தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Sunday 9 October 2016

நன்றி கெட்ட உலகமடா!


நேற்று எங்கள் அமைப்பு சார்ந்த கட்செவி (வாட்ஸ் அப்) ஊடகக் குழுவில் வைகோவைக் கடுமையாகச் சாடி ஒரு தோழர் தன் கருத்தைப் பதிவிட்டபோது அவரை நான் கண்டித்தேன். 'நியாயமான கோபத்தைக் கூட நாம் கண்ணியமாகத்தான் பதிவிட வேண்டும்' என்று எழுதினேன்.

ஆனால் வைகோவை அவரது மனசாட்சி கண்டிக்கிறதா என்று தெரியவில்லை. கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது, முதுகுத்தண்டு அறுவை சிகிச்சைக்காகச் சென்னை இராமச்சந்திரா மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.  அப்போது ஜெயலலிதாவும், இதே வைகோவும், சீமானும் என்னென்னவெல்லாம் பேசினார்கள் என்பதை இன்று அனைத்துச் சமூக வலைத்  தளங்களும் வெளியிட்டுள்ளன.



அன்றைய தினம் வைகோ, "காவிரியில் நீர் வராதா என்று காய்ந்த  வயிறோடு காத்திருக்கிறான் விவசாயி. இவர் பணக்காரர்கள் சிகிச்சையெடுக்கும் பணம் பெருத்தோர்  மருத்துவமனையில் படுத்திருக்கிறார்" என்று கலைஞரை வசை பாடினார்.  சீமானோ , "அரசு மருத்துவமனைகளில் நிற்க வழியில்லாது விழுந்து கிடக்கிறான் தமிழன், இவர் கோடீஸ்வரர்கள் பார்க்கும் மருத்துவமனையில் படுத்துகிட்டு நல்லாயிருக்காருன்னு செய்தி வருது. நல்லாயிருந்தா போய் வேலைய  பாருங்க, எதுக்கு இந்த நாடகம்?" என்று தன் வெறுப்பை உமிழ்ந்தார்.

இராமச்சந்திரா மருத்துவமனை பணம் பெருத்தோரின் மருத்துவமனை என்பதும், அப்பல்லோ மருத்துவமனை அன்றாடங் காய்ச்சிகளின் மருத்துவமனை என்பதும்  நமக்குத் தெரியாமல் போய்விட்டது. அன்றைக்குக்  காவிரியில் நீர் வராமல் விவசாயி வயிறு காய்ந்து கிடந்ததும்,  இன்று காவிரியில் நீர் பெருக்கோடி விவசாயி வயிறு வீங்கி நிற்பதும் வைகோவிற்குத் தெரிகிறது, நமக்குத் தெரியவில்லை.

இன்று லண்டனிலிருந்து மருத்துவர் ரிச்சர்ட் பீலே இரண்டு முறை வந்து போனதை அறிந்து மனம் நெகிழ்ந்து போகிறார் வைகோ. அந்த மருத்துவர் தனக்கு அவருடைய முகவரி அட்டையைக் கொடுத்ததைச் சொல்லி சொல்லி மகிழ்ந்து போகிறார்.  (ஒரு விசிட்டிங் கார்டைப் பார்த்து இவ்வளவு மகிழ்ந்த ஓர் அரசியல் தலைவர் இவராகத்தான் இருக்க முடியும்).. ஆனால் அன்று தன்னை அரசியலில் வளர்த்துவிட்ட தலைவர் உடல் நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது கேலி பேசினார்.

கவிஞர் கண்ணதாசனை வைகோவிற்கு மிகவும் பிடிக்கும். "நன்றி கெட்ட மாந்தரடா, நானறிந்த பாடமடா" என்று கவிஞர் எழுதிய வரிகளும் அவருக்குப்  பிடிக்கத்தானே செய்திருக்கும்!


26 comments:

  1. திராவிட இயக்க அடிப்படை சிந்தனைகள் சிறிதும் இல்லாமல் ஒரு சராசரி அரசியல்வாதி போல நடந்துகொண்டிருக்கும் வைகோவை கலைஞர் வளர்த்துவிட்டார் என்று சொல்வது கலைஞருக்கு அவமானம்..

    ReplyDelete
    Replies
    1. இன்றைய நிலையில், அதிமுக திமுக'விலிருந்து பிறந்த கட்சி என்று சொல்வதும் திமுக'விற்கு இழுக்குதான். ஆனாலும் உண்மை அதுதானே? பாம்பு கடித்ததற்கு பாலூற்றியவனை குற்றம் கூறக்கூடாது.

      Delete
  2. periyaarin ovoru vaarthaium indru nadaimurail irukiradhe aiyyaa....."manidhanidam nandriyai edhirpaarpadhu arivilladhathaname aagum".

    ReplyDelete
  3. வைகோ, சீமான் இருவரும் தீவிர கலைஞர் ஆதரவாளர்களாக ஒருகாலத்தில் இருந்தவர்கள். பிறகு கலைஞரால் பாதிக்கப்பட்டு எதிரியாக மாறியவர்கள். ஆனால் ஜெயாவை பொறுத்தவரை அவர்களுக்கு பெரிய தொடர்பு இருந்ததில்லை. ஜெயா யாருக்கும் துரோகம் செய்ததும் இல்லை.

    ReplyDelete
    Replies
    1. அடடே, அப்படியா...???

      Delete
    2. நீங்க அவாளாச்சே அப்படித்தான் பேசுவேள்.ஜெயா யாருக்கும் துரோகம் இழைத்ததில்லையா? KKSSR, திருநாவுக்கரசர் யார் என்று ஜெயாவிடம் கேளுங்கள்

      Delete
    3. இதையேதான் அந்த டெய்லரும் (திருநாவுக்கரசு, வாஜ்பாய்...) சொன்னான்

      Delete
  4. ஸ்ரீராம் ஐயர் தன் எல்லா கருத்திலும் பார்ப்பனிய நஞ்சை கக்குவார் போல,வைகோவுக்கும்,சீமானுக்கும் பிரபலமாகும் வெறியும் பணப் பித்தும் பிடித்து ஆட்டுவதால் அவர்களால் தான் இருந்த இடத்திற்கும்,இருக்கும் இடத்திற்கும் நேர்மையாக இருக்கமுடியவில்லை என்பதுதான் உண்மை. பார்ப்பனியம் என்கிற தத்துவத்தின் மறு மறைமுக பொருள் நேர்மையற்றது என்பது வரலாற்றில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.ஸ்ரீராம் ஐயர் போனறோர் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. "பார்ப்பனிய நஞ்சை" - அய்யா சுபவீ அவர்களை மகிழ்விக்க இப்படி பயன் படுத்துகிறீர்கள் என்பது புரிகிறது. உங்களை போன்றவர்கள் இப்படி பேசுவீர்கள் என்று தெரிந்துதான் என் சாதியை பயன்படுத்தியுள்ளேன். நான் சொன்னதற்கு அறிவுபூர்வமாக பதில் தராமல் பார்ப்பனியம்...கோர்பனியம்..அது இதுனு take diversion வேலைய செய்யாதீங்க. சீமான் ஈழத்தமிழர் பிரச்சனையால் கலைஞரை எதிர்கத்தொடங்கினார். வைகோ கலைஞரால் வெளியேற்றப்பட்டதால் அவரை எதிர்கத்தொடங்கினார். இது தான் மேட்டர். அவர்கள் எதிர்பதில் நியாயம் இருக்கிறது. இதற்கு நேராக பதில் இருந்தா சொல்லுங்க. அது விட்டுட்டு வெட்டித்தனமா எப்பவும் போடுற மொக்கய போடாதீங்க.

      Delete
    2. அய்யாவை அப்படி மகிழ்விக்கவேண்டிய அவசியமில்லை. ஜெயேந்திரர் விடயத்தில் ஆயிரம் கருத்துவேறுபாடு இருந்தாலும்,ஜெயலலிதாவை விடமால் ஆதரிப்பது உங்களைப் போன்ற பார்ப்பனர்களின் சாதிப்பாசம் என்பதன்றி வேறல்ல. அந்த ஆதரவிற்காக உங்களுக்கு சம்பந்தமே இல்லாத கோபால்சாமியையும் சைமனையும்கூட மேற்கண்டவாறு நியாயப்படுத்துவீர்கள்.அவ்வளவுதான் விஷயம் பார்ப்பனரே!

      கோபால்சாமி 1990ல் ஒரு கட்சியில் இருந்துகொண்டு அதன் தலைவருக்கே தெரியாமல் தன் சொந்த அரசியல் லாபத்திற்காக கள்ளத்தோனி ஏறி ஈழம் சென்றார். அதனால் அன்றைய அரசியல் சூழலில் கட்சிக்கு பலத்த நெருக்கடி.எனவே அவர் நீக்கப்பட்டது இயல்புதான்(ஜெயலலிதா விளம்பரப் பதாகையில் தன் பெயரை சிறிதாக போட்டதற்கெல்லாம் ஒருவரை நீக்கிய வரலாறு உண்டு).

      'நாம் டம்ளர்' சைமன் பொருத்தவரை,மே 2009ல் அண்ணன் பிரபாகரன் சாகும்வரை சினிமா படம் எடுத்துவிட்டு 'திடீரென' புயலாக கிளம்பி தீவிர அரசியலுக்கு வந்தார். தலைவர்ர பிரபாகரனுக்கும் இவருக்கும் எந்த தொடர்பும் இல்லை(பாரதிராஜா உள்ளிட்ட கலைஞர்களுடன் சென்றபோது 20வினாடிகள் புகைப்படம் எடுத்ததைத் தவிர). ஆனால் இன்று அவர் இல்லை என்பதை பயன்படுத்தி நாளும் 'அண்ணன் அதைச் சொன்னார்,இதைச் சொன்னார்' என்று பொய்யுரைத்து ஈழத்தமிழர்களிடம் பிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறார் சைமன். சரி போகட்டும் இவர்கள் இருவரும் தனிக்கட்சி ஆரம்பித்து காசுப் பார்க்க கலைஞரை ஒரு சாக்காக பயன்படுத்திக்கொண்டனர். அது அவர்கள் அரசியல்.

      ஆனால் இன்றுவரை கலைஞரை மட்டும் எதிர்க்கும் மறைமுகப் கோழைத்தனமான அரசியலை ஜெவுக்காக இவர்கள் செய்வதை அரசியல் அறிந்த யாவரும் அறிவர். இவர்கள் போராடுவது 'நியாயம்' என்ற பருப்பு இங்கு வேகாது.

      Delete
  5. வியாபாரி கோபால்சாமி வேறு எப்படியிருப்பார் ?

    ReplyDelete
  6. Leaders like Jaya,Kalaignar,Marian etc preferred hospital like Apollo,Ramachandra where there is no caste based reservation for recruitment for jobs where as in Govt hospital where patients where treated badly both behaviour wise and treatment wise and there is huge caste based reservation during recruitment of jobs that is why they don't have any faith in their quality and treatment!.

    ReplyDelete
    Replies
    1. Brother reservation has nothing to do with the treatment quality in Govt. hospital. Tamil Nadu is very good in overall medical services. Our TN govt. health insurance is one of "the best" in India. If enough funds are allocated in the budget for improving the infrastructure of govt.hospitals the situation will improve. But currently we don't have sufficient funds. Moreover, hospitals like apollo can provide best quality treatment because of their extremely high charges. You can't expect the same in govt. hospital. Even I don't get reservation. But that doesn't have anything to do with the quality, seriously. Till MBC, the cut-off difference varies only by 0.25-1. SC gap also closing down every year. So there is no compromise in quality.

      Delete
  7. வணக்கம்.நலம் பெற இயற்கை அன்னையை யாசிப்பதும்,பொறுப்பு முதல்வர் தேவையில்லை என வாதிப்பதும் *மனிதன் மாறிவிட்டான்,மரத்தில் ஏறிவிட்டான்*என்று ஒலிக்கிறது.

    ReplyDelete
  8. Mr. Kannan may be using food, dress, houses etc made by persons with no caste based reservation.

    ReplyDelete
  9. அதிமுக காரன் விமர்சனத்தை திமுக காரன் மாதிரி எடுத்துக் கொள்ள மாட்டான் கண்டதை கொண்டு அடிப்பான் இந்த சூட்சுமம் இரண்டு பேருக்ககும் நல்லா தெரியும்
    அதிமுக வ எதிர்க்கிற ஒரே கட்சி திமுக மட்டுமே அதனால் தான் தமிழ் நாட்டடில் உள்ள சூரர்கள்! அதிமுக வ திட்டணும்னா திமுக வ சேத்து திட்டுவாங்க பின்ன அதிமுக வ மட்டும் வசை பாடினா பாத பூஜையோ அல்லது வேறு எந்த பூஜையோ கிடைச்சா யார் வாங்குறது

    ReplyDelete
  10. கலைஞரை எதிர்ப்பவர்களுக்கு நியாயம் இருக்கிறதா?என்ன ஒரு கண்டுபிடிப்பு ஸ்ரீராம் ஐயருது! கலைஞரை தொடர்ந்து பார்ப்பனியம் எதிர்த்துக் கொண்டேயிருக்கிறது. அதனால் பார்ப்பனியத்திடம் நியாயம் இருக்கிறதா ஸ்ரீராம் ஐயர்? முருகனையும்,சிவனையும் முப்பாட்டன் என்று பார்ப்பனியத்திற்கு காவடி தூக்கும் சீமான் போன்றோர் உங்களுக்குவேண்டுமானால் நியாயவாதியாக தெரியலாம்! எங்களைப்போன்ற சமூக அக்கறை உள்ள பெரியாரியலாளர்களுக்கு சீமான்,வைகோ,ஜெயா போனறோர் தமிழின எதிரிகளே.

    ReplyDelete
  11. சீமான்,வைகோ போனறோர் ஜெயலலிதாவின் ஸ்லீப்பர்செல்களே.

    ReplyDelete
    Replies
    1. Not only Sleeper cells but also old teared slippers of jaya

      Delete
  12. வைகோ தி.மு.கவிலிருந்து கலைஞரால் வெளியேற்றப்படவில்லை.அவர்தான் கலைஞரை குற்றம் சுமத்திவிட்டு ஓடினார்.

    சீமான் ஈழத் தமிழர் பிரச்சனையில் கலைஞரை எதிர்க்கவில்லை. மாறாக கலைஞரை எதிர்க்கவே ஈழத் தமிழர் பிரச்சினையை பேசுகிறார்.

    ஆரிய நஞ்சாய் உண்மைகளை புரட்டிப்போடும் சிரீராம் பார்ப்பனரை வன்மையாக கண்டிக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. This stiram bra him in fellows and other tail desiya people will blindly support the people who oppose kalaizer and periyar

      Delete
  13. பார்பனீயத்தின் ஆளுங்கட்சி ஜால்ரா சத்தம் எப்போதும் பிரசித்திப் பெற்றதுதான். எப்போதும் அதை மூடி மறைக்காமல் வீரமாக சொம்பு தூக்குவதில் பார்பனர்களை அடித்துக்கொள்ள முடியாது. அம்மணம்தான் எங்களது உடை, அடிமைத்தனம்தான் எங்களது நடை என்று பார்ப்பன சிரீராம்கள் தனது இலட்சியத்தை எப்போதும் மறைப்பதில்லை. வெட்கப்படுவதுமில்லை.

    உண்மையற்ற பொய் மூட்டைகளை அள்ளி வீச தயங்காத ஆரியக் கூட்டம்.

    ReplyDelete
  14. These 2 Eezham businessmen will talk only this. What else can we expect from these Eezham businessmen.

    ReplyDelete
  15. அய்யா வணக்கம் பகுத்தறிவு பகலவனின் புதல்வர்களே தனிஒருவனை வசை பாட வேண்டாம் . பெரியாரின் கருத்துக்களை பரப்புங்கள் . மக்களுக்கு பகுத்தறிவு புகட்டுங்கள் .ஏனெனில் RSS ,இந்து மக்கள் கட்சி போன்றவை விழாக்கள் கொண்டாட மக்களுக்கு தொகை வழங்குகிறது. ஆனால் நீங்கள் இங்கே வீணாக விவாதம் செய்கிறீர்கள்.கலைஞர் ஏன் விழாக்கள்கொண்டாட வாழ்த்துக்கள் தெரிவிக்கிறார். ஸ்டாலின் ஏன் கோவிலுக்குசெல்கிறார் சற்று சிந்தியுங்கள். நாம் மூடநம்பிக்கைகளை அகற்றாமல் நம் சிந்தனைகளை அரசியல் கட்சி பக்கம் திருப்ப வேண்டாம்

    ReplyDelete
  16. Subramanyaswamy is far far better than these eezham business opportun8sts

    ReplyDelete