ஏன் திராவிடக் கொள்கைகளால் பயன் அடைந்தவர்கள் கூட அதை உணர்வதில்லை? இந்த இடத்தில் நாம் என்ன செய்யத் தவறிவிட்டோம்?
- என்.என்.ராஜன், தூத்துக்குடி
விடை: 1950, 60 களில் 'மேடை'தான் மிகப் பெரிய ஊடகமாக இருந்தது.அந்த ஊடகத்தைத் திராவிட இயக்கத்தினர் மிகச் சரியாகக் கையாண்டோம். மக்களிடம் நம் கருத்துகள் உரிய முறையில் சென்று சேர்ந்தன. காலப் போக்கில் பல்வேறு ஊடகங்கள் எழுந்தன. மேடை ஊடகம் பின்னுக்குப் போய்விட்டது. நாள், வார ஏடுகள் பெரும்பான்மையாக அவாளிடம் இருந்தன. பிறகு வந்த தொலைகாட்சி ஊடகமும் நம் கருத்துகளைப் பரப்பவில்லை. நம்மவர்களின் ஊடகங்களும் கொள்கையை விட்டுவிட்டு, வணிகத்தையே முன்னிறுத்தின. முரசொலி, விடுதலை போன்ற ஏடுகள் கட்சி, இயக்க உணர்வாளர்களிடம் மட்டுமே சென்றன. பொதுமக்களை எட்டவில்லை.
திராவிட இயக்கத்தால் பயன் பெற்றவர்கள் கூட அதனை உணராமல் இருப்பதற்குப் பல காரணங்கள் உண்டு. என்றாலும், நான் முதன்மையானதாகக் கருதுவது, வெகு மக்களைச் சென்றடையக்கூடிய பொதுவான ஊடகங்களை நாம் 15, 20 ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்காமல் விட்டதுதான் என்று தோன்றுகிறது.
கிட்டத்தட்ட தமிழ் நாட்டில் எந்த அரசியல் கட்சிக்குமில்லாத அளவுக்கு ஊடகங்கள் கிட்டத்தட்ட 15 சேனல்கள்(அதிலும் சன் டிவி சேனல்கள் 23 ஆண்டுகளுக்கு முன்பே{திமுக நிதி collatral securityயாக ஒப்புதளிக்கப்பட்டு}தோன்றியது,பொதுமக்களிடம் பிரபலமாகவும் உள்ளது),2 செய்தித்தாள்கள்,வார இதழ்கள் கருணாநிதி குடும்பத்திடமுள்ளது.நாள்,வார ஏடுகள் பெரும்பான்மையாக அவாளிடம் 1930களிலிருந்து உள்ளது,The Hindu 1870களிலிருந்து உள்ளது.இந்த நிலையில் தோல்விகளுக்கு அவைகளைக் காரணமாகக் கூறுவது வேடிக்கையாக உள்ளது!.
ReplyDeleteபேரன்பு மிக்க திராவிடர்களே தன்மான புலிகளே அன்புக்குரிய தமிழர்களே கேளுங்கள். அண்ணன் சுபவீயின் ஆதங்கத்தை மீண்டும் மீண்டும் படித்து பார்த்து இருப்பீர்கள். உங்களைப்போல உங்களுடன் சேர்ந்து நானும் படித்ததால் இதோ இங்கே உங்களுடன் கலந்து என்ன எண்ணுகிறேன் என்றால்,
ReplyDeleteதிராவிடர்கள் என்பதும் திராவிடம் என்பதும் அரசியல் கட்சிகளின் கொள்கைகள் மட்டுமே. அதை பேசி கட்சி வளர்த்தார்கள் அதற்குதான் அது பயன்பட்டது என்று ஓர் எண்ணம் தமிழர்களிடம் உள்ளது என்று நான் எண்ணுகிறேன்.
அதற்கு காரணம் அரசியல் மேடைகளில் மட்டும்தான் திராவிடம் அதிகமாக பேசப்பட்டது என்றும் நான் எண்ணுகிறேன்.
அகில இந்திய அளவிலோ உலக அளவிலோ பேசப்படும் அளவுக்கு அதை கொண்டுபோக எண்ணாமல் விட்டுவிட்டார்கள் என்றும் நான் எண்ணுகிறேன்.
திராவிட கொள்கை என்பது கடவுள் மறுப்பு என்றும், யாரெல்லாம் திராவிடம் பேசுகிறார்களோ அவர்கள் கடவுள் மறுப்பாளர்கள் என்கிற அளவிலும் மக்கள் திராவிடத்தை உணர்ந்து இருந்தார்கள் என்றும் நான் எண்ணுகிறேன்.
ஆனால் திராவிடம் என்பது மரபு இனத்தை சுட்டுகிறது என்று தெளிந்து அதன் அவசியத்தை அப்போது ஏனோ அவர்கள் உணராமல் இருந்துவிட்டார்கள் என்றும் நான் எண்ணுகிறேன்.
உலக அளவில் ஆரியர் என்கிற சொல் பரவிய அளவுக்கு திராவிடம் பரவாமல் போனதற்கு, இன்னொரு முக்கிய காரணம் திராவிடத்தை அந்த வார்த்தையை முக்கிய விவாதப்பொருளாக பிரச்சனைக்குரிய விஷயமாக எண்ணும் அளவுக்கு அதை கொண்டு எவரும் எவர் மீதும் தாக்குதல் செய்திருக்கவில்லை என்றும் நான் எண்ணுகிறேன்.
இதில் கூத்து என்னவென்றால் திராவிடம் பேசும் அரசியல் கட்சிகளில் பின்கதவு திறந்து வைக்கப்பட்டதால் அதன் வழியாக பூணுலை எடுத்து வைத்து விட்டு உள்நுழைந்து பதவி அடைந்து ஆரியரும் முக்கிய பொறுப்பாளர்களாக இருந்து வருவது திராவிடத்தின் பெருமை குறைவுக்கு காரணம் என்றும் நான் எண்ணுகிறேன்.
ஆராய்ந்து பார்த்தால் அந்தந்த திராவிட அரசியல் கட்சிகளில் ஆரியருக்கு இருக்கும் பெரும் மரியாதை அதாவது அவாள்களை தாயைப் போல எண்ணும் அளவுக்கு இருக்கும் பெரும் மரியாதை அங்கு திராவிட பெண்களுக்கும் இல்லை என்றும் நான் எண்ணுகிறேன்.
திராவிடம் பேசும் அரசியல் கட்சிகள் பற்பல ஆண்டுகளுக்கு முன்பே திராவிடத்துக்கென்று அடிப்படையாக செய்ய வேண்டியதை செய்யாமல் விட்டுவிட்டது என்று ஒரு கவலை இன்று பெரும்பாலான திராவிட இன உணர்வாளர்கள் மத்தியிலும் இருக்கிறது என்றும் நான் எண்ணுகிறேன்.
சுயமரியாதை இயக்கத்தை கண்ட நமது திராவிட தேச தந்தை நமது பெரியார் அவர்கள் தாமே முன்னிருந்து ஓர் அரசியல் கட்சியை தொடங்கி வைத்து அதற்குள் காமராஜரையும் சேர்த்து புரட்சிகரமான செயல்களை செய்திருந்து இருக்கலாம் என்று ஓர் எண்ணம்கூட விளையாட்டாக தோன்றியது உண்டு என்பதை இங்கு குறிப்பிடல் பொருந்தும் என்றும் நான் எண்ணுகிறேன்.
வரலாற்று பாடங்களை படிக்கும் மாணவர்கள் முன்பு நடைபெற்ற சம்பவங்கள் அது அப்படி அல்லாமல் அது இப்படி இருந்திருந்தால் அது எப்படி இருந்து இருக்கும் என்று எண்ணிடல் கூடாது அது வேடிக்கையானது பொருந்தாதது என்று பேராசிரியர்கள் சொல்வதை நான் அறிந்ததைப்போல நீங்களும் கேட்டு இருந்து இருப்பீர்கள். என்பதை இங்கு குறிப்பிடல் பொருந்தும் என்றும் நான் எண்ணுகிறேன்.
ஆம் ஆனது ஆச்சு இனி என்ன என்றுதான் நாம் எண்ணுதல் நலம் என்று உளவியல் பேராசிரியர்கள் சொல்வதையும் கேட்டு இருந்து இருப்பீர்கள்.என்பதையும் இங்கு குறிப்பிடல் பொருந்தும் என்றும் நான் எண்ணுகிறேன்.
எதிர்மறை எண்ணங்கள் இனி வேண்டாம் தோல்வி எண்ணங்கள் இனி வேண்டாம் அதனால் வரும் பெருமூச்சு இனி வேண்டாம் நடப்பவை எல்லாம் நன்மைக்கே என்று இருந்திடலும் வேண்டாம் நடப்பவை இனி நாம் நடத்தும் படி நடக்கவேண்டும் என்று எண்ணாமல் இருந்திடலும் வேண்டாம். கருஞ்சட்டைதமிழன் இனியும் தேடும்படி இருந்திடல் வேண்டாம். அந்த திராவிடன் அந்த தன்மான புலி அந்த பகுத்தறிவு பிரசார பீரங்கி அது அப்புறம் பார்க்கலாம் என்று எண்ணி இனியும் இருந்திடல் வேண்டாம். பூக்களை பறிக்க வலைகளே போதும் என்று இனி இருந்திடல் வேண்டாம். என்ன புரியவில்லையா. எனக்கு புரிகிறது உள்ளம் உவகைக்கொள்ளுகிறது.
என் உள்ளம் உள்ளும் உள்ளல்
திராவிட நாடே
என் உள்ளம் உள்ளும் உள்ளல்
திராவிட நாடே
ஒன்றினைவாய் வென்றிடலாம்
நன்மை காணலாம்
ஒன்றினைவாய் வென்றிடலாம்
நன்மை காணலாம்.
என் உள்ளம் உள்ளும் உள்ளல்
திராவிட நாடே.
இந்த 21ஆம் நூற்றாண்டில் இனவெறி பிடித்த தமிழ்நாட்டு ராஜபக்ஷேவாக இருக்கிறிர்கள். மருத்துமனையில் ரத்தம் தேவைப்படும் போது மட்டும் எங்கோ சென்று மறைந்து கொள்கிறது இந்த இனவெறி.எவனாவது எனக்கு இந்த இன ரத்தம்தான் வேணும்னு கேட்டிருக்கானா இந்த தமிழ்நாட்டுல?.எந்த திராவிட கட்சிக்காரனாவது எனக்கு இந்த இன ஓட்டு மட்டும்தான் வேணும்னு கேட்டிருக்கானா தேர்தல் நேரத்திலே?
Deleteதிராவிட கொள்கைகள் வெல்லாமல் இருப்பதற்கு தலையாய காரணம் ஆரியத்தின் அணைத்து அழிக்கும் தந்திரம் தான்
ReplyDeleteதிராவிட இயக்கங்கள் நிலைமைக்கு ஏற்ற நடவடிக்கையை கையாண்டு ஆரியத்தை கிள்ளி எறிய வேண்டும். ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் போது பிரிந்து நிற்க கூடாது தனது கொள்கையை எந்த கட்சி ஏற்கும் என்பதறிந்து அதனை ஆதரிக்க வேண்டும் பின்பு அதனை தனது கொள்கைகளை அமல்படுத்த செய்ய வேண்டும்
திராவிட கொள்கை அல்லது சுயமரியாதை கொள்கை வெற்றி அடைந்து கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஊறிப்போயிருக்கும் ஜாதீய உணர்வுகள் ஒரு பக்கம் தங்கள் முகத்தை காட்டினாலும் கூட மறு பக்கத்திலே ஜாதிக்கு எதிராகவும் பகுத்தறிவுக்கு ஆதரவாகவும் கருத்துக்கள் மக்கள் மனதில் பரவிக்கொண்டுதான் இருக்கிறது, இது எனது கருத்து,
ReplyDeleteஏன் இலங்கையில் கூட இதன் தாக்கம் பல ஆண்டுகளுக்கு முன்பே உருவாயிற்றே?
இலங்கையில் ஜாதிய மறுப்பு கொள்கை பல ஆண்டுகளாக ஏதோ ஒரு தாக்கத்தை உண்டாக்கி இருப்பது பலருக்கும் தெரியாத ஒரு செய்தியாகும்.
அங்கு சிங்களவர்கள் எப்போதும் தங்கள் ஜாதி ரீதியான Family Name ஐ பெருமையாக பயன்படுத்துவார்கள். ஜெயவர்தன பண்டரநாயக எல்லாம் அந்த ரகம்தான். மறைந்த ஜனாதிபதி பிரேமதாசா மட்டும்தான் விதிவிலக்கு ஏனென்றால் அவர் ஒரு அடித்தட்டு ஜாதியை சேர்ந்தவர் அவருக்கு Family name கிடையாது,
அங்குள்ள தமிழர்கள் ஒரு போதும் தங்கள் ஜாதி பெயரை பாவித்ததே கிடையாது, அங்கும் எல்லா ஜாதியினரும் இருக்கிறார்கள். தமிழக திராவிட சுயமரியாதை கொள்கைகள் அங்கு அறுபது அல்லது எழுபது வருடங்களுக்கு முன்பாகவே வேரூன்றி விட்டது,
தற்போது தமிழகத்தில் பெருகி உள்ள ஜாதி சங்கங்களின் தாக்கத்தாலோ என்னவோ மிக சிறிய அளவிலானவர்கள் தற்போது தங்கள் ஜாதி அடையாளங்கள் தூசி தட்டி பயன் படுத்த முயற்சிக்கிறார்கள் உதாரணமாக அங்கு தற்போது செங்குந்த முதலியார்கள் சிலர் தங்கள் பெயரோடு முதலியார் என்று கூறி கொள்ள முயற்சிக்கிறார்கள்.
இது வெறும் உதிரி முயற்சிதான், அங்கு இனி ஜாதி அடையாளம் புத்துயிர் பெறவே முடியாது, ஆனால் பார்பன மூட நம்பிக்கைகள் அங்கு தாராளம் உண்டு.அங்கு ஒரு பகுத்தறிவு சஞ்சிகையோ அல்லது நூலோ வாங்கவே முடியாது,
திரு ராதா மனோகர் அவர்களின் பின்னூட்டம் தரும் செய்திகள் உண்மையாகவும், நம்பிக்கை தருவனவாகவும் உள்ளன. மிக்க மகிழ்ச்சி. நன்றி.
Deleteஉண்மை , கட்சிக்கு, ஜாதிக்கு, மதத்திற்கு என்று டிவி இருக்கு , ரேடியோ இருக்கு திராவிட கருத்தைப் பரப்ப தனி ஊடகம் ஒன்று கூட இல்லையே
ReplyDeleteஉலகை அகண்ட பார்வை கொண்டு பார்பதற்கு வாய்ப்பு உள்ள புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள நம்மவரிடையே பகுத்தறிவு கொள்கைகள் பரவி இருக்க வேண்டும். ஆனால் மாறாக அய்யா அவர்கள் முன்பொருமுறை குறிப்பிட்டது போல புலம் பெயர்ந்தவர்கள் கூடவே பார்ப்பனீய மூட பழக்கவழக்கங்களையும் கொண்டு சென்று பரப்பி விட்டார்கள் என்பது துரதிஷ்டமானது. ஒரு கூட்டமே திட்டம் போட்டு பகுத்தறிவு பிரசாரம் அந்த அந்த நாடுகளில் தலை தூக்க விடாது கவனித்து கொண்டார்கள். உதாரணமாக சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பாக விகடன் குமுதம் போன்ற சகல சஞ்சிகைகளும் ஒரு டாலருக்கு கிடைக்கும் ஆனால் அப்போது நந்தன் பத்திரிக்கை மட்டும் இரண்டு டாலருக்கு அதுவும் வலிந்து கேட்டால்தான் மிகவும் சலித்துக்கொண்டு எடுத்து தருவார்கள். அங்கு கோவில் வியாபாரங்கள் மிகநன்றாக நடப்பதலோ என்னவோ பகுத்தறிவு கருத்துக்களை இரட்டடிப்பு செய்வதில் நம்மவர்கள் அதுவும் தமிழ் தமிழ் என்று முழக்கம் இட்டவர்களே முன்னின்றார்கள் என்பது வேதனையான உண்மை. இலங்கையிலும் நிலைமை கிட்டதட்ட இதுதான். ஏனோ தெரியவில்லை தமிழ்நாட்டு பகுத்தறிவாளர்களுக்கும் புலம்பெயர்ந்தவர்களுக்கும் இடையே ஒரு திரை இருக்கிறது. தமிழ் தேசியத்துக்குள் ஒழிந்து கொண்டிருக்கும் ஜாதி அபிமானிகளும் பார்பனிய வைதீக அபிமானிகளும்தான் அந்த திரை.
ReplyDelete