தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Thursday, 22 June 2017

வலி 12 – சமரசம் உலாவும் இடமே!



வழக்கமாய்ப் படிக்கும் செய்தித்தாள்களைத் தாண்டி வேறு சிலவற்றையும் வாங்குவதற்காக நான் ஒரு கடையில் நின்று கொண்டிருந்தபோது அந்த மனிதர் வந்தார். அறுபதைக் கடந்த வயது. மெலிவான உடல். முகத்தில் கருப்பும் வெள்ளையும் கலந்த தாடி. வறுமையைப் பறை சாற்றும் தோற்றம். மெல்லிய குரலில் கடைக்காரரைப் பார்த்து, ஹான்ஸ் இருக்கா என்று கேட்டார். இல்ல, அதெல்லாம் விக்கிறதில்லஎன்றார் கடைக்காரர். சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, அந்தப் பெரியவர் மீண்டும் குடுப்பாஎன்றார். இருந்தா குடுக்க மாட்டேனா, உண்மையாவே இல்லஎன்றார் கடைக்காரர். பெரியவர் போவதாக இல்லை. வேறு சில பெயர்களைச் சொல்லிக் கேட்டார். மாவோ என்றோ வேறு ஏதோ சொன்னார். எனக்குச் சரியாகப் புரியவில்லை. கடைக்காரர் இப்போது சற்றுக் கோபமாக, "சொன்னா புரிஞ்சுக்கிட மாட்டீங்களா? அதெல்லாம் பெரிய பிரச்சினை ஆகுது. நிஜமா விக்கிறதில்ல" என்றார் அழுத்தம் திருத்தமாக! ஒரு நிமிட அமைதிக்குப் பின், "சரி, ஒரு பீடி குடுப்பா" என்று கேட்டு அவர் வாங்கிச் செல்லும் வரையில், செய்தித்தாள் படிப்பதுபோல் நான் அங்கேயே நின்று கொண்டிருந்தேன்.

மேலும் படிக்க

No comments:

Post a Comment