தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Tuesday, 11 October 2016

இது 'நட்பு வாரம்'


முன்பெல்லாம் தொலைக்காட்சிகளில் திரைப்படங்களைத் திரையிடும்போது,  படங்களின் உள்ளடக்க அடிப்படையில் அவற்றைத்  தொகுத்து வழங்குவார்கள். இது காதல் வாரம், இது நகைச்சுவை வாரம், இது துப்பறியும் வாரம் என்று அறிவித்துப் படங்களைப் போடுவார்கள். அது போல இப்போது தமிழ்நாட்டில் நட்பு வாரம் நடந்து கொண்டிருக்கிறது. 


ம.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்நாட்டு ஆளுநர் வித்யா  சாகர் ராவைத் திடீரென்று சந்தித்தார். அது குறித்து நிருபர்கள் கேட்டபோது, "ஒன்றுமில்லை, வெறும் நட்பு அடிப்படையிலான சந்திப்பு இது. நாங்கள் இருவரும் பழைய நண்பர்கள்" என்றார் வைகோ.  பிறகு, காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர் திருநாவுக்கரசர் ஆளுநரைச் சந்தித்தார். அவரும் அது நட்பு அடிப்படையிலான சந்திப்பு என்று கூறிவிட்டார். அவரைத் தொடர்ந்து பா.ஜ.க.வைச் சேர்ந்த மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு ஆளுநரைச் சந்தித்தார். அடாடா பாருங்கள் அவரும் நட்பைப் போற்றுவதற்காகத்தான் சந்தித்தாராம்.

நம் அரசியல் தலைவர்கள் நட்பை இப்படிப்  பாராட்டுவதை அறிந்து நமக்குப்  புல்லரிக்கிறது. நட்பென்றால் இதுவன்றோ நட்பு! எந்த அரசியலும் இல்லையாம். முதலமைச்சரின் உடல் நலமின்மைக்கும் இவர்களின் சந்திப்புகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லையாம்.  அவர்களே சொல்லும்போது நாம் நம்பத்தானே வேண்டியுள்ளது.  


ஆனாலும், எல்லோருக்கும் ஆளுநர் மீதான அன்பும், நட்பும் ஒரே நேரத்தில் வெளிப்பட்டுள்ள அதிசயத்தை மட்டும்  நம்மால் எண்ணி  வியக்காமல் இருக்க முடியவில்லை. சரி போகட்டும், எப்படியிருந்தாலும் இந்த நட்பு வாரத்தை நாம் கொண்டாடத்தான் வேண்டும். 

6 comments:

  1. ஆனால் வதந்தி பரப்புவதாக மற்றவர்கள் மீது புகார் சொல்கிகிறார்கள்.

    ReplyDelete
  2. துள்ளல் தமிழும், இயல்பான நகைச்சுவையும் எங்கள் பேராசிரியருக்கே உரியது..

    ReplyDelete
  3. Avargalin Natpai Mudhal Naalandre Kaati erukalaam (With Smile) .

    ReplyDelete
  4. காங்கிரஸ் நட்புதான் மிக அதிகம் !

    ReplyDelete
  5. Aamam Thozhare!!! Neenda Naatkaluku Piragu Congress Thalai(valar)galai paarpathu santhosham thaan :)

    ReplyDelete
  6. இதுவரை முதல்வர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார் என்றெல்லாம் செய்திகள் தந்தி டீவியில் வந்ததே எந்த தைரியத்தில் இவர்களால் இவ்வாறு பொய்யாக செய்தியை சொல்லமுடிகிறது.வலுவான எதிர்க் கட்சி இருக்கும்போதே இவர்கள் இப்படி இருக்கிறார்களே!

    ReplyDelete