அன்புள்ள திரு பாண்டே,
வணக்கம். இன்று (17.09.2016) மாலை தந்தி
தொலைக்காட்சியின் மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் பங்கேற்க என்னையும் அழைத்தமைக்கு
முதலில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அந்நிகழ்ச்சி இன்னும்
ஒளிபரப்பப்படவில்லை என்றாலும், வெளி அரங்கில், பொது மக்கள் முன்னிலையில்தான்
நடைபெற்றது என்பதால், அது குறித்துப் பேசுவதில் பிழை ஏதும் இல்லை என்று கருதி
இத்திறந்த மடலை எழுதுகின்றேன்.
நீங்கள் (அதாவது தொலைக்காட்சியினர்)
எங்கள் அரசியல் நிலைப்பாடுகளுக்கு ஊறு விளைவிக்க மாட்டீர்கள் என்று நம்பியும்,
உங்களை மதித்தும்தான் நிகழ்ச்சிகளில் நாங்கள் பங்கேற்கின்றோம். ஆனால் இன்று
என்னுடைய நம்பிக்கை பொய்த்துப் போனது என்பதை வருத்தத்துடன் தெரிவிக்க
வேண்டியுள்ளது.
நாங்கள் அனைவரும் பேசி முடித்தவுடன்
இறுதியில் பேசிய நீங்கள் எல்லா அரசியல் கட்சிகளையும் குறை சொல்லியும், கேலி
செய்தும் பேசிய விதம் ஏற்கத்தக்கதன்று. அதன்பின் நாங்கள் யாரும் விடை சொல்ல இயலாத
நிலையில், புதுப் புதுக் குற்றச்சாற்றுகளை நீங்கள் முன்வைப்பது என்ன நியாயம்? இடையிடையே நீங்கள் குறுக்கிடுவதை நான்
தவறு என்று கூறவில்லை. அப்போது எங்களால் விடை கூற முடியும். அது நிகழ்ச்சியைச்
சுவை குறையாமல் நடத்திச் செல்லவும் உதவும். ஆனால் இறுதியில் எல்லாவற்றையும்
அடுக்கிக் கொண்டே போவது எப்படிச் சரியாகும்?
"நாடு பற்றி எரிந்து
கொண்டிருக்கிறது. தமிழகத்தின் இருபெரும் கட்சிகளோ, உள்ளாட்சித் தேர்தலுக்கு மனு
வாங்கிக் கொண்டுள்ளனர்" என்று கூறி மக்களிடம் ஒரு பெரிய 'நியாயஸ்தன்"
பட்டதைப் பெற்றுக் கொள்கின்றீர்கள். சரி, நாடு பற்றி எரிந்து கொண்டிருக்கும் போது
, தந்தி தொலைகாட்சி எல்லா கேளிக்கை நிகழ்வுகளையும் நிறுத்தி விட்டதா? 24 மணி
நேரமும் காவிரி நதி நீர்ச் சிக்கல் பற்றி மட்டும்தான் பேசுகின்றதா? ஒரு கட்சி
என்று இருந்தால், பல வேலைகளும் இருக்கத்தான் செய்யும். அவற்றையும் பார்க்கத்தான்
வேண்டும்.
இரு அணிகளிலும் கூறப்பட்ட செய்திகளைத்
தொகுத்துச் சொல்லி, நல்லதொரு சிந்தனையோடு
முடிப்பதுதான் வந்தவர்களுக்கு நியாயம் செய்வதாய் இருக்க முடியும். இறுதி பேச்சில்
திரு துரை முருகன் கூறியதாகச்
சில செய்திகளை, குற்றச்சாட்டுகளாய்க் கூறுகின்றீர்கள். அவற்றுக்கெல்லாம் எந்த
மறுப்பும் சொல்ல இடமில்லாமல் நாங்கள் கேட்டுக் கொண்டிருந்தால், நாங்கள் நேசிக்கும்
கட்சித் தொண்டர்கள் எங்களைப் பற்றி என்ன
நினைப்பார்கள்?
உங்களின் திறமையை, படிப்பை நான் குறைத்து
மதிப்பிடவில்லை. இப்போதும் அதே நட்புடன்தான்
இம்மடலை எழுதுகின்றேன். எனினும், ஒன்றை உங்களுக்குத் சொல்லியாக வேண்டும். உங்களின் அழைப்பை ஏற்று.உங்களின்
நிகழ்வுகளில் நாங்கள் பங்கேற்பது, ஊடகங்களின் மூலம் அவரவர் நிலைப்பாட்டை
மக்களுக்கு எடுத்துச் சொல்ல வாய்ப்பாக இருக்குமே என்ற எண்ணத்தில்தானே தவிர, உங்கள் முன் கைகட்டி நின்று
உங்களின் அறிவுரைகளைப் பெற்றுத் திரும்புவதற்காக அன்று!
எங்களை எவ்வளவு வேண்டுமானாலும்
விமர்சியுங்கள், எவ்வளவு இடக்கு மடக்காக வேண்டுமானாலும் கேள்வி கேளுங்கள். அது
உங்களின் தொழிலின் பாற்பட்டது. ஆனால் விருந்தினர்கள் பேசும் நேரம் முடிந்து
போனபிறகு, புதிய குற்றச்சாற்றுகளைக் கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்யாதீர்கள். அது
நேர்மையாகாது!
ஆமாம் அய்யா .. நான் அதை ஒப்புக்கொள்கிறேன். நேற்று நான் பார்த்தேன்.
ReplyDeleteமிகவும் சரியாக கேள்வி... இதற்கு பாண்டே பதில் சொல்லையே ஆகவேண்டும்...
ReplyDeleteஎங்கள் சுப.வீ அய்யா பேசுகையில் பாண்டேயின் எந்தக் கேள்விகளும் எடுப்படுவதில்லை(இரண்டு 'கேள்விக்கு என்ன பதில்' நேர்காணலையும் பார்க்கவும்). அதனால்தானோ என்னவோ கோழையைப் போல பாண்டே, எங்கள் பேராசிரியர் பேசிமுடித்ததும் வாய்வீரம் காட்டுகிறார்!
ReplyDelete-கணேஷ் பாபு,சட்டக் கல்லூரி
உண்மைதான் ஐயா
ReplyDeleteவிருந்தினர்கள் பேசும் நேரம் முடிந்து போனபிறகு, புதிய குற்றச்சாற்றுகளைக் கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்வது நேர்மையாகாது!
அய்யா, இவை போன்ற நிகழ்வுகள் எல்லாம் பாண்டே தன்னை சோவின் வாரிசாக நிலை நிறுத்திக் கொள்ள செய்யும் ஏற்பாடுகளே. தெரிந்தே நாமும் போய் இவருக்கெல்லாம் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமா என்ன?
ReplyDeleteI requested to nithya and thendral. please update upcoming events of Subavee sir...
ReplyDeleteஇந்த மடல் அவசியமானதா என்று கூட நம்மில் சிலருக்கு தோன்றலாம். அனால் இதை பதிவு செய்ய வேண்டியது அவசியம். மேலும்இனிமேல் இதனை ஒருநிகழ்ச்சிக்கு முன்னதாக preconditional acceptance ஆக ஆக்க வேண்டும். மீறினால் நம் வலைத்தளத்தில் இதற்கான விளக்கத்தையும், அடுத்து வரும் நிகழ்ச்சிகலை மறுக்கவும் வேண்டும்
ReplyDeleteபதில் வேண்டும் பாண்டே
ReplyDelete///"நாடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தின் இருபெரும் கட்சிகளோ, உள்ளாட்சித் தேர்தலுக்கு மனு வாங்கிக் கொண்டுள்ளனர்"///
ReplyDeleteஅதிமுக தவறு செய்யும் போது எல்லாம் திமுகவயும் சேர்த்து சொல்வது இவரது வாடிக்கை....
இன்றல்ல பல விவாதங்களில் திரு. பாண்டேவின் முடிவுரை இப்படியாகத் தான் இருக்கிறது...
ReplyDeleteஇவருக்கு தக்க பதில் தந்தமைக்கு மகிழ்ச்சி...
உங்கள் கேள்விகளுக்கு ஒரு போதும் அவர் நேர்மையான பதிலை சொன்னதில்லை எந்த நிகழ்விலும்...
ReplyDeleteஉங்கள் கேள்விகளுக்கு ஒரு போதும் அவர் நேர்மையான பதிலை சொன்னதில்லை எந்த நிகழ்விலும்...
ReplyDelete"அதிமுக தவறு செய்யும் போது எல்லாம் திமுகவயும் சேர்த்து சொல்வது இவரது வாடிக்கை...."
ReplyDeleteஎன்ற நண்பரின் கருத்து சரியானது. இன்றைய நிலை இது தான். திமுக வை அழிக்க நினைக்கும் சக்திகளின் உள் நோக்கம்.
*அ. இராமமூர்த்தி*
தந்தி டிவியின் செயல் "அவன் கிடக்கிறான் குடிகாரன் பூப்போட்ட கிளாசுல எனக்கு போடு ரெண்டு அவுன்ஸ்" என்பது போலதான்
ReplyDeleteபேப்பர்ல அரசாங்க விளம்பரம் தர அதிமுக மேல மட்டும் குற்றம் சொன்னா பொழப்பு நடக்குமா அதனால் துணைக்கு திமுக வ சேத்துதுபாங்க
மடல்..
ReplyDeleteகடிதோச்சி மெல்ல எறிக...
நெற்றியடி
Antha kutrathiyum solli, neengal atharku pathil solli iruthal innum sirappaga irrukum
ReplyDeleteபாம்புகளிடம்கூட நாகரிகம் பாராட்டும் அண்ணன் எங்க அண்ணன்
ReplyDeleteUnmai ayya
ReplyDeleteYou need to wait till the program is telecasted. He has the right to express his own views just like 6 other people in the show. This is not an ADMK vs DMK debate. Only in debate equal chance need to be given. //உங்களின் அறிவுரைகளைப் பெற்றுத் திரும்புவதற்காக அன்று// This statement is wrong. He never advises the person. As a voter anyone has the right to question the political parties or even advice them. It is not a personal advice.
ReplyDeleteபாண்டே நேர்மையானவர் என்று எண்ணியது உங்கள் தவறு.
ReplyDeleteமதிப்பிற்குரிய சுப.வீ. அய்யா அவர்களுக்கு வணக்கம். தங்களின் மடல் மிகவும் அறுமையாக உள்ளது. நடுநிலை என்பது கிஞ்சிற்றும் இல்லாத பணத்துக்காக வருமானம் ஒன்றே குறிக்கோள் என்று விபச்சார பாணியில் ஊடகம் செய்யும் தந்தி டி.வி யில் கலந்து கொண்டதே நாம் செய்யும் பிழையாகும். விபச்சார ஊடகத்திடம் நாம் அறம் எதிர்பார்ப்பது நம் தவறு அய்யா, இது போன்ற ஊடகங்களை புறக்கணிப்போம்.A.S முஹம்மது அலி
ReplyDelete.கருப்புச்சட்டைக்கு எதிராகவும் காக்கி (அரை)கால்சட்டைக்குத் தூணாகவும் இருக்கும் "கிராப்வைத்த சோ" தான் இந்த பாண்டே. இந்த இழிகுணத்தைத்தவிற வேறென்ன எதிர்பார்க்க முடியும் இவரிடம்?
ReplyDeleteசுப.வீ அய்யாவிடம் நேரடி கேள்வி கேட்டால் அதற்கு தக்க பதிலடியான பதில் கிடைத்துவிடும் ஆகவே நிகழ்ச்சி முடிந்தபிறகு இடைச்செருகள்களை சேர்த்துத்து பகுத்தறிவு கொள்கையை எவ்விதத்திலேனும் மக்கள் மத்தியில் இருட்டடிப்பு செய்ய என்கிற பிரதான நோக்கத்தின் வெளிப்பாடுதான் இந்த ஊடக நேர்மையற்ற செயல்
ReplyDeletePande TV is not a Television and it is the TELEVISHAM
ReplyDeleteஆதித்தன் அய்யா அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட தினத்தந்தி குழுமம் இவ்வளவு கேவலமான நிலைக்கு விலை போய்விட்டது வேதனைதான். அய்யா சுபவீ அருள்மொழி போன்ற அறிவியலாளர்கள் தந்தி டிவியின் நிகழ்வுக்களில் பங்கு கொள்வதால்தான் அவற்றை பலர் பார்க்கிறார்கள். முற்போக்காளர்கள் எல்லாரும் ஒன்றாக கூடி தந்தி டிவியின் நிகழ்வுகளை புறக்கணிக்க வேண்டும் . குறைந்த பட்சம் ரங்கராஜ் பாண்டேயின் ஷோக்களையாவது பகிஷ்காரம் செய்யவேண்டும். தமிழர்களுக்கோ தமிழ்நாட்டுக்கோ எந்தவிதத்திலும் தொடர்பில்லாத ஒரு அச்சு அசல் (பீஹார்)RSS பார்பனருக்கு இடம் கொடுப்பது ஒட்டகத்துக்கு கூடாரத்தில் இடம் கொடுப்பது போலாகும்.
ReplyDeleteI endorse your opinion
DeleteMrPANDEA SHOULD REPLY TO THIS QUTION
ReplyDeleteஇது அவர் வந்த வழி...அவரை மாற்ற முடியாது...அவர் திருந்தப்போவதில்லை....
ReplyDeleteஇவருக்கு(பாண்டே)எவ்வளவு வாங்கினாலும் புத்தி வராதோ? அவன் வந்த வழி அப்படி....
ReplyDeleteHighly fraudulent. ThanthiTV should change itself. It has already started loosing the credibility.it is sad that it had roots in self-respect movement.
ReplyDeleteசன் டிவி ஆரம்பித்த காலத்தில் ரபி பெர்னாட் இம்மாதிரி அரசியல் களத்தில் ஜொலித்தார். பிறகு அவர் ஜெயா டிவியில் ஐக்கியமானார். பாண்டேவுக்கு கூட ஜெயா டிவி தான் செட் ஆகும். முதுகெலும்பில்லாத தந்தி டிவியின் தலைமை இதனை ஏற்க மறுக்கிறது.
ReplyDeleteஇன்று தமிழக காட்சி ஊடகங்களில் - அதாவது கட்சி சார்பற்ற - புதிய தலைமுறை , நியூஸ் 7 போன்றவற்றில் - நெறியாளராக இருப்பவர்களில் அனேகமாக அனைவருமே இடதுசாரி , பெரியாரிய மற்றும் திராவிட சிந்தனைகளின் அனுதாபிகள் தான்.
ReplyDeleteஇவர்கள் நடத்தும் விவாதங்களில் எல்லாம் மொத்தம் 4 பேர் பங்கேற்றால்அதில் மூவர் மேற்சொன்ன சிந்தனையாளர்களாகவே இருப்பார்கள் . தொலைக்காட்சி நெறியாளர்ளும் விவாதங்களை முடிக்கும்போது இவர்களை ஒட்டியே பேசி முடிப்பாரகள் . நீங்கள் இதுவரை இந்த நெறியாளர்கள் மீது குற்றம் சாட்டியதில்லை. ஏனெனில் இவர்கள் உங்கள் எதிர் அணிக்கு பாதகமாகத்தான் கருத்து சொல்லி முடிக்கிறார்கள்.
எனவே மாற்று சிந்தனைகளுக்கும் சம வாய்ப்பு தரும் பாண்டே அவர்களை உங்களுக்கு பிடிக்காமல் போவதில் வியப்பு ஒன்றும் எல்லை. போதாத குறைக்கு பாண்டே தான் பேசும் விஷயங்களுக்கும் ஆதாரங்களையும் வேறு அள்ளி வீசுகிறார். அவரை நீங்கள் எப்படி எதிர்க்காமல் இருக்க முடியும்.
ஒரே ஒரு விஷயத்தை மட்டும் உங்களுக்கு நினைவு படுத்துகிறேன். சட்ட மன்ற தேர்தல் கணிப்புகள் நியூஸ் 7 சேனலில் திமுகவுக்கு ஆதரவாக வெளியிடப்பட்ட பொது அது நடுநிலமையான கருத்து என்றும், தந்தி டிவி அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்பதை ஒரு தலைபட்சமான கருத்து என்றும் பெருவாரியாக விமர்சனம் செய்யப்பட்டது.
ஆனால் தேர்தல் முடிவுகள் பாண்டேவின் தந்தி டிவி கணிப்பு மிகச்சரியானது என்று நிரூபித்து விட்டது உங்களுக்கு மறந்திருக்காது என்று நினைக்கிறேன்.
100% உண்மை
Deleteதல சூப்பரா சொன்ன தல.
Deleteபாண்டே ரசிகர் மன்றம் சார்பாக பாராட்டுக்கள்.
ஹலோ மிஸ்டர் பெயர் வெளியிடாமல் நீங்கள் கருத்து தெரிவிப்பதில் தெரிகிறது உங்கள் நல்லெண்ணம்.. பாண்டே எங்கே நடுநிலையோடு பேசுகிறான்.? என்ன ஆதாரத்துடன் பேசுகிறான்.? முழுக்க பார்ப்பனீய தந்திரங்களுடன் வலம் வரும் அவன் நடுநிலையோடு வாதததை வைக்கிறான் என்பது பொய் அல்லவா.. ஒரு அறிவார்ந்த மனிதரை கேள்வி கேட்டு பதில் சொல்ல அனுமதிக்க வேண்டும்.. இவன் கேள்விகளை மட்டுமே கேட்டுக் கொண்டிருப்பானாம், இதுல இந்த பண்ணாடைக்கு நடுநிலைவாதி என்று பட்டம் கொடுக்க ஒரு நாதாரிக் கூட்டம்...
Deleteபார்ப்பனீயத்திற்கு காவடி தூக்கும் பாண்டே போன்றோர்களை நடுநிலைவாதிகள் என்று கூறி நடுநிலைவாதிகளை அவமானப்படுத்தாதீர்கள்.. பாண்டே என்னுடன் விவாதத்திற்கு தயாரா.?
Deleteநீங்கள் தந்தி டிவி போன்ற ஊடகங்களை தவிர்த்துவிட்டு நம் கலைஞர் தொலைக்காட்சியில் மட்டும் உரையாற்றலாம் அய்யா.
ReplyDeletepandey's view is only suppressing Dravidian tamil peoples. His motive reveals that "what they thought we should follow" style. Over dominating, brahminsm, one sided.
ReplyDeleteஅருமையான தேவையான கடிதம். நேர்மையான உங்கள் பதிவு. ஒரு நெறியாளராக , அவ்ர் செய்த தவறை மிகவும் நாகரிகமாக எழுதி இருக்கும் பெருந்தன்மை. மகிழ்ச்சி அய்யா.
ReplyDeleteWe should boycott thandhi tv esp pander and his makeshift hariharan program. That is the only way teach lesson to thandhi TV management and we should take propaganda to boycott than hi tv
ReplyDeleteDear Sp.V. Sir,
ReplyDeleteIt is really nice to highlight the mistake of Mr. Pandey (Thanthi TV) through this open letter - politely - as usual.
Dear all,
Mr. Pandey wouldn't have replied in writing to this Open Letter or as "Comment". But he replied indirectly by not uploading the video in youtube.com (Search for "17/09/2016 makkal mandram thanthi tv"). Only Promo 1 and Promo 2 videos are available there.
anbudan,
Viru
Panjdey has to Change...
ReplyDelete