசினோம். சமூகத்தின் மீதும் மற்றும் ரயில்வே துறையின் அலட்சிய போக்கும் பற்றி விவாதங்கள் தொடர்ந்தன. அப்பொழுது உங்களுடைய பதிவை பற்றி பேசினோம். அந்த பதிவு ஒரு ஆரோகியமான பதிவாக இல்லை என்பது நான் உள்பட எங்கள் அனைவருடைய கருத்து. உங்களுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால்
நீங்களும் உங்கள் மகளும் சேர்ந்து ஓவர் கவன ஈர்ப்பு நிகழ்வு நடத்தியிருக்கலாம். ஒரு நாடகத்திற்கு நீங்கள் தயாராகும் நேரத்தை விட இந்த நிகழ்வு தாண்டாது. நீங்கள் சமூகத்தில் மக்களுக்கு தெரிந்த நபராக இருப்பதால் உங்களுடைய பதிவுகள் சமூக பொறுப்பு உள்ளதாக இருக்கவேண்டும் என்பது எங்கள் அனைவருடைய தாழ்மையான கருத்து ஆகும்.
அன்புடன்
தில்லைமுத்து . இரவீந்திரன்
//மறைந்த சுவாதி பற்றிய செய்திகளை பேசினோம்// நீங்கள் செய்த விவாதம் பொதுத்தளத்தில் வெளிவராததாலேயே அது மிகச்சிறந்த தரத்தில் இருந்திருக்கும்என்று சொல்வதறகில்லை. ஒவ்வொருவரும் ஒரு சம்பவத்தை பற்றி தங்கள் மணதிற்கு தோனும் வகையில் விவாதிப்பார்கள், தீர்வுகளை அலசுவார்கள். அது வேறுவிதமான சிந்தனை கொண்டவர்களுக்கு அபத்தமாக படலாம். ஆனால் அது அவருடைய ஜனனாயக சுதந்திரம் என்று ஏற்றுக்கொள்ள வேண்டும்.
Delete"தெருப்பொறுக்கி ஒய்.ஜி.மகேந்திரன்" Super!!
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteசமஸ்கிருதம் மொழியில் தட்டச்சு செய்யும் வசதியுடன் ஆன்ட்ராய்டு மொபைல் இருந்தால் அது குறித்து தகவல் தரவும் சுப வீரபாண்டியன். முதலில் இரண்டு மூன்று விடயம்.ஒரு மகேந்திரன் ஒரு கல்யாண ராமன்,கருத்து பிராமண சமூகத்தின் கருத்து ஆகாது.பெண்களைப் பெற்ற எல்லா தகப்பனுக்கும் உள்ள பயம் அச்சம் தான் பலருடைய பதிவுகளைப் போல அவர்களுக்கும் இருக்கும்.ஸ்வாதியின் அகால மரணத்தில் விரைவில் குற்றவாளியை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று தான் பெரும்பான்மையான மக்களின் எதிர்பார்ப்பு.பிராமணப் பெண் என்பதால் ஒரு சார்பு நிலையில் கருத்துக்கள் வந்தது போல,அதே காரணத்தால் எதிரிடையான கருத்துக்களும் வந்ததையும் பார்க்க முடிந்தது.சண்டக்கோழி திரைப்படத்தில் ராஜ்கிரண்க்கு அரிவாள் வெட்டு விழுந்தவுடன், எல்லோரும் போய் நாங்க செய்யல ங்கறது போல எல்லோரும் ஸ்வாதி வீட்டுக்கு போனதையும் பார்த்தோம்.இதே மாதிரி மற்ற மரணங்களுக்கு எல்லோரும் போனாங்களா என்பதும் நாம் அறியாததா? சங்கரராமன் கொலை தீர்ப்புக்கு பிறகும் அதில் குற்றம் சாட்டப்படவர் கள் மீது தொடர்ச்சியாக வரும் கண்டங்களில் என்ன நியாயம் இருக்கிறது?இவை அனைத்தும் எதைக் காட்டுகிறது? பிராமணர்கள் மீதுள்ள பொதுவான காழ்ப்புணர்ச்சி யும் வெறுப்புணர்வு தான். வெறும் வாய்க்கு அவல் கிடைத்த மாதிரி, ஒய்ஜி மகேந்திரன் கல்யாண ராமன் பதிவுகள். முக நூலில் சொந்த அரிப்பை தீர்த்துக் கொள்ளும் வாய்ப்புகள்தான் இதை பார்க்க முடியும்.
ReplyDeleteஆமாம். அப்படி பார்த்தால் மனுஷபுத்திரனின் கருத்துக்கள் இஸ்லாமியர்களின் கருத்து என்று கொள்ளலாமா.
Deleteஸ்வாதியின் கொலைக்காக கண்டனங்களும், போராட்டங்களும், இரங்கல் நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.
Deleteசாதியை முன்னிறுத்த அல்ல மானுடம் காக்க.
ஒய்.ஜி மற்றும் வகையராக்கள் தன் சாதி என்றதும் சாதிவன்மம் செய்கின்றனரே தவிர எப்போதும் போல மனித மூளைகளை மானுடம் சார்ந்தோ பெண்ணியம் சார்ந்தோ சிந்திக்க முற்படுவதில்லை.
ஷேர் செய்து கொள்வதும் சொந்தமாக எழுதுவதும் ஒன்றுதான். உங்களுக்கு முழுச் சம்மதம் உள்ளதைத்தான் ஷேர் செய்துகொள்கிறீர்கள். ஒப்புதல் இல்லாததை ஷேர் செய்தால், அதில் உங்களுக்கு ஒப்புதல் இல்லாத விஷயத்தைக் காமெண்டாகப் போட்டு விடுவீர்கள்.
ReplyDeleteஇதை ஒய்ஜிஎம் அறியவில்லை என்றால், ஆச்சரியம்தான்.
பார்ப்பான் திருந்தவே மாட்டான்...
ReplyDeleteஒரு இஸ்ரேல் அல்லது அமெரிக்க நாட்டு குடிமக்களின் மீது கை வைக்க எந்த ஒரு நாட்டினருமே பயப்படுவர். ஏனெறால் அந்நாட்டு அரசாங்கம் தொலைத்துக்கட்டிவிடும்.
ReplyDeleteஆனால் எந்த ஒரு மேலை நாட்டினரும் ஆசிய நாட்டில் குற்றம் செய்துவிட்டு எளிதாக தப்பித்துவிடலாம். சமீபத்தில் கூட தமிழர்களை சுட்டுக்கொன்ற இத்தாலி நாட்டு கப்பல் வீரர்களை சலாம் போட்டு இத்தாலிக்கு அனுப்பிவைத்தது மோடி அரசு.
சிங்கள கடற்ப்படையினரால், நாதியற்ற தமிழக மீனவர்கள் ஆயிரம் பேர் வரை சுட்டுக்கொல்லப்பட்டு இருக்கின்றனர் அது குறித்து வாயே திறக்காத இந்திய அரசு பற்றி என்னத்த சொல்ல?
ஆயிரக்கணக்கான பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு , பணத்துக்காக நகைக்காக கொலைசெய்யப்பட்டு கொன்டிருக்கையில், சமீபத்தில் கொலையாகி இறந்த இன்போசிஸ் பொறியாளர் சுவாதி ஒரு உயர்சாதிப்பெண் ஆகையால் அனைவரும் போரடனும்ன்னு உயர்சாதிக்காரர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் எல்லாம் பொங்கி எழுவது குறித்தும் என்ன சொல்லுவதுன்னு தெரியல.
மீனவர்கள் மற்றும் அபலைப்பெண்கள் எல்லாம் உயர்சாதிக்கு மாறிவிட்டால்தான் அவர்கள் பிரச்சனைகளும் இந்தியர்களால் கவனிக்கப்படும் போல
அன்புள்ள அய்யா , உங்கள் கட்டுரையில் ஓரளவு உடன்பாடு இருந்தாலும், இந்த சம்பவத்தில் தேவையற்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, இந்த படுகொலை செய்தவனையும் அதற்கான காரணங்களையும், இவற்றை பற்றியெல்லாம் எந்தவித அக்கறையற்ற அரசாங்கத்தையும் தப்பவிடும் சூழலை ஏற்படுத்தி விடுவோமா என்ற அய்யம் வருகிறது. விஜய்
ReplyDeleteகலைஞர் கூட இருந்து கொண்ட இப்படி எல்லாம் நடுநிலையாளர் போல எழுதுகிறீர்கள் என்றால் நீங்கள் மக்களது அறிவுத்திறன் மீது எவ்வளவு மோசமான கருத்து வைத்திருக்கிறீர்கள், எத சொன்னாலும் கேட்டுக்குவானுங்க, நம்ப பக்கத்தில் உள்ள தவறுகளை கண்டுக்கமாட்டானுங்க என்கிற எண்ணம் தானே.
ReplyDeleteஎன்னுடைய பதிவில் ஒரு கவன ஈர்ப்பு நிகழ்வு பதிலாக ஓவர் கவன ஈர்ப்பு நிகழ்வு என்று தவறுதலாக பதியப்பட்டுவிட்டது.
ReplyDeleteதிருத்தி அமைக்கப்பட்ட பதிவு - உங்களுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால்
நீங்கள் உங்கள் மகளும் சேர்ந்து ஒரு கவன ஈர்ப்பு நிகழ்வு நடத்தியிருக்கலாம்.
அன்புடன்
தில்லைமுத்து . இரவீந்திரன்
இது மஹேந்திரனின் குமுறல் இல்லை ஒட்டுமொத்த பாப்பானின் ஜாதி வெறியின் ஒரு வெளிப்பாடு, இந்த கொலைக்கு காரணமானவனைத் தண்டிக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை, ஆனால் நான் கவனமாக பார்க்க வேண்டிய செய்தி, சுவாதி ஒரு பார்ப்பன பெண் என்பதால் கொலை செய்ய படவில்லை, மாறாக தர்மபுரி இளவரசனும், உடுமலை சங்கரும் தாழ்த்தப் பட்டவர் என்ற ஒரு காரணத்தினால் கொலை செய்யப் பட்டனர்,அந்த சம்பவத்திற்கு மஹேந்திரனோ, அவர் சார்ந்த ஜாதி சங்கமோ ஒரு கண்டன அறிக்கை கூட வெளியிட முன்வரவில்லை, இறந்தது தான் சாதி பெண் என்பதால் மஹேந்திரனுக்கு கோவம் வருகிறது, மாறாக ஒரு பெண்ணின் உயிர் கொல்லப்பட்டது என்ற அடிப்படையில் அவர் வருந்த வில்லை, தான் சார்ந்த ஜாதி பெண் என்றால் அது உயிர் மற்றவராக இருந்தால் மயிர்!! என்பது தான் அவரின் உண்மையான முகம்...
ReplyDeleteCorrect
Deleteசாதி வெறி பேச்சு ஒரு பக்கம் இருந்தாலும் சுபவீ சமஸ்க்ரிதம் பற்றி இழிவா பேசறது கண்டிக்க தக்கது. ஏன் அந்த மொழி என்ன பாவம் செய்தது ? பிற அயல் நாட்டு மொழிகளை ஏற்றுகொள்ளும் நாம் நம் நாட்டு மொழியை ஏற்றுகொள்ள மறுக்கிறோம். அந்த மொழி மட்டும் மதமாக பார்க்கபடுகிறது. மேலும் அவர் YG அவர்களின் பள்ளியில் நடந்த சம்பவம் பற்றி பேசினார். திமுக பொருளாளர் அந்த பள்ளி முன்னால் பொய் ஆர்பாட்டம் செய்தார். அனால் அதே மாதிரி சம்பவம் பல பள்ளிகளில் நடந்த போது அவர் எங்கே போனார்? நம்ப சுபவீ எங்கே அப்பொழுது ? சாதி பற்றி பேச ஒரு குறுபபிட்ட நபர்களுகுதம் உரிமையோ? அவர் சொன்னாலும், சொல்லாவிட்டாலும் இதை வேறு சாதியினர் ஏன் இவளவு பெரிதாக பேசுகிறார்கள் ? இதை விட கேவலமான பேச்சுக்கள் எவளவோ நெறைய பேசினவர் எல்லாம் பற்றி சுபவீ பேசினாரா?
ReplyDeleteY.G.Mahendran போல சமூகத்தில் இருக்கும் celebrities அவங்க share பண்ற ஒவ்வொரு விஷயத்த மக்கள் எப்படி உன்னிப்ா கவனிப்பாங்க னு யோசிச்சு share பண்ணனும். Yaaro oru post potttaru, athula irukra content la enakku udanpaadu irukku nu epdi sollalaam. போற வாகில யாரோ ஒரு பேர் லாம் சொல்லீருகார். போலீஸ் விசாரணை இன்னும் முடியல அதுக்குள்ள இவங்களா
ReplyDeleteஎப்ப்டி ஒரு பெயர குற்றவாளி னு சொல்லலாம், என்ன ஆதாரம் இருக்கு. 2016 ல கூட சாதி வெறி பிடிச்ச ஒரு சமூகத்தில நாம வாழ்ரது மானக்கெடு... !!!
திரு. ஒய்ஜி மகேந்திரன் அவர்களை ஒசந்த ஜாதி என்று குறிப்பிடுவதன் மூலம் நீங்கள் மட்டும் ஜாதி அரசியல் செய்யவில்லையா? அறிவுகெட்டத்தனமாக பேசாதீர்கள் என்று உங்களை சொல்லிவிட்டு மன்னியங்கள் என்றால் உங்கள் மனம் வேதனைப் படாமல்தான் இருக்குமா? கட்சித் தலைவர்கள் இந்தப்பெண் உயர்வகுப்பினர் என்பதால் கண்டுக்கொள்ளவில்லை என்று சமூக வலைத்தலங்களில் அதிவேகமாக மக்கள் குமுறியவுடன்தானே தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்... அதுவும் ஏனோதானோவென்று. ரோஹித் வெமுலாஎன்ற ஒருவர் செய்துக்கொண்ட தற்கொலைக்காக காங்கிரஸ் துணைத்தலைவர் டெல்லி முதல்வர் போன்றவர்கள் வெகுண்டனரே... எங்கே போனார்கள் இன்று... உங்களைப் போன்றவர்கள் ஊடகங்களில் மத்திய அரசை விமர்சித்தீர்களே... இன்று அப்படிப் பேசாமல் ஒதுங்குவது ஏன்? கொலை நடந்த இடம் இத்தனைக்கும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ரயில் நிலையம்தானே... அங்கு நடக்கும் சம்பவங்களுக்கு ரயில்வே நிர்வாகம் உத்தரவிடாமல் மாநிலக் காவல்தறை நடவடிக்கை எடுக்க முடியாது என்பதுகூட தெரியாத அளவில் உங்கள் அரசியல் அறிவு இல்லை என்று நினைக்கிறேன். இருந்தும் நீங்களோ, திரு வீரமணி போன்றோரோ சும்மாயிருப்பது கொலை செய்யப்பட்ட பெண் பிராமண குடும்பத்தை சேர்ந்தவர் என்பதாலா அல்லது. கொலை செய்தவன் சிறுபான்மையினத்தை சேர்ந்தவன் என்ற சந்தேகம் உள்ளதாக வந்த செய்தியா என்று கேட்பதில் நியாயம் இல்லாமல் இல்லையே... வழக்கம்போல முதலிலேயே திரு கருணாநிதி, வீரமணி, ராஹூல் காந்தி, இளங்கோவன், ராமதாஸ், திருமாவளவன், சீமான் போன்றோர் கண்டனம் தெரிவித்திருந்தால் இந்த கேள்வி வந்திருக்க வேண்டிய அவசியம் இல்லையே... இப்பொழுது கூட "ஒசந்த சாதி" என்று ஆரம்பித்து உங்களது சாதிவெறியைத்தானே காண்பிக்கிறீர்கள்...
ReplyDeleteஇந்த கட்டுரையை நீங்கள் சரியா படிக்கவில்லையா?
Deleteநண்பர்களே.. நாம் இதோடு நிறுத்தி கொள்வோம். இறந்தது ஒரு பெண்.. இனி நடக்காம இருக்க என்ன செய்யலாம்னு யோசிப்போமே.. நாளைக்கு இதே மாறி நாம் தங்கைக்கோ, துணைவிக்கொ நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை ஆக்க பூர்வமாக யோசிப்போமே. .
ReplyDeleteIf u want abolish caste then pass a law and abolish it right from School application form..... Abolish reservation and fight in merit.... Reserve seats based on poverty line and not by caste!!
ReplyDeleteஇடஒதுக்கீடு கொடுத்து உசந்த சாதியாக ஆக்கியவர்கள் நீங்கள்தானே ஐயா?
ReplyDeleteஎன்ன ஒரு ஆழ்ந்த அரசியல் பார்வை..எனக்கு அப்படியே மெய் சிலிர்த்து விட்டது போங்க!!!
Deleteநாங்க ஒசந்த சாதி இல்லைன்னா இட ஒதுக்கீடு தாருங்கள். எங்களை கல்லறைக்கு அனுப்ம வேண்டாம்
ReplyDeleteதற்போது ஆரியத்திற்கு எவ்வளவு வீரியம் உண்டு என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
ReplyDeleteபார்வையிலே நோய் கொடுத்தாகிவிட்டது ; பக்கம் வந்து தீர்க்கப்படவில்லை.
ReplyDeleteஅந்த நேரத்தில் நான் இருக்கும் நாட்டுக்கு இவர் வர இருந்த போது நான் எழுதிய பாடல் ஒன்று.
ReplyDeleteஒசந்த சாதி சாமி ஒன்று
ஊர் ஊரா வருகுது
ஜாதி மத நெருப்பை ஏற்றி
குளிர் காய துடிக்குது.
....
அடுத்த வரிகளை இங்கு வெளியிட வேண்டாமென்று நினைக்கிறேன்.