தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Monday, 10 October 2016

சுயமரியாதை - 28

பார்ப்பனர் அல்லாதோர் ஆட்சி! 


பார்ப்பனர் அல்லாத தமிழ்ச் சமூகத்தைக் கல்வியிலும், பிற துறைகளிலும்  உயர்த்துவதற்கு நல்லாட்சி அமைய வேண்டும் என்று பெரியார் கருதினார். ஆயிரம் ஆண்டுகளாகக் கல்வி மறுக்கப்பட்ட சமூகம் கல்வியால்தான் மேம்பாடு அடைய முடியும் என்பது அவரின் கருத்தாக இருந்தது. அதே நேரத்தில் தானோ, தன் கட்சியோ நேரடியாக ஆட்சிக்கு வருவதில் அவருக்கு உடன்பாடில்லை.


அதனால்தான் ஆட்சியமைக்கத் தன்னைத் தேடி வந்த இரண்டு வாய்ப்புகளை அவர் வேண்டாமென்று மறுத்தார்.  சென்னைத் தலை மாகாண ஆளுநராக இருந்த ஆர்தர் ஜேம்ஸ் ஹோப் ஆட்சி அமைக்குமாறு பெரியாரை நேரடியாகவே அழைத்தார். பெரியார் மறுத்துவிட்டார். ராஜாஜியே ஒரு முறை, நீங்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள், நானும் இன்னும் இரண்டு மூன்று பேரும் அமைச்சகர்களாக இருக்கிறோம் என்று 1937இல் சொன்னபோதும் அதனை மறுத்துவிட்டார்.  பிறகுதான் ராஜாஜி அந்தப் பொறுப்பை ஏற்றார்.

இவ்வாறு தேடிவந்த வாய்ப்புகளை ஏன் மறுத்தேன் என்பதற்கு அவர் ஒளிவு மறைவின்றி விடை சொல்லியுள்ளார். "மக்கள் யாராக இருந்தாலும், அரசியலில் சுயநலமற்று நேர்மையாக, நாணயமாக நடந்து கொள்வார்கள் என்பது இயற்கைக்கு விரோதமான காரியமாகும். மனித சுபாவத்தை வைத்தே இதனை நான் சொல்லுகிறேன்"  என்று கூறும் பெரியார், இதனைச் சாதாரண மனிதர்களின் போக்கைக் கொண்டு முடிவு செய்யவில்லை என்றும் அழுத்தம் திருத்தமாகக் கூறுகின்றார். "பெரிய பெரிய தலைவர்கள்,  'மகான்கள்', 'மகாத்மாக்கள்என்பவர்களை கணக்கில் வைத்துக்  கொண்டுதான் இதனைச் சொல்லுகிறேன்" என்று விளக்கம் தருகிறார்.

அதே நேரத்தில், அரசு அதிகாரத்தின் மூலமே பார்ப்பனர் அல்லாத மக்களுக்குச் சில நன்மைகளைச் செய்ய முடியும் என்பதையும் அவர் ஏற்கிறார். அதனால்தான், நீதிக்கட்சி என்று அறியப்படும் தென் இந்திய நல உரிமைச் சங்கம் கூட, 'அரசியல் கலந்த நலச்  சங்கம்', 'அரசியல் கலவாத நலச் சங்கம்' என இரண்டாகப் பிரிக்கப்படலாம்  என்று தன் கருத்தை  எடுத்துரைக்கின்றார்.  இங்கே அரசியல் என்று பெரியார் குறிப்பிடுவது, தேர்தலில் நிற்கும் அரசியல் என்ற பொருளில்தான் என்பதை நாமறிவோம்.  மற்றபடி அரசியல் கலக்காதது  என்று எதுவும்  இல்லை என்பதைப் பெரியார் நன்கு அறிந்தே இருந்தார்.

நீதிக்கட்சி அப்படி இரண்டு பிரிவுகளுக்குத் தயாராக இல்லாத நிலையில், தேர்தல் அரசியல் கலக்காத ஒரு பிரிவாகத் தன் அமைப்பையே மறைமுகமாக மாற்றிக் கொண்டார். அதனைப் புரிந்து கொண்ட நீதிக்கட்சித் தலைவர்கள்   1920களின் இறுதியில்நீதிக்கட்சியின் தலைமையை ஏற்கும்படி பெரியாரை வேண்டினர்.  ஆனால், "இருக்கட்டுங்க, பாக்கலாங்க: என்று கூறி அந்த வாய்ப்பைத்  தள்ளி விட்டுவிட்டார். பிறகு 'திராவிடன்' ஆசிரியர் பொறுப்பை மட்டும் ஏற்றுக்கொண்டார். அதுவும், 'குடியரசு' இதழின் போக்கில்தான் திராவிடனையும் நடத்த  முடியும்  என்ற நிபந்தனையை அவர்கள் ஒப்புக்கொண்ட பின்னரே அதற்கு இசைந்தார்.

தான் ஆட்சிக்கு வர விரும்பாத போதும், பார்ப்பனர் அல்லாதோர் ஆட்சியில் அமர வேண்டும் என்று விரும்பினார். "நல்ல ஆட்சி, கெட்ட ஆட்சி என்பதைக் கூட அதிகம் சிந்திக்காமல், பார்ப்பனர் ஆட்சி, பார்ப்பனர் அல்லாதோர் (தமிழர்) ஆட்சி என்கின்ற தத்துவத்தை அடிப்படையாக வைத்துத் தீவிரமாகக் கலந்து கொண்டு வந்திருக்கிறேன்" என்று தன்னுடைய நிலைப்பாட்டிற்கு அவரே விளக்கமும் தந்துள்ளார். "பதவி பெற்று ஆட்சி நடத்துகிற  அரசாங்கம்  ஒவ்வொன்றிலும்  நான் சில கடமைகளை ஏற்று, ஆதரித்தும், எதிர்த்தும் வந்திருக்கின்றேன்" என்கிறார்.

தன் ஆதரவு பெற்று அமையும் அரசிலும், பார்ப்பனர் அல்லாத மக்களுக்கான சில உரிமைகளைப் பெற்றுத்தர முயற்சி செய்துள்ளேனே அல்லாமல், தனக்காக என்று தனிப்பட்ட முறையில் எதனையும் கேட்டதில்லை என்று தன் நிலையைக் கூறும் அவர், சுப்பராயன், முத்தையா (முதலியார்), பொப்பிலி அரசர் ஆகியோர் அமைச்சர்களாக இருந்தபோது, அவர்களை அணுகிச் சமூக மாற்றங்களுக்கு உதவுமாறு கேட்டதைக் குறிப்பிடுகின்றார்.

தன்னலமற்ற இந்தப் 'பெரியாரைத்தான்' இன்று சிலர் கூச்சமே இல்லாமல் தூற்றிப் பேசுகின்றனர்.
                                                                                    
 (தொடரும்)
                                                                                  

நன்றி: நக்கீரன்

9 comments:

 1. "பார்ப்பனர் அல்லாதோர்" - இதற்குள் பெரிதாக பயன் அடைந்தவர்கள் "தெலுங்கர்களே".
  இன்றைய சட்டமன்றத்தில் பல தெலுங்கு சாதியை சார்ந்தவர்கள் சட்டமன்ற உறிப்பனர்களாக உள்ளார்களே. இதை பற்றி ஏன் நீங்கள் பேசுவதில்லை?

  1. வைகோ - நாயுடு (தெலுகு)
  2. விஜயகாந்த் - நாயுடு (தெலுகு)
  3. ஜி ராமகிருஷ்ணன் - நாயுடு (தெலுகு)
  4. இளங்கோவன் - நாயுடு (தெலுகு) (இப்போது தமிழர் "தேவர்" திருநாவுக்கரசு வந்ததில் மகிழ்ச்சி)
  கலைஞர் பிறப்பால் தெலுங்கு சாதியை சார்ந்தவராக இருந்தாலும் (சின்ன மேளம்) அவரை இந்த லிஸ்ட் ல சேர்க்கவில்லை.

  தமிழக அரசியலில் உள்ள இந்த தெலுங்கர் ஆதிக்கம் தற்செயலானதா (அல்லது) திட்டமிட்டு உருவாக்கப்பட்டதா? Was the concept of "Dravidam" created for the welfare of "Telugus" in TN?

  சாதி வைத்து பார்ப்பனர்களை அடையாளப்படுத்தும் நீங்கள், ஏன் தெலுங்கர்களை அடையாளப்படுத்துவதில்லை. நீங்கள் நேர்மையானவராக இருந்தால் இதை பற்றி வெளிப்படையாக உங்கள் கருத்தை சொல்லவேண்டும்.

  Kindly publish this comment. I have not presented any false information.

  ReplyDelete
  Replies
  1. அம்மையாரை விட்டுட்டீங்களே! ஒருவேளை அவர் பார்ப்பனீயத்தை ஆதரிப்பதால் தமிழ்த்தேசியவாதி என்று நினைச்சுண்டேளா?

   Delete
  2. நெடுமாறன், சீமான், வைகோ, தமிழ் அருவி மணியன் போன்றவர்களே அம்மையாரை தமிழ் தேசிய ஆதரவாளர் என்று அறிவித்து விட்டனர். இனி நான் சொன்னா என்ன சொல்லலான என்ன.

   Delete
 2. தமிழனுக்கு ஒன்று என்றால் கேட்க நாதியில்லை என்று அங்கலாய்த்துக் கொள்கிறார் நம்ம சிரீராம் பார்பனர். பிற இன மக்களைக் குறைந்த கூலிக்கு கசக்கிப் பிழியும் தமிழ் முதலாளிகளை இவர்கள் எப்போதாவது தட்டிக் கேட்டிருக்கிறார்களா?

  அவ்வளவு ஏன் சூத்திரனுக்கு ஒரு நீதி! தன்டச்சோறுன்னும் பார்பானுக்கு ஒரு நீதி என்றிருப்பதை மறந்தும் கண்டித்ததுன்டா?

  நாமக்கல் தவிட்டெண்ணெய் ஆலையில் தீ விபத்தில் கருகிச் செத்தார்கள் பீகார் தொழிலாளிகள். மலையாளி டீக்கடைக்காரரைப் பார்த்து காயும் தமிழினவாதிகள், கருகிய பீகார் தொழிலாளிகளின் உழைப்பில் பணம் கொழிக்கும் தமிழ் முதலாளியைக் கண்டு காய்வதில்லையே, இது தமிழின உணர்வா, அல்லது பார்ப்பன ஆசனவாய்களாய் திகழும் போலி தமிழ்தேசிய உணர்வா? ஆதிக்க வர்க்கம் மட்டுமல்ல,

  ஆதிக்க சாதித்தன்மையும் தமிழினவாதத்தின் உள்ளடக்கமாக உள்ளது. டீக்கடையில் மலையாளி, உணவு விடுதி யில் கன்னடன், உயர் பதவியில் தெலுங்கன், பிற இனத்தான் என்று ஒவ்வொரு துறைக்கும் லிஸ்ட் வைத்துக் கொண்டு சோற்றுக் கையால் சொடுக்கு போடும் இந்தப் பேர்வழிகள் பீ அள்ளும் தெலுங்கன் லிஸ்டை பீச்சங்கையால் கூடக் காட்டுவதில்லையே! “தமிழன் பீயை தெலுங்கன் அள்ளலாமா?” என்று ஆர்ப்பரிப்பதில்லையே! கக்கூசுக்குள் மட்டும் முக்காமல் முனகாமல் தமிழினவாதம் நம்ம சிரீராமுக்கு பக்காவாக வெளியேறும் மர்மமென்ன?

  நேர்மை இருந்தால் பதில் சொல்லுங்கள்!

  ReplyDelete
 3. ஐயா ஸ்ரீராம் ஐயர் முதலில் தாங்கள் ஒரு செய்தியை தெரிந்துகொள்ளுங்கள் தெலுங்கர் என்பது சாதி இல்லை.மேலும் இன்றைய முதலாளித்துவ வளர்ச்சிபோக்கில் தேசிய இனங்கள் உறுப்பெற்றுவிட்டன என்பதை தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள் அடையாளப்படுத்தும் தெலுங்கர்கள் என்னும் சமூக முன்னனியாளர்கள் மற்றும் மக்கள் யாரும் தெலுங்கு தேசிய இனத்திற்குள் வரமாட்டார்கள் ஏனென்றால் ஒரு தேசிய இனத்திற்கான வரையறை என்பது. ஒரு பொது மொழி,ஒரு நிலபரப்பு,ஒரு பொருளியல் வாழ்வு,வரலாற்று வழியில் நிலைத்துவிட்ட ஒரு பண்பாடு,ஒரேஒத்த மனஇயல்பு,ஆகிய ஐந்து அடிப்படை கூறுகளை உள்ளடக்கியதுதான் ஒரு தேசிய இனம்.இந்த வரையறைக்குள் பார்ப்பனர்களாகிய நீங்கள் வரமாட்டீர்கள் என்பது உங்களுக்கே தெரியும்.ஆனால் நீங்களும் போலி தமிழ்தேசிய வியாதிகளும் கக்கும் நஞ்சான இனத்தூய்மைவாதம்தான் பார்ப்பனர்களை தமிழர்களாக இணைக்கும் குறுக்குவழி என்பதை தெரிந்ததால்தான் தந்தை பெரியார் உங்களிடமிருந்து(பார்ப்பனர்களிடமிருந்து) எங்களை காப்பாற்றுவதற்கு ஆரியர்,திராவிடர் என்று அடையாளப்படுத்தினார்.இந்த ஆபத்தை உணர்ந்ததால்தான் இன்று பார்ப்பனியமும்,பார்ப்பனியத்தின் கைக்கூலிகளான போலி தமிழ்த் தேசிய வியாதிகளும் இனத்தூய்மைவாதம் செய்து தமிழர்களுக்கிடையில் பிளவை ஏற்படுத்தி நவீன வடிவில் சாதியை தமிழர்கள் மேல் திணிக்கமுயற்ச்சிக்கிறீர்கள்.உங்கள் எண்ணம் ஈடேறாது பெரியாரின் பேரன்கள் நாங்கள் இருக்கிறோம்.எச்சரிக்கை.உங்கள் நவீன சாதி எந்த வடிவில் வந்தாலும் அதே வடிவில் விரட்டியடிப்போம்.

  ReplyDelete
  Replies
  1. நீங்க சொன்னதில் ஒரு பொருளும் இல்லை. சுத்தமாக இல்லை. திராவிட (சமஸ்க்ரித சொல்) தேசியம் பஞ்ச கவுடா பிராமணர்களை குறிக்கும் சொல். தமிழ் தேசியம் என்பது தமிழ் பார்ப்பனர்களை மட்டும் உள்ளடக்கியது. நீங்கள் தேசிய இனத்திற்கு சொன்ன definition அறிவியல் பூர்வமானது அல்ல. example : நீங்க சொன்னது "ஒரேஒத்த மனஇயல்பு" - ஒரே மன இயல்பு இருந்ததால் தான் சாதி மோதல்கள் வருகின்றதா? உடனே நாங்கள் காரணம் என்று சொல்லி எஸ்கேப் ஆகாதிங்க. பார்ப்பனர்களையும் தமிழையும் பிரிக்க முடியாது. தமிழுக்கு இலக்கணம் தந்த தொல்காப்பியரில் இருந்து - பாரதி வரை நாங்கள் செய்த தொண்டு மிகப்பெரியது. தமிழால் பார்ப்பனர்கள் உயர்ந்ததும் - பார்ப்பனர்களால் தமிழ உயர்ந்ததும் வரலாற்றில் உள்ளது. என்ன முக்கினாலும் அதை மறைக்க முடியாது.

   பெரியாரிஸ்டுகள் "தமிழ் தேசியத்தை" எதிர்க்கிறார்கள், அந்த ஒரே காரணம் போதும் "பார்ப்பனர்கள்" அதை ஆதரிக்க. உங்களின் பதற்றம் புரிகிரிது. வெல்லப்போவது "பெரியாரிஸமா" அல்லது "தமிழ் தேசியமா" என்று பார்ப்போம்.

   Delete
 4. ஐயா ஸ்ரீராம் அவர்களே திராவிடம் என்பது தமிழ்தான் உங்கள் மனுநீதியிலேயே அதற்கான ஆதாரம் இருக்கிறது. நான்கு வர்ணங்களையும்,சாதிகளையும்,சமூக ஏற்றத்தாழ்வுகளையும் இன்றுவரை கட்டிகாப்பாற்றிவரும் மனுநீதியில்"திருவிடமொழி"என்று வருகிறதே அது எந்த மொழியை குறிக்கிறது தெரியுமா? திருவிடம்,திராவிடமாக மாறி பிறகு த்ரமிளமாக மாறி பிறகு தமிழாக உருமாறியிருக்கிறது.ஆக தமிழையும்,திராவிடத்தையும் உங்கள் சதி வரலாறால் பிரிக்க முடியாது. இந்த மண்ணிற்கு எந்த சம்மந்தமும் இல்லாத இன்றுவரை எந்த தேசப்பற்றும் இல்லாமல் படித்தவுடன் வெளிநாட்டிற்கு ஓடும் ஆரியர்களுக்கும்,இன்று இஸ்ரேலை ஆக்கிரமித்திருக்கும் யூதர்களுக்கும் சொந்த நாடே இல்லையென்பது அறிவியல் உண்மை.நான் கூறிய தேசிய இனங்களுக்கான வரையறை என்பது என்மூளையில் உதித்ததல்ல.அது ஒரு வரலாற்று நிகழ்சியின் உண்மையென்பதை ருஷ்ய புரட்சியாளர் தோழர் ஸ்டாலின் கண்டறிந்தது.அதனால்தான் உங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லையென்பது எங்களுக்கு தெரியும். ஒத்த மன இயல்பு என்பதன் பொருள் நாம் என்கிற உணர்வு.இந்த நாம் என்கிற உணர்வின் அடிப்படையில் நீங்கள் தமிழர்களோடு ஒன்றினைய மாட்டீர்களென்பது உங்களுக்கே தெரியும். நாங்கள் தண்ணீர் என்று அழகு தமிழில் சொன்னால் நீங்கள் ஜலம் என்று கூறுகிறீர்களே உங்கள் தமிழ்ப் பற்றைப்பற்றி எங்களுக்கு தெரியாதா? தமிழுக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியர் பார்ப்பனர் என்று நீங்கள் ஒரு புதிய கண்டுபிடிப்பை அறிமுகப்படுத்துகிறீர்களே!இன்னும் எத்தனை காலத்துக்கு வரலாற்றை உங்களுக்காக எழுதிக் கொள்வீர்கள்? பாரதியின் தமிழ் தொண்டைப்பற்றி கூறவா? இந்தியாவை "ஆரிய நாடென்றும்" தமிழீழத்தை "சிங்களதேசமென்றும்"அழகுதமிழில் கொஞ்சிய பாரதியின் சாதிவெறியைப்பற்றியும் எங்களுக்கு தெரியும்.இருக்கலாம் ஏதோ ஒரு பார்ப்பனர் தமிழை மேம்படுத்துவதற்கு முயற்சித்திருக்கலாம் அது கூட விதிவிலக்குதான்."விதிவிலக்கு விதியாகாது" பெரியாரிஸ்டுகள் தமிழ் தேசியத்தை எதிர்க்கிறார்களா? முகம்மதலி ஜின்னா பாகிஸ்தான் பிரிவினையை கேட்பதற்கு முன்பே,தந்தை பெரியார் தமிழ்நாடு தமிழருக்கே என்று தமிழ்தேசிய எழுச்சியை தமிழகத்தில் தட்டி எழுப்பினார். பதட்டப்படுவது நானல்ல "ஆரியர்களாகிய" நீங்கள் வேறு "திராவிடர்களாகிய" நாங்கள் வேறு என்று ஆதாரப்பூர்வமாக எடுத்துவைத்ததால் நீங்கள் பதட்டமாகிவிட்டீர்கள். மீண்டும் சொல்கிறேன் பார்ப்பனியம் எந்த வடிவில் வந்தாலும் அதை விரட்டியடிப்போம் நாங்கள் பெரியாரின் வாரிசுகள்.

  ReplyDelete
  Replies
  1. //"திராவிடர்களாகிய" நாங்கள் வேறு...// மிகச்சரி. நீங்கள் வேறு தான். நீங்க திராவிடர்கள். நாங்கள் தமிழர்கள்.

   அப்பறம், நீங்க சொன்ன இந்த காமெடி ரொம்ப நல்லா இருக்கு "திருவிடம்,திராவிடமாக மாறி த்ரமிளமாக"... இதற்கு எந்த தமிழ் இலக்கியத்திலும் சான்று இல்லை. இந்த டகால்டி வேலையெல்லாம் வேண்டாம். திராவிடத்திற்கு நீங்க சொன்ன சமஸ்க்ரித சான்று செல்லாது. தமிழ் இலக்கியங்களில் இருந்து சான்று தர முடியுமா? மணியரசன் இதை தெளிவாக சொல்லிவிட்டார்.

   சொந்த நாடு என்பது உலகில் யாருக்கும் கிடையாது? யாரும் எந்த நாட்டையும் உருவாக்க வில்லை-முடியாது. மண்ணும், காற்றும் பொதுவானவை. "பார்ப்பனர்" என்ற குறிப்பு தமிழில் 5000 ஆண்டுகளாக உள்ளது. நாங்கள் பூர்விக குடிகள். உங்கள் சாதிக்கு என்ன வரலாறு இருக்கிறது?

   தொல்காப்பியர், மாணிக்கவாசகர், ஞானசம்பந்தர், ராமானுஜர், உவே.ச, பாரதி என்ற ஏராளமானோர் எங்கள் சமூகத்தில் இருந்து வந்துள்ளனர். இவர்கள் தமிழுக்கு செய்த தொண்டு மிகப்பெரியது. தமிழ் வளர்த்த அந்தணர்கள் என்ற புத்தகத்தை படியுங்கள்.

   உங்கள் சாதி தமிழுக்கு செய்து "கிழித்தது" என்ன? பட்டியல் போடவும். எங்களை மீறி இங்கே எவனும் தமிழன் கிடையாது. ஆதாரத்தோடு பேசவும். வெட்டியா வாயில் வடை சுடும் வேலை வேண்டாம்.

   Delete
 5. " மானமொன்றே நல் வாழ்வெனக் கொணடு வாழ்ந்த என் மறவேந்தர் பூனைகள் அல்லர், அவர் வழி வந்தோர் புலிநிகர் தமிழ்மாந்தர் " என்ற வீர முழக்கம், என்று தமிழர் மனைதோறும் கேட்கிறதோ, என்றைய தினம் தமிழர் உள்ளம் இந்த நிலை பெறுகிறதோ, அன்றே ஆரியர்,கனகவிசயனைக் கல்லெடுக்க வைத்த சேரன் மரபினர் மீணடும் தமிழராயினர். 'இனி நமது கடை நடவாது' என்பது தெரிந்து பல்லெல்ளாம் தெரியக்காட்டி நிற்பர் !பணிவர்!பகைவரை அடுத்து கெடுத்ததன்றிப்,போரிட்டு அடக்கிய வரலாறே ஆரியருக்கு கிடையவே கிடையாது. பெரிய போர்களிலே,அவர களுடைய பெயர் சம்பந்தப்பட்டதே கிடையாது. புராண இதிகாசங்களிலே நடைபெற்றதாகக் கூறப்படும் போர்கள்,வெறும் புளுகு என்றபோதிலும், அதிலும் வீரத்தால் வெற்றி கிடைத்ததாகக் கதை கிடையாது. வேள்வியால் வெற்றி,பரமன் அருளால் பலம், மாய அஸ்திரங்களால் எதிரி தோற்றான் என்றுதான் இருக்கும். திராவிட வரலாறுகளிலோ,வீரமே முதலிடம் பெற்றிருக்கும், ஆரிய இனம் போரிட்டு புகழ் ஈட்டியதில்லை.பிறரின் புத்தி கெட்டபோதுதான், ஆரியன் கொட்டம் வளரும்! போதை ஏறியவன், கல் தடுக்கியோ,காற்று அடிப்பதாலே கீழே விழுவான்.ஆரியரும், திராவிட இனத்திடையே கருத்திலே போதை மூண்டிடச் செய்துவிட்டு பிறகு,கீழே உருட்டிவிட்டனர்.திராவிடன் ஆரிய வீரத்தால் வீழ்த்தப்படவில்லை. ஆரிய கருத்தினை தாங்கும் சுமைதாங்கியானான்,சோர்ந்தான்,சுருண்டான்.இந்த சூட்சுமத்தை உணராத சீமான்களும்,மணியரசன்களும் தமிழர் வரலாறுக்கு எதிரானவர்களே.

  ReplyDelete