யாருக்கேனும் கெடுதல் செய்தோமா?
சாதிய ஏற்றத்தாழ்விற்கு இந்துமதமும், கடவுளும்தான் அடிப்படை என்று
உணர்ந்த பெரியார், அவ்விரண்டையும் கடுமையாக எதிர்க்கத் தொடங்கினார். கடவுள், மதம் இரண்டினாலும்
பயன் பெறுகின்றவர்கள் பார்ப்பனர்கள் என்பதால் அவர்களைக் குறி வைத்துத் தாக்கினார்.
மற்றபடி யார் மீதும் எந்தத் தனிப்பட்ட வெறுப்பும் பெரியாருக்கு இருந்ததில்லை. இதனை
அவரே கூறியுள்ளார்.
நமது நாட்டில் சாதிக் கொடுமையும் பிறவியினால் உயர்வு அகங்காரமும் உடனே தொலைய வேண்டியது அவசியமாகும்"
என்று கூறும் பெரியார், அதனையே தன் சுயமரியாதை இயக்கத்தின் உயிர்க் கொள்கையாக ஆக்கினார். சமூக ஏற்றத் தாழ்வுகளுக்கு யார் காரணம் என்பது குறித்தும்
அவர் எழுதினார்.
"கோயில்களிலும், தீர்த்தங்களிலும், நதிகளிலும், பள்ளிக்கூடங்களிலும்,
வாசம் செய்யும் தெருக்களிலும், ஓட்டல்களிலும், காபிக் கடைகளிலும் பிராமணர், சூத்திரர் என்கிற
பிரிவும், முறையே உயர்வு தாழ்வு என்கிற பாகுபாடுகளும் பார்ப்பனர் அல்லாதவர் ஆகிய நம்மால்
ஏற்பட்டதா, அல்லது பார்ப்பனர்களால் ஏற்பட்டதா என்று யோசித்தால் நம்மை யாராவது வகுப்புத்
துவேஷி என்றோ, வகுப்புவாதக்காரர் என்றோ சொல்ல முடியுமா?" என்று கேட்கிறார்.
இந்தக் கேள்வியில் உள்ள நியாயத்தை உணரும் எவர் ஒருவரும், வகுப்புவாதக்
குழுவினர் என்று சுயமரியாதை இயக்கத்தைக் கூற மாட்டார்கள். எல்லாப் பிரிவுகளையும் ஏற்படுத்தி,
சமூகத்தை ஒரு சட்டகமாக்கி, அந்தச் சட்டகத்தின் உச்சியில் போய் அமர்ந்து கொண்டவர்களை
எதிர்க்காமல், சாதிய அமைப்பை எதிர்ப்பது எப்படி என்பதுதான் அவரின் கேள்வி.
அதுபோன்ற ஆதிக்கத்தை எதிர்த்தத்தைத் தவிர, எந்த ஒரு பிரிவினர் மீதும்
தனக்கோ, தம் இயக்கத்திற்கோ பகை ஏதுமில்லை என்கிறார். அவருடைய வரிகளை படிப்போம்:
"நாம் யாருக்காவது கெடுதி செய்ய நினைக்கிறோமா? யாருடைய கிரமமான
உரிமையையாவது பறிக்கிறோமா? நமது சுயமரியாதைக்குப் பாடுபடுகிறோம் அல்லாமல், மற்றவர்
சுயமரியாதைக்கு நாம் விரோதிகளாக இருக்கிறோமா? நமது வீட்டுப் பொருள்கள் கொள்ளை போகாமல்,
நமது வீட்டுக் கதவைத் தாழிட்டு பந்தோபஸ்து செய்தால், நமது வீட்டுப் பொருள்களை கொள்ளை
கொண்டே பிழைக்கக் காத்திருக்கும் திருடர்களுக்கு நாம் கெடுதி செய்தவர்கள் ஆவோமா? இவர்களை
பட்டினி போட்ட பாவத்திற்கு ஆளாவோமா? இதனால் மற்றொருவரை மோசம் செய்து உயிர் வாழ்வது வாழ்வல்ல
என்றும், திருடிப் பிழைப்பது ஒரு பிழைப்பல்ல என்றும் திருடனுக்குத் தோன்றும்படி செய்து
அவனைக் கண்ணியமாக தனது உழைப்பினால் வாழும்படி தூண்டுவதாகாதா? இதற்காகத் திருடன் நம்மேல்
கோபித்துக் கொண்டால் அதற்கு நாம் என்ன செய்வது? நாம் சுயமரியாதை அடைய வேண்டுமா, வேண்டாமா?
நமது இழிவுகளும், தாழ்வுகளும் ஒழிய வேண்டுமா, வேண்டாமா என்பதைத்தான் நாம் கவனிக்க வேண்டுமே
ஒழிய, அவர் என்ன சொல்லுகிறார், இவர் என்ன சொல்லுகிறார் என்பதை பற்றி நாம் அதிகம் கவனம்
செலுத்தக் கூடாது"
இதுதான் பெரியாரின் நிலைப்பாடு. நம் சுயமரியாதையைக் காப்பாற்றப்
போராடுவது எப்படி அடுத்தவர் மரியாதையைக் குறைப்பதாகும்?
இதே போன்ற ஒரு செய்தியினை, விடுதலைப் புலிகளின் தலைவரும், தமிழ்
ஈழத்து தேசியத் தலைவருமான பிரபாகரன், 2008 ஆம் ஆண்டு மாவீரர் நாள் உரையில் வெளிப்படுத்தியுள்ளார். அவர் தன் பேச்சின் இடையே, "இந்த வரலாற்று மண்ணை ஆக்கிரமித்து
அடக்கி ஆளச் சிங்களம் தீராத ஆசை கொண்டு நிற்கிறது. அதனை எதிர்ப்பது தவறா?" என்று
கேட்கிறார். "எம் மக்கள் நிம்மதியாகவும், கவுரமாகவும் வாழ வேண்டும் என்று விரும்புகிறோமே அல்லாமல், எமது போராட்டம், எந்த ஒரு நாட்டினரின்
தேசிய நலன்களுக்கோ, அவர்களின் புவிசார் நலன்களுக்கோ, பொருளாதார நலன்களுக்கோ குறுக்காக
நின்றது இல்லை" என்றும் மிகத் தெளிவாகக் குறிப்பிடுகின்றார்.
ஈழ மக்கள் சுயமரியாதையோடும், கவுரவத்தோடும் வாழ வேண்டும் என்று
நினைப்பது எப்படிச் சிங்களர்களுக்கு எதிரானதாக ஆகாதோ, அப்படியே தமிழர்கள் சுயமரியாதையுடன்
வாழ வேண்டும் என்று கருதிப்
பெரியார் பாடுபட்டது பார்ப்பனர்களுக்கு எதிரானதாக ஆகாது! ஆனால் ஈழ விடுதலைப் போரில்
உள்ள நியாயத்தை ஏற்கும் சிலர், பெரியாரின் சுயமரியாதை இயக்கப் போராட்டத்தில் உள்ள நியாயத்தை
ஏற்க மறுக்கின்றனர்.
(தொடரும்)
நன்றி: நக்கீரன்
பெரியாரிஸ்டுகள் 50 ஆண்டுகளாக பிராமணர்களை தமிழ்நாட்டில் தனிமை படுத்தியுள்ளார்கள். பிராமணர்கள் எண்ணிக்கையில் குறைவு என்பதால் மேடைப்போட்டு எவ்வளவு இழிவாகவும் விமர்சிக்க முடிகிறது. இதுவே ஒரு எண்ணிக்கை பலம் உள்ள சாதியாக இருந்தால் இந்த துணிவு கண்டிப்பாக வந்திருக்காது. தமிழ்நாட்டு பிராமணர் சமூகம் militancy உணர்வில்லாத சமூகமாக இருந்தது ஒரு முக்கியமான காரணம். ஈழத்தில் சிறுபான்மை தமிழர்கள் ஒடுக்கப்படுகிறார்கள். அதே போல் தமிழ்நாட்டில் சிறுபான்மை பிராமணர்கள் ஒடுக்கப்படுகிறார்கள்.
ReplyDeleteபார்ப்பனர்கள், எப்போதும் யாரையும் நேராக எதிர்த்தவர்கள் இல்லை. ஆனால் சிண்டு முடியும் வேலை அவர்களை விட்டு செல்வதில்லை. மஹாபாரத கதை பார்ப்பனர்களுக்கும் அரசர்களுக்குமான சமன்பாட்டு உடன்படிக்கையாகத்தான் எனக்கு தெரிகிறது என்று அய்யா சுபவீ சொன்னாரே அதைப்போல, பார்ப்பனர்கள் எப்போதும் வர்ண அமைப்பில் தனக்கு கீழவுள்ளவர்களை சமாதான படுத்தி ஒடுக்கப்பட்டவர்களை மேலும் ஒடுக்கி கடைசிவரை தனக்கு அடிமையாகவே வைத்திருக்க முயல்பவர்கள்.
Deleteஇதை தான் பகவத்கீதையும் சொல்கிறது. பயன் கருதா கருமம் என்றால் என்ன?? வேலை செய், அனால் கூலியை எதிர்பார்க்காதே அதாவது அடிமைகளுக்கு கூலியாரும் வழங்குவதில்லை என்ற பொருளை கொண்டதுதான் அது. நீங்கள் கேட்கலாம் அல்லது முறையிடலாம் அது இறைவனுக்கு செய்யும் தொண்டு என்று என்றால் எந்த ஒரு பார்ப்பானும் அந்த தொண்டை செய்யமுன்வருவதில்லையே ஏன்?
அதே பகவத்கீதை தான், கர்மம் வர்ணத்துக்கு உரியது என்றும் (அத்தியாயம் 4 பாடல் 13) வர்ண பேதங்கள் பிறப்பின் அடிப்படையில் என்றும் (அத்தியாயம் 18 பாடல் 41 - 47) மேலும் பெண்கள், சூத்திரர்கள் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்றும் சொல்கிறது (அத்தியாயம் 9 பாடல் 32)
மேலோட்டமாக பார்த்தால் இந்து மதம் ஒரு பரந்த கொள்கை உடைய மாதமாக தான் தெரியும், இந்து மதம் உன்னை கோயிலுக்கு போ, சாமி கும்பிடு என்று சொல்வதில்லை, ஆனால் இந்து மதத்தின் கொடூரத்தை உணரவேண்டும் என்றால் தன்னைவிட கீழான சாதியை சேர்ந்த பெண்ணையோ/ பையனையோ ஒரு பையனோ/பெண்ணோ திருமணம் செய்தால் அப்போது இந்துமதத்தின் கொடூரம் புரியும் என்று அண்ணல் அம்பேத்கர் சொன்னாரே அது தான் உண்மை, இந்து மதம் எப்போதும் கடவுளை நம்பி இல்லை, அது சாதியை அடிப்படையாக கொண்டது. அதனால் தான் வேதத்தில் இருந்த எந்த கடவுளும் இப்போது இல்லை.. உன்னால் மாவட்ட ஆட்சித் தலைவர், அரசியல்வாதி, முதல்வர் என்று எதுவாக வேண்டுமானாலும், எவ்வளவு ஏன் மதம் கூட மாற முடியும் ஆனால் சாதியை மாற்றவே முடியாது... அது தான் இந்து மதத்தின் அடிப்படை....
சரவணகுமார்
..................""கோயில்களிலும், தீர்த்தங்களிலும், நதிகளிலும், பள்ளிக்கூடங்களிலும், வாசம் செய்யும் தெருக்களிலும், ஓட்டல்களிலும், காபிக் கடைகளிலும் பிராமணர், சூத்திரர் என்கிற பிரிவும், முறையே உயர்வு தாழ்வு என்கிற பாகுபாடுகளும் பார்ப்பனர் அல்லாதவர் ஆகிய நம்மால் ஏற்பட்டதா, அல்லது பார்ப்பனர்களால் ஏற்பட்டதா என்று யோசித்தால் நம்மை யாராவது வகுப்புத் துவேஷி என்றோ, வகுப்புவாதக்காரர் என்றோ சொல்ல முடியுமா?" என்று கேட்கிறார்.".....................
ReplyDeleteஇந்த வேறுபாடுகளின் தொடக்கப் புள்ளி பார்ப்பனர்கள் என்பது சரிதான் என்றாலும் இவற்றை தொடர்ந்ததில் அனைத்து வகுப்பினருக்கும் - சக தலித் மக்களிலேயே கூட ஒரு பிரிவினரைத் தாழ்வாக நினைக்கும் வேறு சில தலித் பிரிவினர் உட்பட - கணிசமான பங்கு உள்ளது.
தவிரவும் இன்று இந்த கொடுமைகளைத் தொடர்வதில் முன்னணியில் இருப்பது பிராமணர்கள் அல்ல. பிற்படுத்தப்பட்ட சமூகம் என்று சொல்லப்படுபவர்கள் தான்., என்பது அனைவரும் அறிந்த உண்மைகள் .
இதையெல்லாம் - ஓட்டுக்காக - மறந்து விட்டு வெறுமனே பார்ப்பனரை மட்டுமே குறை சொல்வது எனது நிச்சயம் வகுப்பு துவேசம் தான்.
ஒரு கொடுமையை தொடங்கியவனை மட்டும் குற்றவாளிக்கும் இந்த 'லாஜிக்' படி, துப்பாக்கியையும் , கத்தியையும் , வேடிகுண்டுகளையும் முதலில் கண்டுபிடித்து அறிமுகப்படுத்தியவர்களை குற்றம் சாட்டி, இன்று அவற்றைப் பயன்படுத்தி அட்டூழியம் செய்பவர்களை எல்லாம் சிறையில் இருந்து விடுவிக்க வேண்டடியது தான்.
சங்கர்.
மதிப்பிற்குரிய சுபவீ ஐயா, இப்பதிவிற்கு நன்றி,,,திரு ஸ்ரீராம் அய்யர் அவர்களே தந்தை பெரியார் அவர்கள் என்றும் பிராமணர்களை குறை சொல்வதில்லை பிராமணியம் ஐ தான் குறை கூறினார்கள், சமுதாயத்தில் ஏற்ற தாழ்வுகள் இல்லாமல் சமம் ஆகா இருக்கவேண்டும் என்ற ஆசைப்பட்டார்,,ஆரிய ஆதிக்கம் செலுத்தும் குலகல்வி திட்டத்தை கடுமையாக எதிர்த்தார்,,,, அனால் அய்யா ராஜாஜி இன் மேல் மிகுந்த பாசம் கொண்டிருந்தார்
ReplyDeleteபிராமண சமூகம் militancy உணர்வு கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஆளம் வர்க்கங்களும், இந்துமத சம்பிரதாய சட்டங்களும் அவர்களை ஆதரித்துப் பாதுகாக்கும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களைச் சாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும் ஒடுக்கியதற்குப் பிராயசித்தமாக, அவர்களை கைதூக்கிவிட மனச்சாட்சியுடன் முன்வர வேண்டும்.
ReplyDeleteபார்ப்பனர்கள் ஒடுக்கப்படவில்லை. இன்றைய புதிய பொருளாதார , உலகமயமான சூழலில் அவர்கள் முன்னேறிக்கொண்டு தான் இருக்கிறார்கள். இன்றய தேவை சமத்துவ சமுதாயம் . பெரியாரின் இயக்கத்தால் பயன் பெற்றோர் புதிய பார்ப்பனியத்தை உருவாக்கிவிட்டனர். அவர்களின் எண்ணிக்கை பார்ப்பனர்களை விட அதிகம். அவர்களை எதிர் கொள்ளாவிட்டால் சமத்துவ சமுதாயம் அமைப்பது கடினம் . இது பெரியார் எதிர் பார்க்காத ஒன்று .
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteSuper article
ReplyDeleteஅவமானங்களோடு வாழ மக்களை அனுமதிக்காதவர் பெரியார், அவர்களே அதை விரும்பினாலும் கூட!
ReplyDelete“நீ யார் கேட்க? நீ யார் சொல்ல? நீதான் முட்டாள்” என்று தன் மேல் கோபப்பட்டவர்களை தயங்காமல் அனுமதித்தவர் பெரியார். “இப்போதாவது உனக்கு கோபம் வந்ததே” என்று வரவேற்றவர் பெரியார், அவர்களே அதை விரும்பாவிட்டாலும் கூட.
“நான் சொன்னாலும் கூட பகுத்தறியாமல் ஏற்காதே, ஏன்? எதற்கு? என்று கேள்வி கேள்” என சொந்த முட்டாள்தனங்களின் மீது சுரணை எழுப்பியவர் பெரியார்.
“என்ன தெரியும் உனக்கு வாயை மூடு, சொல்றதை மட்டும் கேள்!” என்று ஈன்ற தந்தையே ஈட்டியாய் பாய்கையில், “என்னையும் விடாதே! ஏன் என்று கேள்!” என்று பகுத்தறிவு பாய்ச்சினாரே அதனால்தான் அவர் தந்தை பெரியார்.
யாருக்கு வரும் அந்த அறிவுத்துணிச்சல், “கடவுள் இல்லை இல்லை என்கிறாயே வந்தால் என்ன செய்வாய்?” என்று கடவுளின் காப்பாளர்கள் சீறிய போது, சிறிதும் `வெறி’ இன்றி “வந்தா ஏத்துக்கப் போறேன்!” என்றாரே என்ன ஒரு சிந்தனை அழகு!
பெரியார் வாயெடுத்த போதெலாம் வாயடைத்து போனது அறிவீனம். “கடவுள் நம்பிக்கைகாக ஒருவன் பார்ப்பானுக்கு அடிமையாக, கீழ் சாதியாக இருக்க வேண்டுமா?” என்று பெரியார் எதார்த்த சமூக நிலைமைகளிலிருந்து கேட்ட கேள்விக்கு இன்று வரை பார்ப்பனியம் யோக்கியமாக பதில் சொன்னதில்லை.
அந்தக் கடவுளே ஆனாலும் பெரியார் பார்ப்பன பிறவி ஒடுக்குமுறையை எதிர்த்தார் என்பதை பக்குவமாக மறைத்துவிட்டு, பெரியார் கடவுளை எதிர்ப்பவர் என்று மட்டும் மக்களிடம் பிரச்சாரம் செய்து உண்மையை மறைக்கிறார்கள் இன்றளவும்.
“இந்தப் பல ஆயிரவருஷங்களில் கீழ் ஜாதியாய்ப் பிறந்து மேல் ஜாதியாய்ச் செத்த மனிதன் ஒருவன்கூட கிடையாது.”
ஒவ்வொரு மதமும் தன்னை வந்து சேர்ந்தவர்களை கோட்பாட்டளவில் இஸ்லாமியராக, கிருத்தவராக வரித்துக்கொண்டது. பார்ப்பன இந்துமதமோ சித்தாந்த அடிப்படையிலேயே சொந்த மதத்துகாரனையே நீ சூத்திரன் தள்ளிநில்லு, பள்ளன் , பறையன், தீண்டப்படாதவன் என்று சாதியாக விலக்கி வைக்கிறது. இந்த அயோக்கியத்தனம் ஒரு மதமா என பெரியார் கேட்டது சரிதானே!
அதுமட்டுமல்ல, ” உன் மதம் சாதி பார்க்கும் மதம், உன் சாமி சாதி பார்க்கும் சாமி … சக மனிதனையே மனிதனாக மதிக்காத இரண்டையுமே ஒழி ! ” என்றார். இதிலென்ன தப்பு.
“இந்து மதத்தை விட்டு நீங்காமல் இழிவு நீங்காது” என்றார்! சொந்த விருப்பு வெறுப்பிலிருந்தல்ல சமூக எதார்த்தத்திலிருந்து சரியாகவே சுட்டிக்காட்டினார் இப்படி. “இந்தப் பல ஆயிரவருஷங்களில் கீழ் ஜாதியாய்ப் பிறந்து மேல் ஜாதியாய்ச் செத்த மனிதன் ஒருவன்கூட கிடையாது. ஜாதியே இல்லாமல் பிறந்து, ஜாதியே இல்லாமல் செத்தவனும் எவனும் இல்லை. வேண்டுமானால் அவரவர் உங்களை ஏமாற்றவோ அல்லது தன்னையே ஏமாற்றிக் கொள்ளவோ சாமியாய், ரிஷியாய், மகானாய், மகாத்மாவாய் செத்து இருக்கலாம். ஆனால் “பறையனாய்ப்” பிறந்து “பிராமணனாய்ச்” செத்தவரோ “பிராமணனாய்” பிறந்து “பறையனாய்” செத்தவனோ எவனும் இல்லை. இந்துமதத்தை விட்டவன் எவனாவது ஜாதி இல்லாமல் செத்து இருக்கலாம். அவனும் ஏதாவது ஒரு மதக்காரனாய்ச் செத்து இருப்பானே ஒழிய, மனிதனாய்ச் செத்து இருப்பானா என்பது சந்தேகம்தான்.!” என்று இந்துமதத்தை தோலுரிக்கையில் எந்த மத்ததையும் விட்டுவைக்கவில்லை பெரியார்.
மனிதனை மனிதனாக மதிக்காத பண்பு அனைத்து மதங்களிலும் உள்ளது.ஏதோ இந்து மதத்தில் மட்டும் உள்ளது போல புனைக்கதைகளை அளக்க வேண்டாம்!.இந்தியாவில் காஷ்மீரில்தான் அதிக அளவில் உலர் கழிப்பிடங்கள் பயன் படுத்தப்படுகின்றன.பொது சாக்கடை வசதிக்கு இணைப்புகள் கொடுக்கப்படாமல் இருப்பதாலேயே இங்கு பெருநகரங்களில் கூட மலக்குழிகள் உபயோகத்தில் உள்ளன. அவற்றை வெறும் கைகளால் அள்ளிச் சுத்தப்படுத்தும் மனிதர்களை வாட்டல்-ஷேய்க்-மோச்சி-மொஹல்லாக்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.செருப்பு தைப்பது,மலம் அள்ளுவது இவர்களுடைய பரம்பரை தொழில்.இத்தொழிலில் அதிகமாக பெண்கள், குழந்தைகள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். பரம்பரை ஏழைகள். காஷ்மீரில் மலம் அள்ளும் தொழில் செய்பவர்கள் அனைவரும் இஸ்லாமியர்கள். "அல்லாவின் கட்டளை, நாங்கள் இப்பணியை பரம்பரை பரம்பரையாக தொடர்வோம். அல்லா விரும்புவதால் தான் நாங்கள் இப்பணியை செய்து கொண்டிருக்கிறோம்" என்கிறார்கள் இவர்கள்.
Deleteஇந்துக்களிலுள்ள சக்கிலியர்களைப் போல், இவர்கள் தங்களுக்கும் அல்லாவின் நிர்ப்பந்தத்தையும் விருப்பத்தையும் செயல்படுத்துவதாக கூறும் அறியாமையை ஒழித்து அவர்களின் மறுவாழ்வுக்கான எந்த முயற்சியையும் காஷ்மீர இஸ்லாமியர்கள் செய்யவில்லை.மசூதிகளில் வாட்டல் - ஷேய்க் - மோச்சி களுக்கு தனியாக இடம் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. அங்குள்ள குவளையில் இருந்து இவர்கள் தண்ணீர் எடுத்துக் குடிக்க முடியாது. இந்த சூழ்நிலையிலும், 'தங்கள் நிலைக்கு உண்மையான காரணங்கள் என்ன' என்பதை அறிய முடியாமலேயே இருக்கிறார்கள்.இந்த இனங்களின் பெரும்பான்மையான பெண்கள் மலக் கூடைகளை சுமர்ந்து ஊருக்கு வெளியே கொட்டிவிட்டு திரும்பி வரும் வழியில் கூட கை, கால்களை சுத்தம் செய்ய தண்ணீர் கொடுக்க மறுக்கும் ஆணவத்தை இன்றும் காணமுடியும்.தீட்டு,புனிதம்,இழி தொழில் செய்ய வைப்பது என்பது இந்து மதத்திற்கோ மட்டும் உரிததானதல்ல!.மனிதனின் மலத்தை மனிதன் அகற்றும் அவலம் இந்தியாவைப் பொறுத்தவரை, இந்துக்களுக்குள் மட்டும் இல்லை. இஸ்லாமியர்களிடமும் உண்டு.இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த மலம் அள்ளுபவர்களை மத்தியப் பிரதேசத்தில்,'மைலா ஜஹாடா'[Maila jhaada],'மெஹ்டார்'[Mehtar]அல்லது 'பாங்கிக்கள்','ஹெலா'[Hela]என்கிறார்கள்.காஷ்மீர் பகுதியில்'ஷேய்க்'[Shaikh],'மோச்சி'[Mochi],'வாட்டல்'[Vaatal] என்கிறார்கள் இன்னும் பிற பகுதிகளில் வெவ்வெறு பெயர்களில் அழைக்கப்படுகிறார்கள். இந்திய இஸ்லாமியர்களிடையே தீண்டாமை கடைப்பிடிக்கப்படுகிறது.மத்தியப் பிரதேசத்தில், போபால் நகருக்கு சுமார் 155கி.மீ தூரத்தில் 'உஜ்ஜைனு'க்கு 35கி.மீ தொலைவில், 'தேவாஸ்'என்ற நகரில் வசிக்கும்'ஆசிப்',இவர் முஸ்லிம்களில் 'நயாடா'சாதியைச் சேர்ந்தவர். "முஸ்லிம்களுக்குள் பாகுபாடு என்பது இல்லை என்று நினைக்கிறார்கள்.அது சுத்த பொய் மதரசாக்கள், மசூதிகள் என்று எல்லா இடங்களிலும் தீண்டாமை இருக்கின்றன.எங்களின் மயானங்களில்கூட அவை தொடருகிறது.."என்கிறார் ஆசிப்.'அலி உசைன்' என்பவர் கூறுகிறார்:"நாங்கள் எல்லோரும் மசூதிக்கு நமாஸ் தொழுகை நடத்தச் செல்கிறோம்.ஆனால், பண்டிகை காலங்களில் எங்களுக்குள் உள்ள அந்த இடைவெளி வெளிப்படையானது. 'இரமலான்' நோம்பு காலத்தில் நடைபெறும் ரோசா-இஃப்தாரி [Roza_iftari]உணவின் போது,நாங்கள் அவர்களுடன் சேர்ந்து உட்கார அனுமதி இல்லை.தனியாக உட்கார வைத்து விடுவார்கள்.அங்கு தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டிருக்கும் பொது பாத்திரத்தில் இருந்து நீரை எங்கள் குழந்தைகள் எடுக்கக்கூட அனுமதிக்க மாட்டார்கள்.அவர்களே சின்ன பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி கொடுப்பார்கள்...".மற்றும் அரேபிய துலுக்கன்&துலுக்கச்சிகளின் இழி தொழில்கள் செய்யும் அடிமைகளாக&தோட்டிகளாக தமிழர்கள்&தமிழச்சிகள் உள்ளனர் என்பதே இன்றும் நிதர்சனமான உண்மை.இஸ்லாம் மதம் மாண்புடன் மனிதர்களை நடத்தும்,யாரையும் இழிவுபடுத்தாது (குறைந்தபட்சம் மலம் அள்ள வைக்க மாட்டோமென்பது)கூட போலி வாதமாகும்.
கிறிஸ்துவ மதத்தில் வெள்ளையர் கறுப்பர் பாகுபாடு சொல்லித் தெரியவேண்டியதில்லை!. ஆஸ்திரேலியாவில் 1960கள் வரை அந்நாட்டின் மன்னின் மைந்தர்களான Aborgins Flora&Fauna [தாவரம்&மிருகங்கள்]என்ற classificationல் தான் வைக்கப்பட்டிருந்தையும் தெரிந்து கொள்ளுங்கள்!.
இங்கே பதிவிட்ட பார்பன சிரீராமுக்கு ஒரு கேள்வி! நீ உயர் சாதியாக எண்ணிக் கொள்வதற்கு யாரோ ஒருவர் ஏன் கீழ்சாதியாக இருக்க வேண்டும்?
ReplyDelete---------------------------
ஆணவக் கொலையை #காட்டுமிராண்டித்தனம் என்று கண்டிக்கும் பொது மக்களுக்கு உயர் சாதிப் புத்தியோடு ஆணவமாக பேசும் பார்ப்பனர்களை ஏன் கண்டிப்பதில்லை?
"அவங்க சொல்றது சரிதான். அவங்க உசந்த சாதிதான்" என்று ஆயிரமாண்டு காலமாக அடிமைப்புத்தியோடு அடங்கிக் கிடக்கும் இழிநிலை இந்த நூற்றாண்டிலும், #இண்டர்_நெட் வாழ்க்கையிலும் ஏன்?
ஓய்.ஜி.மகேந்திரன், எஸ்.வி.சேகர், பார்ப்பன இனத்தின் #பொதுப்புத்தி பெண் பிரதியாக பேசும் பகவதி உள்ளீட்டோர் வார்த்தைகளில் தான் எத்தனை #ஆணவம்?
"ஏற்றத் தாழ்வு என்பது பிராமணீயத்தின் சமய சார்புடைய கோட்பாடாகும். சமத்துவத்தில் நாட்டம் கொள்ளும் அடிமட்ட வகுப்பினர்களை அடக்குவதை ஒடுக்குவதை பிராமணர்கள் தங்களுடைய அறமுறை கட்டுப்பாடாக கடமையாக கருதினர்" என்று தோழர் அம்பேத்கர் சுட்டிக்காட்டுவது இந்த ஆணவ / இழிகுணத்தைதான். இது மனித விரோத கூட்டத்தினரின் ஆணவப்பேச்சு.
இதை பொதுவெளியில் வந்து #பார்ப்பான் / #பார்ப்பனத்திகள் பேசுவதற்கு எங்கிருந்து துணிச்சல் வருகிறது?
All fine, yes Brahmanism or any group that oppresses the vulnerable should be condemned but why you are targeting only Brahmins ? There are many other caste which does the same when given a chance.
ReplyDeleteWhy only Brahmins and why only Hinduism. I have spine to treat and ridicule every caste and religion.
DO YOU ?
But there is also a positive effective for Hinduism because of Periyarist organisations. Indirectly reduced religious conversions. Only when there is an organization to support and speak for SC/ST or oppressed people, there wont be large-scale conversions. If there are no organizations to speak for the oppressed, then those people will definitely convert to other religions. That's why compared to other states in south india and major northern states, TN has the slowest growth rate percent of non-hindu religions, almost negligible. Periyarist movements have bridged the social and economic gap between BC and FC communities in the last 50 years. Now the shift is happening between SC and MBC communities. Closing the gap between the communities indirectly strengthens hindusim. I don't know whether you agree. But if you analyze the numbers this is the inference.
Deleteவரலாறுகளை திருத்தி அமைக்க முடியாது. நிகழ்ந்தவை நிகழ்ந்தவை தான். அதையே குறை சொல்லி, நிகழ் காலத்தையும், எதிர்காலத்தையும் கடத்துவது, ஆக்கப்பூர்வமான சிந்தனையாளர்களுக்கு உகந்தவையாக இருக்கமுடியாது.நமது சமூக அமைப்பில், எவரும் ஒரு குறிப்பிட்ட ஜாதியை தேர்ந்து தெடுப்பதில்லை. அது வரமும் இல்லை. அப்படி அமைந்துவிடுகிறது. அப்படி அமைந்துவிட்ட அடையாளத்தை முன்னிருத்தி, ஒவ்வொருவரும், அவரவருக்கான வாழ்வாதார உரிமையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றோம்.
ReplyDeleteசிலர் தொடர்ந்து, எல்லா பிரச்சனைகளுக்கும், பார்ப்பன சூழ்ச்சி அல்லது ஆரிய சூழ்ச்சிதான் காரணம் என சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இது தற்போதைய கால சூழலில் நிஜமா?.திராவிட கட்சிகள், குறிப்பாக தமிழரல்லாத, தமிழை தாய்மொழியாக கொண்டிராத அரசியல் தலைவர்கள், பார்ப்பனர்கள் தான் அனைத்து சமூக கேடுகளுக்கும் காரணம் என குற்றம் சாட்டி, அத்தகைய விஷமத்தனமான கருத்தை பலரின் சிந்தனையிலும் பதிய செய்து, அதன் வழியாக, அரசியல் அதிகாரத்தை "தமிழர்களிடம் இருந்து நயவஞ்சகமாக அபகரித்து" கிட்டத்தட்ட 49 வருடங்களாக, தமிழகத்தை ஆட்சி செய்துகொண்டிருக்கிறார்கள்.
இந்த 49 வருடங்களில், தமிழரல்லாத திராவிட தலைவர்கள் எவ்வளவோ சமூக மாற்றங்களை உருவாக்கி இருக்க இயலும். ஆனால், இப்போதும் இந்த 3% சதவீத மக்களையே குறை சொல்லி பொழுதை கழிப்பது சரிதானா?.'பார்ப்பனர்கள்' தமிழுக்கும் சைவசமயத்துக்கும் பெருந்தொண்டாற்றியுள்ளார்கள்' என்றுதான் வரலாறு இருக்கிறது. கொஞ்சம், "திராவிட சூழ்ச்சி பார்வையை" ஒதுக்கிவிட்டு பார்த்தால், பார்ப்பனர்கள் தமிழுக்கு நன்மைகள் தான் அதிகம் செய்திருக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள முடியும்.
இன்றைய சூழலில், தமிழகத்தின் 97% சதவீத மக்களை, இந்த 3% சதவீத பார்ப்பனர்கள் தான் சூழ்ச்சி செய்து, அவர்களது முன்னேற்றத்தை தடுப்பதாக குறை சொல்வது அபத்தமாகப் படுகின்றது.
சரி, இந்த 3% சதவீத பார்ப்பனர்களும் பொருளாதாரத்தில், கல்வியில் முன்னேறியவர்கள் என்றே வைத்துக்கொள்வோம். இவர்களில் பலரும் வறுமையில் தான் இருக்கிறார்கள். என்றாலும், ஒரு ஒப்பீட்டிற்காக இவர்கள் அனைவருமே முன்னேறியவர்கள் என வைத்துக்கொள்வோம்.
மற்ற பெரும்பான்மை சாதிகளில், இவர்களது மக்கள் தொகைக்கு இணையாக, ஒரு 5% சதவீதத்தினர் கூட முன்னேறி இருக்கமாட்டார்களா? வன்னியர், தேவர், முத்தரையர், கவுண்டர், மள்ளர், பறையர், கோனார், நாடார் என இருக்கிற பெரும்பான்மை சாதியினரில், நிச்சயம் ஒவ்வொரு சாதியிலும், 5% சதவீதத்திற்கு மேலானவர்கள், பொருளாதார, கல்வி நிலைகளில் முன்னேறியவர்களாகவே இருப்பார்கள். ஆக, இப்படி முன்னேறிய ஒவ்வொரு சமூகத்தினரும், அவரவரது சமூக முன்னேற்றத்திற்கு எவ்வளவோ செய்யலாமே. அதை விடுத்து முன்னேறிய பார்ப்பனர்களை குறை சொல்வதால் என்ன பயன் ஏற்படப்போகின்றது?.
இந்து மதத்தில், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் உரிமை வேண்டும் என்றும், ஜாதி ஒழிப்பை கோயிலின் கருவறையிலிருந்து தொடங்குங்கள் என்று கூறுபவர்கள்,ஏன் இந்த 97% சதவீத மக்கள் நினைத்தால், எத்தனையோ கோவில்களை கட்டலாம், அவற்றில் தமிழ் வழியில் வழிபடலாம். அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கலாம், ஆனால் இப்படியான எந்த முன்னெடுப்புகளும் நிகழ்கிற மாதிரி தெரியவில்லை. மாற்று மொழி திராவிட தலைவர்கள், 49 வருடங்களாக ஆட்சியில் இருந்தும், இந்த விஷயத்திலும் எதுவும் செய்யாமல், தமிழ் சாதிகளுக்கிடையே சண்டை மூட்டி குளிர்காய்ந்து கொண்டிருக்கிறார்கள்.மத பீடங்கள் என எடுத்துக்கொண்டால், காஞ்சி மடம் அய்யர்களுக்கும், ஸ்ரீரங்கம் மடம் அய்யங்கார்களுக்கும் இருக்கின்றன. அதேநேரத்தில்; மதுரை ஆதீனம் பார்ப்பனரல்ல, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பங்காரு அடிகள் பார்ப்பனரல்ல, நித்தியானந்தா பார்ப்பனரல்ல என்பதையும் நாம் கவனிக்கவேண்டும். இதே போல, ஒவ்வொரு சமூகத்தினரும் தங்களுக்கான மத பீடங்களை உருவாக்க முடியும். அது சாத்தியமும் கூட. ஆனால், நாம் இப்படியெல்லாம் சிந்தித்து செயல்படவில்லை என்பதுதானே நிதர்சனம். இப்படி நமக்கான சமய மடங்களை உருவாக்காமல், காஞ்சியையும், ஸ்ரீரங்கத்தையும் குறை சொல்வதால் என்ன பயன் வந்துவிடப்போகின்றது.என்னைப்பொருத்தவரை, தமிழர்களுக்கு எதிராக பார்ப்பன சூழ்ச்சியை விட திராவிட அரசியலால் அவர்கள் அதிகம் புண்பட்டிருக்கிறார்கள். இதை உணரமுடிகின்றது.
நாம் அதிகமும் அறியவேண்டியது, "மாற்று மொழி திராவிட தலைவர்களின், திராவிட சூழ்ச்சியைத்தான்".
அவர்களையும்,அவர்களின் அல்லக்கைகளையும் தவிர்த்து தமிழர்களாகிய நாம் முன்னேறுவது நம் கைகளில் தான் இன்றைய சூழலில் இருக்கின்றது.
பிராமணர்கள் தமிழ் சமூகத்திற்கு நிறைய கொடுத்து உள்ளார்கள் என்பது உண்மை.கணித மேதை ராமானுஜம், பாரதியார், சுஜாதா, பாலகுமாரன் இப்படி உண்மையாக எத்தனையோ பேர் தமிழ் சமூகத்திற்கு தொண்டு செய்து உள்ளார்கள்.ஆனால் ராஜாஜி பள்ளிகளை மூடினார். குலக்கல்வி கொண்டு வந்தார். ஜெயலலிதா மோசமாக ஆட்சி செய்து கொண்டு இருக்கிறார். பிராமணர்கள் அத்தனை பேர் செய்த நல்ல விஷயங்களை எல்லாம் மறக்க அடிக்கும் அளவுக்கு கெடுதல் செய்து கொண்டு இருக்கிறார். பெண் என்றால் அன்பு. பெண்கள்தான் இந்த உலகத்தை போரில் இருந்து தவிர்க்க வைக்கிறார்கள். ஆனால் இவரிடம் எங்காவது அன்பை கொஞ்சம் கூட காண முடியுமா. இப்போது கூட வெங்கட்ராமன் என்ற பொருளாதார நிபுணர் ( பிராமணர் ஆக இருக்கலாம்) இருக்கிறார். அற்புதமான திட்டங்கள் அவரிடம் உள்ளன. தடுப்பணை கட்டுவது, உள் கட்டமைப்பு, அடுத்த தலைமுறையினர் நன்றாக இருப்பதற்கு இப்போது இருந்தே யோசிக்கும் குணம் நிறைந்தவராக உள்ளார். ஜெயலலிதா எதாவது நன்மை மக்களுக்கு செய்ய நினைத்தால் அம்மாதிரி மனிதரிடம் பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு அமைதியாக இருக்கலாம். வெங்கட்ராமன் மாதிரி உண்மையான எளிமையான மனிதர்களை பிராமணர்கள் தலைமை ஏற்று அவர் கைகாட்டும் மனிதர்களை வழி வழியாக தலைமை ஏற்க வைத்தால் பிராமணர் பெற்ற கேட்ட பெயர்கள் அனைத்தையும் நீக்கி விடலாம். உங்களை எல்லாரும் நேசிக்கவே செய்வார்கள்.
Delete@K.மாணிக்கவேலர்பி - பிராமணர்கள் பக்கம் உள்ள நியாயத்தை கூறியதிற்கு நன்றிகள்.
ReplyDeleteதமிழை வளர்த்ததில் அந்தணர்களின் பங்கு அதிகம். இதை உணர்ந்ததால் தான் தமிழர் கழகம் என்று சொன்னால் சிக்கல் வந்துவிடும் என்று நினைத்து திராவிடம் என்று பயன்படுத்தினார்கள். தமிழ் பிராமணர்கள் ஆற்றிய எதிர்வினை தான் பிராமணர்களின் வீழ்ச்சிக்கு காரணம். இனியாவது தமிழ் பிராமணர்கள் மராத்திய பேஷ்வாக்களை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். சில நல்ல மாற்றங்கள் கர்நாடகாவிலும் வட இந்திய பகுதிகளிலும் வர தொடங்கியுள்ள. தமிழ்நாட்டு பிராமணர்கள் சமூக அரசியல் சூழலை புரிந்துகொண்டு செயல் பட வேண்டும். பணம் பணம்... என்று அடிப்படை கோட்பாடுகளை விட்டு விட்டு வெளிநாடுகளில் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். பொது சமூகத்தில் (mainstream) இணைந்து செயல் படவேண்டும். இப்போ என்னை போன்ற இளைய சமூகத்தினர் முந்திய தலைமுறை பிராமணர்கள் செய்த தவறுகளை செய்வதில்லை. திராவிடர் கழகம் பிராமணர்களுக்கு எதிராக செய்யும் அரசியலை தங்கள் சமுகத்தின் (consolidation) ஒற்றுமைக்கு பயன் படுத்த தெரியவில்லை. தாம்ப்ராஸ் போன்ற ஒண்ணுத்தும் உதவாத அமைப்புகளை சரி செய்ய வேண்டும்.
தமிழ் பிராமனர்கள் தமிழுக்கு ஆற்றிய பணி என்பது தமிழகத்தில் இந்துத்வாவை வளப்படுத்த முற்ப்போக்கு வேடமிட்டதே என பாரதியார் முதல் பால குமாரன் வரை தோலுரித்துக் கொண்டே தான் இருக்கிறோம்.
ReplyDeleteஎனவேதான் தற்போது நவீன வடிவில் மொழி வாதம் பேசிக்கொண்டு போலி தமிழ் தேசியம் என்ற நஞ்சை தமிழகத்தில் கலக்கப் பார்க்கிறது பார்பனீயம்.
வள்ளுவர், மாணிக்கவாசர், ஞானசம்பந்தர், ராமானுஜர் எல்லாம் ஹிந்துத்வ - ரஸ்ஸ் ஆளுன்னு சொல்லிடுங்க போல?
Deleteசிறீராம், சந்தடி சாக்குல வள்ளுவரை பார்ப்பனர்கள் வரிசையிலே சேக்குறீங்களே, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்னு சொன்னவர், கடவுள்ங்கிற வார்த்தையை விட்டு தெய்வமாகிற வார்த்தையை பயன்படுத்தியவர், இதுக்கும் மேல புலால் உண்ணாமையை வலியுறுத்தியவர் (அப்போ பார்ப்பனர்கள் தான் யாகம்ங்கிற பேர்ல புலால் உண்ணவர்கள்) இப்படி எல்லவிதத்துலயும் இந்து மதத்திற்கு எதிரானவர உங்க வரிசையிலே பாக்குறீங்களே இது தான் பார்ப்பன தந்திரமோ????
Deleteஆம் பார்பன நண்பரே!
ReplyDeleteபார்பானுக்கு காவடி தூக்கிய ஞான சம்பந்தன்,மாணிக்க வாசகனோடு எம் இன புலவன் வள்ளுவனை இனைத்துக் கொண்ட இரகசியம் என்னவோ?
இதுதான் வரலாற்றை திரிக்கும் கேடுகெட்ட பார்பன புத்தி!
மதப் பெரியார்கள் என இன்று வழிபடப்படுகின்ற ‘அன்பின் திருவுருவான ஆழ்வார்களும், நாயன்மார்களும் என்ன செய்தார்கள்? தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த திருமங்கை யாழ்வார் நாகை புத்த விகாரத்திலிருந்து தங்கத்தினாலான புத்தர் சிலையைத் திருடி உருக்கி விற்று ஸ்ரீரங்கம் கோயில் திருப்பணிக்கு ’நன்கொடை’ கொடுத்திருக்கிறார் அவரது பாடல்களில் ஜைனர்களுக்கும், புத்தர்களுக்கும் எதிரான தாக்குதல் நிரம்பி வழிகிறது.
சொத்துக்களைக் கொள்ளையிடுவது ஒருபுறமிருக்க மற்ற மதத்தினரை ஆயிரக்கணக்கில் கொன்று குவிப்பதிலும் ’இந்து’ மன்னர்கள் முன்னணியில் நின்றனர்.
7-ம் நூற்றாண்டில் மேற்கு வங்கத்தின் ஒரு பகுதியை ஆண்டு வந்த சைவ மதத்தைச் சேர்ந்த சசாங்கன் என்ற மன்னன் புத்த மதம் தழைத்தோங்கிய 47 நகரங்களை (உ.பி. மாநிலத்தில்) பூண்டோடு ஒழித்தான். புத்தருக்கு ஞானோதயம் ஏற்பட்டதாக சொல்லப்படுகின்ற போதி மரத்தை வெட்டித் தள்ளினான். அவனுக்கு முன் 5-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அஜாதசத்ரு என்ற மன்னனும் இவ்வாறே புத்த மதத்தினரை வேட்டையாடினான்.
மெளரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப்பின் கங்க வமிச ஆட்சியைத் தோற்றுவித்த புஷ்யமித்திர சுங்கன் எனும் பார்ப்பன மன்னன் “ஒரு புத்த பிக்குவின் தலைக்கு நூறு பொற் காககள்” என்று பகிரங்கமாக பிரகடனம் செய்து புத்த மதத்தினரை ஒடுக்கினான்.
சங்கராச்சியார் – புத்த பிக்குகளில் முக்கியமானவரான நாகார்ஜுனரின் பெயரால் அமைந்த ஒரு புத்த விகாரத்தைத் தகர்த்துத் தரைமட்ட மாக்கி அங்கேயிருந்த புத்த பிக்குகளை கொன்று குவித்தனர் பார்ப்பனர்கள்
7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த திருஞான சம்பந்தர் பாண்டிய மன்னனை சமண மதத்திலிருந்து சைவ மதத்திற்கு மதமாற்றம் செய்ததுடன் 8,000 சமணர்களைக் கழுவிலேற்றிக் கொன்றார் என்பது வரலாறு. இந்த வரலாற்றுக் களங்கத்தை மதுரையிலும், சீர்காழியிலும் இன்று வரை விழாவாகக் கொண்டாடி வருகிறார்கள் என்பது நாமறிந்ததே. ’இந்து’ மதத்தினரின் “சகிப்புத் தன்மைக்கு” இன்னும் வேறென்ன சான்றுகள் வேண்டும்?
பார்ப்பன் ஆதிக்கத்தைக் கேள்விக்குள்ளாக்கிய ஒரே காரணத்திற்காக புத்த மதத்தினரை பார்ப்பனர்களும் அவர்களால் வழி காட்டப்பட்ட மன்னர்களும் துன்புறுத்தினர். புத்த பிக்குகளில் முக்கியமானவரான நாகார்ஜுனரின் பெயரால் அமைந்த ஒரு புத்த விகாரத்தைத் தகர்த்துத் தரைமட்ட மாக்கி அங்கேயிருந்த புத்த பிக்குகளை கொன்று குவித்தனர் பார்ப்பனர்கள். இதற்குத் தலைமை தாங்கி நடத்திச் சென்றவர் முதல் சங்கராச்சாரி என்பது குறிப்பிடத்தக்கது.
புத்த மதத்தின் மீது பார்ப்பன மதத்தினர் (அதாவது இந்து மதத்தினர்) கொண்டிருந்த வெறுப்பு அளவு கடந்தது. 11-ம் நூற்றாண்டில் துருக்கியர்கள் (இசுலாமியர்கள்) படையெடுத்து வந்த போது அவர்களை ’போதிசத்துவர்கள்’ என்று கூறி வரவேற்றது யார் தெரியுமா? பார்ப்பனர்கள்தான். யாரோடு கூட்டு சேர்ந்தாவது பெளத்த மதத்தை ஒழித்துக் கட்ட வேண்டும் என்பதில் அவர்களுக்கு இருந்த வெறிக்கு இது ஒரு உதாரணம். 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ’சூன்ய புராணம்’ எனும் வடமொழி நூல் இதற்கு ஆதாரமாக உள்ளது.
இனி அப்படி பெரியார் தொன்டர்களிடம் உங்கள்( பார்பன) பருப்பு வேகாது என்றே சொல்லத் தோன்றுகிறது.
புராணம் என்றால் குப்பைகள்,கட்டுக்கதைகள் என்று சொல்லிவிட்டு அதையே ஆதாரமாகச் சொல்வது வெட்கக்கேடானது!.அந்த ஆதாரங்களின் படி நாகார்ஜுனரே பார்ப்பனர்தான்.என்றோ நடந்த ஆதாரமற்ற(அ)நிருபிக்க முடியாத குறிப்புகளைக் கூறி நீங்கள் விரும்பும் பெளத்தர்களால்,புத்த பிக்குகளால் சமீபத்தில் நடந்த இன்றும் நடக்கும் ஆயிரமல்ல இரண்டு லட்சம் தமிழர்கள் ஆதாரத்துடன் நிருபிக்கக்குடிய படுகொலைகளை,அட்டுழியங்களை மறைக்கவே இதைப்போல போன கதைகளைக் கூறி தமிழர்களை அந்தக் கொடுர படுகொலைகளை மறக்க வைக்கும் கயமைத்தனமான முயற்சிதான் இந்த விளக்கம்.சுபவீ மற்றும் அவரின் அல்லக்கைகளிடம் இந்த கயமைத்தனத்தை தான் எதிர்பார்க்க முடியும்!.
ReplyDeleteசுயமரியாதை - 5 பகுதியை மீண்டும் படித்துப் பார்த்தேன். அதில் எங்கும் எந்தப் புராணக் குறிப்பையும் நான் காட்டவில்லை. பிறகு ஏன் இந்த விமர்சனம் என்று புரியவில்லை. இது ஒரு விதமான வெறுப்புணர்ச்சியிலிருந்து எழுகிறது என்றே நினைக்கிறேன்.
Deleteசூன்ய புராணத்தை மேற்கோள் காட்டி எனக்கு முன்பு கருத்தை பதிவிட்டவருக்கான என் கருத்து தான் இது.நீங்களும் உங்களைப்போன்றவர்களும் இதிகாசங்களை கட்டுக்கதை என்று கூறிவிட்டு சம்புகன்,ஏகலைவன் கதைகளை பிடித்து தொங்குவது ஏனோ?.கட்டுக்கதை என்ற பிறகு அதைப் பிடித்து தொங்க வேண்டிய தேவையில்லையே!.ஆகவே அதுவும் உங்களைப்போன்றவர்களிடம் உள்ள ஒரு விதமான வெறுப்புணர்ச்சியிலிருந்து எழுகிறது என்றே நான் நினைக்கிறேன்.
Delete