பகத்சிங்கைப்
பாராட்டிய குடியரசு!
உப்புச்
சத்தியாகிரகம் நாடெங்கும் மக்கள் ஆதரவுடன் வெற்றிகரமாகவே நடந்தந்து. எனினும்,அதற்குப் பிறகு
ஏற்பட்ட சமரசங்களும், பகத்சிங் மற்றும்
அவரது தோழர்கள் தூக்கில் ஏற்றப்பட்டதும் மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தைத் தந்தன.
காந்தியார் இந்திய அரசியலுக்கு வந்தபின் அப்போதுதான் முதன்முதலில் சில
எதிர்ப்புகளையும் சந்தித்தார்.
ஆயுதமேந்திய
புரட்சியாளர்களின் இந்திய விடுதலைக்கான போராட்டம் 1920களில் வேகம் பெற்றது.
வெள்ளையர்களால் ஆசாத் கொலை செய்யப்பட்டது, சாண்டர்ஸ்
என்னும் காவல்துறை அதிகாரியைப் பகத் சிங் கொன்றது, சட்டசபையில்
குண்டு வீசியது போன்ற பல நிகழ்வுகள் அந்தக் காலகட்டத்தில் நடந்தன.அனைத்தையும்
தாண்டி பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகிய
மூவரும் தூக்கில் ஏற்றப்பட்ட நிகழ்ச்சி இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியது. 1929 வரை யார் என்றே அறியப்படாமல் இருந்த பகத்சிங் 1931இல்
தூக்கில் ஏற்றப்பட்டபோது, நாடறிந்த நாயகன்
ஆனார். அவர்களைத் தூக்கு மேடையில் இருந்து காந்தியாரால் காப்பாற்ற முடியும் என்று
நேரு தொடங்கி, சாதாரண மக்கள்
வரையில் அனைவரும் நம்பினர். அந்த நம்பிக்கை பொய்த்துப் போனது. அவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் காந்தியார்
ஈடுபடவில்லை என்பதோடு மட்டுமல்லாமல், இர்வின்
பிரபுவோடு சமாதான ஒப்பந்தமும் செய்து கொண்டார்.
அதனை மக்களின் ஒரு பகுதியினர் - குறிப்பாக இளைஞர்கள் - கடுமையாக
எதிர்த்தனர். சிலவிடங்களில் காந்தியாருக்கு இளைஞர்கள் சிலர் கறுப்புக் கொடி
காட்டும் அளவிற்கு நிலைமை போயிற்று.
தமிழ்நாட்டைப்
பொறுத்தமட்டில், பகத்சிங்கிற்கு
ஆதரவு தெரிவித்து முதலில் தலையங்கம் எழுதிய ஏடு 'குடியரசு'தான்! 1931
மார்ச் 23 அன்று இரவு 7.33 மணிக்குப் பகத் சிங்கும் அவரது தோழர்களும் தூக்கில்
ஏற்றப்பட்டனர். ஆறே நாள்களில்
(29.03.1931) அது குறித்துச் சுயமரியாதை இயக்க ஏடான குடியரசு எழுதியது. இன்று
இருப்பது போல் தொலைத் தொடர்பு ஏதும்
இல்லாத அன்றைய சூழலில், அவ்வளவு
விரைவாகச் செய்திகளைத் திரட்டித் தலையங்கம் எழுதிய செய்தி வியப்புக்குரியதே!
"திரு
காந்தியவர்கள் (பகத் சிங்கைத் தூக்கில் ஏற்றிய) திரு இர்வின் அவர்களை மகாத்மா
என்று கூறி, அந்தப்படியே
அழைக்கும்படியாக, தேச மகா
ஜனங்களுக்குக் கட்டளையிடுவதும், திரு இர்வின் பிரபு அவர்கள் திரு காந்தி அவர்களை ஒரு
மகான் என்றும், தெய்வத்தன்மை
பொருந்தியவர் என்றும், வெள்ளைக்காரர்கள்
அறிய விளம்பரம் செய்வதுமான காரியங்கள் நடைபெறுகின்றன" என்று பெரியார்
எழுதுகின்றார். மேலும், பகத் சிங்கிற்கு
சமத்துவமும், பொதுவுடைமையும்
தான் கொள்கைகள் என்று கருதுகிறோம் என்றும் அத்தலையங்கம் குறிப்பிடுகின்றது.
இவ்வாறு
பகத்சிங்கைப் பற்றிச் சில செய்திகளை அறிந்துகொண்டு அது குறித்து எழுதிய குடியரசு
இதழ், வெள்ளைக்காரர்களின்
தவறான முடிவை நையாண்டியாகக் குறிப்பிடுகிறது. "நமது அரசாங்கத்தார், இனியும்
இப்படிப்பட்ட உண்மையான எண்ணமுடையவர்களாகப் பார்த்து, மாகாணத்திற்கு
நான்கு பேர் வீதமாவது தூக்கிலிட
வேண்டுமென்று மனதார வேண்டுகிறோம்", என்ற குறிப்போடு அந்தத் தலையங்கம் முடிகிறது.
இவ்வாறு
ஆங்கிலேயர்களின் செய்கையை எள்ளி நகையாடிய அதே வேளையில், காந்தியாரின்
போக்கையும் பெரியார் வெளிப்படையாகக் கண்டிக்கிறார். காங்கிரசை விட்டுப் பிரிந்த
பின்னரும், காந்தியாரின்
சீடராகவே இருந்த பெரியார், நீதிக்கட்சித்
தலைவர்களும் கதர் உடை உடுத்த வேண்டும்
என்று கூறிய பெரியார் இந்த நிகழ்வுகளுக்குப் பிறகு காந்தியாரின் தாக்கத்திலிருந்து
முற்றிலுமாக விலகி வந்து விடுகின்றார். "காந்தி பகிஷ்காரம்" என்னும்
அளவிற்கு அவருடைய கருத்து மாறுகின்றது.
(தொடரும்)
நன்றி: நக்கீரன்
பகத்சிங் கொல்லப்படாமல் இருந்திருந்தால் இந்திய அரசியலின் போக்கு இன்றைய நிலமையிலல்லாமல் வேறு நிலமைக்கு போயிருக்கும் குறிப்பாக காந்தி மகாத்மாவாக இருந்திருக்கமாட்டார்!இந்திய அரசியலை இன்றிருக்கும் பிற்ப்போக்குத்தனமான அரசியலாக இருப்பதற்கு பகத்சிங் கொலையும் ஒரு முக்கிய காரணம்!இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு குடிமகனும் படிக்கவேண்டிய மிக முக்கியமான நூல் "பகத்சிங்கும் இந்திய அரசியலும்"
ReplyDeleteஅய்யா சுப.வீ அவர்களால் எழுதப்பட்டு வெளிவந்த "பகத்சிங்கும் இந்திய அரசியலும்" நூல் பகத்சிங்கை புரிந்துக்கொள்ளவும், அவருக்கு எதிரான காந்தியாரின் சூழ்ச்சிகளை அழகாய் விவரித்திருப்பார்.
ReplyDeleteஅந்நூல் நம்முன்னே பகத்சிங்கை மீண்டும் எழுப்பும்.
நன்றி அய்யா.
Aiyya,
ReplyDeleteIm Gowtham from tiruppur.I'm doing lll Bsc physics in PSG coimbatore.I write this mail in english because im mailing you from my mobile.
Had I seen you now in real ,i would have hugged and kissed you in love and gratitude.
Im so grateful to be introduced to you aiyya.I mean it literally.because it is you who have held my hand and led me,like a mentor,to the path of wisdom aiyya.I got introduced to you, only through your video "நுகர்வு x துறவு " on one lucky day.since that day, I ve become your ekalaivan aiyya.
As I definitely know you are not any cruel like the drona,I have here come to seek your knowledge directly aiyya.
All I want from you is to answer my questions aiyya.I have so many questions to ask,but I have less people to ask.
And infact the questions that I ask are a little irrelevant to my acquaintances nearby.And besides im so greedy that I need to suck out all the knowledge out of you aiyya..(respectfully)
I ask a direct "question and answer" between us aiyya.And im comfortable with any medium to ask..in which you are comfortable to reply aiyya.Be it be letter or call or whatsapp.
For example..if its whatsapp,il send you a voicenote of 30 seconds or more aiyya..and wait for your reply whatever time it takes.
I assure you that I'll not waste your time aiyya.
இப்படிக்கு,தங்கள் பேரன்மார்களுள் ஒருவன்.
கவுதம், தங்களின் மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்ணை subavee.blog@gmail.com முகவரிக்கு அனுப்பவும்.
Deleteதிருவாளர் கவுதம் அவர்களே, நான் கண்டு கேட்டவரையில், சுபவீ அய்யா அவர்களின் பேச்சுரையில் முதலில் தெளிவான உண்மை இருக்கும், பின்பு கனிவு இருக்கும்; கணீர் குரலில் வாதிக்கும் திறனில் நேர்மையிருக்கும்; இவை போன்றவைகள்தான் அய்யா அவர்களின் பேச்சின்மூலம் வெளிப்படுவதால் கேட்போரை ஈர்க்க வைக்கின்றன.
DeleteMy name is Arul..I am a big fan of Subavee sir... I was interested to read karunjattaitamilar news paper.. So please tell me where it is available... I already read aug 16-31 news paper from peravai.com.... So i want to buy current news paper.. So guide me plz...
ReplyDeleteதோழர் அருள் தங்களுக்கு கருஞ்சட்டை தமிழர் பத்திரிக்கை மாதசந்தாவாக கட்டினீர்களானால் தங்கள் முகவரிக்கே வந்துவிடும்.இது என் தொலைபேசி எண் என் பெயர் இளங்கோ என்னை தொடர்பு கொள்ளுங்கள் 7299932111
ReplyDelete